Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !

Featured Replies

ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பாணம் செல்கிறார்!

Ramanan
Created by Ramanan 
Editor
posted on 11 hours ago
 
 

 

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதியன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இதன்போது அவரிடம் இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றைய தினம் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு, யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுடன்யாழ்ப்பாணத்தின் நிகழ்வும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய தினம் வலிகாமம் வடக்கில்படையினர் வசம் இருந்த காணிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்பார்என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://newjaffna.com/news/2775

நடக்குமா நடந்தால் சந்தோசம்.
 

  • Replies 181
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிறு வயதில் விளையாடித்திரிந்த காங்கேசன்துறை சிறுவர் பூங்கா (இருந்த இடம்) பழமையான நினைவுகளை மீட்ட மிச்சமாய் 5 சவுக்குமரம் இன்னமும் உயிர்ப்புடன்.

IMG_9300.jpg
free upload

IMG_9306.jpg
image post

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

படங்களில் பார்க்கவே மனசு துடிக்குது, நேரில் பார்க்கும் உங்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகின்றது...!

  • தொடங்கியவர்
5 minutes ago, suvy said:

படங்களில் பார்க்கவே மனசு துடிக்குது, நேரில் பார்க்கும் உங்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகின்றது...!

நன்றி சுவி

வெட்டை வெளியாக பார்க்கும்போது பிரதேசம் மிகவும் குறுகியதாகவே கண்ணுக்கு தெரிகிறது (கமராவுக்கும்தான்). இத்தனை சிறிய பிரதேசத்திலா இத்தனை வீடுகளும், கட்டடங்களும், மரங்களும் இருந்தது என்பதை வெளிகளை பார்க்கும்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. 
 

  • தொடங்கியவர்

மைத்திரி எதிர்வரும் 18ஆம் திகதி யாழ் விஜயம்; 400 ஏக்கர் காணி விடுவிப்பு(?)

SATURDAY, 04 JUNE 2016 04:41

maithri20151003.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இருந்து 'தல்சவன' விடுதி வரையான சுமார் 400 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, இந்திய அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா பொது விளையாட்டரங்கை அவர் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகின்றது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/36991-18-400

  • தொடங்கியவர்

காங்கேசன்துறை பவர் ஹவுஸ் + பம்ப் ஹவுஸ் 

IMG_9323.jpg
upload gifs

IMG_9315.jpg
host image online

 

 

  • தொடங்கியவர்
யாழ்.வருகின்ற ஜனாதிபதி விடுவித்த பகுதிகளைத்தான் மீண்டும் விடுவிப்பாரா?; மீள்குடியேற்றக் குழு கேள்வி
2016-06-06 09:46:24 | General

ரொஷான் நாகலிங்கம்


ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது வலிகாமம் வடக்கில் விடுவித்த பகுதிகளையே மீண்டும் விடுவிக்கவுள்ளாரா என வலிகாமம்  வடக்கு இடம்பெயர்ந்தோர்  மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் சஜீவன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; 

கடந்த தடவை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின்போது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியும்  அதனை அண்டிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டன.எனினும் நடேஸ்வரா கல்லூரி தவிர்ந்த, கல்லூரியை அண்டியுள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்வதை படையினர் தடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், இம்மாத  நடுப்பகுதியில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாகவும் இதன் போது காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதன் அடிப்படையில் ஜனாதிபதி மீண்டும் நடேஸ்வராக் கல்லூரியை அண்டிய பகுதிகளை விடுவிக்கப் போகிறாரா என  கேள்வியெழுகின்றது.


விடுவித்த காணியையே மீண்டும் விடுவித்து உலகத்துக்கும் ஜெனீவாவுக்கும் அரசாங்கம் தமிழர்களது  காணிகளை விடுவிப்பதாக  காண்பிக்கப் போகின்றாரா? அப்படி நடைபெறுமாயின், தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடே அதுவெனவும் தெரிவித்தார்.

 

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/ljpco6bshu66572f73168bf324413jhehk656f697507752ec592c437jbgvv#sthash.CF2wdqAn.dpuf

 

மேலும் மேற்குப் பக்கம் செல்லவில்லையா?

தொண்டமனாறு - காங்கேசன்துறை வீதி முழுமையாக திறக்கப்பட்டால் தான் மீன் பிடித்தல், மீன் வர்த்தகம் சிறப்புறும்.

  • தொடங்கியவர்
2 minutes ago, போல் said:

மேலும் மேற்குப் பக்கம் செல்லவில்லையா?

நகரசபை, நூலகம் , ஜெயபாலசிங்கம் வீடுவரை சென்றிருந்தேன் - படம் எடுக்க முடியாது.

1 minute ago, ஜீவன் சிவா said:

நகரசபை, நூலகம் , ஜெயபாலசிங்கம் வீடுவரை சென்றிருந்தேன் - படம் எடுக்க முடியாது.

சின்னத்துரை வீடு?

  • தொடங்கியவர்
Just now, போல் said:

சின்னத்துரை வீடு?

