Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி

Featured Replies

வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 15:55 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திய போது பதிலுக்கு விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குலின் போதே நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னதாக, விடுதலைப் புலிகள் முற்பகல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=30489

  • கருத்துக்கள உறவுகள்

27 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குப் போயிட்டுதுகள். இந்த மக்களேன் இன்னும் அடைபட்டிருந்து சாகினம். மக்களைப் பாதுகாக்க முடியல்ல என்றால் அவர்கள் பாதுகாப்பு என்று கருதிற இடத்துக்குப் போக விடுறதுதான் ஐநா விதிப்பு. யார் அதை மதிக்கினம். உயிர்களையே மதிக்கினம் இல்ல பேப்பரில உள்ள வரிகளை மதிக்கப் போயினமே..??! தாயகத் தமிழனுக்கு குருதி பொங்குறதுதான் பொங்கல் என்றாச்சுது..!

இப்ப அவனை அடிச்சாச்சு அவன் திருப்பி அடிக்க இவை பதிலுக்கு ஓலமிட வேண்டியதுதான். மனித அழிவுகள் சாதாரணமாப் போச்சுது. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உமக்கு அடிச்சாலும் பிழை, அடிக்காவிட்டாலும் பிழை.இங்க நிண்டு Command பண்ணாமல் வன்னிக்கோ இல்லாட்டி வாகரைக்கோ போய் தளபதிகளக்கு command பண்ணும், உம்முடைய ஐ.நா விதி முறைகளையும் எடுத்து கொண்டு போய்.

அடிச்சா ஒரு முடிவோட அடியுங்கோ. இந்தச் சொறியல்கள் மக்களுக்குத்தான் ஆபத்து. அடிச்சா அவன் பீரங்கிகளை நகர்த்தி ஓடிற மாதிரிக்கு அடிக்க வேணும். இல்ல மக்களைப் பாதிக்காத வகையில அடிக்க வேணும். சொறிஞ்சு போட்டு அவன் திருப்பி சனத்தை அடிச்சுக் கொல்ல வசதி செய்திட்டு..பிற ஓலம் போடுறதால மக்களின் இழப்புக்களைத் தடுத்துவிட முடியாது. அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேணும் என்றதில ஐநா தொடங்கி எல்லாருக்கும் அக்கறை இருக்குது. புலிகளுக்கும் அதில பொறுப்பு இருக்குது. :lol:

  • தொடங்கியவர்

உந்த ஐ.நா வுக்கெ ஐ.நா விதி முறைகளை மத்திது நடக்க வக்கில்லை, இல்லை உண்மையாகவே ஐ.நா விதிகளை அப்பட்டமாக மீறுகின்றவர்களையும் தட்டி கேட்க வக்கில்லை. இதில் நீர் அதை தூக்கி பிடித்து கொண்டு புலிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க புறப்பட்டு விட்டீறோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா விதி பாதுகாக்கப்பட்டுதோ இல்லையோ என்று ஆராய்ச்சி அவசியமில்ல. உள்ள விதிகளை அமுல்படுத்துவதால எமது அப்பாவி மக்களின் இழப்புக்களைத் தவிர்க்கலாம் என்பது அது மக்களிடத்தில் போராட்டம் பற்றியும் புலிகள் பற்றியும் ஒரு நம்பகத்தன்மையை வளர்க்கும் என்பதுமே முக்கியமாக நோக்கப்பட வேண்டும். புலிகள் தங்கட வேலையைப் பார்க்கினம் நாங்கள் அழிகிறம் என்று மக்கள் எண்ணும் நிலை புலிகளுக்கு ஆபத்து. அரசுக்கு வெற்றி..!

