Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா

 

SAM_3390.jpg
நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
இதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது  சிரிப்பொன்றை உதிர்த்த அவர், யார் எல்லாளன் என இப்போது கூறுவது தமது பிரேரணையை பாதிக்கும் எனவும் பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் –
 
1983 ஆம் ஆண்டு கலவரம் உள்ளடங்கலாக இறுதிப் போர் வரையிலான காலப்பகுதிகளில் உயிரிழந்த உறவுகளை ஞாபகப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கான சமயக் கடமைகளைச் செய்வதற்கும் பொதுவான தினம் ஒன்றை பிரகடனம் செய்யவேண்டும் என்பதுடன் குறித்த பிரதேசத்தைப் புனித பிரதேசமாக்கி அங்கு நினைவுத் தூபி ஒன்றையும் அமைக்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.
 
கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுடன் அவற்றை சரியாக செயற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா கிடைக்கப்பெற்றுள்ள புதிய அரசியலமைப்பை உரிய முறையில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார்.
 
இதனடிப்படையில் புதிய அரசு புதியதொரு வாய்ப்பினை உருவாக்கியுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாக செயற்படுத்த பொதுவானதொரு இணக்கப்பாடு எட்டப்படவேண்டும். அது கலந்துரையாடல்களுக்கு ஊடாகத்தான் முன்னெடுக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
 
புதிய அரசியல் பேரவையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர் கொண்ட செயற்பாட்டுக்குழுவில் நானும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில்இ கடந்த காலங்களில் வெளியில் இருந்துகொண்டு பிரச்சினைகளை கையாண்டுவந்த நிலையில் தற்போது உள்ளிருந்துகொண்டு அவற்றைச் செயற்படுத்தவுள்ளேன்.
 
தமிழ்க்கட்சிகளின் கூட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையுடனும் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இக்கூட்டின் நோக்கம் என்னவெனில் அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகளை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக எமது மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க முடியும் என்பதேயாகும். அத்தோடு சிறைக்கைதிகள் விடுவிப்புஇ காணாமல் போனோர் விவகாரம் குறித்து அக்கறை செலுத்துதல் நில மீட்புஇ மீள்குடியேற்றம் குறித்தும் பொது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒன்றுபட்டு குரலெழுப்பி செயலாற்றுவதே இந்தக் கூட்டு முயற்சியின் இலக்காகும்.
 
65000 வீடமைப்புத்திட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள போதிலும் இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு  இந்த அரசைக் கொண்டுவந்தவர்கள் தாமென கூறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசி மாற்றம் செய்திருக்க முடியும். ஆனால் அரசியல் பலமுள்ள அவர்களால் இது தொடர்பில் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
 
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு எமது கட்சியின் கொள்கைகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கூறியிருந்த நிலையில் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
 
இதேபோன்றுதான் ஐக்கிய தேசிய முன்னணியிடமிருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனுடனும் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு விடயம் தொடர்பாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் இது விடயத்தில் எதையும் தற்போது எதிர்வு கூறமுடியாது.
 
அத்துடன் சம்பூர் அனல்மின் நிலையம் மட்டுமன்றி இந்திய மீனவர்களின் பிரச்சினை குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்காதது ஏன் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்- அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் வசிக்கின்றமையே பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா நாம் மட்டுமே மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் நாம் குரல் கொடுப்பது இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
 
எமது மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை புனரமைப்பு செய்வதனூடாக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது யாழ் மாவட்ட மக்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
 
நெடுந்தீவில் ஐம்பது மில்லியன் நிதியில் குடிநீர்த்திட்டத்தை செயற்படுத்தி அது தற்போது மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினூடாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம் என்றும் தெரிவித்திருந்தார்.

http://www.vakeesam.com/2016/04/EPDP.html

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் பெயரை உச்சரிக்காமல்... அவரின் அரசியல்.. சமூக அடையாளங்களுக்குள் பதுங்காமல்.. ஒட்டுக்குழுக்களுக்கும் எனி அரசியல் இல்லை என்றான பின்.. டக்கி அங்கிள் இந்த முடிவுக்கு வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 2009  மே வரை வவுனியாவில் நின்று சொந்த இனத்தை அழித்த சித்தார்த்தனே கடைசியில் பதுங்கினது.. தேசிய தலைவரின் நிழலான.. கூட்டமைப்பில் தானே. பாவம் டக்கி அங்கிள் தனிச்சுப் போட்டார். தேசிய தலைவருக்கான இந்தச் சிலை............ அவருக்கு (டக்கியருக்கு).. பதுங்க நல்ல வாய்ப்பாகும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Surveyor said:

 

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு எமது கட்சியின் கொள்கைகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கூறியிருந்த நிலையில் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தை.... இவர் சிங்கப்பூராக மாற்றும் திட்டம் எந்தளவில் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலை அமைக்கிறது இருக்கட்டும்... இந்தப் பத்திரிகையாளர் கேட்போர் கூட மேற்சுவர்.. தண்ணி ஊறி.. பாசி வளர்ந்து கிடக்குது. முதல்ல அதனச் சுரண்டி.. வெள்ளையடிங்கப்பா... இல்ல பெயின்ட் அடிங்க. பார்க்க அசிங்கமா இருக்குது. எப்படி உங்க கருத்தை நம்புறது. ஒரு பத்திரிகையாளர் கூடத்தைக் கூட சராசரி நல்ல தரத்தில் வைச்சிருக்க வக்கில்ல..........................:rolleyes:

  • தொடங்கியவர்

சிலை கட்டிறதுக்கு எண்டு சொல்லி பெர்மிட் எடுத்து கொஞ்ச மணல் அள்ளி விக்கலாம் எண்டு பிளான் போட்டிருப்பார்.

5 minutes ago, nedukkalapoovan said:

சிலை அமைக்கிறது இருக்கட்டும்... இந்தப் பத்திரிகையாளர் கேட்போர் கூட மேற்சுவர்.. தண்ணி ஊறி.. பாசி வளர்ந்து கிடக்குது. முதல்ல அதனச் சுரண்டி.. வெள்ளையடிங்கப்பா... இல்ல பெயின்ட் அடிங்க. பார்க்க அசிங்கமா இருக்குது. எப்படி உங்க கருத்தை நம்புறது. ஒரு பத்திரிகையாளர் கூடத்தைக் கூட சராசரி நல்ல தரத்தில் வைச்சிருக்க வக்கில்ல..........................:rolleyes:

அண்ணை பத்திரிகையாளர் என்று யாரும் இருந்தா தானே

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துகள். ஆனாக்கையோடை .....

  • கருத்துக்கள உறவுகள்

மலை ஒன்று...,

சிலையாகும் போது,

மலையின் மகத்துவம்,

மறைந்து போய் விடாதா?

 

விலை போகாத வீரம்,

சிலையாகிச் சிதைந்து,

காகமும்..கரிக்குருவியும்,

கழிவிடும் கல்லாகி விடாதா?

 

சிலையாகும் தலைவன்,

சங்கிலியன் போல...,

சாந்த முகத்துடன்,

சத்தகக் காம்புடன் நிற்பானா?

 

அன்றி,

பூமாலை ஏந்தி,

பொட்டும் வைத்து,

திருநீறும் பூசியிருப்பானா?

குழல் துப்பாக்கிப் பதிலாய்,

குடை ஒன்று வைத்திருப்பானா?

ஆரறிவார்?

 

வேண்டாமே....,

இந்த விஷப் பரீட்சை!

எல்லாளன் சிலைக்கு...,

என்ன மரியாதை என்று,,

எங்களுக்குத் தெரியாதா?

 

அவன்,,,.

அவனாகவே இருக்கட்டும்!

விட்டு விடுங்கள்!

 

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

தலைவர் இறந்துவிட்டதாய் காட்ட எடுக்கப்படும் புது முயற்சி.

பொன்சேகாவின் காமெடி கருத்தில் எடுபடாமல் போக டக்கியை இறக்கிப்பார்க்கினம் போல 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மனதில் மலையாக இருப்பவனுக்குச் சிலை எதற்கு..?

Quote

1983 ஆம் ஆண்டு கலவரம் உள்ளடங்கலாக இறுதிப் போர் வரையிலான காலப்பகுதிகளில் உயிரிழந்த உறவுகளை ஞாபகப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கான சமயக் கடமைகளைச் செய்வதற்கும் பொதுவான தினம் ஒன்றை பிரகடனம் செய்யவேண்டும் என்பதுடன் குறித்த பிரதேசத்தைப் புனித பிரதேசமாக்கி அங்கு நினைவுத் தூபி ஒன்றையும் அமைக்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.

எங்களை மாதிரி வாழ்க்கை சிதைக்கப்பட்டு ஊரைவிட்டு துரத்தப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஏதும் கட்டினால் நல்லது. ஏன் என்றால் நாங்களும் அங்கே உயிர் இழந்தவர்கள் மாதிரித்தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.