யாரது ஞாபகமில்லையே, எனக்கு தெரிந்த சின்னதுரை கிழக்கு பக்கமாக இருந்தார்.

3 minutes ago, ஜீவன் சிவா said:

யாரது ஞாபகமில்லையே, எனக்கு தெரிந்த சின்னதுரை கிழக்கு பக்கமாக இருந்தார்.

அச்சகம், கலண்டர்

 

  • தொடங்கியவர்

இங்கு இதைப் பற்றி கதைப்பது கள  விதிகளுக்கு முரணானது. திண்ணயில் தொடருவோம்.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு ஏற்பாடு
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
லங்கா சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லியனகே தலைமையில் முன்னாள் ஊழியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது.
 
சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும் குறித்த நிதியை முதலீடு செய்வதற்கு கொரியா, இந்தியா, சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளதுடன் தமிழர் தரப்பில் ஒருவரும் இதில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அத்துடன் குறித்த நாடுகள் 30 வருட கால குத்தகை உட்பட சில நிபந்தனைகளுடன் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 
குறித்த தொழிற்சாலையை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.onlineuthayan.com/news/13325

 

இந்த இலங்கை தமிழர் ஆஸ்திரேலியா தமிழர் என  கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சொன்னார்  - உண்மை பொய் தெரியாது. 

  • தொடங்கியவர்

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோறியஸ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்களுடையதும், ஏற்கனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் தேவைகள் தொடர்பாக தகவல்களையும் அவர் பெற்றுச் சென்றுள்ளார்.

குறிப்பாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளான காங்கேசன்துறை, பளை, வீமன்காமம் மற்றும் வறுத்தளவிளான் பகுதிகளுக்கு சென்ற அவர் அங்கு மீள்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90

 

இதன் போது மீள்குடியேறிய மக்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் , மீள்குடியேற்றப்பட்ட பின்னர் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களையும் பார்வையிட்ட அவர், வீட்டுத்திட்டங்களின் குறைநிறைகள் தொடர்பாகவும் பயனாளிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதுமட்டுமல்லாமல் இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லைகளில் உள்ள இராணுவ முகாங்களினால் மீள்குடியேறியவர்களுக்கு ஏதோனும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என்ற வகையிலும் அவர் மக்களிடம் கருத்துகளை அறிந்து கொண்டார்.

இதன் பின்னர் யாழ்மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்த அவர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, வலி.வடக்கில்மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்களுக்கும், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்குமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.

மேலும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்திக்குமான செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் உயர்ஸ்தானிகர் தகவல்களைக் கேட்டறிந்து சென்றார்.

http://www.tamilwin.com/lifestyle/01/107351

மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியுள்ளவர்களை துரிதமாக மீள்குடியேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும், அதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன்,

அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்ட விடையங்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் அரச அதிபரிடம் உறுதியளித்திருந்தார்.

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில ஏறுதா? காங்கேசன்துறையை விடுவிக்காமலிருக்க மறுபடியும் பிளான் போடுகிறார்களா?

 

Large stocks of outdated military ordnance that lay at Kankesanthurai are to be brought down to Kalpitiya to be destroyed. Earlier, such stocks were dumped in mid sea. However, the Central Environmental Authority (CEA) had raised objections to such a move. The Air Force is shifting some of the stocks from near Colombo to Ampara.

http://www.sundaytimes.lk/160612/columns/president-promises-urgent-action-to-reduce-col-vows-to-strengthen-economy-197072.html

 

Edited by ஜீவன் சிவா

காங்கேசன்துறை குத்தியாவத்தை பிள்ளையார் கோவில் 

 

 

  • தொடங்கியவர்
50 minutes ago, போல் said:

காங்கேசன்துறை குத்தியாவத்தை பிள்ளையார் கோவில் 

 

பகிர்வுக்கு நன்றி போல்.

இது கொஞ்சம் பழைய பதிவு என்று நினைக்கின்றேன். நான் இரு கிழமைகளின் முன்னர் மாவிட்டபுரம் - கிராம கோட் வீதியால் போயிருந்தேன். அழகான 7/8 புதிய வீடுகள் சுற்று மதிலுடன். வெங்காய சங்க கட்டிடமும் அழகாயிருந்தது. புதிதாக ஒரு வைரவர் கோவிலும் முளைத்திருந்தது. முன்பும் வைரவர் ஏதாவது மரத்துக்கு கீழ குந்தி இருந்திருக்கலாம் - ஞாபகமில்லை. இப்போது புதிய கோவிலில் கம்பீரமாக.

மாவிட்டபுரம் கோவிலில் இருந்து வெங்காய சந்தைவரை இருபுறமும்வீ டுகள்தான் இருந்தது என்று சொன்னால் யாருமே நம்பபோவதில்லை. 26 வருட கோரம். எதோ வன்னி காட்டிற்குள்ளால் கார் ஓடின மாதிரி இருக்குது.

