Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? – ஜெரா

Featured Replies

தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? - ஜெரா

தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மிக வேகமாக பௌத்த மயப்பட்டு வருகின்றது. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும், அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும் இதனை முன்னின்று செய்கின்றனர். வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர்.

இந்தக் கதையவிழ்ப்புக்களின் அடிப்படையில்தான், வடக்கு கிழக்கில் நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கை பௌத்தமயப்படுத்துவதற்கு பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா?

வடக்கில் பௌத்தம் நிலவியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என வட பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பௌத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது.

அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது?

எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால் அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மன நிலையை தமிழர்க்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடைக்கின்ற இந்து மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும் இலங்கையின் அரசியல் கற்பித்து வைத்துள்ளது.

ஒரு பெருந் தத்துவம், மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது. ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்நோக்குகின்ற இரு இனங்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் மதங்களுக்கு மோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு, அதனை அறிவுசார் தளத்தில் அணுகவேண்டும்.

வடபாகத்தில் கிடைக்கின்ற பௌத்த எச்சங்களையும் சிங்களவர்களும், தமிழர்களும் ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர்தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல் சரியான வரலாற்று – பண்பாட்டு புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும்.

அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தொல்பொருட்களை கண்டுபிடித்தாலும் உடனேயே இது இத்தனையாம் நூற்றாண்டுக்குரியது, இந்த மன்னருக்குரியது, இந்த சமயத்துக்குரியது, இந்த மொழிக்குரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும்.

ஒழுங்கான அகழ்வாய்வுகள் துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது முடிவுகளாக செய்திகள் அறிவிக்கப்படுகின்றமை மேலும் மத ரீதியான இன முரண்பாட்டுக்கூர்மையை அதிகப்படுத்தும்.

பௌத்தம் என்றால் என்ன?

அது மதமல்ல. மதவாத அரசியல் செய்வதற்கான கருவியுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். சாதி, சமயம், பொருளாதார சுரண்டல்களினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைத் தேடித்தரும் ஆயுதம். போரையும், வறுமையையும், வாழ்க்கைத் துயரத்தையும் இல்லாமலாக்க சித்தார்த்தன் என்ற பெருமுனியால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்தல் முறையே பௌத்தம்.

அகிம்சை அதன் பிரதான இயல்பு. ஆனால், இப்போதிருக்கின்ற பௌத்தத்தில் இந்த அம்சங்கள் எதனையும் பார்க்க முடியாது. இப்போது அது அரசியல் மதம். அரசியல் தத்துவமாகக் கூட இல்லை. இதனால், பௌத்தம் தரம் உயர்ந்ததா? தரம் தாழ்ந்து சீர்கெட்டுப்போனதா என்கின்ற வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றைய பௌத்தத்தின் குரூரமான சாட்சிகளாக இலங்கையும், மியன்மாரும் உலகத்தவரால் நோக்கப்படுகின்றன.

தமிழ் பௌத்தம்

முதலில் பௌத்தம் இந்தியாவிற்குள்ளேயே பரப்பப்பட்டது. அதன் ஒரு கிளையாக தமிழகத்திற்கும் பௌத்தம் விரிவடைந்தது. சித்தார்த்தனின் சீடர்கள் அந்தப் பணியைச் சரிவரச் செய்தனர். சங்க கால முதிர்ச்சியில் முடிக்கான முடியாப் போரில் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஒத்தடமாக பௌத்த பிரசங்கங்கள் அமைந்தன.

வறுமையும், பிணியும், அரசியல் இருப்பின்மையும், ஒடுக்குமுறையும் கோலோச்சியிருந்த அந்தக் காலத்தில் வாழ்க்கையை நிர்வாணமாகக் காட்டிய பௌத்தம் தமிழகத்தில் பெருமெடுப்புப் பெற்றது. பௌத்த பிக்குகள் பரவலடைந்தார்கள்.

சமூக விசுவாசம் கொண்ட குறுநிலத் தலைவர்கள் போதியளவு தான தர்மங்களை வழங்கி ஊக்குவித்தார்கள். பதிலீடாக பகுத்தறிவையும், மருத்துவத்தையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் பௌத்த துறவிகள் தமிழக மக்களுக்கு வழங்கினார்கள்.

