Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை

Featured Replies

சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை

சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-



எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் இதுவரையில் வழங்கப்படவில்லை என பொதுநிர்வாக அமைச்சின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வீடுகள் உள்ள சில அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களையும் பயன்படுத்தி வரும் நிலையில், சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சம்பந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

100000 ரூபா முதல் 250000 ரூபா வரையிலான மாத வாடகையின் அடிப்படையில் அரசாங்கம் பல அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடுகளைப் பயன்படுத்தும் பல அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு வழங்கப்படும் வீடுகளில் அமைச்சர்கள் தங்குவதில்லை எனவும் அவர்களது உறவினர்கள், அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் இந்த வீடுகளை கூடுதல் தொகைக்கு மீள் வாடகைக்கு விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை என்பதனை பொதுநிர்வாக அமைச்சு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமக்கு இன்னமும் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை எனவும் அது குறித்து பேச தாம் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133150/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லமில்லை
 
 

article_1466050044-2.jpg

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று இல்லை.

அவர், கொழும்பிலுள்ள தொடர்மாடியிலுள்ள வீடொன்றிலேயே வசித்து வருகின்றார் என அவ்வீடு தொடர்பான விவரங்களை, இந்துனில் உச்சகொட ஆரச்சி என்ற எழுத்தாளர் ஒருவர், தனது பேஸ்புக் கணக்கில், பதிவொன்றை ஏற்றியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
'இன்று (14.06.2016) மாலை, தரிந்துவும் நானும், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தங்கியுள்ள தொடர்மாடி வீட்டைத் தேடிச் சென்றோம். அவர் தங்கியுள்ள தொடர்மாடிக் குடியிருப்பைக் கண்டுபிடிக்க முடியாமல், அவ்வீதியிலேயே நாம் பலமுறை பயணித்தோம். பின்னர், அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலரிடம், நாம் தேடும் வீட்டின் இலக்கத்தைக்கூறி விசாரித்தோம். அதற்கு அவர்கள், „நீங்கள் கூறும் இலக்கத்திலான வீடுகள், இந்த வீதியில் இறுதியிலேயே அமைந்துள்ளன. யாருடைய வீட்டைப் பற்றிக் கேட்கிறீர்கள்?... என்று வினவினர். அதற்கு நாம், 'இரா.சம்பந்தரின் வீடு" என்றோம்.

"ம்ம்ம், அந்தப் பக்கமாகப் போய் பாருங்கள். கீழ்மாடி வீடாக இருக்கவேண்டும்' என்ற அவர்கள், வீதியின் ஒருபுறத்தை நோக்கி கையை நீட்டினர். அவர்கள் காட்டிய திசையை நோக்கிப் பயணித்த நாம், தொடர்மாடி வீடொன்றுக்கு அருகில் நின்றோம். அங்கு நின்றுகொண்டு, எதிர்க்கட்சித் தலைவரின் வீடு எதுவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், மேல் மாடியொன்றிலிருந்து, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கீழே இறங்கி வருவதை அவதானித்தோம். அவரின் உதவியுடனேயே, மேல் மாடியில் தான் சம்பந்தரின் வீடு அமைந்துள்ளதை அறிந்துகொண்டோம்.

சில படிகளைத் தாண்டிப் பயணித்து, மூன்றாவது மாடியை அடைந்தோம். அங்கு மிகச் சிறிய, சாதாரண வீட்டுக்குள் நுழைந்தோம். அவ்வீட்டை அடைந்ததும், எமக்குள் பல கேள்விகள் உருவாகின. அக்கேள்விகளுக்கு பதில் தேட எண்ணினோம். அக்கேள்விகளை, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் தொடுத்தோம். „இந்த மாடிக்குடியிருப்புக்கு லிப்ட் வசதி இல்லையா? முதியவர் ஒருவர், இந்த மாடிக் குடியிருப்பில், படிகளில் ஏறி இறங்குவதென்பது கடினமானதென்பதை நாம் அறிவோம். அதற்கும் மேலாக, இலங்கை போன்ற அழகான நாடொன்றுக்குள், அரசியல் தலைவர் ஒருவர், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் தங்கியிருப்பார் என்பதை நாம் நினைத்தும் பார்க்கவில்லை என்றோம்'.

article_1466050059-3.jpg

- See more at: http://www.tamilmirror.lk/174801/எத-ர-க-கட-ச-த-தல-வர-க-க-உத-த-ய-கப-ர-வ-இல-லம-ல-ல-#sthash.1ZYvYdbm.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கள-பௌத்த இனவெறி அரசின், சிங்கள-பௌத்த இனவெறி அதிகாரிகளின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

சம்பந்தனும் தனது உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமைகளை சிங்கள-பௌத்த இனவெறி அரசுகள், சிங்கள-பௌத்த இனவெறி அதிகாரிகள் தாமாக கொடுத்ததாக சரித்திரம் இல்லை. தனது உரிமைகளை கேட்டுப் பெறுவதில் கௌரவம் பார்ப்பவர் எப்படி தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பார்?

தத்தமது உரிமைகளுக்கு போராடாமல் சிங்கள-பௌத்த இனவெறி அரச இயந்திரத்திடம் இருந்து எதையும் பெற முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.