Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை!

Featured Replies

கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை!

யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும் இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

பருத்தித்துறை பொலிசார் நடாத்திய சிவில் பாதுகாப்புக் கூட்டம் பருத்தித்தறை பொலிஸ் நிலையித்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே பொதுமக்களால் மேற்படிவேண்டுகோள் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது புனிதநகர் மீன் சந்தைக்கு அருகாமையில்  தினமும் மாலை வேளையில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இரவு 9மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் பகுதிகளில் ஆட்டோக்களில் வருபவர்கள் கஞ்சா வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்ட்டது.

இதேவேளை இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த காங்கேசன்துறை பிராந்தியப் பொலிஸ் கண்காணிப்பில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

http://thuliyam.com/?p=30037

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் சிறிலங்காவில், அதிக மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பிய கல்லூரியை கொண்ட பிரதேசம் ....இதைத்தான் மாற்றம் என்று சொல்லுறதோ

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

ஒரு காலத்தில் சிறிலங்காவில், அதிக மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பிய கல்லூரியை கொண்ட பிரதேசம் ....இதைத்தான் மாற்றம் என்று சொல்லுறதோ

வரிசையில் சண்டைக்கு வரப்போகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வரிசையில் சண்டைக்கு வரப்போகினம் .

எஸ்கேப்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தித்துறை வடை போய் இப்ப கஞ்சாவிலையே நிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பருத்தித்துறை வடை போய் இப்ப கஞ்சாவிலையே நிக்குது...

ஐயோ வடை போயிற்றே

3 hours ago, குமாரசாமி said:

பருத்தித்துறை வடை போய் இப்ப கஞ்சாவிலையே நிக்குது...

பருத்தித்துறை வடைக்கு மட்டுமல்ல, அப்பம், பாலப்பம், தோசை போன்றவற்றுக்கும் பெயர் போன இடம்.

காலையும், மாலையும் வீடுத் திண்ணைகளில் சுட்டு விற்கப்படும் அப்பம், பாலப்பம், தோசை போன்றனவற்றை வாங்க நெல்லியடி அச்சுவேலியில் இருந்துகூட மக்கள் வந்து போவார்கள் என்று நண்பர்கள் சொன்ன ஞாபகம்.

இப்ப பணத்துக்கு ஆசைப்பட்ட சிலர் கேரளா கஞ்சாவை கடத்தி, விற்பதில் இறங்கியுள்ளார்கள். இதில் தமிழின விரோத அயலக அரச நாசகார இயந்திரங்களின் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிகிறது.

சுமந்திரனின் ஊரில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா வியாபரத்தை தடுத்து நிறுத்த அவர் தனக்கு சிங்கள அரசினருடன் உள்ள நல்லுறவை பயன்படுத்தலாமே. கடைசியில் இந்தவொரு நன்மையை ஆவது அவர் மக்களுக்கு செய்தது போலிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

சுமந்திரனில் எனக்கு எப்பவுமே நல்மதிப்பு இருந்ததில்லை, அவர் நல்லது செய்வார் என்கின்ற நம்பிக்கையுமில்லை. ஏதோ வாய்கிழிய முழங்குகிறார் என்றால், தன் தவறை மறைத்து மக்களை தன் பக்கம் இழுக்க  பாடுபடுகின்றார், அல்லது ஏதோ ஒன்றை குழப்பப்  போகின்றார் என்று அர்த்தம். இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

5 minutes ago, satan said:

உண்மையே! அவரது அரசியல் விளையாட்டுக்களை நீண்ட காலமாக அவதானித்து வந்ததில், எனக்கு நன்கு அறிமுகமான அவரது நல்ல நண்பர் ஒருவரின் கருத்துப்படியும் சுமந்திரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மிகமிகக் குறைவு தான்.

ஆனால், அவரும் ஒரு தமிழர் (ஏனைய சகல தமிழ் அரசியல்வாதிகளையும் சேர்த்து தான் சொல்கிறேன்), அவர்கள் தமது அனுபவங்களால் திருந்தி நல்லது செய்யமாட்டார்களா என்ற ஒரு ஆசை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருப்பதால் தான் இந்தக் கருத்தை எழுதத் தூண்டியது.

ஆனால் அது தான் அவரது ஊர். அவருக்கு பல வாக்குகள் (மத அடிப்படையில் இருந்தாலும்) அங்கிருந்து தான் கிடைத்தது.

சுமந்திரன், சுவாமிநாதன் இருவரிடமும் உள்ள பெரிய பிரச்சினை, தாம் சட்ட அறிஞர்கள் தம்மைவிட வேறு யாருக்கும் அரசியல் ஞானம் இருந்துவிடாது என்ற ஈகோ தான். இதே பிரச்சினை தான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த அனைத்து சட்டம் படித்த உறுப்பினர்கள் அனைவரிடமும் இருந்தது. அதனால் தான் அவர்கள் மற்றவர்களை அலட்சியப்படுத்துவதும், நடைமுறை அனுபவங்கள் / யதார்த்தங்கள் தெரியாத  புத்தகப் பூச்சிகளாக வாழ்வதுமாக இருந்து தமிழர் பிரச்சனைகளுக்குரிய தீர்வுக்கான பல சந்தர்பங்களை நழுவவிட்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.