Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்கிறது அம்பாறையில்?????????????

Featured Replies

இலங்கை அரசு தொடர்ச்சியாக அம்பாறை சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டி வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது அம்பாறையில்? ஏன் தமிழர் தரப்பு அம்பாறை சம்பந்தமாக ஒரு செய்திகளையும் வெளியிடவில்லை? தமிழ் இணையத்தளங்களும் ஏன் அம்பாறை சம்பந்தமாக இருட்டடிப்புச் செய்கிறது? அம்பாறை தமிழர் மாவட்டம் இல்லையா?

எமக்கெதிராக ஐ.நா. செயலாளர் நாயகமும் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், ஏன் தமிழர் தரப்பு "5 வருடம் கட்டுப்பாடு" என்ற பொய்மையான சர்வதேச மாயையில் கட்டுப்பட்டிருக்கிறது?

நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டும், கடத்தி காணாமல் போவதும் தொடரும் போது "கையைக் கட்டி வாயை மூடு செயலற்றவரர்களாக போய் விட்டோமா? நாளுக்கு நாள் எமது பிரதேசங்களை தொடர்ந்து சிங்களத்திடம் இழக்கப் போகிறோமா?

பதில்கள் வெறுமையாகவே உள்ளன!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லியாச்சே கிழக்கு சித்திரை சிங்கள வருசத்துக்கு சிங்கள மக்களிடம் பரிசளிக்கப்படும் என்று. தமிழர் தரப்பு இராஜதந்திரமா சிந்திச்சிட்டு இருக்குது. எப்படி அந்தப் பரிசை சிங்களவரட்ட இருந்து தட்டிப்பறிக்கிறது என்று. பொறுங்கோ.. விசுவாசத்தைப் பொறுமையிலதான் காட்ட வேண்டும் என்று யாழ் கள அரசியல் விற்பன்னர்கள் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

பதில் நிச்சயமிருக்கும் காலம் கைகூடும் போது இங்க நின்று சும்மா கூச்சல் போடுவது நல்லதல்ல பாலா அண்ணாவின் நினைவுதினத்தில் உரையாற்றிய தீபன் அண்ணா மற்றும் தளபதிகளை பார்த்தால் தெரியும் நித்திரை இல்லாமல் அவார்கள் கஸ்டப்படுவது தெரியும்.

நாங்கள் பொறுமையை பேசுவதுக்கு அருகதை அற்றவர்கள்நாட்டை விட்டூ ஓடிவந்து கருத்துக்களத்தில் கத்துகிறோம் அங்கு அவர்கள் உயிரை கொடுத்து போராடுகிற்றார்கள் என்பதை மனதில் வையுங்கள்.

எம்கடமையை நாம் செய்வோம் அவர்கள் தம் வேலையை தாம் செய்வார்கள் ப்தில் மிக பயங்கரமானதாகவே இருக்கும்

இதை நினைக்கையில் ஒரு பாடல் வரிநினைவுக்குவருகிறது

"வாழ்வும் வரும் சாவும் வரும் ஏதோ ஒரு நாள் விடிவும் வரும் கொஞ்சம் பொறு துணிந்தே இரு நாளைய நாளில் நலமாய் வரும்"

http://www.youtube.com/watch?v=DVe_zAEQYQc

அந்த நம்பிக்கையில் காத்திருக்கும் ஏதிலி தமிழனில் நானும் ஒருவன்

வாங்கோ நெடுக்காலபோவான் கனநாளா காணேல என பாத்தான் ஆனால் இந்தத்தலைப்பு உங்களுக்கு மணந்திருக்கும் அதுதான் மேப்பம் பிடிச்சு ஏதோ போல வந்திட்டியள்.

பொறுங்கள் 4 வருடங்கள் பொறுத்தனீர்கள் இன்னும் ஒரு மாதம் பொறுக்க மாட்டீர்களா?

ஜெனிவா 1, ஜெனிவா 2, நவம்பர் 27 இனி பெப்பிரவரி 22 டோ?

இப்படித்தான் நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி 25 வருடம் பல்லாயிரம் மக்களோடு உருண்டோடி விட்டது!