அதற்குப் பிராந்திய பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப பணி செய்வது அவசியமாகியிருந்தது. இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் மீட்கப்படும் பௌத்த சமயத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட முடியும்.

இவ்வாறு தமிழக மக்களின் வாழ்வோடு கலந்திருந்த பௌத்தம், பல்லவரின் எழுச்சியுடன் சிதைவடையத் தொடங்கியது. பிராமணிய ஆதிக்கத்தால் ஏற்கமுடியாத கருத்துக்களையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பௌத்தம் விளங்கியதால் தமிழகத்தைவிட்டு ஏன் இந்தியாவை விட்டும் கூட பௌத்தம் அகற்றப்படவேண்டிய ஒன்றாக மாறியது.

அப்படியே பௌத்த துறவிகள் வாதங்களின் பெயரால் கொலைசெய்யப்பட்டார்கள். அடித்துவிரட்டப்பட்டார்கள். தமிழ் பௌத்தமும் மெல்ல செத்தது.

இலங்கையின் வட பாகத்தில் பௌத்தம்

தமிழகமும், இலங்கையின் வடக்கு – கிழக்கு பாகங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும், வரலாற்றுக் காலத்திலும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியிருந்தன. தமிழகத்திலிருந்து, நேரடி பண்பாட்டு பரிமாற்றங்களைப் பெற்றுக்கொண்ட இடங்களாக மாதகல், கந்தரோடை, மாந்தை, வல்லிபுரம் முதலான இடங்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கின்ற பௌத்த எச்சங்கள் இதனை நமக்கு உறுதிப்படுத்தும்.

தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் மிக அண்மையான பகுதியில் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பாக கடற்கரைகள் காணப்படுவதால் சிறுபடகுகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் இந்தப் பகுதி கடற்கரைகளைத் தொட வாய்ப்பிருக்கின்றது. அத்துடன், ஆழம் குறைந்த கடற்கரைகள் என்பதும் இன்னொரு விடயம். எனவே, இலங்கையில் முதல் பௌத்தம் தொட்ட இடமாக வடக்கு கிழக்குப் பாகங்கள் இருந்திருக்கின்றன.

ஏன் அவற்றால் இங்கு நின்றுபிடிக்க முடியவில்லை?

இலங்கைத் தமிழர்களது பண்பாடு தமிழகத்திலிருந்து பரவலடைந்திருந்தாலும், புவியியல் இடைப்பிரிப்பு சில தனித்துவங்களை வழங்கியிருக்கிறது. உணவு, கலாசார நடைமுறைகள், மொழி, இயற்கை மருத்துவ அறிவியல், புராதன வழிபாட்டு மரபுகள் என சில தனித்துவங்கள் இங்குண்டு. தமிழக இந்து மதமும், சாதியமும் பிரமாண்டத் தன்மைகொண்டன. ஆனால், இலங்கைத் தமிழரின் இந்து மதமும், சாதியமும் நுண்தன்மைகொண்டது.

அதனால், இவையிரண்டும் இந்தப் பிராந்திய மக்களின், ஆள்பவர்களின் நுண் அரசியலோடு கலந்தவை. எந்தப் பண்பாட்டினாலும் அகற்றப்படமுடியாதவை. முதல் கட்டமாக இந்தத் தனித்துவத்தோடு மோதி பௌத்தம் தோல்வியுற்றது என்றே குறிப்பிட வேண்டும். மற்றையது வடக்கில் உள்ளாகவும், புறமாகவும் என்றுமே சாதிய அரசுகளே எழுச்சிப் பெற்றிருந்தன. அவை நுண்ணிய ஒடுக்குமுறைகளில் கைதேர்ந்தனவாக இருந்தன. ஒடுக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலே ஒடுக்கப்படுதல் நிகழ்ந்துகொண்டேயிருந்தது; நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆகவே பலமான ஒடுக்கும் பண்பாடு நிலவுகின்ற சூழலில் அதற்கெதிரான பௌத்தத்தினால் நின்று பிடிக்கமுடியவில்லை. அத்தோடு, தான தர்மம் யார் கொடுப்பது?

