Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ் ·

🔹"  ஒரு பாம்பு அதன் மீது ஒரு கல் விழுந்தபோது உதவிக்காகக் கூக்குரலிட்டது,

🔸" ஒரு பெண் தூரத்திலிருந்து வந்து அதைக் காப்பாற்றினாள்.

🔹" அதைக் காப்பாற்றிய பிறகு பாம்பு கூறியது எனக்கு உதவி செய்பவர்களைக் கடிக்கப் போவதாக நான் சத்தியம் செய்துள்ளேன்

🔸"  அந்தப் பெண் நான் உனக்கு உதவி செய்தேன் அப்படி இருக்க நீ எப்படி என்னைக் கடிக்க விரும்புகிறாய் என்று கேட்டாள்

🔹"  பாம்பு நான் உன்னை நிச்சயமாக கடிப்பேன் உனக்கு இரக்கம் காட்டவே மாட்டேன் அது என் இயல்பு என்ன நடந்தாலும் இயற்கை மாறாது என்று பதிலளித்தது

🔸" அந்தப் பெண் கூறினாள் நமது இந்த பாதையில் நாம் சந்திக்கும் முதல் விலங்கிடம் கேட்போம் அது என்னைக் கடிக்க உனக்கு உரிமை அளித்தால் அதைச் செய் என்றாள்

🔹"  சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு ஓநாயைச் சந்தித்தனர் அவர்கள் அவரிடம் முழு கதையையும் சொன்னார்கள்

🔸"  ஓநாய் தந்திரமாக கூறியது நீங்கள் என் முன் அதே காட்சியை மீண்டும் நடித்து காட்டும் வரை நான் அதை நம்பவே மாட்டேன்

🔹" அதற்கு அந்தப் பெண் பாம்பின் மீது கல்லை வைத்து ஓநாயிடம் இப்படித்தான் நான் அதை ஆரம்பத்தில் பார்த்தேன் என்றாள்

🔸 ஓநாய் கூறியது கல்லுக்கு அடியில் ஆரம்பத்தில் இருந்தது போலவே விட்டுவிடுங்கள்

🔹 ஏனென்றால் நன்றி கெட்டவர்கள் ஒருபோதும் உதவிக்கு தகுதியற்றவர்கள்

🔸 உங்களிடம் கருணையை பெரும் அனைவரும் அந்த உதவியைப் பாராட்டுவதில்லை

🔹"  நன்றி கெட்டவர்களாகப் பழகியவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் ஒருபோதும் மாற மாட்டார்கள்

Voir la traduction ........!

569601772_1841827006464782_3256963038929

  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

படித்து பகிர்ந்து

வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார். தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.

அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலு கால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது.

வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.

பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.

இங்கே எதற்காக வந்தது.?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.

வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.

விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய்.

அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.

இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார்.

மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது.

படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்படி என்ன தான் எழுதியிருந்தது....???

"அன்பு மிக்கவருக்கு வணக்கம்.

இந்த நாய் என்னுடையது தான்.

இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது.

தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".

பி.கு."ஒரு விண்ணப்பம்.

நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன." 🤦‍♂️"

~மகிழா. 💃"

-பகிர்வு பதிவு.

🌹

Voir la traduction......!

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்  ·

Guru Tamilanda ·odoSnestrpgg6m81f3gmf148 8hm2tf2gg0ci8gf941ctm9igiu8muuth2lt ·

’முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' - இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’' வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.

”தான் பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்" - ஒரு மாணவி.

”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.

இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம். அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே சிறப்பு.

Voir la traduction

574542316_4229841517161817_6109659627481

  • கருத்துக்கள உறவுகள்

காமிலா காதி ·

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது.

சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும்

. தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும்.

நாவால் நக்கிவிடும்.

பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும்.

குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி.

தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை.

வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும்.

ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும்.

குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும்.

ஆனால் மீண்டும் விழுந்து விடும்.

குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம்.

நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது.

இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது.

குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.

ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்!!

Voir la traduction

571145561_1392282675803504_2907581010017

  • கருத்துக்கள உறவுகள்

Creativity கிரியேட்டிவிட்டி  ·

Anbu Anbu ·deSoosnrptn2l0 110b2:m,he9hr7m1 7h778aecail1a5t00afg2v948om7 ·

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது.

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது.

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது.

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது.

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள்.

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை.

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார்.

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது.

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான்.

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும்.

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள்.

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

உழைப்போம் உயா்வோம்!

படித்து பகிர்ந்தேன்!!

