Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தம் – அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

“உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியினாலேயே வேட்டையாடப்படுகின்றனர். எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதே ஒரே வழியாக இருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை செவிமடுத்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கோரிக்கையை தாம் தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்னதாக தம்மைச் சந்தித்த முன்னைய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும், இதே கோரிக்கையை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து, அடுத்த சில நாட்களுக்குள் இறுதியான முடிவு எடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச கூட்டு எதிரணியினருடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.puthinappalakai.net/2016/06/08/news/16655

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களதேசத்தில் ஆயிரம் கட்சிகள் உருவாகினாலும் கொள்கை ஒன்றாகத்தானிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்களதேசத்தில் ஆயிரம் கட்சிகள் உருவாகினாலும் கொள்கை ஒன்றாகத்தானிருக்கும்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குமாரசாமி அண்ணா. 
தமிழர்தான் ஒரே (ஈழம்) பெயரை (குறிக்கோளை) கொண்டு இருந்தாலும் வெவ்வேறு கொள்கையில் இருந்தவர்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்களதேசத்தில் ஆயிரம் கட்சிகள் உருவாகினாலும் கொள்கை ஒன்றாகத்தானிருக்கும்.

3 minutes ago, தமிழரசு said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குமாரசாமி அண்ணா. 
தமிழர்தான் ஒரே (ஈழம்) பெயரை (குறிக்கோளை) கொண்டு இருந்தாலும் வெவ்வேறு கொள்கையில் இருந்தவர்கள். 
 
அதே...

கொள்ளையடித்த சொத்துக்களை பதுக்க உதவும் என்றால் புதிய கட்சி ஆரம்பிக்கவும் தயங்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கட நாட்டில என்னத்த செய்தால் எமக்கென்ன.எஞ்சி இருக்கிற எமது உறவுகளையும் இங்கு அழைத்தால் பிரச்சனை முடிஞ்சுது.:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

அவங்கட நாட்டில என்னத்த செய்தால் எமக்கென்ன.எஞ்சி இருக்கிற எமது உறவுகளையும் இங்கு அழைத்தால் பிரச்சனை முடிஞ்சுது.:rolleyes:

ஓ.....இதுதான் விரக்தியின் உச்சக்கட்டமோ?  Console

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

அவங்கட நாட்டில என்னத்த செய்தால் எமக்கென்ன.எஞ்சி இருக்கிற எமது உறவுகளையும் இங்கு அழைத்தால் பிரச்சனை முடிஞ்சுது.:rolleyes:

எவங்க  நாடு.....???

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

ஓ.....இதுதான் விரக்தியின் உச்சக்கட்டமோ?  Console

30 minutes ago, விசுகு said:

எவங்க  நாடு.....???

இப்ப அப்படித்தானே கதை போகுது.எங்கடை சனமும் எப்படா வெளிக்கிடுவம் என்டு நிக்குது.நாங்களும் அது மனிசன் வாழுற நாடு இல்லை என்டு வேறை பிரச்சாரம் செய்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப அப்படித்தானே கதை போகுது.எங்கடை சனமும் எப்படா வெளிக்கிடுவம் என்டு நிக்குது.நாங்களும் அது மனிசன் வாழுற நாடு இல்லை என்டு வேறை பிரச்சாரம் செய்கிறோம்.

நாடு நல்ல நாடு. எமது மக்களும் நல்லவர்கள். அரசியலும் அரசியல்வாதிகளின் போக்கும்தான் சரியில்லையென அன்று தொடக்கம் சொல்கின்றோம்.

6 hours ago, சுவைப்பிரியன் said:

அது மனிசன் வாழுற நாடு இல்லை என்டு வேறை பிரச்சாரம் செய்கிறோம்.

நல்ல தமிழ் மனுசர் வாழ்ற நாட்டில,
1800 வருசத்துக்கு முதல் வந்திறங்கி, பல்கிப் பெருகி, பெரும்பான்மை ஆகி,
சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்த கும்பலாக மாறி,
அந்தக் கும்பல் எச்சில் எலும்புத் துண்டுகளை சுவைக்க விரும்பும் சபலத் தமிழர் சிலரையும் வசப்படுத்தி,
அந்த நல்ல நாட்டை சீரழித்து வருகின்றது சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்த கும்பலும் அதன் விசிலடிச்சான் குஞ்சுகளும்.

இந்த சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்த கும்பலையும் அதன் விசிலடிச்சான் குஞ்சுகளையும் அகற்றினால் அது மீண்டும் சொர்கபுரி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.