Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மண் சாதாரண மண்ணல்ல இதுவொரு புண்ணிய பூமி -யாழ்.இந்திய துணைத்தூதுவர்

Featured Replies

9766.jpg

யாழ்.மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதுவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனை பூமி, இதுவொரு அறிவுடைய பூமி
என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலா வது அமைச்சர் கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் அவர்களது 125 ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று முன்தினம் யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில், புகழ்பூத்த இலக்கியவாதிகளையும் சமயப் பெரியார்களையும் தன்னகத்தே என்றும் கொண்டி ருக்கின்ற யாழ்.மண்ணை நாங்கள் என்றைக்கும் போற்றுகிறோம்.
எமக்கிடையே நீண்டதொரு தொப்புள்கொடி உறவு காணப்படுகிறது. 
அந்த தொப்புள் கொடி உறவுதான் நாம் பேசும் தாய் மொழி நம் தமிழ்மொழி. அந்த வகையில் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தலைநிமிர்ந்த பெருமையடைய வேண்டும். 

எங்கள் நாட்டிலுள்ளவர்கள் பேசும் தாய்மொழி தமிழை விட பிழையின்றி உச்சரிக்க கூடியவர் கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே என இந்தியத் துணைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்தப் பட்டிமன்ற நிகழ்வின் போது இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களான ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றி யிருந்தனர்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9766&ctype=news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புண்ணியம் கிடைக்குமென்டுதான.. கூன்டோட அழிச்சனியள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thirdeye said:

புண்ணியம் கிடைக்குமென்டுதான.. கூன்டோட அழிச்சனியள்.

ஓநாய் மீண்டும் எதுக்காகவோ தான் ஓலமிடுகிறது.....

இனி என்ன இருக்கு.....??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

9766.jpg

யாழ்.மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதுவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனை பூமி, இதுவொரு அறிவுடைய பூமி
என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

....

....

அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில், புகழ்பூத்த இலக்கியவாதிகளையும் சமயப் பெரியார்களையும் தன்னகத்தே என்றும் கொண்டி ருக்கின்ற யாழ்.மண்ணை நாங்கள் என்றைக்கும் போற்றுகிறோம். எமக்கிடையே நீண்டதொரு தொப்புள்கொடி உறவு காணப்படுகிறது. 
அந்த தொப்புள் கொடி உறவுதான் நாம் பேசும் தாய் மொழி நம் தமிழ்மொழி.
அந்த வகையில் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தலைநிமிர்ந்த பெருமையடைய வேண்டும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9766&ctype=news

பாவம், அந்தக் கொடி உறவுகள் மண்ணில் புதைந்து கதறித் துடித்தபோது அரசியல் வியாபாரிகள் நீங்கள் அகந்தையில் தலை நிமிர்ந்தீர்கள், நாங்கள் தலைகுனிந்தோம் ஐயா..!

மொழியை சொல்லி வேண்டாம் இந்த கேவலப் பிழைப்பு!

  • தொடங்கியவர்
10 hours ago, Athavan CH said:

யாழ்.மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதுவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனை பூமி, இதுவொரு அறிவுடைய பூமி

இப்படிப்பட்ட இந்த பூமியை விட்டு மலங்கள் நீங்கள் முதலில் வெளியேறுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய தூதர் நன்றாகதானே சொல்லி உள்ளார். கடந்த காலத்தை கிளறிகொண்டு இராது நிகழ்காலத்தை வளப்படுத்த வேண்டும்.  அதற்கு இந்தியாவுடன் இணைந்து சென்றாலே நல்லது. ஈழத்தில் தமிழின அழிப்புக்கு அரசியல்வாதிகளை மட்டும் காட்டிவிட்டு தப்பித்துவிட முடியாது. இந்தியாவின் தேசிய மாநில அரசியலில் அதிகமாக பத்தாயிரம் தமிழ் அரசியல்வாதிகள் இருந்தால் மிகுதி மக்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள். சில தமிழுணர்வாளகள் உயிரைக் கூட தியாகம் செய்தார்கள். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றும் கைங்காரியம்தான் என்ன. குறைந்தது தமிழ்நாட்டின் அகதி முகாம்களில்தான் நிம்மதியாக வாழ முடிகின்றதா?