Voir la traduction

573098292_122261401730020523_60201074072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!. இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.
அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது.
ஆம் _ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது... 💝

அகவி விஜி 

  • கருத்துக்கள உறவுகள்

Vikadam.com ·

டாக்டர் - என்ன பிரச்சினை உங்களுக்கு...?

எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்...

அப்படியா...!?

ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...

இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே...?

ஆமா டாக்டர்... ஆமா...?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...

உங்க பேரென்ன...

ராமநாதன்...

என்ன தொழில் பண்றீங்க...

பைனான்ஸ்...

நைட்டு நல்லா தூங்குவீங்களா...?

கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...

சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...

நெறய டாக்டர்....

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?

ஆமா டாக்டர்..

எந்த மாதிரி நடிகைங்க...

ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....

சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!??

சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...

சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?

ஷகிலா...

ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?

வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க...

ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்...

அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க...

சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...

ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...

அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க...

45, 48, 54, 41...

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!!

என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...?

தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...!

அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!!

Voir la traduction

580669584_1160616736242953_3151595961383

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி "கண்ணு.. இன்னிக்கு பத்து பாக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா."

வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை. ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், 'ப்ச்ச்'சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்.

"என்னாது ஆயா?"

"இட்லி மாவு கண்ணு.."

"இட்லி மாவு..?"

"பொசு பொசுன்னு மல்லீப்பூ மாதிரி வரும். பாக்கெட்டு பதினஞ்சு ரூவா.. பாஞ்சு இட்லி வரும்."

"ம்ம்ம்.."

"வாங்கிக்கோ நயினா.

கட்சீ பாக்கெட்டு. பதினஞ்சு ரூவா கூட வாணாம்.. பத்து ரூவா குடுத்து எடுத்துக்கோ".

நான்கைந்து முறை வேண்டாமென்று சொன்ன பின்னும், இட்லி மாவு பாக்கெட்டைக் கையில் திணிக்காத குறையாக மல்லு கட்டி கொடுத்தது அந்தக் கிழவி.

மணி மாலை ஆறு தான் ஆகிறது. அதற்குள் ரூமுக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போகிறோம். கொஞ்ச நேரம் இதுகிட்டப் பேச்சுக் கொடுத்து தான் பார்ப்போமே......

"ஆயா உனக்கு பசங்க யாரும் இல்லையா ? ஏன் இந்த வயசுல இப்டீ தனியா கஷ்டப்படறியே?"

"கட்டிக்கினவன் குடிச்சே செத்துப் பூட்டான். விட்டுது சனியன்னு நெனைச்சா, ஒன்னே ஒன்னு தான் பெத்தது அதுவும் அவன் அப்பன் வழியிலே உருப்படமா குடிச்சி குடிச்சே சீரழியுது."

"ம்ம்ம்.. இந்த மாவை விக்கிறதல ஒரு நாளைக்கு உனக்கு எவ்ளோ தேறும்.."

"ஒரு பாக்கிட்டு பதிமூனுக்கு வாங்கறேன். பதினெஞ்சுக்கு விக்கறேன்."

"ம்ம்ம்."

"நாள் பூரா நாயா பேயா இங்க அங்க ஓடுனாலும் இருவது பாக்கெட்டு போனா, அதுவே தலைக்கு மேல வெள்ளம்."

சிக்னலில் க்ராஸிங் நேரத்தில் பிச்சையெடுப்பவர்கள் கூட நாளொன்றுக்கு வெகு எளிதாக இருநூறுக்குக் குறையாமல் பார்த்து விடுகிறார்கள். இந்த கிழவி நாள் முழுவதும் வேகாத வெயிலில் ஏன் இப்படி வெந்து சாகிறது ?

ஒரு நொடி மூடிய விழிகளுக்குப் பின்னால் அவனுடைய ஆசை ஆயாவின் முகம் வந்து போனது. மனசு வலித்தது அவனுக்கு.

"ஆயா.. மாவைக் குடு இப்டீ.."

கிழவியிடம் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான் அவன்.

"கண்ணு சில்ற இல்ல நயினா.."

கிழவியின் முகம் சட்டெனத் தொங்கிப் போனது..

"ஆயா.. நீ தினம் இந்தப் பக்கம் வருவேல்ல?"

(நாளை மறுநாள் அவன் பெங்களூருக்கு ட்ரெயின் ஏறியே ஆக வேண்டும்.)

"ஆமா.."

"நான் ஆறு மணிக்கு தெனம் இங்க தான் வந்து டீ குடிப்பேன். காசு தீர்ற வரைக்கும் தினம் ஒரு பாக்கெட்டு குடுத்துக்கிட்டே போ.."

