Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்குப் பின் நகைகளின் நடிப்புக்குத் தடை போடும் கணவர்கள் - காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்குப் பின் நகைகளின் நடிப்புக்குத் தடை போடும் கணவர்கள் - காரணம் என்ன?

தினக்குரல்

"ஜோதிகா இனி நடிக்க மாட்டார்"

இப்படிச் சொன்னவர் ஜோதிகாவோ, ஜோதிகாவின் அம்மாவோ அல்ல. ஜோதிகாவின் காதலரும் அன்புக் கணவருமான சூர்யாதான். இது போன்ற ஸ்டேட்மென்ட்கள் தமிழ்த் திரையுலகிற்குப் புதிதல்ல. நடித்துக்கொண்டிருக்கும் படத்தைக் கூட முடிக்க ஒத்துழைக்காத ஷாலினியின் கணவர் அஜித் போன்றோரின் பட்டியல் நீண்டது. ஷாலினிகளும் ஜோதிகாக்களும் இங்கு நிறையவே இருக்கிறார்கள்.

வயது ஐம்பது ஆன பிறகும் இருபது வயதுக் கதாநாயகியோடு நடனமாடிக்கொண்டிருக்கும் ஆண் நடிகர்களைக் கோடிகள் கொடுத்துத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கதாநாயகிகளாக நடிக்க வடநாட்டிலிருந்தும் சேர நன்னாட்டிலிருந்தும் அழகுப் பதுமைகள் படையெடுத்துக்கொண்டிருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாம்பின் கால் பாம்பறியுமாம் ;) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல கட்டுரை ஒன்றை இணைத்திருக்கிறீர்கள் கறுப்பியக்கா.

தற்போதுதான் இப்படி பல நடிகைகளுக்கு நடக்கிறது.

பழைய நடிகைகளான சாவித்திரி, சரோஜா தேவி, பத்மினி போன்றவர்கள் திருமணம் முடித்த பின்பு பல படங்களில் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். காலஞ் சென்ற தனது கணவரின் முற்போக்குத் தன்மைபற்றி நடிகை சரோஜா தேவி மிக உருக்கமாக ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இது எந்த வீட்டில் இல்லை...உருப்பட போறதேயில்லை...

இது அவரவர் தனிப்பட்ட குடும்பவிசயம் அதில் ஏன் மூக்கை நுழைகிறீங்கள் இதை எழுதிய நபர் தன் மனைவியை நடிக்க அனுமதிப்பாரா இந்திய தமிழ் படங்களில் சதை வியாபாரம் தான் நடக்கிறது தன் மனைவி அப்படி தோன்றி பணம் சம்பாதிக்கவேண்டுமென எந்த மானமுள்ள கணவனும் விரும்பமாட்டான் குணாசித்திர நடிப்போ அல்லது இயல்பான நடிப்போ இந்திய சினிமாவில் எட்டாக்கனிதான் பெண்களுக்கு இந்திய சினிமா முக்கியமாக தமிழ் சினிமா முக்கியம் கொடுக்கும் சதை வியாபாரத்தை கட்டுப்படுத்தாதவரை இது எட்டாகனிதான் நீங்கள் கேட்கலாம் ஆங்கிலப்படங்களில் அப்படி இல்லையே என ஆனால் எமக்கு என ஒரு கலாச்சாரமும் தெரிந்தோ தெரியாமலோ சமுதாயத்துக்கு பயந்துதான் நாம் வாழ்கின்றோம் ஆக இவ் கட்டுரை நடைமுறைக்கு சாத்தியமற்றது இதுதான் யதார்த்தமும் கூட என்பது என் கருத்து