வெறும் உணர்சி வசப்பட்டு ஆகபோவது எதுவுமில்லை ,

இந்தியா கடைசி எமது அயல் நாடு ,

எங்கேயோ இருக்கும் அமரிக்கன் ஈராக் ,லிபியா ,சிரியா எல்லாம் கண் மண் தெரியாமல் குண்டு போடுகின்றான் .

நாம் நினைப்பது மாதிரி உலகம் ஆடாது உலகிற்கேற்ப நாங்கள் ஆடவேண்டும் ,

இந்தியா என்ற நாடு இல்லாவிட்டால் சிங்களவன் எம்மை எப்போதோ பச்சடி போட்டிருப்பான் .இந்தியாதான் சிங்களவனுக்கு முதல் எதிரி இன்று யாழில் இந்திய தூதரகம் இருப்பது சிங்களவனுக்கு விருப்பமா என்ன ? இல்லை என்று சொல்ல முடியாது .

இதுவெல்லாம் விளங்காமல் நாங்கள் அரசியல் செய்ய வெளிக்கிட்டோம் பாருங்கோ ?

இலங்கை -இந்திய ஒப்பந்ததை கையெழுத்து இட்டிருந்தால் இன்று யுத்தமும் இல்லை அழிவும் இல்லை வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் தமிழர்கள் ஆட்சியில் இருந்திருப்பார்கள் .

சிங்களவன் இந்தியாவிற்கு பயந்து அடங்கியிருப்பான் முஸ்லிம்கள் வாயே திறந்திருக்க மாட்டார்கள் .

இவற்றை எல்லாம் விளங்காத விளங்க முடியாத ஒருவரை இன்றுவரை தலைவர் என்கின்றோம் பாருங்கோ

இன்னமும் இதை விட கேவலமாக அனுப்பவிக்க போகின்றோம் . 

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

இந்தியா என்ற நாடு இல்லாவிட்டால் சிங்களவன் எம்மை எப்போதோ பச்சடி போட்டிருப்பான் ..

இலங்கை -இந்திய ஒப்பந்ததை கையெழுத்து இட்டிருந்தால் இன்று யுத்தமும் இல்லை அழிவும் இல்லை வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் தமிழர்கள் ஆட்சியில் இருந்திருப்பார்கள் .

மிகத்தவறான

வரலாற்று பாடமில்லாத எழுத்து...

Just now, விசுகு said:

மிகத்தவறான

வரலாற்று பாடமில்லாத எழுத்து...

உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு எழுதினேன் உங்களுக்கு அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, arjun said:

உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு எழுதினேன் உங்களுக்கு அல்ல .

புலிகள் மறுத்ததால்

இந்தியா மாகாண சபையை 

தமிழர்களை கைவிட்டது என்பது எவ்வளவு உலக அரசியல் அறிவு சார்ந்தது???

அண்ணே அது இந்திய மாகாணசபை அல்ல ,

ஒப்பந்தம் உருவாகாமல் யுத்தத்தை ஏற்படுத்தியவர்கள் புலிகள் ,

அதன் பின் யுத்தம் ராஜீவ் கொலை என்று இன்றுவரை நீளுது பிரச்சனை .

The Indo-Sri Lanka Peace Accord was an accord signed in Colombo on 29 July, 1987, between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J. R. Jayewardene. The accord was expected to resolve the Sri Lankan civil war. Under the terms of the agreement,[1][2] Colombo agreed to a devolution of power to the provinces, the Sri Lankan troops were to be withdrawn to their barracks in the north and the Tamil rebels were to surrender their arms.[3][4]

Importantly however, the Tamil groups, notably the Liberation Tigers of Tamil Eelam (LTTE) (which at the time was one of the strongest Tamil forces) had not been made party to the talks and initially agreed to surrender their arms to the Indian Peace-Keeping Force (IPKF) only reluctantly. Within a few months however, this flared into an active confrontation. The LTTE declared their intent to continue the armed struggle for an independent Tamil Eelam and refused to disarm. The IPKF found itself engaged in a bloody police action against the LTTE. Further complicating the return to peace was a burgeoning Sinhalese insurgency in the south.