அரசு இரண்டு வகைப் போர் புரிகிறது. ஒன்று ஆயுதப் போர். மற்றொன்று உளவியல் போர். எம்மவர்கள் ஆயுதப் போருக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கு ஈடாக உளவியல் போருக்குக் கொடுப்பதில்லை. கருணாவாலும் குழுக்களை இயக்க முடிகிறது டக்கிளசாலும் முடிகிறது என்றால் அது அரசின் உளவியல் போர் வெற்றியின் வெளிப்பாடே. என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

டென்சில் கெப்பேகடுவ சொன்னது இதுதான் யாழ் மக்களை போரில் இலகுவாக வெல்லலாம் ஆனால் உளவியல் ரீதியில் வெல்வது மிகக் கடினமானது என்று..! புலிகள் அதை இலகுவாக்காமல் பார்த்துக் கொள்வதில் மக்களின் அநியாய இழப்புக்களை தவிர்ப்பதும் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு வடக்குக்கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியதும் கட்டாயம். :lol:

யாழில் ஒருவர் சுட்டுக்கொலை- இருவரின் சடலங்கள் மீட்பு

[ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 17:04 ஈழம்][க.திருக்குமார்]

யாழ். இணுவில் பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை 46 அகவையுடைய மேலும் ஒருவர் கோண்டாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

லிங்கம் றஜனிக்காந்த் (வயது 28) என்பவர் கோண்டாவில் அரசினர் மருத்துவமனைக்கு முன்பாக பின்தொடர்ந்து வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கந்தசாமி தயாபரன் (வயது 38) என்பவரது நிர்வாணமான உடல் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையான இரவு 9.00 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இணுவில் தொடரூந்து கடவைக்கு அண்மையாக மற்றுமொரு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இவரது சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என யாழ். போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே இடத்தில் கடந்த மாதம் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலமும் போடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தலையங்கத்தில் "ஒருவர் சுட்டுக்கொலை- இருவரின் சடலங்கள் மீட்பு" என்றும் ஆனால் செய்தியில் சுடப்பட்ட ஒருவருடன் சேர்த்து 7 சடலங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

3 மரணங்களை முக்கியமானதாக குறிப்பிட்டுள்ள புதினம் மிகுதியானவற்றை இருட்டடிப்பு செய்துள்ளது.

அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனரா?

இவ்வாறு நாளும் நடக்கும் கொலைகளுக்கு ஏன் புலிகள் அறிக்கை விடுவதில்லை?

சிங்கள மக்கள் கொல்லப்பட்டதும் முந்திக் கொண்டு மறுப்பறிக்கை விடுவதற்கு இருக்கும் அரசியல் துறை எங்கள் மக்கள் கொல்லப்படும் போது மட்டும் மொத்தமாகக் கூட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வேண்டாவெறுப்பாக கூட்டறிக்கை சமர்ப்பிக்கிறது?

மக்கள் கொல்லப்பட்டால் கேட்க நாதியில்லை என்பதனாலா?

மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தாங்கி நிற்கும் புலம் பெயர்ந்த (மக்களான )பொருளாதார தூண்களே, எங்களுக்காக கேள்வி கேளுங்கள்!

காசு கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவித்தவரிடம், அதே உரிமையுடன் இந்தக் கேள்விகளையும் கேளுங்கள்!

1) உயிர் கொடுத்த எங்களுக்காக ஒரு கண்டன அறிக்கை விடாத அளவிற்கு நாம் மலிந்து போய் விட்டோமா?

2) மரபுவழியாக பரிணாமமடைந்து விட்டதாக கூறிக் கொள்பவர்கள், எதிரியின் முற்றுகைக்குள் சிக்கித்திணறும் எங்களுக்குள் மறைந்து நின்று குரங்குத் (கொரில்லாத்) தாக்குதல் நடத்தும் உன்னத நோக்கம் தான் என்னவோ?

3) பின்னர் பதட்டமடைந்த எதிரி பழிதீர்த்துக் கொள்ளும் போது, அந்த அவலத்தை "குழந்தைக்கு பனடோல் வாங்கச் சென்றவர் சுட்டுக்கொலை" என்று தமிழில் செய்தி ஆக்குவதன் மூலம் அடையும் லாபம் தான் என்ன?