இனியுமா பொறுப்பது இன்றில்லாவிட்டால் எமக்கு என்றுமே வேண்டாம்! எட்டாத அந்த அது!

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான திகதிகள் எப்போதும் வந்துகொண்டுதானிருக்கும். போராட்டம் இத்தனை காலத்துக்குள் முடிவடையவேண்டுமென்று யாராவது காலக்கெடு வைத்துவிட்டா ஆரம்பித்தார்கள்?

சிங்கள அரசின் கணக்குப்படி இந்த ஆண்டுக்குள் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்படும். அதன்பின்னர் அழிவுகள் வராது. எனவே 2008 வரை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சியுங்கள் (தமிழீழத்தை விட்டு வெளியே இருந்தால் இந்தப் பிரச்சினையும் இருக்காது)

சிங்கள நாளேடுகளின் தலைப்பு அம்பாரை புலிகளின் தளம் அதிரடிப்படையினர் வசம் என்று. தோல்விகளை எண்ணித் துவளவேண்டியதில்லை. மனம் தளராமல் பொறுமையுடன் காத்திருப்போம் வெற்றிச் செய்தி வரும் வரை.

ஈழத்திலிருந்து

ஜானா

செய்தி உண்மையாக இருக்கலாம் அதிரடிப்படை என்பதே கரந்தடி தாகுதல்காறர்கள் என்பதனால்த்தான்... அவர்களின் நடவடிக்கைகள் முடிவுக்கு வருபவை.. ஒரு தாக்குதல் நடத்திய பின்னர் தளம் திரும்பும்போது அது முடிவுக்கு வரும்... பெரியஇனங்காணப்பட்ட இலக்குகளை தாகுவதும் வேவு போராளிகளை இனங்கண்டு தாக்குவதும்தான் அதிரடிப்படையின் முக்கிய நோக்கம்... அதாவது ஊடுருவல்களை தடுக்கவும், அச்சுறுத்தவும், பலவீனப்படுத்தவும்தான் இந்த நடவடிக்கை...

இதுக்கு பாதுகாப்பையும் இளப்புகளையும் குறைக்கும் தந்திரத்தில் அருமையான தேர்ச்சி உள்ளவர்கள் புலிகள்.. இதை விளக்கமாக சொல்லும் துணிவு எனக்கு இல்லை..!

பல்வலி வந்தால் உடல்நலம் கெடும் என்னும் நோக்கிலான தாக்குதல்கள் இவை.. அதாவது புலிகளின் தாக்குத்கலை தொடுக்க தூண்டுவதும்... அதை கிழக்கில் நடத்த தூண்டுவதும்தான் இந்த இராணூவ நிகழ்ச்சி நிரலின் நோக்கம் என்பது தெளிவான ஒரு செய்தி.. புலிகள் வடக்கில் ஒருங்கிணக்கிறார்கள் என அரச படைகள் நினைக்கும் பலத்தை கிழக்குக்கும் திருப்ப வேண்டிய அவசியத்தை கொடுப்பதுதான், இந்த தாக்குதல்களின் நோக்கமும் கிழக்கை பிடித்து விடுவோம் எனும் பிரச்சாரப்படுத்தலின் நோக்கமும் ஆகும்... இதனால் இங்குள்ள சிலரை போல மக்களை குழப்ப முடியும். அதோடு புலிகளுக்கு நெருக்குதலை கொடுக்க வைக்கவும் ஒரு கௌரவ பிரச்சினையையும் ஏற்படுத்தும் நோக்கம்தான் இவை....!

கவலை வேண்டான் விடிவு விரைவில் வரும்..! வரவேணும்..! அடக்கப்படும் எல்லா இனமும் ஒருநாள் சொந்த பாச்சாபாதங்களை விட்டு கிழர்ந்து எழும்...! எழுவார்கள்.. !

ஈழவன் அருமையான பாடல்கள் இணைப்பிற்கு நன்றி

ஜானா

முக்கியமான திகதிகள் எப்போதும் வந்துகொண்டுதானிருக்கும். போராட்டம் இத்தனை காலத்துக்குள் முடிவடையவேண்டுமென்று யாராவது காலக்கெடு வைத்துவிட்டா ஆரம்பித்தார்கள்?