ஒப்பீட்டளவில் இயற்கையாக ஒழுங்கீன நடத்தைகளால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதில் அனைவரும் உடண்படுவீர்கள்.எனவே மிகையான பாதிப்புகளுக்கு உள்ளாககூடிய சந்தர்பம் கொண்டவர்களுக்கு பதுகாப்பும், நன்மை செய்யவேண்டும் என்பதற்க்கான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒரு பாலினர் கட்டுபாட்டுடன் இருந்தாலே மற்ற தரப்பினர் தவறுவதற்க்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுவிடும். சினிமாவில் பெண்களின் நிலை குறித்து நன்கு அறிந்திருக்க கூடிய சூரியா தன் தன் மனைவியை நடிக்க அனுமதிப்பது அல்லது அனுமதிக்காதது தொடர்பாக கட்டுரையாளர் விமர்சிப்பது ஏற்புடையதல்ல. ஜோதிகா கட்டுரையாளரிடமோ அல்லது யாரிடமாவதோ முறையிட்டிருந்தால் மட்டிலுமே அதை பற்றி விமர்சித்திருக்க வேண்டும். மேலும் கட்டுரையாளர் "குஷ்பு-சுந்தர்.சி" குடும்பத்தை முன்மாதிரியாக கூறியுள்ளார். குஷ்பின் தாம்பத்தியம் தொடர்பான கருத்துக்கள் கட்டுரையாளருக்கும், சுந்தர்.சி க்கும் விருப்புடையானதாக இருக்கலாம். தன்மானமுள்ள, சுய கட்டுபாடுள்ள எம் எளிய மக்களுக்கு ஏற்புடையதல்ல. பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதும், பொருள் ஈட்டுவதும் சங்ககாலம் தொட்டே இருக்கிறது. "அவ்வையாரின்" பங்களிப்பே சிறந்த சான்றாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூர்யா இனி நடிக்க மாட்டார் எண்டு ஜோ சொன்னால் என்ன நடக்கும்.. தன்ர மனிசி மற்ற ஆக்களை கட்டி பிடிச்சு நடிக்க கூடாதாம். ஆனா புருசன் கொஞ்சி குலவி நடிக்கிறதை மட்டும் வெறும் நடிப்புதானே எண்டு விடவேணுமாம்..

கடந்த சில தினங்களுக்கு முன்

சூரியா மற்றும் ஜோதிகாவை சுற்றி வளைத்த பத்திரிகையாளர்களை மற்றும் ரசிகர்களை நோக்கி

விரலை நீட்டிக் காட்டிய சூரியா "கொண்ணுடுவேன்" என்று கூறியதாக

பத்திரிகைகளில் வந்தது.

வெட்டியாக சூரியா அப்படி சொல்ல வாய்ப்பில்லை.

அங்கே எவராவது அவர்களது மனதை தைக்கும் வார்த்தைகளை சொல்லியிருக்க வேண்டும்.

சூரியா மிக அமைதியானவர் என பலருக்கு தெரியும்.

அதே பத்திரிகை இறுதியில்

இப்படி ரசிகர்களையும் பத்திரிகையாளரையும் சூரியா மதிக்கத் தவறினால்

சூரியா நிலை என்ன ஆகும்? என்று எழுதியிருந்தது.

அதுதான் இந்த கட்டுரைக்கு வழி வகுத்திருக்கிறதே தவிர வேறு காரணங்கள் இல்லை.

ஒரு விருந்தாளி ஒருவரது வரவேற்பறை வரை நுழைவதற்கு உரிமையுண்டு.

இக் கட்டுரையாளரரோ படுக்கை அறை வரை செல்ல முற்படுகிறார்?

இது அநாகரீகம்.

அவர்களது குடும்ப வாழ்கையை தீர்மாணம் செய்ய இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

Edited by AJeevan

ஆசிரியர் போன்ற பிரச்சினைகளற்ற தொழில்களைப் பெண்ணுக்கான ஆதர்சத் தொழிலாக முன்னிறுத்தும் இந்தச் சூழல், பல ஆண்களோடு இணைந்து பணிபுரிய வேண்டிய நடிப்புத் தொழிலை ஒரு தொழிலாகவே ஏற்க நினைப்பதில்லை. ஆண் - பெண் உடல் நெருக்கத்தைக் காட்சிப் பொருளாக்கிப் பணம் சம்பாதிக்கும் துறை திரையுலகம். இங்கே தனது மனைவி வேறொரு ஆணோடு நடிப்பதைத் தொழில் ரீதியாகப் பார்க்கப் பழகாத ஆணின் மனம், இதற்காகப் பதற்றமடையவே செய்யும்.

நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்கத் தொடங்கும் பக்குவம் ஆணுக்கு வரும்போதும் பெண்ணுக்கு அது தன்னுடைய தொழில் என்கிற உறுதிப்பாடு ஏற்படும்போதும் மட்டுமே மாற்றம் ஏற்படுவது சாத்தியம்.

இத்தகைய பக்குவமும் புரிதலும் கொண்ட விதிவிலக்கான திரையுலகக் கணவன் மனைவிகளும் இருக்கிறார்கள். குஷ்பு - சுந்தரைப் போல. திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் சொல்லப்படும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனைப் போல.

தொழில் என்பது வேறு எந்தக்கணவனும் தன் மனைவியை இன்னொருவனுடன் கட்டிப்பிடித்து நடிக்கச்சொல்லி அதை உலகம் முழுவதும் பார்பதை விரும்பமாட்டான் என்பது என்கருத்து.குஸ்பு அவர் ஒரு கற்பின் மறுவடிவம் :P கற்பை வரவலக்கணப்படத்திய மாமேதை அவரை இங்க இவர்களுடன் ஒப்பிட்டது சரியல்ல .ஆனால் முடிவு எடுப்பது என்பது அவரவர் குடும்பவிசயம் அஜீவன் அண்ணா சொன்னமாதிரி விருந்தாளிக்கு படுக்கை அறை வரை செல்லும் அனுமதில் இல்லை.கணவன் நடிக்கவேண்டுமோ வேண்டாமோ அல்லது மனைவி நடிக்கவேண்டுமோ வேண்டாமோ என்பது அவரவர் சொந்தப்பிரச்சினை.அவர்கள் முடிவெடுக்க வேண்டியது.

காவடி

அதைத்தான் நான் சொல்கிறேன் ஆண் என்னவும் செய்யலாம் என நீங்கல் சொல்வது ஏற்புடையது அல்ல ஒருவேளை ஜோதிகா சொன்னால் நடிப்பை விடக்கூடும் அல்லது ஜோதிகா விருப்பபடும் முறையில் நடிக்கக்கூடும் அது ஒருவரின் குடும்பப்பிரச்சினை

புரிதலும் விட்டுக்கொடுப்பும் மனைவி கணவன் சம்பந்தப்பட்டது இக்கட்டுரையை எழுதியவர் தான் சூரியாவின் மனைவி போலவும் ஜோதிகாவின் கணவன் போலவும் குரைப்படுகிறார் ஏன் இக்கட்டுரையை எழுதியவர் தன் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நடிக்க அனுமதிக்கக்கூடாது.அதை அவர் ஏற்பாரா.ஏனப்பா மற்றவனின் காணிக்குள் உங்கட மாட்டை மேயவிட்டு கோவணத்தைதூக்கி தலையில கட்டுறீங்கள் உங்களுக்கு காழ்புணர்சி இருந்தால் நேரே சந்தியுங்கள் அதைவிடுத்து அடுத்தவனின் மூக்கில் விரல் வைத்து ஏன் தோண்டப்பாக்கிறீர்கள்.

இக்கட்டுரை எழுதியவர் என்சவாலை கொள்கை அளவிலாவது ஏற்பாரயின் என் கருத்தை நான் வாபஸ் வாங்குகிறேன்.உதாரணம் காட்ட உருப்படியானதை பாருங்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைக்கலாம் பாதுகாப்பாக இருந்தால் சரி என்றதுகளை ஏன் ஒரு நல்ல குடும்பத்துக்குள் இழுத்து குட்டையை கலக்குகிறீர்கள்.

இது எந்த வீட்டில் இல்லை...உருப்பட போறதேயில்லை...

இதனை மறுக்கிறேன் துயா கணவனின் விருப்பப்படி மனைவியும் மனைவியின் விருப்பப்படி கணவனும் வாழ்வதே குடும்பத்துக்கு அழகு.அதுக்காக பெணடிமை வாதி என என்னை நினைக்க வேண்டாம் என்னை பொறுத்தவரையில் என் வருங்கால மனைவிக்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக உள்ளேன் என் பழக்கவழக்கத்தையோ அல்லது குணாதிசயங்களையோ எல்லாத்தையும் குடும்பத்தை பிரிதலை தவிர.அதேபோல நான் எதிர் பார்ப்பது தவறா இல்லையே?