ஞானி டீச்சர் கூத்தியாவத்தை பிள்ளையார் கோவிலை புனருத்தாரணம் செய்கின்றார் என்று கேள்விப்பட்டேன் - போய் பார்க்கவில்லை. நான் கடைசியாக போன போது பிள்ளையார் கோவிலுக்குள் இல்லை.

யாரை நொந்து என்ன பயன். ஆனாலும் மக்கள் மறுபடியும் குடியேறுகிறார்கள்.

ஒரு நகரம் நரகமானது. இந்த நரகம் மறுபடியும் நகரமாகுமா?

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

யாழ்.ஜனாதிபதி மாளிகையை வடமாகாண சபைக்கு வழங்க கோரும் பிரேரணை நிறைவேற்றம்

 
4 SHARES
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Topics :

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காங்கேசன்துறை-கீரிமலை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை வடமாகாணசபைக்குவழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கோரும் பிரேரணை வடமாகாணசபையில்எடுக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபையின் 54ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி சொகுசுமாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு கோரும் பிரேரணையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்தார்.

குறித்த பிரேரணையினை சபையில்முன்மொழிந்து அவர் உரையாற்றுகையில் மாகாணசபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டுஇராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிடங்கள் இ ல்லை. இந்நிலையில் மேற்படி மாளிகை கட்டிடத்தை மாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கோருவதாக கூறினார்.

மேலும் இந்த விடயத்தை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைத்ததாகவும், அதற்கமைய முதலமைச்சர் தமக்கு முறைப்படியா கவிடயத்தை தருமாறும் கேட்டதற்கிணங்க இந்த பிரேரணையை தாம் முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆட்சிமாற்றத்தின் பின்னர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாளிகையை பார்க்க வந்தபோது அதனை தாமும்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வடமாகாணசபைக்கு வழங்குங்கள் எனஜனாதிபதியிடம் கேட்டதற்கு குறித்த மாளிகையின் வேலைகள் முடிந்த பின் தருகிறேன்.என கூறினார் என கூறிய முதலமைச்சர் அதனை யாழ்.பல்கலைக்கழகமும் கேட்டிருக்கும் நிலையில் நாம் கேட்பது பொருத்தமானது என்றார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை சபையில்எந்தவித எதிர்ப்புக்களும் இல்லாமல் 

http://www.tamilwin.com/politics/01/107662

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வலி.வடக்கில் மேலும் 201 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வலி.வடக்கில் உள்ள ஜே233, ஜே234, ஜே235, ஜே236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே241) ஆகிய பகுதிகளில் உள்ள 201 ஏக்கர் காணிகளே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் இக் காணி விடுவிப்பின் ஊடாக காங்கேசன்துறை ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் பகுதிகளை சேர்ந்த கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், தங்கள் வரவை உறுதிப்படுத்தியிருக்கும் மக்கள் 25ஆம் திகதி காலை காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதிக்கு காலை 9 மணிக்கு வருகை தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் நாளை யாழ்.வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மேலும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றையும் படையினர் மட்டத்தில் ஒழுங்கமைத்திருப்பதாக தெரிய வருகின் றது.

இதேவேளை வலிவடக்கில் ஆறு மாத காலத்தில் மக்களை மீளக்குடியேற்றுவதாக ஜனாதிபதி அளித்த கால அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போதும் அது தொடர்பாக எதுவும் தெரிவித்திருக்காத நிலையில், மக்கள் ஜனாதிபதியின் செயல் குறித்து வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அடுத்து ஒரு மாத காலத்துக்குள் தமது மீளக்குடியேற்றம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சாத்வீக ரீதியில் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந் நிலையிலே மேலும் குறிப்பிட்டளவு காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/development/01/108775

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
3 minutes ago, nunavilan said:

 

நடக்காதெண்டு தெரியும்
நடக்கணும் என்று ஒரு நப்பாசை

வேறு வழி?

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

காங்கேசன்துறையும் செல்லப்பிள்ளையாரும்.

நடேஸ்வரா கல்லூரியின் மைதானத்தின் பின்புறமாக உள்ள ஒரு கோவில் இது. இங்கு எனது பசுமையான நினைவுகள் அதிகம். நகரத்துக்குள் ஒரு காடு அந்தக் காட்டுக்குள்ளே ஒரு கோவில். இந்த கோவிலையும், இனிமேல் இது எப்படி மாறும் என்பதனையும் காங்கேசன்துறையின் வளர்ச்சியில் ஒரு உதாரணமாக காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

மக்கள் மறுகுடியேறும் போது அவர்கள் தமது வளவுகளை மட்டுமன்றி கோவில்களையும் துப்பரவு செய்ய தொடங்கி விடுவார்கள். அதனால்தான் ஒரு கோவிலை தெரிவு செய்தேன். இது தற்போது விடுவிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.

IMG_9416.jpg

IMG_9414.jpg

IMG_9415.jpg

IMG_9411.jpg

IMG_9407.jpg

IMG_9339.jpg

IMG_9349.jpg

IMG_9361.jpg

IMG_9378.jpg

IMG_9381.jpg

IMG_9388.jpg

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள் ஜீவன்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.