மக்களே (புலம்பெயர்)! மக்களுக்காக கேள்வி கேளுங்கள்!

தயவு செய்து "நல்லதே நடக்கும்", "நாளைக்கு விடியும்" போன்ற பசப்பு வார்த்தைகளை மட்டும் எங்களுக்காக காவிவராதீர்.

Edited by saanakiyan

Sanakkia,

Thalaivar asked every body's during the Maveerar Speech, Now our Thalaimai needs only support not opposing comments or questions.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தலாமே. சும்மா யாழ் களத்தில் முகமூடிகளுக்குள் மறைந்திருந்து தோன்றுவதை எல்லாம் எழுதிவிட்டால் போதாது. செயலில் காட்ட வேண்டுமென்றால் முதலில் துணிவு வேண்டும்..

பொதுமக்கள் அரசபடைகளாலும் அதன் அடிவருடிகளாலும் கொல்லப்படுகின்றனர்; கடத்தப்பட்டுக் காணாமல்போகின்றனர். அடிவருடிகளும், காட்டிக்கொடுப்போரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நடக்கும் நிகழ்வுகள் பிடிக்கவில்லையானால் சுதந்திரமாக அதைவெளிப்படுத்த கொழும்பில் அல்லது புலத்துநாடுகளில் முடியாதா என்ன? மக்களைக் கூட்டிக் கேள்விகளைக் கேட்கச் செய்யலாமே அல்லது கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கலாமே.

இதெல்லாம் செய்ய மாட்டீர்கள்.. ஆனால் அனாமேதயமாக இருந்துகொண்டு கூச்சல்போடுவீர்கள். அதற்கப்பால் உங்கள் சொந்தவேலைகளைப் பார்க்கப் போய்விடுவீர்கள். பலருக்குத் தாயகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வெறும் செய்திகள் அல்லது பகுதிநேரப் பொழுதுபோக்குகள். அதற்குமேல் ஒன்றுமில்லை.

வாகரையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் தாக்குதல் .

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கதிரவெளி, மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான் படையினரின் கிபீர் விமானங்கள் இன்று ஆறு தடவைகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாகரை, கதிரவெளி வான்பரப்பில் சிறிலங்கா வான் படையினரின் வேவு விமானம் வட்டமிட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை கதிரவெளி மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து கிபீர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் கதிரவெளி மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக சேதடைந்துள்ளன. கிபீர் விமானங்களின் தாக்குதலால் மக்கள் அச்சமடைந்து அல்லலுற்றனர். தொடர்ந்து வேவு விமானம் வானில் பறப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து "நல்லதே நடக்கும்", "நாளைக்கு விடியும்" போன்ற பசப்பு வார்த்தைகளை மட்டும் எங்களுக்காக காவிவராதீர்.

யார் காவி வருபவர்கள்? அவர்களின் பின் தளம் என்ன? அவர்கள் புலிகளா? புலிகளின் முகவர்களா? அல்லது தாய் நாட்டின் விடுதலையை ஆதரிக்கும் சாதாரண தமிழ் மக்களா?

யார் நீங்கள்? உங்களின் பின் தளம் என்ன? போராட்டத்தில் உங்கள் பங்களிப்பென்ன? பார்வையாளாராக இருந்துகொண்டு எப்போது சண்டை முடியும், சமாதானம் வரும் என்று பத்திரிகைகளையும் இணையத்தையும் பார்த்துக்கொண்டு பொழுதுபோக்குபவரா? கொல்லப்படும் மக்களையும், பட்டினியால் வாடும், வாழ அவதிப்படும் மக்களையும் பார்த்து பச்சாதாபப்படுவதோடு நின்றுவிடுபவரா? அவலங்களை சுமந்துவரும் செய்திகளைப் பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விட்டுக் கடைமை முடிந்ததென்று இருப்பவரா?

மக்கள் கொல்லப்பட்டால் கேட்க நாதியில்லை என்பதனாலா?

மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தாங்கி நிற்கும் புலம் பெயர்ந்த (மக்களான )பொருளாதார தூண்களே, எங்களுக்காக கேள்வி கேளுங்கள்!

காசு கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவித்தவரிடம், அதே உரிமையுடன் இந்தக் கேள்விகளையும் கேளுங்கள்!

1) உயிர் கொடுத்த எங்களுக்காக ஒரு கண்டன அறிக்கை விடாத அளவிற்கு நாம் மலிந்து போய் விட்டோமா?

பேச்சுக்கு முக்கியத்துவம் இல்லை செயலுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் எண்று அர்த்தம்....! ஊரில நடப்பவைகளை வெறும் செய்திகளில் மட்டும் படித்தால் இப்பிடித்தான்... வன்னியில் என்ன நடக்குது என்பது இன்னும் புரிபடமலே காலத்தை களிக்கிறீர்கள் என்பது தெளிவாய் தெரியுது...

00942122588597 இலக்கத்தில் ஒட்டு சுட்டானில் இருக்கும் தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை பார்க்கும் பொதுமகனிடம் நிலபரங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்...! அதுதான் கருத்தாட வளமான வசதியை குடுக்கும்... இது ஆலோசனை இல்லை வேண்டுகோள்..

2) மரபுவழியாக பரிணாமமடைந்து விட்டதாக கூறிக் கொள்பவர்கள், எதிரியின் முற்றுகைக்குள் சிக்கித்திணறும் எங்களுக்குள் மறைந்து நின்று குரங்குத் (கொரில்லாத்) தாக்குதல் நடத்தும் உன்னத நோக்கம் தான் என்னவோ?

இதையே மக்களுக்குள் இருந்து தாக்குகிறார்கள் எண்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் எண்று அறிய ஆவல்.. !

பதுங்கிதாக்குதல் என்பது எல்லா மரபு வளி இராணுவமும் செய்யும் தாக்குதல்தான் அந்த தாக்குதல்கள் என்ன நோக்கத்துக்கானதை என்பதை பொறுத்தது... இந்த தாகுதல்களை அமெரிக்க இராணுவமும் செய்கிறது இதில் அவர்கள் அல்லது வேற யாரவது விதிவிலக்கானவர்கள் என்பது தெளிவாக்க உங்களால் முடியுமா..??

Edited by Thala

உமக்கு அடிச்சாலும் பிழை, அடிக்காவிட்டாலும் பிழை.இங்க நிண்டு Command பண்ணாமல் வன்னிக்கோ இல்லாட்டி வாகரைக்கோ போய் தளபதிகளக்கு command பண்ணும், உம்முடைய ஐ.நா விதி முறைகளையும் எடுத்து கொண்டு போய்.

போராட்டம் ஏன் நடக்குது அதுக்கு காரணம் யார்.? இப்போ என்ன நடக்கிறது அதன் அடித்தளம் என்ன.? அதுக்காய் என்ன செய்யலாம்.? என்னும் அடிப்படை அறிவில்லாத சனம்..! இவைக்கு விளங்கப்படுத்தி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தில் "ஒருவர் சுட்டுக்கொலை- இருவரின் சடலங்கள் மீட்பு" என்றும் ஆனால் செய்தியில் சுடப்பட்ட ஒருவருடன் சேர்த்து 7 சடலங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

3 மரணங்களை முக்கியமானதாக குறிப்பிட்டுள்ள புதினம் மிகுதியானவற்றை இருட்டடிப்பு செய்துள்ளது.

அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனரா?

இவ்வாறு நாளும் நடக்கும் கொலைகளுக்கு ஏன் புலிகள் அறிக்கை விடுவதில்லை?

சிங்கள மக்கள் கொல்லப்பட்டதும் முந்திக் கொண்டு மறுப்பறிக்கை விடுவதற்கு இருக்கும் அரசியல் துறை எங்கள் மக்கள் கொல்லப்படும் போது மட்டும் மொத்தமாகக் கூட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வேண்டாவெறுப்பாக கூட்டறிக்கை சமர்ப்பிக்கிறது?