ஆக கணவன் மனைவிக்குள் நடப்பதை இப்படி சந்தி சிரிக்க எழுதி அதை வேடிக்கை பார்ப்பது அவ்வளவு நாகரிகமானதுமல்ல இக்கட்டுரையை வாசித்து பாராட்டும் அளவுக்கு இக்கட்டுரையில் எந்த முற்போக்கான கருத்தும் இல்லை

எல்லாம் சரி இப்ப ஜோ நடிக்கவில்லையென்று யாருக்கு கவலை. நாடு போற போக்கிலை நரி உழுந்து வடைக்கு ஆசைப்படுகுதென்ற மாதிரி இருக்கு நம்மட நாட்டுப் பிரைச்சனையைப் பார்க்க காணவில்லை இதுக்குப் போய். :angry: :angry: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குக் கவலையாக இருக்கிறது சந்தியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூர்யா அஜித் போன்றவர்கள் கலியாணம் முடித்துவிட்டும் பிற நடிகைகளுடன் கட்டிப் பிடித்து முத்தமிட்டு நடிப்பார்களாம். கன்னம், உதடு, இடை, மார்பு எதையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் மனைவிமார் மட்டும் நடிக்கக் கூடாதாம். நல்ல கூத்து. அதற்கு ஆமாம் போடும் ஆணாதிக்க வாதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை. பாவம் நம்ம ஜோ தேசிய விருது வாங்க வேண்டும் என்று எவ்வளவு ஆசைப் பட்டிருப்பா அந்தக் கனவுகளை சிதைத்து நம்பிக்கைகளை கெடுத்து பூசை அறைக்குள் காலத்தைக் கழிக்கும் கொலு பொம்மையாக மாற்றி விட்டிருக்கிறார்கள்.

காதலிக்கும் போது இருந்த சுதந்திரம் திருமணத்தின் பின் போய் விட்டது. திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்குங்கள் கூடவே இந்த நாறிப்போன ஆணாதிக்கம், கற்பு, கலாச்சாராம் போன்ற சமூகக் கட்டமைப்புக்களைத் தூக்கில் போடுங்கள்

Edited by இளங்கோ

சும்மா உம்மை ஒரு முற்போக்கானவராக உம்மை காட்ட நினைகிறீர் இதில் ஆணடிமை என கூறும் நீர் ஒரு பேச்சுக்கு உமது குடும்பத்தில் ஒரு பெண்ணை நடிக்க அனுமதிபீரா.யதார்த்ததை பேசும் சும்மா நடக்க இயலாததை வாய்கிழியபேசி பயனில்லையதார்த்தம் என்று ஒண்டு இருக்குது நடைமுரைக்கு சாத்தியமானதையே செய்யமுடியும்

இதில் யாராவது உங்களுக்கு சொன்னாங்களா சூரியாவோ அல்லது அஜித்தோ தான் நடிக்கவேண்டாம் என சொன்னதாக ஏன் அவர்களின் மனைவிமார் எடுத்த சுயமுடிவாகக்கூட இருக்கலாம் அப்படி எண்டால் அதிலும் ஆணடிமையா.என்னையா அடியும் தெரியாது நுனியும் தெரியாமல் கனவுக்கண்டுட்டு சும்மா குட்டையை குழப்ப இந்த கட்டுரையாளர் பினாத்தி இருகிறார் அதை எழுதவந்தால் ஆனாதிக்கம் கற்பு கலாச்சாரம் என கத்துறியல்

ஆணாதிக்கத்தை விடுங்க அது தேவை இல்லாததுதான் கலாச்சாரம் எண்டு ஒன்று நிச்சயம் வேண்டும் அதை ஏனப்பா குப்பையில போடச்சொலுறீர்.கற்பும் ம்ம்க்கியமானதே அது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்குமே ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது எமது கலாச்சாரம் அதை தூக்கி குப்பையில எறிஞ்சிட்டு நாய்போல ரோட்டில எல்லாம் அசிங்கம் செய்ய சொல்கிறீரா

