Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி விடுவிப்பு .இடிக்கபடாத வீடுகளில் இராணுவத்தினர் :

Featured Replies

வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி விடுவிப்பு .இடிக்கபடாத வீடுகளில் இராணுவத்தினர் :

வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி விடுவிப்பு .இடிக்கபடாத வீடுகளில் இராணுவத்தினர்  :

காங்கேசதுறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வீடுகள் இடைத்தழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற அனுமதித்த இராணுவத்தினர் வீடுகள் அழிக்கப்பட்டாத பகுதிகளில் தாம் தொடர்ந்து நிலைகொண்டு உள்ளனர்.

வலி.வடக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டிய பகுதிகள்  கடந்த சனிக்கிழமை 26 வருடங்களின் பின்னர் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்டது.

மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகள் இடித்தழிக்கப்பட்டு உள்ளன.

காங்கேசன்துறை வீதிக்கும் , புகையிரத பாதைக்கும் இடைபட்ட பகுதியில் முன்னர் இருந்த சந்தைக் கட்டட தொகுதி , கடைக்கட்டட தொகுதி மற்றும் வீடுகள் என்பன தற்போது இடித்தழிக்கப்பட்டு உள்ளன.

புகையிரத பாதைக்கு மறுபக்கம் உள்ள வீடுகள் ,  இடிக்கப்படாமல் முழுமையாக காணப்படுகின்றான. வீடுகள் இடித்தழிக்கப்படாத போதிலும் , அந்த பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.

அப்பகுதிகளில் உள்ள வீடுகளை உள்ளடக்கி இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைத்து நிலை கொண்டு உள்ளனர்.

அப்பகுதிகளில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு உள்ள போது விடுவிக்காத பகுதிகளை சுற்றி முட்கம்பி வேலிகளை அடைத்து இராணுவத்தினர்  வருகின்றார்கள்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133563/language/ta-IN/article.aspx

23 minutes ago, நவீனன் said:

புகையிரத பாதைக்கு மறுபக்கம் உள்ள வீடுகள் ,  இடிக்கப்படாமல் முழுமையாக காணப்படுகின்றான. வீடுகள் இடித்தழிக்கப்படாத போதிலும் , அந்த பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.

நம்ம இடம். ஆனாலும் அங்கும் வீடுகள் இல்லை.

  • தொடங்கியவர்
9 minutes ago, ஜீவன் சிவா said:

நம்ம இடம். ஆனாலும் அங்கும் வீடுகள் இல்லை.

global தமிழில் பல படங்கள் இருக்கு இந்த செய்தியோடு. என்னால் இணைக்க முடியவில்லை.

ஆறு வருடங்களுக்குள் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன

வலி.வடக்கு குரும்பசிட்டி பகுதி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட இருந்த போதிலும், தற்போதே மீள் குடியேற்றத்திற்கு விடுவிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.  கடந்த சனிக்கிழமை வலி.வடக்கு குரும்பசிட்டி பகுதியில்  26 வருடங்களுக்கு பின்னர் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த பகுதி கடந்த  ஆறு வருடங்களுக்கு முன்னரே மீள் அனுமதி வழங்கப்பட இருந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியில் எமது சொந்த இடமான குரும்பசிட்டி பகுதியினை பார்வையிட்டு இருந்தோம். இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த எம்மை தெல்லிப்பளை சந்திக்கு வரவழைத்து அங்கு வைத்து எம்மை பேருந்துக்களில் ஏற்றி கட்டுவான் குரும்பசிட்டி வீதி வழியாக எம்மை அழைத்து வந்தனர். பேருந்துக்களில் இருந்தவாறே எமது வீடுகளை பார்வையிட்டோம். பேருந்தில் இருந்து இறங்குவதற்கு எம்மை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. பேருந்து வீதியின் ஊடாக செல்லும் போது பேருந்து கண்ணாடி வழியாக எமது வீடுகள் நிலங்களை பார்வையிட்டோம். அதன் பின்னர் எமக்கு கூறப்பட்டது மிக விரைவில் இப்பகுதி மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்படுவார்கள் என. ஆனால் ஆறு வருடங்கள் கடந்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

அதுவும் முழுமையான பகுதி விடுவிக்கப்படவில்லை ஒரு சில இடங்களே விடுவிக்கப்பட்டு உள்ளன. மிக விரைவில் ஏனைய பகுதிகளையும் விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் பேருந்துக்களில் அழைத்து வந்து எமது வீடுகள் காட்டப்பட்ட போது சில வீடுகளில் இராணுவத்தினர் தங்கி இருந்தனர். ஏனைய வீடுகள் சேதமின்றி காணப்பட்டன.

தற்போது மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பின்னர் வந்து அந்த வீடுகளை பார்க்கும் போது கூரைகள், கதவுகள் , யன்னல்கள் என்பவற்றை காணவில்லை. அவைகள் அனைத்தும் இராணுவத்தினரால் கழட்டி செல்லப்பட்டு உள்ளன.

சில வீடுகள் ஆறுவருட காலப்பகுதிக்குள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளன. என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

KKS_Destruction_05_Sin_Terror.jpg

KKS_Destruction_06_Sin_Terror.jpg

KKS_Destruction_07_Sin_Terror.jpg

KKS_Destruction_08_Sin_Terror.jpg

KKS_Destruction_09_Sin_Terror.jpg

KKS_Destruction_10_Sin_Terror.jpg

KKS_Destruction_11_Sin_Terror.jpg

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133562/language/ta-IN/article.aspx

Edited by போல்

2 hours ago, போல் said:

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியில் எமது சொந்த இடமான குரும்பசிட்டி பகுதியினை பார்வையிட்டு இருந்தோம். இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த எம்மை தெல்லிப்பளை சந்திக்கு வரவழைத்து அங்கு வைத்து எம்மை பேருந்துக்களில் ஏற்றி கட்டுவான் குரும்பசிட்டி வீதி வழியாக எம்மை அழைத்து வந்தனர். பேருந்துக்களில் இருந்தவாறே எமது வீடுகளை பார்வையிட்டோம். பேருந்தில் இருந்து இறங்குவதற்கு எம்மை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. பேருந்து வீதியின் ஊடாக செல்லும் போது பேருந்து கண்ணாடி வழியாக எமது வீடுகள் நிலங்களை பார்வையிட்டோம். அதன் பின்னர் எமக்கு கூறப்பட்டது மிக விரைவில் இப்பகுதி மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்படுவார்கள் என. ஆனால் ஆறு வருடங்கள் கடந்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

போராடுபவர்களால் தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும், மக்கள் குடியேற்றங்கள் நடந்து வருகின்றன.  இணக்க அரசியல் துதி பாடுபவர்களால் இல்லை. இதைச் சொல்வது தமது காணிகளை மீளப்பெற்ற மக்கள்.

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம்.

இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 இருப்பதையும் இடித்துத் தரை மட்டமாக்கி, தரும்போது எங்களிடமே பாராட்டும் பெறுவதற்கு பாவம் அவனும் இடம் பெயருகிறான். ஒருவேளை (சாத்தியமல்ல)  தமிழர் பகுதிகளை தமிழர்களிடம் கொடுக்க வேண்டும் என்கின்ற ஓர் நிலைமை சர்வதேசத்தால்  ஏற்பட்டால் எல்லாம் சுடுகாடாக்கிப் போட்டுத்தான் விடுவான் சிங்களவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.