மக்கள் கொல்லப்பட்டால் கேட்க நாதியில்லை என்பதனாலா?

மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தாங்கி நிற்கும் புலம் பெயர்ந்த (மக்களான )பொருளாதார தூண்களே, எங்களுக்காக கேள்வி கேளுங்கள்!

காசு கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவித்தவரிடம், அதே உரிமையுடன் இந்தக் கேள்விகளையும் கேளுங்கள்!

1) உயிர் கொடுத்த எங்களுக்காக ஒரு கண்டன அறிக்கை விடாத அளவிற்கு நாம் மலிந்து போய் விட்டோமா?

2) மரபுவழியாக பரிணாமமடைந்து விட்டதாக கூறிக் கொள்பவர்கள், எதிரியின் முற்றுகைக்குள் சிக்கித்திணறும் எங்களுக்குள் மறைந்து நின்று குரங்குத் (கொரில்லாத்) தாக்குதல் நடத்தும் உன்னத நோக்கம் தான் என்னவோ?

3) பின்னர் பதட்டமடைந்த எதிரி பழிதீர்த்துக் கொள்ளும் போது, அந்த அவலத்தை "குழந்தைக்கு பனடோல் வாங்கச் சென்றவர் சுட்டுக்கொலை" என்று தமிழில் செய்தி ஆக்குவதன் மூலம் அடையும் லாபம் தான் என்ன?

மக்களே (புலம்பெயர்)! மக்களுக்காக கேள்வி கேளுங்கள்!

தயவு செய்து "நல்லதே நடக்கும்", "நாளைக்கு விடியும்" போன்ற பசப்பு வார்த்தைகளை மட்டும் எங்களுக்காக காவிவராதீர்.

இதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? ஏதாவது வலைதளத்தில் இருந்து பெற்றிருக்கும் இந்த தகவல்

எந்தளவில் உண்மை என்று தெரியவில்லை. இது மக்களை குழப்பும் கைங்கரியம் என நினைக்கின்றேன்.

வாகரையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் தாக்குதல் .

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கதிரவெளி, மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான் படையினரின் கிபீர் விமானங்கள் இன்று ஆறு தடவைகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாகரை, கதிரவெளி வான்பரப்பில் சிறிலங்கா வான் படையினரின் வேவு விமானம் வட்டமிட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை கதிரவெளி மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து கிபீர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் கதிரவெளி மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக சேதடைந்துள்ளன. கிபீர் விமானங்களின் தாக்குதலால் மக்கள் அச்சமடைந்து அல்லலுற்றனர். தொடர்ந்து வேவு விமானம் வானில் பறப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதோ சுடச்சுட பதில் தந்துவிட்டான் எதிரி!

எத்தனை பேர் கொல்லப்பட்டனரோ? கடவுளே அப்படி ஒன்றும் நடந்திருக்கக் கூடாது!

இப்படி மக்கள் கொல்லப்படும் செய்திகள் நாளாந்தம் வருகிறதே, ஏன் மேலே பதில் தந்த ஒருவர் கூட அதை கண்டித்து ஒருவார்த்தை அதில் எழுதுவதில்லை? உடனேயே "அரசை கண்டித்து பலனில்லை" என்று பொருள்பட பலர் கருத்துரைப்பர் இங்கே. சரி அப்படியானால் புலிகளால் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்படையும் சம்பவங்களையாவது தடுத்து நிறுத்த உதவுங்கள் என்று கேட்டதும்.

1) நீ யார்?

2) ஏன் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றாய்?

3) போராட்டத்திற்காக, மக்களுக்காக என்ன செய்தாய்?