சிங்கள அரசின் கணக்குப்படி இந்த ஆண்டுக்குள் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்படும். அதன்பின்னர் அழிவுகள் வராது. எனவே 2008 வரை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சியுங்கள் (தமிழீழத்தை விட்டு வெளியே இருந்தால் இந்தப் பிரச்சினையும் இருக்காது)

கிருபனை போலவே எல்லாத்தமிழரும் புத்திசாலிகளாகவும், வெற்றிபெறுபவர்களாகவும் நடந்து கொண்டு ஈழத்தில் நின்று உயிரை விடாமல் புலத்தில் சென்று கொடிபிடிக்க அனைவருக்கும் இந்தத் தைத்திருநாளில் எனது அன்பான வாழ்த்துக்கள்.

Edited by saanakiyan

காரணம் இருக்கும்..........

சரத் பொன்ஸேக்காவே கடந்த மாதங்களில் ஒத்துக்கொண்டார், கடந்த 5 வருடங்களில் LTTEயின் ஆர்ட்டிலாரிகள் 10 இல் இருந்து 100 மேல் போய் விட்டதாக....... அத்துடன் ஒரு மனித பிரயோக அயுதங்களின் கொள்வனவும் கடந்த 5 வருடங்களில் அதிகரித்து காணப்பட்டது....

காரணம் இருக்கும்..........

Edited by Panangkai

அவர் அப்படி சொல்வதுக்கு காரணம் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் ஆயுதங்களை கொண்டு வந்து குவித்துள்ளார்கள் என்பதை நிறுவுவதற்காகவும் அதன் காரணத்தால்த்தான் யுத்த நிறுத்த காலத்திலும் பழயபடி புலிகளை பலவீனப்படுத்த தாக்குதலை தொடுப்பதை காட்டுவதுக்காக மட்டுமே...! அதாவது தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுமே....!

அதையும் தாண்டி உண்மை ஒண்று வெளிவரவில்லை... காரணம் விமானங்களை எப்படி புலிகள் சமாதானத்துக்கு முன்னரே வைத்திருந்தனரோ அப்படி எல்லா ஆயுதங்களையும் வைத்து இருக்கிறார்கள்... அதுவும் 5 வருடங்களுக்கு முன்னரே...!

என்னைப் பொறுத்த மட்டில் புலிகள் இப்போது தங்களின் பலத்தை சிதைக்க கூடாது

யுத்தமே அழிவுகளை கொண்டு வரும் தான் ஆனா புலிகள் இருக்கும் வரை தான் தீர்வு பற்றி இலங்கையில் பேச்சு இருக்கும்......

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனை போலவே எல்லாத்தமிழரும் புத்திசாலிகளாகவும், வெற்றிபெறுபவர்களாகவும் நடந்து கொண்டு ஈழத்தில் நின்று உயிரை விடாமல் புலத்தில் சென்று கொடிபிடிக்க அனைவருக்கும் இந்தத் தைத்திருநாளில் எனது அன்பான வாழ்த்துக்கள்.

சிங்கத்தின் குகைக்குள் கிடைக்கும் எலும்புக்கு ஏங்கி உயிர்வாழ்வதை விட புலத்தில் இருப்பதில் ஒன்றும் தவறில்லை.

நடப்பவைகள் எல்லாம் நல்லதற்கே என்றேண்ணிக் கொண்டு களத்திலோ புலத்திலோ சிங்களவனின் குகையிலோ எங்கிருந்தாலும் நாமனைவரும் தமிழர் என்ற எண்ணம் கொண்டு எமது விடுதலையை நோக்கிய பயணத்திற்கு எமது தார்மீக ஆதரவை வழங்கி அடுத்த பொங்கலை நாம் எமது ஈழமண்ணில் பொங்கிக் கழிப்போம் என்ற சபதமெடுத்து அதற்கான வழிகளைப் பார்ப்போம். எம்மையே நாம் தூற்றித்திரிவதால் நாமே மோதிக் கொள்வதனால் எதிரியின் பலம் தான் அதிகரிக்கும். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