"இல்ல நயினா.."

"இன்னா இல்ல.?"

"ராவைக்கு என் மூச்சு நின்னு போச்சுன்னா உன் துட்டைத் திருப்பிக் குடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும். அதெல்லாம் வேணாம்."

கிழவியின் கண்களில் ஒரு தீர்மானம், ஒரு நம்பிக்கை மின்னியது.

"ஆயா.. என்னாப் பேச்சு பேசற நீ..?"

"ஆமாம் கண்ணு. போன ஜென்மத்துலே நான் என்னாப் பாவம் பண்ணனோ இப்டீ நாயாப் பேயா அலையறேன். இதுக்கு மேல ஜென்மமே வாணாம் கண்ணு.."

அரசாங்கத்தையும், அடுத்தவன் சொத்தையும், ஏன் ஆண்டவன் சிலைகளையே மாற்றுபவர்கள் பிறந்த இதே தேசத்தில் தான், இந்தக் #கிழவியும் பிறந்திருக்கிறாள்.....

Voir la traduction

581009692_122260992482037466_10689007884

  • கருத்துக்கள உறவுகள்

Farvin Ishak ·

Suivre

rsodtnoSep1elifbumu34 29u:9rl005 7othm1,0a3tneu01v7gu85t3641 ·

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.

அவர் பணக்காரனை வந்து பார்த்தார்.

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

தலைவலி குணமாகி விட்டது.

சன்னியாசி கூறியது சரிதான்.

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.

சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.

காரணம் கேட்டார்.

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.

ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.

உன் பணமும் வீணாகி இராது.

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

அது சாத்தியமல்ல.

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

Voir la traduction

580127519_1246596494023060_4291198781675

இந்தக் கதைக்கு இந்தப் படம் எதுக்கென்றே தெரியவில்லை . .......ஏதோ ஈயடிச்சான் கொப்பி மாதிரிப் போட்டு வைப்போம் .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

Suivre

onsertSpdolc666m7t7fg19t30uah2m4h6141c2cm5tf 0mm2mg3a41t6cfi ·

படித்து பகிர்ந்து 🌹

தினம் ஒரு குட்டிக்கதை -

வாய்ப்புகள் ஏராளம்...

ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார்.

அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார்.

அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது.

இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார்.

பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.

தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார்.

கதையின் நீதி:-

நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம்.

வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.

படித்ததில் பிடித்தது.

~மகிழா. 💃"

- மீள் பதிவு.

🌹

Voir la traduction

Edited by suvy
சிறு திருத்தம் .....!

  • கருத்துக்கள உறவுகள்

RAVI MANY ·

பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர்.

ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர்.

சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர்.

மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது.

கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன.

1- குடும்பங்களை சீர்குழைத்தல்

2- கல்வியை இல்லாமல் செய்தல்

3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல்

குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள்.

கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள்.

முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள்.

உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?!

Voir la traduction

586798742_1761752641277744_8320657301128

  • கருத்துக்கள உறவுகள்

Benitto Kumar ·

வியாபாரியின் அகந்தையை உடைத்த தெனாலி ராமன். சிறுகதை.

வெகு நாட்களாக வெளியூரில் தங்கியிருந்த புத்திக்கூர்மையின் உருவமான தெனாலி ராமன், ஒரு நாள் தன் ஊரான ஹம்பி நகருக்குத் திரும்பி வந்தான்.

ஊருக்குள் நுழைந்தவுடனே எங்கும் மக்கள் கூட்டம், கிசுகிசுப்பு, பரபரப்பு! எல்லோரும் ஏதோ ஒரு அதிசயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

“என்ன விஷயமாக இப்படி ஊரே கலகலப்பாக இருக்கிறது?” என்று வியப்புடன் ராமன் தன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு அவன் வேலைக்காரர்கள் இருவரும் கூடி ரகசியமாக ஆலோசனை செய்வது போல பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட தெனாலிக்கு சந்தேகம் வந்தது.

ஒருவனை அழைத்து, “ஏய்! என்ன விஷயம்? ஊரும் பேசுது… நீங்களும் பேசுறீங்க?” என்று கேட்டான். பயந்து நடுங்கிய வேலைக்காரன் சொன்னான்: “ஐயா… நம்ம ஊருக்கு ஒரு வடநாட்டு வியாபாரி வந்திருக்காராம். அவரிடம் ஒரு அதிசயமான சவால் இருக்காம்…”

“என்ன சவால்?” என்று தெனாலி கேட்டான்.