பௌத்தம் வடக்கில் நின்றுபிடிக்க முடியாமல் போனமைக்கு பிறிதொரு காரணமும் உண்டு. பௌத்தம் பரவிய காலத்து பௌத்த துறவிகள், இந்தக் காலத்து துறவிகள் போல இருக்கவில்லை. இனவாதம் பேசுவதிலும், அரசியல் செய்வதிலும், ஏனைய மதத்தினருக்கு எதிராக மத வன்முறைகளில் ஈடுபடுவதிலும், சுகபோகங்களை அனுபவிப்பதிலும் கவனமற்று இருந்தார்கள்.

பௌத்தமும் சரியான துறவியாக வாழ்வதையே அவர்களுக்குப் போதித்தது. எனவே, தங்குமிடங்கள் வனாந்தரங்களாகவும், காடுகளாகவும், குகைகளாகவும் இருந்தன. மக்கள் கொடுக்கும் தானத்தில் உண்டு, உடுத்தி வாழ வேண்டும். அது இல்லாதவிடத்து இயற்கையில் கிடைக்கும் காய், கிழங்கு, கனிகளை உண்டு மக்கள் பணி செய்யவேண்டும். இதற்கான இயற்கை அமைவுகள் வடக்கு – கிழக்கில் இல்லாமலிருந்தமை பௌத்த பிக்குகளையும், அந்த மதத்தினரையும் தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது.

இந்த இடத்தில் வடக்கு – கிழக்கு பௌத்த எச்சங்கள் குறித்து இன்னொரு புரிதலையும் முன்வைக்கலாம். இப்போதும் போலவே இலங்கையின் வரலாற்றுக் காலம் தொடங்கியபோதும் மாறி மாறி ஆக்கிரமிப்புக்கள் நடந்தன. யார் அனுராதபுரத்தை (மைய அரசை) கைப்பற்றுவது என்கிற போட்டி நிலவியது. காலத்துக்கு காலம் வடக்கிலிருந்து தமிழ் மன்னர்களும், தெற்கிலிருந்து சிங்கள மன்னர்களும் அதை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். இவர்கள் பலவீனமடைந்திருந்த காலத்தில் மைய அரசையும் தாண்டி ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டதற்கான சான்றுகளுண்டு.

அதன் பின்னணியில் சிங்களவர் கைப்பற்றிக் கொண்ட தமிழர் இடங்களில் பௌத்த விகாரைகளையும், தமிழர் கைப்பற்றிக் கொண்ட சிங்களவர் இடங்களில் இந்து ஆலயங்களையும் அமைத்துக் கொண்டார்கள். இது ஒரு வகை பண்பாட்டு அடிமைப்படுத்தலாக காலத்துக்கு காலம் நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதும் அந்த நிலைமை நீடிக்கின்றமை அதற்கு மேலுமொரு ஆதாரமாகக் கொள்ளத்தகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் காலத்தால் பிந்திய பௌத்த ஆலயங்களும், தெற்கில் இந்து ஆலயங்களும் காணப்படுகின்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. அப்படியே பார்த்தால், பௌத்த எச்சங்கள் காணப்படும் இடங்கள் அனைத்தும் சிங்களவர்களுக்கு அல்லது பௌத்த பண்பாட்டுக்குரிய இடங்கள் எனக் குறிப்பிட்டால், தெவுந்துரமுனையிலும் ( தெய்வேந்திரமுனை) இந்துக் கோயில் உண்டு. கதிர்காமத்தில் தமிழ் கடவுளரான கந்தன் இருக்கிறார். இவ்விடங்கள் எல்லாம் தமிழர்களுடையது எனவும் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக கிடைக்கப்பெறும் தொல்பொருட்களுக்கு உடனடியாக முடிவு அறிவிப்புக்களை வெளியிடுவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சரியான வரலாற்று, பண்பாட்டு, மரபுசார் கலாசார புரிதல்களுடனும், நவீனமயப்பட்ட சிந்தனையும் தொல்பொருட்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இன்றைய நிலையில் தொல்லியல் ஆய்வுகள் வரலாற்றுப் புத்தகங்களோடு மட்டும் நின்றுவிடும் ஒன்றாக இல்லை.