மேலோட்டமான செய்தி இதுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, arjun said:

அண்ணையும் விக்கி பிக்கிதான்.... மற்றவனை பார்த்து நக்கலடிக்கேக்கை......அது சும்மா....tw_lol:

1 hour ago, குமாரசாமி said:

அண்ணையும் விக்கி பிக்கிதான்.... மற்றவனை பார்த்து நக்கலடிக்கேக்கை......அது சும்மா....tw_lol:

உந்த தீர்வு விடயம் தொடங்கும் நேரம் இந்தியனுடன் இருந்த ஆட்கள் நாங்கள் என்றால் நம்பமாட்டிர்கள் ,

இப்ப ஆங்கிலத்தில் விக்கி தான் துணை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, arjun said:

உந்த தீர்வு விடயம் தொடங்கும் நேரம் இந்தியனுடன் இருந்த ஆட்கள் நாங்கள் என்றால் நம்பமாட்டிர்கள் ,

இப்ப ஆங்கிலத்தில் விக்கி தான் துணை .

யு மீன் தாங்கள் காட்டிக்கொடுத்த கோஷ்டி எண்டதை வலு டீசன்ராய் "தீர்வு" எண்டு சொல்ல வாறியள்.

விபரமான ஆட்களை புலிகள் அப்படிதான் நினைத்தார்கள் .

முள்ளிவாய்காலில் முடிவு வந்த போது அட அவங்கள் அப்பவும் சொன்னார்கள் என்று நினைக்கும் போது டூ லேட் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

வெறும் உணர்சி வசப்பட்டு ஆகபோவது எதுவுமில்லை ,

இந்தியா கடைசி எமது அயல் நாடு ,

எங்கேயோ இருக்கும் அமரிக்கன் ஈராக் ,லிபியா ,சிரியா எல்லாம் கண் மண் தெரியாமல் குண்டு போடுகின்றான் .

நாம் நினைப்பது மாதிரி உலகம் ஆடாது உலகிற்கேற்ப நாங்கள் ஆடவேண்டும் ,

இந்தியா என்ற நாடு இல்லாவிட்டால் சிங்களவன் எம்மை எப்போதோ பச்சடி போட்டிருப்பான் .இந்தியாதான் சிங்களவனுக்கு முதல் எதிரி இன்று யாழில் இந்திய தூதரகம் இருப்பது சிங்களவனுக்கு விருப்பமா என்ன ? இல்லை என்று சொல்ல முடியாது .

இதுவெல்லாம் விளங்காமல் நாங்கள் அரசியல் செய்ய வெளிக்கிட்டோம் பாருங்கோ ?

இலங்கை -இந்திய ஒப்பந்ததை கையெழுத்து இட்டிருந்தால் இன்று யுத்தமும் இல்லை அழிவும் இல்லை வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் தமிழர்கள் ஆட்சியில் இருந்திருப்பார்கள் .

சிங்களவன் இந்தியாவிற்கு பயந்து அடங்கியிருப்பான் முஸ்லிம்கள் வாயே திறந்திருக்க மாட்டார்கள் .

இவற்றை எல்லாம் விளங்காத விளங்க முடியாத ஒருவரை இன்றுவரை தலைவர் என்கின்றோம் பாருங்கோ

இன்னமும் இதை விட கேவலமாக அனுப்பவிக்க போகின்றோம் . 

 நீங்கள் சொல்லுறதெல்லாம் சரிதான். புலிகள் அழிந்து பல வருடங்கள் கழிந்தாயிற்று. நீங்கள் சொல்லுற தீர்வொன்றும் ஏன்  இன்னும் கிடைக்கேல? அந்தத் தீர்வுக்கு இப்ப யார் தடை? ஏன் ஆயுதம் தூக்க வைச்சவை?அகிம்சையில போராடும் போதே தந்திருக்கலாமே? இதுக்கும் பதிலைச் சொன்னீங்கள் எண்டால் விளங்கிக் கொள்வோமில்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.