மற்றவனின் குடும்பவிசயத்திலும் தனிப்பட்ட வாழ்கையிலும் தலையிடாதீர்கள் உங்களை பற்றியோ அல்லது கட்டுரை எழுதிய அரைவேக்காடின் குடும்ப விசயத்தையோ இங்க எழுதினால் பாத்து கைதட்டி சந்தோசப்படுவீர்களா.சும்மா குதிரை கொம்பாக பேசி உங்களையும் மற்றவர்களையும் ஏமாத்தாதீர்கள் நடைமுறக்கு சாத்தியமாஆ விசயத்தை மட்டும் பேசுங்கோ

அன்புடன்

ஈழவன்

கல்லாத மாந்தர்க்கு கற்றுணந்தார் சொல்கூற்றம்

அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

- அவ்வையார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யார் நடி ச்சா என்ன நடிக்காட்டி என்ன? தமிழ்நாட்டு காறி இல்லாட்டில் இப்ப வெளிநாட்டில எங்கடை பெண்களே நல்லா நடிப்பினமே. அவங்களை போடலாம். நடிகைகளுக்கா பஞ்சம்.

திருமதி சூரியா தான் தொடர்ந்து நடிக்கிறது பற்றி முதலலே சூர்யாவோட பேசி இருக்கனும். இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு பேசிகிற விசயம் இல்லை.

இதில என்ன பெண் அடிமைத்தனம் இருக்கு என்டு எனக்கு விளங்கேலை? ஆண்கள் வீட்டில இருந்து சமைச்சு பிள்ளையாள பாக்கிறதுக்கு எத்தின ஆட்கள் சரி என்டு சொல்லுவீங்கள். தயவு செய்து சும்மா வந்து நடைமுறைக்கு சாத்தியமில்லாத மாதிரி எழுதாதீங்க. நடைமுறையில இது சாத்தியமா இருந்தாலும் ஊர் உலகத்தில மனிசய வேலைக்கு அனுப்பி சம்பாதிக்கிறான் என்டு நக்கல் கதையள் வரும். அது மட்டுமில்ல ஆண்டாண்டு காலமா எங்கட பெண்கள் வீட்டு வேலையிலையும் ஆண்கள் வெளி Nவைலையிலயும் வாழ்ந்து பழகியவர்கள். இதை மாத்தினா இது ஒரு கலாச்சார சீரழிவு இல்லையா?

கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டலாமா? எனக்கென்னமோ என்ர மனிசி இப்படி செஞ்சா உடனே விவாகரத்து தான். உங்கட வைவ் மார் பண்ணினா நீங்க என்ன செய்வீங்களோ தெரியாதப்பா...

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகா எனி நடிகாட்டி நான் தீ குளிச்சுவிடுவேன் என்னோடு தீ குளிக்க யார் தயார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க "தீ" குளிக்கிறதா நான் "ரீ" குடிச்சு கொண்டு பாக்க தயார்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க "தீ" குளிக்கிறதா நான் "ரீ" குடிச்சு கொண்டு பாக்க தயார்!

அப்ப எனக்கும் ஒரு டீ ஓடர் பண்ணிவிட்டு வேற யாரும் தீ குளிக்கவரை பார்த்து கொண்டு இருப்போம்

:P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோதிகா எனி நடிகாட்டி நான் தீ குளிச்சுவிடுவேன் என்னோடு தீ குளிக்க யார் தயார்???

மகே புத்தா நீயுமா.............................. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகே புத்தா நீயுமா.............................. :D

கனங்கன்ட எப்பா தாத்தே ஒக்கம ஓயாகே வயசேங் ஓயா கரண தேவால் தமய்

:lol::lol::lol::lol::lol::D

//இதனை மறுக்கிறேன் துயா கணவனின் விருப்பப்படி மனைவியும் மனைவியின் விருப்பப்படி கணவனும் வாழ்வதே குடும்பத்துக்கு அழகு.//

இதற்கு என்னிடம் ஒரு பதில் உண்டு .. "ஒருவரை அவருக்காக ஏற்று கொள்ளுதல்"..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.