Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம்

Featured Replies

  • தொடங்கியவர்

நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம்

 

starcricket6003.jpg

சென்னை; சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்றுவரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ரஜினி கமல் துவங்கிவைத்தனர். 8 மணிகள் பங்கெற்கும் இந்த கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ரஜினி - கமல் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.. நட்சத்திர கிரிக்கெட். முன்னதாக இரு அணிகளின் வீரர்களையும் ரஜினி சம்பிரதாயமான அறிமுகம் செய்துவைத்தனர். இதனால் இளம் நட்சத்திரங்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

starcricket2.jpg

ரஜினி போட்ட டாஸை வென்ற சூர்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் - சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய திருச்சி டைகர்ஸ் 62 ரன்கள் எடுத்தது. அதை சேஸ் செய்த சென்னை சிங்கம்ஸ் 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

starcricket6001.jpg

மொத்த 8 அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அடுத்ததாக நடந்த போட்டியில் ராம்நாட் ரைனோஸ் அணியும்  கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ராம்நாட் அணி 2 விக்கெட் இழபபிற்கு 71 ரன்கள் எடுத்தது.

starcricket444.jpg

பின்னர் ஆட வந்த கோவை கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராம்நாட் ரைனோஸ் அணி வெற்றிபெற்றது. தொடர்ந்து மற்ற அணிகள் மோத இருக்கின்றன. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.vikatan.com/news/tamilnadu/62593-stars-cricket-match-rajni-and-kamal-participated.art

  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

 

  • தொடங்கியவர்

நடிகர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்... ரஜினி-கமல் பகிர்ந்த பாலிசி!

சென்னை: நடிகர்ள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு ரஜினி-கமல் பகிர்ந்த சில பாலிசிகள்.

c4.jpg

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்த நடிகர் ரஜினி காந்த், ''நாசர் அணியான பாண்டவர் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவங்களுடைய முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்" என்றார்.
 

starcricket60011.jpg

அப்போது நடிகை சுஹாசினி, ''நடிகர்களுக்குள் ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் (ரஜினி-கமல்) இரண்டு பேரும் தான் உதாரணம். இதற்கு முன்னோடியும் நீங்கள் தானா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ரஜினிகாந்த், ''கண்டிப்பாக கமல் தான் முன்னோடி'' என்றார். உடனே கமலஹாசன், ''நட்பு என்பது ஒரு ஆள் செய்வது அல்ல. அன்பு மாதிரி, இரண்டு பேர் வேண்டும் அதற்கு. அந்த இரண்டு பேர் தான் நாங்கள். நல்ல வேளை நாங்கள் சின்ன வயதிலேயே இந்த முடிவை எடுத்தோம். அதை இப்போது சொல்லிக்கொள்ள எங்களுக்கு பெருமையாக இருக்கிறது" என்றார்.

starcricket6003.jpg

நடிகர் சங்கத்தோட புது கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சுஹாசினி கேட்டதற்கு கமலஹாசன், ''எல்லோரும் ஆசைப்பட்டது மாதிரி அது இருக்கனும். எல்லோருக்கும் என்னென்ன கனவுகள் இருந்ததோ அதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

c1.jpg

ரஜினிகாந்த்தோ, ''இது துவக்கம் தான். எங்களுக்கு நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. ஏன் கமலஹாசன் கூட நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறார். நாசரும் அவரது அணியில் இருப்பவர்களும் வெளிப்படையாக கருத்துக்களை கேட்க நினைக்கின்றனர். அதனால், இதற்கு பின் எல்லோரும் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்" என்றார்.

starcricket2.jpg

இன்றைய போட்டியில் யார் வெற்றி அடைவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று சுஹாசினி கேட்டதற்கு, ''தோத்தவங்களும் ஜெயித்தவங்க தான் இதில். எல்லோரும் இதில் ஜெயித்தவர்கள் தான். என்னை பொருத்தவரை இந்த போட்டிகளில் ஆடுபவர்கள் எல்லாருமே ஜெயிப்பவர்கள் தான்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/62598-how-actors-should-be-united-rajini-kamals-policy.art

  • தொடங்கியவர்

  இதை பார்த்தால் கிரிக்கெட்யையே மறந்து விடுவீர்கள்...tw_tounge:

நேற்று உந்த கிரிக்கெட்டை கொஞ்ச நேரம் பார்த்து கடுப்பாகி போச்சு 

சுருதி வந்தது கொஞ்சம் ஆறுதல் .

