Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு முதல்வரைக் கைவிடுகிறார் ஹக்கீம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ஆம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார். குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158467&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நானாவுக்கு நாக்கில அட்டமத்து சனி குடிகொண்டிருந்திருக்கு ....கிளப்பி விட்டுட்டார் 
இனி அவர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டாலும் ..சனி விட்டுத்  தொலையாது 

  • கருத்துக்கள உறவுகள்

தேவையானா இஸ்லாத்தையே கைவிட்டுவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Mano Ganesan
23 hrs

(27/05/16) < கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம்> இந்த நொடியில் என் மனதில்……

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். அவரது வரலாறு ஒன்றும் நேர்கோட்டில் வந்த யோக்கிய வரலாறு இல்லை. (அப்படி பார்த்தால் இங்கே யார்…?) அவரது இந்த பதவியும், முஸ்லிம் காங்கிரசுக்குள் அவரது மறு(?) பிரவேசமும் அந்த கட்சியை பொறுத்தது. கடந்த காலங்களில் அவருக்கும் மாமனிதர் அஸ்ரப்புக்கும் இருந்த உறவும் அப்படித்தான். அதேபோல், இன்று அந்த கண்காணா காட்சியில் அவரது நடவடிக்கை சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அங்கே அவருக்கு அவமானம், வரிசை மரபு (Protocol) மீறல் நிகழ்ந்திருந்தால் (நிகழ்ந்துள்ளது!), அதை அவர் இன்னமும் நாகரீகமாக கையாண்டு இருக்க வேண்டும்.

அழையா விருந்தாளியாக போனாரா, அங்கே போன பிறகு மேடைக்கு (அவர் சொல்வதைப்போல்) ‘ஒரு பொடியன்’ அழைக்கப்படுவதைப்போல் கைசுட்டி அழைக்கப்பட்டாரா? என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவர் அந்த மாகாண முதலமைச்சர் என்பது முதல் தரவு (Fact). இந்த ஒரு தரவு முக்கியமானது. அடுத்தது, அந்த காட்சியில் கடற்படை அதிகாரி திரும்ப, திரும்ப சளைக்காமல் முதல்வரை ஏதோ சொல்லி தடுக்க முயன்று, அவரைப்பற்றி ஆளுனரிடம் புகாரிடுவது தெரிகிறது. இது இரண்டாம் தரவு,

இந்த தரவுகளை (Facts), நிறைய பேர் வேண்டுமென்றே கவனிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் இயல்பாக எழுகிறது. குறிப்பாக நிறைய அரசியல்வாதிகள், குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகள் முன் தோன்றி, தங்கள் பகைமைகளை தீர்த்து கொள்ளவோ அல்லது பெரும்பான்மை நபர்களை திருப்திபடுத்தவோ முயல்வதாக தெரிகிறது. மட்டக்களப்பின் அந்த சர்ச்சைக்குரிய பெளத்த துறவி நேற்று முதல்வரை சந்தித்து பேசியவை வரம்பு மீறிய வார்த்தைகள். சிங்கள ஊடகர்கள், ஊடகங்கங்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் போட்டு தாக்கும்போது நம்மவர்களும் இந்த நசீர் அஹமட்டை போட்டு தாக்குகிறார்கள். சிலர் அவரது இங்கிலிஷைகூட குறை சொல்கிறார்கள். அது என்ன ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளியா? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்குள் இந்த கேள்விகள் எழுகின்றன. இன்னமும் சில கேள்விகள்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. ஒன்பது முதல்வர்கள் உள்ளார்கள். அதில் வடக்கில் உள்ளவர் தமிழராகவும், கிழக்கில் உள்ளவர் முஸ்லிமாகவும் உள்ளார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சிங்களவர்கள் இல்லை.

இதே மாதிரியான சம்பவம் வேறு ஒரு சிங்கள முதல்வர் இருக்கும் மாகாணத்தில் நடந்து இருந்தால், அதை எப்படி சிங்கள ஊடகர்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் கையாண்டு இருப்பார்கள். உண்மையில் சொல்லப்போனால், முதல்வரை அழைக்காமல் விடுவது, அழைக்கப்படாமல் இவர் போனாலும் அவரை மேடையேற வேண்டாம் என்று சொல்வது, என்ற அளவுகளுக்கு இந்த பிரச்சினை போயிருக்குமா?

அங்கே இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோவும், அதுல் கேசாபும் என் நண்பர்கள். இவர்கள் இருவரிடமும், நான் வேலைப்பளு காரணமாக, இதுபற்றி இன்னமும் பேசவில்லை. ஆனால், பேசுவேன்.

ஒரு முதல்வர் அழைக்கப்படாமல் வந்துவிட்டால்கூட, அவரை மாலை போட்டு, வரவேற்று மேடை ஏற்றுவதில் என்னய்யா தயக்கம்? கூடவே மாகாண கல்வி அமைச்சரையும் முதல்வர் கூட்டி வந்தாரே? அவர் அந்த மாகாணத்தின் விவிஐபி (VVIP) இல்லையா? ஒருவேளை அந்த கடற்படை அதிகாரிக்கும், முதல்வருக்கும் முன்கூட்டிய விரோதம் இருக்கிறது என வைத்துக்கொண்டாலும்கூட, ஒரு பொது நிகழ்வில் முதல்வருக்கு உரிய பதவிநிலை மரியாதை வழங்கப்படக்கூடாதா? அந்த கடற்படை அதிகாரி பெரிய கெட்டிக்கார கில்லாடிதான். செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், கடைசிவரை அவர் தனது முகத்தில் புன்னகையை தக்க வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த முதல்வர் எள்ளும், கொள்ளும் வெடித்து, கையை காலை வீசி, பதட்டமடைந்து, முதிர்சியற்றவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஒரு முதல்வருக்கு இது அழகல்ல. இதுதான் இங்கே நடந்தது.

மற்றபடி கூட்டி கழித்து பார்த்தால், இந்த விஷயத்தில் நான் நசீர் அஹமட் பக்கம்.

(நசீருடன் நான் இருக்கும் படம் இல்லை. ஆகவே இன்னொரு முதல்வருடன் கூடிய படத்தை இங்கே போடுகிறேன்)

Mano Ganesan's photo.
LikeShow more reactions
Comment
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:
Mano Ganesan
23 hrs · 
 
CommentShare

ஐயா ...மனோ அவர்களே 
நீங்கள் யார் பக்கம் என்பதல்ல மேட்டர் ....உங்களுக்கு இப்படியொன்று நடந்தால் நசீர் உங்கள் பக்கம் நிற்பாரா என்பது தான் மேட்டர்
பிழைக்க தெரியாத பிள்ளையாக இருக்காமல் ...இது அவரது பிரச்சினை அவரே பார்த்துக்கொள்ளட்டும்...இன்றைய காலகட்டத்தில் சிங்களவனை முடிந்தவரை பகைத்துகொள்லாமல் இருப்பது உத்தமம் அதிலும் ஒரு முஸ்லிமிட்காக பகைத்து கொள்ளாமல் இருப்பது அதி உத்தமம்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.