என்ற கேள்விகளை அடுக்குகின்றனரே? ஏன் நான் நீங்கள் கேட்ட எவற்றையும் செய்யாத ஒருவனாக ஆனால் ஒரு தமிழனாக இருப்பது போதுமான தகுதியில்லையா? கேள்வி கேட்டது உங்களையோ உங்கள் நோக்கங்களையோ கொச்சை படுத்துவதற்காகவல்ல. விடை தெரியாவிட்டால் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். உடனேயே தயவுசெய்து அவசரப்பட்டு உங்களுக்கு தெரிந்த

1) அரசியல்,

2) இராணுவ,

3) வரலாற்று

விளக்கங்கள் தரவேண்டாம். அவை மக்களுக்கு உதவாது!

மேலும் "முதலில் இலங்கை ராணுவத்திடம் போய் கேளுங்கள்", ஏன் அமெரிக்கா இது போல் செய்யவில்லையா?" என்று சிலர் வேறு இடங்களில் பதிலளிக்கின்றனர். புலிகளும் அவர்களும் ஒன்றா? மக்களை காக்கத்தானே புலிகள் போராடுகின்றனர்?

தவறு செய்யாதவர்கள் உலகில் யார் உள்ளனர்? பல தவறுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நீங்கள் சுட்டிக்காட்டுங்கள்! திருத்திக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறோம்.

போராட்டம் ஏன் நடக்குது அதுக்கு காரணம் யார்.? இப்போ என்ன நடக்கிறது அதன் அடித்தளம் என்ன.? அதுக்காய் என்ன செய்யலாம்.? என்னும் அடிப்படை அறிவில்லாத சனம்..! இவைக்கு விளங்கப்படுத்தி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்...!

அடிப்படை அறிவில்லாததால் தான் அவர்கள் இங்கே அவலப்படுகின்றனர். அடிப்படை அறிவற்ற காரணத்திற்காக அவர்களை மனிதர்களாகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கருதாமல் புறக்கணித்து விடாதீர்கள்! தயவு செய்து அந்த மக்களை காப்பாற்றுங்கள்! அவர்கள் உயிர்களை விணாக்காதீர்கள்....!

எனது கேள்வியை இப்படி இப்படி மாற்றிக்கொள்ளவும்.

"மனிதாபிமானம் உள்ள மக்களே! மக்களுக்காக கேள்வி கேளுங்கள்!"

Edited by saanakiyan

1) அரசியல்,

2) இராணுவ,

3) வரலாற்று

விளக்கங்கள் தரவேண்டாம். அவை மக்களுக்கு உதவாது!

தவறு செய்யாதவர்கள் உலகில் யார் உள்ளனர்? பல தவறுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நீங்கள் சுட்டிக்காட்டுங்கள்! திருத்திக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறோம்.

அடிப்படை அறிவில்லாததால் தான் அவர்கள் இங்கே அவலப்படுகின்றனர். அடிப்படை அறிவற்ற காரணத்திற்காக அவர்களை மனிதர்களாகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கருதாமல் புறக்கணித்து விடாதீர்கள்! தயவு செய்து அந்த மக்களை காப்பாற்றுங்கள்! அவர்கள் உயிர்களை விணாக்காதீர்கள்....!

எனது கேள்வியை இப்படி இப்படி மாற்றிக்கொள்ளவும்.

"மனிதாபிமானம் உள்ள மக்களே! மக்களுக்காக கேள்வி கேளுங்கள்!"

அப்படியானால் நீங்கள் உங்களையே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.. இண்றைய மக்களின் நிலைக்கு முக்கிய காரணகர்த்தா நீங்களும் ஒருவர்... 60 ஆயிரம் பேர் இறந்த போது வாய்மூடி மௌனித்து இண்று புலம்பெயர்ந்து உயிரை கையில பிடிச்சபடி வந்துட்டு, தன் இனத்துக்காய் இண்றைக்கும் சாகும் வீரர்களை கேள்வி கேக்கும் தகுதியை அடைய நீங்கள் வன்னி போக வேணும்... அந்த மக்களோட வாழ்ந்து பாக்க வேணும்... அவர்கள் நல்ல தெளிவோடதான் இருக்கிறார்கள்...