மாறாக சமூக – பண்பாட்டு – கலாசார நடப்பியலோடும் அவற்றைப் போதிக்கின்ற மானுடவியல், இனவரையியல், மொழியியல், சுற்றுச்சூழலியல் துறைகளோடும் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போதே உண்மைகள் தெரியவர வாய்ப்புண்டு. மிக முக்கியமாக, முடிவை வைத்துக்கொண்டு அதற்கான எச்சங்களை கண்டுபிடிக்கும் ஆய்வுப் போக்கு உலகின் எந்தப் பாகங்களிலும் இல்லவேயில்லை.

எனவே இலங்கையில் நடத்தப்பட்ட – நடத்தப்படும் தொல்லியல் ஆய்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு பௌத்த விகாரைகளை நிறுவுவது புத்தசாலித்தனமானதல்ல. அதுவும் ஒருவகையான மேலான்மைவாதமே. ஆதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பண்பாட்டு ஆக்கிரமிப்பே ஆகும்.

– ஜெரா –

http://thuliyam.com/?p=30561

4 hours ago, Athavan CH said:

வடக்கில் பௌத்தம் நிலவியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என வட பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பௌத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது.

உண்மை தான்!

4 hours ago, Athavan CH said:

இவ்வாறு தமிழக மக்களின் வாழ்வோடு கலந்திருந்த பௌத்தம், பல்லவரின் எழுச்சியுடன் சிதைவடையத் தொடங்கியது. பிராமணிய ஆதிக்கத்தால் ஏற்கமுடியாத கருத்துக்களையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பௌத்தம் விளங்கியதால் தமிழகத்தைவிட்டு ஏன் இந்தியாவை விட்டும் கூட பௌத்தம் அகற்றப்படவேண்டிய ஒன்றாக மாறியது.

ஆனால், பிராமணிய ஆதிக்கத்தால் இல்லாது போனது என்று சொல்வது தவறு. அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பகிரங்க விவாத களத்தில் பௌத்த கொள்கைகள் பல தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால் மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் கைவிடப்பட்டது என்பது தான் வரலாறு.

4 hours ago, Athavan CH said:

தமிழ் பௌத்தம்

முதலில் பௌத்தம் இந்தியாவிற்குள்ளேயே பரப்பப்பட்டது. அதன் ஒரு கிளையாக தமிழகத்திற்கும் பௌத்தம் விரிவடைந்தது. சித்தார்த்தனின் சீடர்கள் அந்தப் பணியைச் சரிவரச் செய்தனர். சங்க கால முதிர்ச்சியில் முடிக்கான முடியாப் போரில் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஒத்தடமாக பௌத்த பிரசங்கங்கள் அமைந்தன.

வறுமையும், பிணியும், அரசியல் இருப்பின்மையும், ஒடுக்குமுறையும் கோலோச்சியிருந்த அந்தக் காலத்தில் வாழ்க்கையை நிர்வாணமாகக் காட்டிய பௌத்தம் தமிழகத்தில் பெருமெடுப்புப் பெற்றது. பௌத்த பிக்குகள் பரவலடைந்தார்கள்.

சமூக விசுவாசம் கொண்ட குறுநிலத் தலைவர்கள் போதியளவு தான தர்மங்களை வழங்கி ஊக்குவித்தார்கள். பதிலீடாக பகுத்தறிவையும், மருத்துவத்தையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் பௌத்த துறவிகள் தமிழக மக்களுக்கு வழங்கினார்கள்.

அதற்குப் பிராந்திய பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப பணி செய்வது அவசியமாகியிருந்தது. இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் மீட்கப்படும் பௌத்த சமயத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட முடியும்.

முற்றிலும் உண்மை!

உண்மையில் இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி சாயிபாபா இயக்கம் உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி அனுமான் வழிபாட்டு ஆக்கிரமிப்பு உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி இராமகிருஷ்ண மிஷன் இயக்கம் உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி சின்மயா மிஷன் இயக்கம் உள்ளதோ, - அதே போலத்தான் அன்று புத்தர் இயக்கமும் இருந்தது. இவை ஒரு சிறிய எண்ணிக்கையிலான சைவர்கள்/ இந்துக்கள் மத்தியில் மட்டுமே இடம் பிடித்திருந்தன.