“அவர் வைத்திருக்கும் ஒரு பொருளின் எடையை சரியாகக் கண்டுபிடித்தால், எடைக்கு எடை பொன் தருவேன் என்கிறாராம். தவறினால்… நம்ம வாழ்க்கை முழுக்க அவருக்கு அடிமையாக வேலை செய்ய வேண்டுமாம்!”

இந்தக் கொடூரமான நிபந்தனையைக் கேட்ட ராமன் சற்று சிந்தித்து, நேராக அரச சபைக்குச் சென்றான். அங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் அந்த வியாபாரியின் சவாலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.

தெனாலி வந்ததும் மன்னர் மகிழ்ச்சியுடன், “இந்தச் சவாலுக்கு நீயே தீர்வு காண வேண்டும்!” என்று உத்தரவிட்டார்.

தெனாலி ராமன் வியாபாரியைப் பார்த்து, “எந்தப் பொருளின் எடை வேண்டும்?” என்று கேட்டான்.

கர்வமாகச் சிரித்த வியாபாரி சொன்னான்: “வீதியில் நிற்கும் என் யானையின் எடை சொல்ல வேண்டும்!”

சபையே அதிர்ந்தது. யானையை தராசில் எப்படி நிறுத்துவது? இதற்கெல்லாம் எடை கருவியே இல்லையே!

அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் தெனாலி ராமன் சற்றும் கலங்கவில்லை. “நான் நாளை காலை பதில் சொல்கிறேன்!” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

இரவில் தன் மனைவியிடம் இந்தச் சிக்கலைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவனது புத்தியில் திடீரென மின்னல் போல ஒரு யோசனை உதித்தது. நதி… படகு… மரக்கட்டைகள்… மாபெரும் புத்திசாலித்தனம்!

அடுத்த நாள் காலை, மன்னர், மக்கள், வியாபாரி ஆகிய அனைவரும் ஆவலோடு நதிக்கரையில் கூடியிருந்தனர்.

தெனாலி ராமன் முதலில் யானையை ஒரு பெரிய படகில் ஏறச் செய்தான். யானை ஏறியதும் படகு நீரில் எவ்வளவு ஆழம் அமிழ்ந்தது என்பதை குறிக்கும் வண்ணம் படகின் உட்புறத்தில் ஒரு கோடு போட்டான்.

பிறகு யானையை இறக்கிவிட்டு, அதே படகில் மரக்கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, படகு முன்னர் யானை ஏறிய போது அமிழ்ந்த அதே அளவு வரை நிரப்பினான்.

பின்னர் மன்னரைப் பார்த்து, “அரசே! இப்போது இந்த மரக்கட்டைகளைத் தனித் தனியே எடை போடுங்கள். அவை அனைத்தின் மொத்த எடைதான் யானையின் உண்மையான எடை!” என்றான்.

அரச சபையே ஆனந்த அதிர்ச்சியில் முழங்கியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மகிழ்ச்சியில் திளைத்தார்.

மன்னர் வியாபாரியை நோக்கி, “நீ சொன்ன சவாலை எங்கள் தெனாலி நிறைவேற்றிவிட்டான். இப்போது நீ சொன்னது போல பரிசைத் தந்தே ஆக வேண்டும்!” என்றார்.

ஆனால் அப்போது தெனாலி ராமன் இடைமறித்து, “மன்னர் பெருமானே… இவன் ஒன்றைத் தெளிவாகச் சொல்லவில்லை! ‘எடைக்கு எடை பொன்’ என்று சொன்னான்… எந்த எடைக்கு? என் எடைக்கா? அல்லது யானையின் எடைக்கா?” என்று கேட்டான்.

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் வியாபாரியின் முகம் வெளுத்துப் போனது. யானையின் எடைக்கு ஈடான பொன் கொடுக்க அவனால் முடியாது! அவனது சூழ்ச்சியும், பல நாடுகளில் மக்களை அடிமையாக்கிய பாவமும் வெளிச்சத்துக்கு வந்தது.

உடனே மன்னர் உத்தரவிட்டார்: “இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனுக்கு சிறையே சரியான தண்டனை!” என்று அவனைச் சிறையில் அடைத்தார்.

மன்னர் தெனாலி ராமனைப் புகழ்ந்து, பெரும் அளவு பொன்னும் பரிசுகளும் வழங்கினார்.

மக்கள் அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள்: “வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு!”

கருத்து:

யாரையும் துன்புறுத்தி மகிழாதே.

அகந்தையால் வாழ்பவன் ஒருநாள் தன் அகந்தையாலேயே வீழ்வான்.......!