  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholderplaceholder

placeholder

placeholder

placeholder

 

  • தொடங்கியவர்

”விஷாலுக்கு பொண்ணு கெடைக்கலைன்னா நானும் விஷாலும், கல்யாணம் பண்ணிப்போம்” - ஆர்யா கலாய் #நட்சத்திர கிரிக்கெட் பிட்ஸ்

 

 

a151.jpg

திருச்சி டைகர்ஸ் (சிவகார்த்திகேயன்), சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), ராம்நாட் ரைனோஸ் (விஜய் சேதுபதி), கோவை கிங்க்ஸ் (கார்த்தி), சேலம் சீட்டாஸ் (ஆர்யா), மதுரை காளைஸ் (விஷால்), தஞ்சை வாரியர்ஸ் (ஜீவா), நெல்லை டிராகன்ஸ் (ஜெயம் ரவி) ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. குலுக்கல் முறையில் எதிரணிகள் தேர்வு செய்யப்பட்டு லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

முதல்போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியை வென்றது. அதன்பின், விஜய் சேதுபதியின் ராம்நாட் ரைனோஸ், கார்த்தியின் கோவை கிங்ஸ் அணியை வென்றது. ஆர்யாவின் சேலம் சீட்டாஸ், விஷாலின் மதுரை காளைஸ் அணியை வென்றது. ஜீவாவின் தஞ்சை  வாரியர்ஸ் அணி, ஜெயம் ரவி நெல்லை டிராகன்ஸ் அணியை வென்றது.

ரையிறுதிப் போட்டியில், சேலம் சீட்டாஸை, சென்னை சிங்கம் வீழ்த்தியது. ராம்நாட் ரைனோஸை, தஞ்சை வாரியர்ஸ் அணி வென்றது.

றுதிப் போட்டியில் ஜீவாவின், தஞ்சை வாரியர்ஸ் 6 ஓவர்களில் 83/2 ஓட்டங்கள் எடுக்க, சென்னை சிங்கம்ஸ் -  விக்ராந்த் (7 பந்தில் 20 ஓட்டங்கள்), உதயா (12 பந்தில் 24 ஓட்டங்கள்) ஆகியோரின் அதிரடியில் 5வது ஓவரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

எல்.பி.டபிள்யூ இல்லை, நோ பால், வைடுக்கு இரண்டு ரன்கள், ஒரு ஆட்டக்காரர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் அவர் வெளியேறி அடுத்த ஆட்டக்காரர் விளையாடவேண்டும் என்பது போன்று குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்காக, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

னோதானோவென்று ஆட்டம் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் இன்ப அதிர்ச்சிதான்.  சிலரின் பேட்டிங், பவுலிங் எல்லாம் ப்ரொஃபஷனல் லெவலில் இருந்தது. ஒருமாதிரி சீரியஸான மனோபாவத்தில் ஆடினாலும், தோற்றபோதும் சிரிப்புக்கோ, கைகுலுக்கல்களுக்கோ குறைவிருக்கவில்லை. விஷால் மட்டும் கொஞ்சம் உர்ர்ரென்றிருந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமென்ற டென்ஷனாக இருக்கலாம்.

ந்திருந்த ஸ்டார்களை வரவேற்பதிலிருந்து, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது வரை எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

மல் வந்த சிலநிமிடங்களில் ரஜினி வந்ததும், மகிழ்ந்து போயினர் அனைத்து நடிகர்களும். ரஜினி, கமலுக்கு அனைத்து அணியின் கேப்டன்களும் தங்கள் அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

நாட்டுப்புற கலைகளான கரகாட்டம் தப்பாட்டம் தவில் போன்றவை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு கொதிக்கும் வெயிலில் கலைஞர்கள் இவற்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஜினி, கமல், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ், அம்பரீஷ், மம்முட்டி, மோகன் பாபு, சிவராஜ்குமார், சுதீப் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

’ஆடலும் பாடலும் போட்டே ஆகணும்’ என்ற சிவகார்த்திகேயனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீகாந்த் தேவாவின் ஆர்கெஸ்ட்ரா சிறிது நேரம் நடைபெற்றது.

பிஎல்லின் போது, சென்னை அணி சார்பாக பங்குபெற்றதைப் போலவே, டிரம்ஸ் சிவமணி போட்டிகளின்போது தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.  டிரம்ஸ் சிவமணியுடன், கமலும் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் இசைத்தார்.

a12.jpg



லீக் ஆட்டங்கள் முடிந்த இடைவெளியில், மம்முட்டி, கமல், வெங்கடேஷ், விக்ரம், சுதீப் உள்ளிட்டோர் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து பறை அடித்து மகிழ்ந்தனர். அதிலும் ‘பர்த்டே பாய்’ விக்ரம் வேற வெலவில் கலக்கினார்!

பாலகிருஷ்ணா, வெயில்தாங்காமல் சட்டையைக் கழட்டி முண்டா பனியனோடு செம கேஷுவலாக இருந்தார். அவர் ஸ்டைலிலேயே, ‘சென்னை என் ஊரு’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார். சிவராஜ்குமாரும், ‘நான் பொறந்தது, படிச்சதெல்லாம் இங்கதானே. விஷால், கார்த்தி கூப்டப்ப, ‘என் ஊருக்கு நான் வராமயா?’ன்னுதான் சொன்னேன்’ என்றார்.

சிவராஜ்குமார் ஒன்றிரண்டு முறை ‘சிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

த்யராஜ், ‘பல பேருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது’ எனக் கூறி சிரிப்புமூட்டினார்.