மேற்கூறிய அத்தனை இயக்கங்களும் சைவ (இந்து) வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தியே தமிழர் மத்தியில் இடம் பிடித்தன. இவற்றால் எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக அனுமன் சிலைகள் முளைக்கின்றனவோ, எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக விவேகானந்தர் சிலைகள் முளைக்கின்றனவோ, எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக சாயிபாபா சிலைகள் முளைக்கின்றனவோ, அது போலவே புத்தர் சிலைகளும் முளைத்தன.

இவை அனைத்தும் சைவ (இந்து) வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தியே தமிழர் மத்தியில் இடம் பிடித்தன. அதனால் இந்த தனிநபர் போதனைகள் (இந்துவாகிய சாயிபாபா, இந்துவாகிய விவேகானந்தர் / இராமகிருஷ்னர், இந்துவாகிய புத்தர், இந்து மரபுக் கதைகளில் வந்த அனுமார், இந்துவாகிய சின்மயானந்தா) சார்ந்த இயக்கங்களின் செயற்பாடுகளை இன்று போல், அன்றும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. இவர்களின் ஆராதனைகள் அனைத்தும் சிவலிங்கத்தை வைத்தே நடந்தன என்பதை கூர்மையாக அவதானிக்கும் அனைவரும் அறிந்து கொள்ளலாம். இதுவும் இவற்றை தமிழர் ஏற்றுக்கொள்ள காரணம் ஆயின.

பின்னர் சுமார்  1800 வருடங்களின் முன்னர் வந்தேறு குடிகளாக வந்த குழுவினர் சில நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகி, முதலில் ஒரு தனித்துவமான இனமாக, பின்னர் சிங்களவர்களாக பல்கிப் பெருகி வரும்  காலத்தில் தான் தமிழகத்தில் பௌத்தம் முழுமையாக தோல்வியடைந்தது. அதன் பிரதிபலிப்பு ஈழத்து தமிழர் மத்தியிலும் பரவ, பௌத்த இயக்கங்கள் தமிழர் மத்தியில் இருந்து விலக, பின்னர் தனித்துவம் தேடிய சிங்களவர் கைகளில் புத்த இயக்கம் சிக்கி இன்று சிங்கள-பௌத்த இனமதவெறியாக வளர்ந்துள்ளது.

இது சுருக்கமான வரலாறு. பல வரலாற்று நூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். அனுராதபுரத்தில் பல சிவாலயங்களின் மீது தான் இன்று உள்ள பெரிய விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள உண்மைகள் 1990 களில் யுனெஸ்கோ செய்த ருவான்வெலிசாய விகாரை மீள்நிர்மாணப் பணிகளில் தெரியவந்து, மிகக் கவனமாக மறைக்கப்பட்டன. அங்கு 1990 களில் யுனெஸ்கோ நிபுணர்களால் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி சிலைகள் (அரச டெயிலி நியூஸ் பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வந்திருந்தது) யுத்த செய்திகளுக்குள் மத்தியில் மிக நுட்பமாக மறைக்கப்பட்டன.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி சின்மயா மிஷன் இயக்கம் உள்ளதோ, - அதே போலத்தான் அன்று புத்தர் இயக்கமும் இருந்தது. இவை ஒரு சிறிய எண்ணிக்கையிலான சைவர்கள்/ இந்துக்கள் மத்தியில் மட்டுமே இடம் பிடித்திருந்தன.

தமிழரின் ஐம்பெரும் காப்பியங்கள் என்று அறியப்பட்டுள்ளவற்றில் குறைந்தது மூன்றாவது பௌத்த காலத்து காப்பியங்கள். முக்கியமாக மணிமேகலை மற்றும் குண்டலகேசி ஆகியவை  பௌத்த பிக்குனி பற்றிய காப்பியங்கள்.  வளையாபதி சமண சமய காப்பியம். சைவ சமய காப்பியம் அல்ல. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமண சமயத்தவர். சைவ சமயத்தவர் அல்ல.

நீங்கள் சொல்வது உண்மையல்ல என்பதற்கு இவையே ஆதாரம். 

