Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோரியோர் நாடு திரும்ப ஆர்வமில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோருவோர் நாடு திரும்ப ஆர்வம் காட்டவில்லை என சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எனினும் அரசியல் தஞ்சம் கோரிய நாடுகளில் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை கருத்திற் கொண்டு தஞ்சம் கோரிய இலங்கையர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 887 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ளதாக சுவிஸ் குடிப்பெயர்வாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலங்கையர்களுக்கு எழில் கொஞ்சும் ரிக்கி மலைப் பிரதேசத்தில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரப்பிரசாதங்களை புறந்தள்ளிவிட்டு எந்தவொரு இலங்கையரும் சுவிட்சர்லாந்தை விட்டு நாடு திரும்ப மாட்டார்கள் என சுவிஸ் தகவல்கள் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தஞ்சம் பெற்றுக்கொண்ட அதிகளவான இலங்கையர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com/politics/01/106554

தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களிலேயே சொல்லிவிட்டார்கள். ஆச்சரியம் தான்.
இப்படி அவசரப்பட்டால் எப்படி!
நிலைமைகள் சீரடைந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தாய்மண் மீது பற்றிருக்கும் பலர் திரும்புவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்மாதிரியா ஏன் இத்தாலி.. பிரான்ஸ்.. பிரிட்டன்.. அமெரிக்கா.. கனடா.. அவுஸில் உள்ள சிங்களவர்கள் நாடு திரும்பி தங்கள் தாய் நாட்டுப் பாசத்தைக் காட்டக் கூடாது.. திவியின காரங்களிட்ட இதை யார் கேட்பது..?!tw_blush::rolleyes:

3 minutes ago, nedukkalapoovan said:

இதற்கு முன்மாதிரியா ஏன் இத்தாலி.. பிரான்ஸ்.. பிரிட்டன்.. அமெரிக்கா.. கனடா.. அவுஸில் உள்ள சிங்களவர்கள் நாடு திரும்பி தங்கள் தாய் நாட்டுப் பாசத்தைக் காட்டக் கூடாது.. திவியின காரங்களிட்ட இதை யார் கேட்பது..?!tw_blush::rolleyes:

தமிழர் தாய்நாடு திரும்பக் கூடாது, தமிழர் தாய்நாடு திரும்பும் மனநிலையை பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அளவுகடந்த கரிசனை தான், நாலு சுவர்களுக்குள் இருந்துகொண்டு சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

தமிழர் தாய்நாடு திரும்பக் கூடாது, தமிழர் தாய்நாடு திரும்பும் மனநிலையை பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அளவுகடந்த கரிசனை தான், நாலு சுவர்களுக்குள் இருந்துகொண்டு சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுகிறார்கள்.

இருக்கலாம். தமிழன் இரட்டை பாஸ்போட்டில் வந்து ஏன் கோத்தா மாதிரி இருக்க முடியாது... என்னு.. திவியினவுக்கு சிந்திக்க வரேல்ல. வராது. வந்திட்டா எப்படி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. tw_blush:

6 minutes ago, nedukkalapoovan said:

இருக்கலாம். தமிழன் இரட்டை பாஸ்போட்டில் வந்து ஏன் கோத்தா மாதிரி இருக்க முடியாது... என்னு.. திவியினவுக்கு சிந்திக்க வரேல்ல. வராது. வந்திட்டா எப்படி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. tw_blush:

எனக்கு தெரிந்த தமிழர் பலர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்கள். சிங்கள இனவெறி அரசு அவர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்துள்ளது (B-Citizen).

ஆனால் சென்ற அகதிகள் இலங்கை கடவுச்சீட்டு பெற்று திரும்பினால் அவர்கள் வாக்களிக்கும் உரிமையும் பெற்றவர்கள் ஆகிறார்கள். தமிழரின் வாக்குப்பலம் அதிகரிக்கும். இது சிங்களவனின் நோக்கத்தில் விழுந்த பாரிய அடியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 04/06/2016 at 7:49 AM, போல் said:

தமிழர் தாய்நாடு திரும்பக் கூடாது, தமிழர் தாய்நாடு திரும்பும் மனநிலையை பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அளவுகடந்த கரிசனை தான், நாலு சுவர்களுக்குள் இருந்துகொண்டு சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுகிறார்கள்.

இப்படியான சிந்தனைகள் எமது பக்கத்திலிருந்தும் வருகுது.இதையும் தானடி தமிழ் மக்கள் நாடு திரும்புவதை ஊக்குவிக்க வேணும்.கடசி எதிர் மறைக்கருத்துக்களையாவது தவிர்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குப் பாதுகாப்பு உறுதியானால் பெருந்தொகையானோர் நாடு திரும்புவார்கள். இந்தியன் ஆமி வந்திறங்கியபின் அவர்களின் பாதுகாப்பை நம்பிப் பலர் நாடுதிரும்பியதை நோக்கவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆனால் அந்த நிலமை வரும்வரை(எப்ப வருமோ) அங்குள்ள மக்கள் தொடர்ந்தும் வெளியேறாமல் இருப்பதற்க்குரிய முறையில் புலம் பெயர்ந்தோர் செயற்பட வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.