ரத்குமார், ராதாரவி, விஜய், அஜித் ஆகியோர் வரவில்லை. ஆனால் சரத்குமார் மகள் வரலட்சுமி இறுதிவரை இருந்தார். அதேபோல, நடிகர்சஙகத் தேர்தலில் சரத்குமார் அணியில் இருந்த விஜயகுமாரும் வந்திருந்தார்.
 
சேலம் சீட்டாஸ் சார்பில் விளையாடிய கார்த்திக் இளம் நடிகர்களுக்கும் டஃப் போட்டி கொடுத்தார். நேர்கோட்டில் ஸ்லோ பால் வீசி, மிரளவைத்தார். கடும்வெயிலிலும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். ’அவர் அப்பவே இந்த மாதிரி கிரிக்கெட்லாம் விளையாடிருக்கார்’ என்றார் நடிகர் சுரேஷ்.

விக்ரமின் பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸாக பெரிய சைஸ் கேக் வரவழைக்கப்பட்டு மைதானத்திலேயே கொண்டாடப்பட்டது.

சேலம் சீட்டாஸின் ஆர்யா, நிகழ்ச்சி முழுவதுமே செம ரகளையாகத் திரிந்தார்.  விஷாலை கலாய்த்துக் கொண்டே இருந்தார் ‘எப்போ கல்யாணம் ஆர்யா?’ என்று வரலட்சுமி கேட்டதற்கு ‘நடிகர் சங்கக் கட்டடத்தில மொதல்ல அண்ணன் விஷாலுக்கு கல்யாணம். அடுத்ததா நான் பண்ணிப்பேன். அப்டி அவனுக்கு பொண்ணு கெடைக்கலைன்னா, நாங்க ரெண்டு பேரும் பண்ணிப்போம்’ என்று கலாய்த்தார்.  லீகில், விஷால் அணியை வென்றதும், ‘புரட்சித்தளபதி விஷாலைப் போட்டுத் தள்ளீட்டோம்’ என்றார்.

டிகர் சங்கத்துக்கும், சங்கத்தின் மூலம் வேறு சிலருக்கும் என சில நல்ல காரியங்கள் அரங்கேறின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கம் சார்பாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு வழங்கினர். அதே சமயம் சன் டிவி நடிகர் சங்கத்துக்கு 1.75 கோடிக்கு காசோலையும், சங்கத்தின் அறக்கட்டளைக்கு 7.25 கோடிக்கான காசோலையும் என மொத்தம் ஒன்பது கோடியை வழங்கினர். மேலும் ஸ்பான்சர்களின் பணங்களும் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.  ஆட்டநாயகன் விருதை வாங்கிய விக்ராந்த், அதற்காக தனக்கு அளிக்கப்பட்ட புது காரை நடிகர் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதே போல இறுதியில் விஷால் பேசுகையில், ‘நலிந்த நாடகக் கலைஞர்கள் உட்பட பலர் இதனால் பயன்பெறப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இங்கு வந்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.

முன்னதாக ரஜினி, கமலை பேட்டி கண்ட சுஹாசினி, ‘சினிமால சரிசமமா இருக்கற ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கறதுக்கு நீங்க ரெண்டு பேரும் பெரிய உதாரணம்! எப்படி இப்படி?’ என்று கேட்க, ‘கமல்தான் முன்னோடி’ என்று மைக்கை கமலிடம் கொடுத்தார் ரஜினி.  கமல், ‘இது நாங்க மனதார தெரிஞ்சே எடுத்த முடிவு. ரெண்டு பேரோட தொழில் போட்டி ஒருபக்கம்... யாரார் என்னென்ன சொல்லுவாங்கன்னெல்லாமே எங்களுக்கு தெரியும். இது எதுவுமே எங்க நட்பை பாதிக்க கூடாதுன்னு இருந்தோம். நல்லவேளை சின்ன வயசுலயே இந்த முடிவ எடுத்தோம். இப்ப சொல்லிக்கப் பெருமையா இருக்கு’ என்றார். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/62624-natchathira-cricket-2016-bits-and-bites.art

 

21 hours ago, நவீனன் said:

  இதை பார்த்தால் கிரிக்கெட்யையே மறந்து விடுவீர்கள்...tw_tounge:

அட பாவி பந்தில இம்புட்டு ஷ்விங்கா 
பிட்சுக்கு வெளியே போட்டிருந்தால் பந்து அப்படியே திரும்பி மிடில் ஸ்டம்ப தூக்கியிருக்கும்.

இவனுகளெல்லாம் இந்திய கிரிக்கட் அணி தேர்வு சபை கண்ணுலே படாம  எப்படிதான் இம்புட்டு காலமா  இருந்தாங்களோ  தெரியல்லையே  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

  இதை பார்த்தால் கிரிக்கெட்யையே மறந்து விடுவீர்கள்...tw_tounge:

அரையும்குறையுமா தமன்னாவை மிடில் ஸ்ரம்பில நிறுத்தி இருந்தா.. கார்த்தி ஸ்ரம்புக்கு போல் போட்டிருப்பாய்யா. இவ்வளவு விளம்பரம் தேடி வைக்கத் தெரிஞ்சவங்களுக்கு அது புரியல்லையே..tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.