மக்களை காப்பாத்துங்கோ எனும் நீங்கள் அந்த மக்களின் நிலைக்கு காரணமான உங்களின் உறவு உங்களின் குஞ்சியப்பர் எவரையாவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சியில் சீலை தலைப்பை பிடிச்சபடி சிங்களவன் இனப்படுகொலை செய்யேக்கை வீட்டுக்கை இருந்த அப்புமாரை எண்டைக்காவது கேள்வி கேட்டு இருப்பீர்களா..???

இலங்கையை தமிழர்பகுதியை ஆள எண்டு கையெழுத்து போட்டதை எதிர்த்து போராடியவையை, தமிழர் ஆராட்ச்சி மானாடு நடத்தியவர்களை, சிங்களவன் கொலைவெறியாடேக்கை கேள்வி கேக்கமால் ஒரு குடையுக்கை வராமல் பக்கத்து வீட்டுக்காறனுக்கு என்ன நடந்தால் எனக்கு என்ன எண்டு இருந்த உங்கட உறவுகளை, அயலவர்களை கேள்வி கேட்டு இருக்கிறீர்களா..??

இல்லை ஒரு குடையுள் வாருங்கள் எண்றால் பயங்கரவாதம், பாசிசம், பனங்காய், பணியாரம், ஜனநாயகம் எண்டு பினாத்தியபடி மக்களை குழப்பும், புலிகளும் தமிழர்தான் என்பதை மறந்து, அவர்களின் பின் இருக்கும் மக்கள் பலத்தையும் சேர்த்து அளிக்க வேணும் எண்று, எண்றைக்கும் அரசுக்கு மிண்டு குடுக்கும் கூட்டத்தை எண்றாவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா..?? இல்லை எதிர்த்து இருக்கிறீர்களா..?? அங்கு கேள்வி கேக்க வக்கற்றவர் இங்கு மட்டும் உச்சமாய் கத்துவதின் நோக்கம் என்ன..?? உங்களின் இயலமையை காட்டும் தருணமல்ல இது... உங்களின் வளமான பண பலத்தை தமிழீழம் நோக்கி திருப்புங்கள்.. தமிழர் வேண்டியது இடைக்காலத்தில் வந்து போகிற தீர்வு அல்ல.. நிரந்தமாய் வரவேண்டியது... இண்று சாகடிப்பவன் நாளையும் சாகடிக்க மாட்டான் எண்று நீங்கள் மட்டும்தான் நம்புகிறவராக இருக்க முடியும்...

மனிதாபிமானம் பேசும் நீங்கள் நீங்கள் உண்மையான மனிதாபிமானியா என்பதை தெளிவு பட உங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்..( அது எங்களுக்கு வேண்டாம்) குறைந்தது சுனாமியால் பாதிக்க பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் எண்று கேட்டுக்கொள்ளுங்கள்... மக்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் பல இருக்கு அதில் உங்களின் பங்கு என்ன எண்றாவது கேட்டுக்கொள்ளுங்கள்... இல்லை செய்திகளை இணையத்தில் படித்து குமுறும் ஒருவர் மட்டும்தானா என்பதையும் சேர்த்து பாருங்கள்...

மனிதாபிமானம் பேசும் நீங்கள் நீங்கள் உண்மையான மனிதாபிமானியா என்பதை தெளிவு பட உங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்..( அது எங்களுக்கு வேண்டாம்) குறைந்தது சுனாமியால் பாதிக்க பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் எண்று கேட்டுக்கொள்ளுங்கள்...
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்க அத்தியாவசியப் பொருட்கள் சேகரித்தது மட்டுமின்றி அவற்றை நேரடியாகவே கொண்டு சென்று கொடுத்துள்ளேன்.

சரி இப்போது தாருங்கள் உங்கள் பதிலை...

1) உயிர் கொடுத்த எங்களுக்காக ஒரு கண்டன அறிக்கை விடாத அளவிற்கு நாம் மலிந்து போய் விட்டோமா?

