Jump to content

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி
 
தேவையான பொருட்கள்: 

சிக்கன் - முக்கால் கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் - 4 
பிரியாணி இலை - 4 
பட்டை - 1 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
குங்குமப்பூ - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு... 

தயிர் - 1 கப் 
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் 
எள் - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 4 பற்கள்

செய்முறை: 

* சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். 

* மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

* கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

* 3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். 

* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

* பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும். 

* அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும். 

* சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.

* சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!

 

http://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2016/07/02141944/1022931/how-to-make-spicy-chicken-afghani.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாவே பார்க்க அருமையாக இருக்கு, குங்குமப்பூவும் நல்ல கலர் குடுக்குது....,  என்ன கடைசில அடுப்பை அணைக்கும்போதுதான்  நெஞ்சில சுட்டுட்டுது...!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நிஜமாவே பார்க்க அருமையாக இருக்கு, குங்குமப்பூவும் நல்ல கலர் குடுக்குது....,  என்ன கடைசில அடுப்பை அணைக்கும்போதுதான்  நெஞ்சில சுட்டுட்டுது...!!  tw_blush:

நெஞ்சு தானே,போனாப்போவுது. விடுங்கண்ணே:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:

நெஞ்சு தானே,போனாப்போவுது. விடுங்கண்ணே:grin:

கல் நெஞ்சன்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முக்கால் கிலோ?

2 hours ago, நந்தன் said:

நெஞ்சு தானே,போனாப்போவுது. விடுங்கண்ணே:grin:

படுபாவியள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

அதென்ன முக்கால் கிலோ?

படுபாவியள்??

கொய்யால, நெஞ்சுக்கு கீழ போயிருந்தா இன்னா சொல்லுவீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

கொய்யால, நெஞ்சுக்கு கீழ போயிருந்தா இன்னா சொல்லுவீங்க

அடி வயிறு ஹாஹா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, முனிவர் ஜீ said:

அதென்ன முக்கால் கிலோ?

படுபாவியள்??

எனக்குத் தெரிந்த வரையில் ஒரு சிக்கனுக்கு இரண்டு கால். பாதிச் சிக்கனுக்கு ஒரு கால்...!

இதன் தேற்றம்:  நாலுகால் உள்ளது நாற்காலி...!

------------------------: மூணு கால் உள்ளது முக்காலி...!

------------------------: இரண்டரைக் கால் உள்ளது ஒன்னரைக் கோழி....!

கணக்கு சரியாத்தான் இருக்கும்...! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

logo.jpg

கோழிக்கும்,  சிக்கனுக்கும் உள்ள  வித்தியாசம் வித்தியாசம் என்ன?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

logo.jpg

கோழிக்கும்,  சிக்கனுக்கும் உள்ள  வித்தியாசம் வித்தியாசம் என்ன?:grin:

நான் சொன்னால் எனக்கு வெட்டு விடுமே ????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.