இத் தைபிறந்தது எமக்கு வழி பிறக்கவே என்றெண்ணிக் கொள்வோமாக.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லியாச்சே கிழக்கு சித்திரை சிங்கள வருசத்துக்கு சிங்கள மக்களிடம் பரிசளிக்கப்படும் என்று. தமிழர் தரப்பு இராஜதந்திரமா சிந்திச்சிட்டு இருக்குது. எப்படி அந்தப் பரிசை சிங்களவரட்ட இருந்து தட்டிப்பறிக்கிறது என்று. பொறுங்கோ.. விசுவாசத்தைப் பொறுமையிலதான் காட்ட வேண்டும் என்று யாழ் கள அரசியல் விற்பன்னர்கள் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள்..! :):lol:

புலிகள் செய்வது எப்படி என்று இருக்கட்டும். நீர் என்ன தாயகத்துக்கு செய்கின்றீர் என்று சொல்லுமன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சமரும் செய்யும்போது மற்றய நாடுகளின் அழுத்ததை இல்லாத வரை முயற்சித்த பின்னர் தான் செய்ய வேண்டும். போர் தொடங்கு தொடங்கு என்று கதைப்பவர்கள் கதைத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் அதன் போது ஏற்படும் விளைவுகளுக்கு தோள் கொடுப்பார்களா என்றால் அது நடக்காது.

யாழ்பாணத்தைக் கைப்பற்ற பலம் இருந்தபோதும், ஒரு தடவை வெளிநாட்டு அழுத்தம் குறுக்கிட்டதை மறுக்க முடியாது. ஆனால் எனி வரும் காலத்தில் அவ்வாறு நடக்க கூடாது என்றால் தமிழர் போராட்டத்தை, அது வேறு வழியில்லாமல் வந்தது என்பதைக் காட்ட நிச்சயம் பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை எம் இரத்த உறவுகள் யாரை வேண்டுமானாலும் விலை கொடுக்கலாம். ஏன்.... என் சகோதரி குடும்பம் கூட யாழில் இருக்கின்றது.

ஆனால் இதுவே இறுதிப் போராட்டமாக, இருக்க வேண்டும். இருக்கும். எம் தலைமுறையோடு துன்பங்கள் போகட்டும்.

from an srilankan paper......(daily mirror)

The STF captured a LTTE`s women`s wing camp - Nalini Base - in Kanchikudichchiaru during its `Niyatai Jaya` military operation, bringing the total number of Tiger camps captured by the force to twelve, the military said.

`There was evidence that Nalini Base was a training and a detention camp. It has also been used as a factory turning out weapons and ammunition,` a senior military official said.

The elite force also captured another camp in the same area on Monday night, he said.

LTTE camps such as Stanley, Paramananda, Bagayadhi, Janak, Jeevan, Diana, Shashi, Eleththiyan, Eleivan, Aridevan, Madurakavi and Raam were captured by the STF during its offensive launched on January 4.

He said LTTE women cadres had been housed at the Diana camp under Tiger leader `Swarna.` At the Eleivan camp the LTTE had gathered and maintained documents of intelligence value such as maps.

நாங்கள் மோட்டுத்தனமாக சிந்திக்கவோ எழுதவோ கூடாது.எவருக்கும் தெரியும் கிழக்கில் விடுதலைப்புலிகள் பெரிய விலையைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறார்

Edited by BLUE BIRD

வாவ் சோழன் என்ன அப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்புட்டீர்?

நாங்கள் தான் உண்மையில் இஸ்ரோல் மாதிரியாம். அப்பிடி எண்டா சிறீலங்கா கிட்டத்தட்ட பலஸ்தீனம் மாதிரித்தானே.

அம்பாறையில் சிங்களவன் இன்ர்ரபாடா நடத்திறான்.

எனவே யுத்தத்தை கைவிடுங்கள் இல்லை யுத்தம் உங்களை அழித்துவிடும் என்று ஆய்வு செய்யிறம் அதையும் உண்மையில் இஸ்ரேல் மாதிரி இருக்கிறவை என்று நினைக்கிற வான்கோழி பலஸ்தீனம் என்று நினைக்கிறவைக்கு கிபுருவில சொல்லுதாம்.