589954356_3938714656258774_7022910526843

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டவன் கருப்பு ·

Suivre

Stsdeporno641h u93t3n8826622t883vo4,082b 01e:gcrmec26acg715g ·

ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.

அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.

அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.

அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.

அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.

கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.

இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,

"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ.........!

588622406_32581910261456036_578867039814

  • கருத்துக்கள உறவுகள்

Suguna Muthusamy ·

Suivre

derotoSnps53159a0g:2eh7m67601124tit5rh01 02g1H5g07 à6ac55m,0 ·

எதிர்பாராத அன்பு என்னசெய்யும்...

திக்குமுக்காட செஞ்சு நாம் இதற்கு தகுதியானவர்களா னு தோண வைக்கும்... இனியும் இனியும் மக்களிடம் அன்பு மிகுதியாக காட்ட வேண்டும் என்று நினைக்கத் தோன்றிய தருணங்களில் இதுவும் ஒன்று....

எப்போதும் பச்சை கடலை வந்தால் முதலில் பஸ் இறங்கியவுடனேயே நமது வீட்டுக்கு வந்து விடுவார்...கல்லைக்காய் நல்லா இருக்கு...உனக்கு புடிக்குமே என்று கொண்டு வந்தேன் என்பார்...

நேற்று கண்ணு னு சத்தம் போட்டுட்டு வரும்போதே கைகளில் இந்த பனங்குச்சி கிழங்கு வைத்திருந்தாராம்....இவர் திண்ணை பெஞ்சில் அமர்ந்து இருந்தார்..இது அம்மாவிற்கு காசு வேண்டாம்.. என்னோட பரிசு அம்மாவிற்கு என்றராம்...உள்ளே வந்து உன்ற தோழி வந்து இருக்காங்க.. இந்த குச்சி கிழங்கு உனக்கு கிப்ட் ஆமா என்றார்... பாவம் பா என்று கூறி கொண்டு வெளியே வந்தால் நானு அதுக்கு காசு வாங்க மாட்டேன்... நீங்க மட்டும் எனக்கு எல்லா கொடுக்கறீங்க...நானு இதை உனக்கு கொடுக்ககூடாதா னு ....நீ எனக்கு எதுக்கு கொடுக்கிற ...நானு பாசமாக கொடுக்கறேன் னு கூற நானு பிரியத்துக்கு கொடுக்கறேன் சரியா...கடலைக்கு மட்டும் காசு கொடு னு வாங்கி போனார்....

இந்த மாதிரி மக்கள் மேன்மக்களாகி விடுகின்றனர் ஒரு சில நொடியில்......

சிரித்து கொண்டே சாப்பிட்டீங்களா னு கேட்க மழை பெய்ஞ்சுட்டே இருந்ததா வரவேண்டாம் னு பாத்தா மழை ஓய்ஞ்சதா...நாம காலு ஊட்டுலே தங்கதல்லா... அதனால் வெறுஞ்சோறு எடுத்துட்டு அதா அந்த பாக்கெட்டில நயிரு வாங்கி கொண்டு வந்து உள்ளேன்.... நீ ஊறுகாய் வைச்சிருந்தா கொஞ்சுண்டு கொடு னு கேட்க மாங்காய்.. எலுமிச்சை ஊறுகாய் கொடுத்தேன்.... எடுத்து கொண்டு வியாபாரம் செய்ய போய்

விட்டார்.. பெண் இப்படி சுமையைத்தூக்கிட்டு போகவேண்டாம் என்று திட்டுகிறராம்...எனக்கு தா ஊட்டுல இருக்க முடியலை...ஏதோ ரெண்டு காசு சம்பாரிசாசா யாருகாசையும் எதிரு பாக்கமா நாம பாட்டில நம்ம பொழைப்ப பாக்கலாமல்ல என்றார்...

சரி தா மா..பத்திரமாக போய் விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினேன்...வாரமோருமுறை...கூடையும் அம்மாவும் ஒன்றே...அவ்வப்போது பொருட்கள் மாறும்....மீன்..வெள்ளரி..தக்காளி.. காய்க என்று ஏதாவது ஒரு பண்டம் வாங்கி வந்து ஊருக்குள் சுற்றி விட்டு விற்பனை செய்து விட்டு தான் போவாரே.....அடுத்த நாள் அடுத்த ஊரு.....

வாழ்க்கை படிப்பினைகள்...

உழைப்பு உயர்வுதரும்...

வாழ்தல் இனிது அனைவரோடும்.....!

588400637_4509455456041545_4228007992632

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.