குண்டலகேசி

மணிமேகலை

வளையாபதி

5 hours ago, Jude said:

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதைத்தான்.  இது சம்பந்தமே சம்பந்தம் இல்லாத விதண்டா வாதம்.

இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்பு விவேகானந்தரின் பொன்மொழிகள்,ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் ,பாபாவின் அருள் வாக்கு எல்லாம் தமிழர் காப்பியங்கள் தான்.....:rolleyes:

பௌத்தத்தின் அண்மைக் கால வரலாறு

அசோகச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் வரலாற்றில் கலிங்க தேசத்தில் மிகவும் மோசமான படுகொலைகளைச் செய்த கொடுங்கோலன், மிலேச்ச அரச பயங்கரவாதி, கொடிய போர்க்குற்றவாளி, தனது சுயரூபத்தை மறைக்க போட்ட கபட வேடம் தான் புத்தனின்  போதனைகளை பரப்புகிறேன் என்று பௌத்தனாக கிளம்பியது.

அன்று மிகவும் மோசமான படுகொலைகளைச் செய்த கொடுங்கோலன், மிலேச்ச அரச பயங்கரவாதி, கொடிய போர்க்குற்றவாளியின் மறைக்க உதவிய புத்தரின் போதனைகள் / பௌத்தம் என்ற மதம், இன்று வரை கொடிய அரச பயங்கரவாதிகளின் பாதுகாப்பு கவசமாக இலங்கை, மியாமர், இந்தியா போன்ற நாடுகளில் விளங்கி வருகின்றது.

எப்படி குரானை முதன்மைப்படுத்தி இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில், படுகொலைகளில் ஈடுபடுகின்றனரோ, அதைவிட மோசமான முறையில் கொடிய அரச பயங்கரவாதியான அசோகனின் கொலைச் சக்கரத்தை ஹிந்தியா பௌத்த தர்மச்சக்கரம் என்ற போர்வையில் தனது கொடியில் காவியபடி ஈழ மண்ணில் பாரியதொரு இனப்படுகொலையை 25 வருடங்களாக நடத்தி வருகிறது.

இன்று உலக அமைதியை குழப்பும் வகையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத நடவடிக்கைகளில் இஸ்லாம் மதப் போர்வையில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளும், பௌத்த மதப் போர்வையில் சிங்கள-பௌத்த-ஹிந்திய அரச பயங்கரவாதிகளும் மனித இன அழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • தொடங்கியவர்

Screen Shot 2016-05-25 at 1.59.19 PM

கனகராயன்குளத்திலிருந்து பரந்தன் வரைக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு வழியாக கொக்கிளாய் வரைக்கும் பிரதான பாதையின் அருகில், தமிழ் மக்களது சொந்தக் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை Storymap இன் ஊடாக Google Street View இன் உதவியுடன் கூகள் மெப்பில் படங்களுடன் பதிவினை மேற்கொண்டிருக்கிறோம். Storymap புதிய வலைதள தொழில்நுட்பத்தைக் கொண்டு இலங்கையில் தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட புகைப்பட/ செய்திக் கட்டுரையாகும்.

இங்கு கிளிக்  செய்வதன் ஊடாகவும் கீழ் தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, போல் said:

On 6/17/2016 at 5:28 AM, போல் said:

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதைத்தான்.  இது சம்பந்தமே சம்பந்தம் இல்லாத விதண்டா வாதம்.

On 6/17/2016 at 5:38 AM, putthan said:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

Screen Shot 2016-05-25 at 1.59.19 PM

கனகராயன்குளத்திலிருந்து பரந்தன் வரைக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு வழியாக கொக்கிளாய் வரைக்கும் பிரதான பாதையின் அருகில், தமிழ் மக்களது சொந்தக் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை Storymap இன் ஊடாக Google Street View இன் உதவியுடன் கூகள் மெப்பில் படங்களுடன் பதிவினை மேற்கொண்டிருக்கிறோம். Storymap புதிய வலைதள தொழில்நுட்பத்தைக் கொண்டு இலங்கையில் தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட புகைப்பட/ செய்திக் கட்டுரையாகும்.

இங்கு கிளிக்  செய்வதன் ஊடாகவும் கீழ் தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

தகவலுக்கு நன்றிகள் ஆதவன்

  • 2 months later...
  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.