சாணக்கியருக்கும் குறுக்கருக்கும் உள்ள ஒரே ஆதங்கம் புலிகள் தோற்க வேண்டும் என்பதே.

கொஞ்சம் பொறுங்கள். உங்கள் மகிந்தர் நாள் குறித்துவிட்டார், புதுவருடத்திற்குள் கிழக்கை புலிகளிடமிருந்து மீட்பதற்கு.

அதுவரை கொஞ்சம் அமைதியாக இருக்கலாமே.

வாவ் சோழன் என்ன அப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்புட்டீர்?

நாங்கள் தான் உண்மையில் இஸ்ரோல் மாதிரியாம். அப்பிடி எண்டா சிறீலங்கா கிட்டத்தட்ட பலஸ்தீனம் மாதிரித்தானே.

அம்பாறையில் சிங்களவன் இன்ர்ரபாடா நடத்திறான்.

எனவே யுத்தத்தை கைவிடுங்கள் இல்லை யுத்தம் உங்களை அழித்துவிடும் என்று ஆய்வு செய்யிறம் அதையும் உண்மையில் இஸ்ரேல் மாதிரி இருக்கிறவை என்று நினைக்கிற வான்கோழி பலஸ்தீனம் என்று நினைக்கிறவைக்கு கிபுருவில சொல்லுதாம்.

ஒருவரை கிண்டல் செய்வதுக்கும் வரை முறை இருக்கலாம்... சீனப்பழ மொழி ஒண்று சொல்கின்றது என்ன வெண்றால் ஒருவர் கேள்விகளை கொன்டு அவரை எடை போடு எண்று...

இப்போ குறுக்ஸ் கேட்க்கும் கேள்விகள் என்ன எண்றால் ( பதிலையும் அவரே சொல்லிவிடுகிறார்) தமிழீழத்தான் போராடி சுதந்திரத்தை வெண்ற இஸ்றேலாக முடியுமா..?? முடியாதாம் காரணம் பக்கதில் இருக்கும் சிங்களம் பலஸ்தீனம் இல்லையாம். சிரியாவாக கூட இருக்காது போல , இல்லை ஈரான்... ??? ( அது அமெரிக்கா எண்டுறார் போல இருக்கு)

ஒரு விசயத்தை தெளிவாய் சொல்லலாம்... பலம், பலவீனங்களை கடந்து ஊடகங்களால் சொல்லப்படும் தமிழீழ உருவாக்கலையும் அதன் சாத்தியப்பட்டையும் எவர் சொன்னாலும் அதை மறுப்பதையும் இதைவிட இன்னும் ஒண்றுதான் முக்கியம் என்பதையும் சொல்லிக்கொள்கிறார்... எங்களுக்கு எல்லாமே முக்கியம்..!

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை மீறிக் கற்பனை உலகில் வாழ்ந்தால் நடக்கும் விடயங்களை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது. ஐந்து வருட யுத்தநிறுத்தத்தின் மூலம் அபார வளர்ச்சியடந்துவிட்டோம் என்று எங்களை நாங்களே மெச்சிக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. வளர்ச்சியடைந்திருக்கலாம், எனினும் சிங்களப்படைகளை அடித்துவிரட்டவும், உலக/பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்களிலிருந்து மீளவும் இவ்வளர்ச்சி போதாமல்தான் உள்ளது. எனினும் இருக்கும் பலத்தை தேவையின்றி வீணடிப்பதை விட நாளைய தேவைகளுக்குப் பயன்படுத்துவது மேலாகும். அத்துடன் இன்னமும் வளர்வதற்கு உதவவேண்டும்.. இவை புரிந்து தமிழர்கள் (புலத்திலும் தாயகத்திலும் வாழ்பவர்கள்) செயலாற்றும்வரை சிங்கள தேசத்திற்கும், தமிழர் தேசத்திற்கும் உள்ள இடைவெளி அதிகமாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பொறுங்கள் 4 வருடங்கள் பொறுத்தனீர்கள் இன்னும் ஒரு மாதம் பொறுக்க மாட்டீர்களா? It's my 30th birtday on 07 Feb. is that the reason u guys waiting for? I dont want any patient man go ahead,.,.,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.