2) மரபுவழியாக பரிணாமமடைந்து விட்டதாக கூறிக் கொள்பவர்கள், எதிரியின் முற்றுகைக்குள் சிக்கித்திணறும் எங்களுக்குள் மறைந்து நின்று குரங்குத் (கொரில்லாத்) தாக்குதல் நடத்தும் உன்னத நோக்கம் தான் என்னவோ?

3) பின்னர் பதட்டமடைந்த எதிரி பழிதீர்த்துக் கொள்ளும் போது, அந்த அவலத்தை "குழந்தைக்கு பனடோல் வாங்கச் சென்றவர் சுட்டுக்கொலை" என்று தமிழில் செய்தி ஆக்குவதன் மூலம் அடையும் லாபம் தான் என்ன?

பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்!

மக்களை காப்பாத்துங்கோ எனும் நீங்கள் அந்த மக்களின் நிலைக்கு காரணமான உங்களின் உறவு உங்களின் குஞ்சியப்பர் எவரையாவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சியில் சீலை தலைப்பை பிடிச்சபடி சிங்களவன் இனப்படுகொலை செய்யேக்கை வீட்டுக்கை இருந்த அப்புமாரை எண்டைக்காவது கேள்வி கேட்டு இருப்பீர்களா..???

Edited by saanakiyan

பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்!

உங்களின் அடிப்படை நோக்கம் அருமையாக தெரிகிறது... நீங்கள் பேசுவது மக்களுக்காக அல்ல...! பானையில் இல்லாதவர்கள் எண்று , கேள்விகேக்கதவர்கள் எண்று நீங்கள் சொல்ல வருபவர்களை தரங்குறைக்க வேணும் என்னும் எண்ணத்தில்தான்.. உங்களின் எண்ணத்தில் தவறு கிடையாது. அதுக்கு நாட்டு நடப்புக்களை தரமாக அறிந்து கொள்ள வேணும்... வெறும் செய்திகளை வைத்து அல்லாடி தரம் தாள்ந்து கொள்ளாதீர்...

வன்னியில் மக்கள் சாப்பாட்டுக்கு கஸ்ரப்பட வில்லை.. சவற்காரங்கள், சீனி, கோதுமைமாவை கூட நியாயவிலை கடைகளில் நியாயவிலையில் பெற்று கொள்கிறார்கள். வான் தாக்குதல்களை தவிர வேற அடிப்படை பிரச்சினைகள் அங்கு இல்லவே இல்லை.. யுத்த காரனத்தால் பிறப்பிக்கப்பட்ட அவச நிலை சில சங்கடங்களை தோற்று விக்கிறதாம் என் நண்பர் சொன்னார்.. மக்கள் எல்லாம் சரியான முறையில் ஐதாக காணிகளில் தங்க வைக்க பட்டு இருக்கிறார்கள். சந்தைகள் கடைகள் அத்தியாவசிய பொருட்களுக்காய் கிளிநொச்சி வரவேண்டியதில்லை. அயலில் இருக்கும் சின்ன சின்ன நகர்களில் வாங்களாம் ஆதலாம் மக்கள் கூடும் இடங்கள் விரிவாக்க பட்டு பாதுகாக்க படுகிறது...!

இந்த நிலையில் பல சந்தர்ப்பங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டும் தங்களின் உயிர்கள் பற்றி கவலைப்படாமல், மகன் இயக்கத்துக்கு போய்விடுவான் தொழில் கெட்டு வருமானம் போய்விடும். போனால் திரும்பிவர ஆமிக்காறன் விடமாட்டான் எண்று இருந்த யாழ் மக்களும் தங்களின் உயிர்களுக்கு குடுக்காமல் விட்ட முன்னுரிமையை இப்போ புலிகள் ஏதாவது செய்ய வேணும் எண்று கேள்வி கேக்க நினைக்கும் மனிதாபிமானிகளுக்கு விளங்காது போல இருக்கே...! :)

இந்த நிலையில் பல சந்தர்ப்பங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டும் தங்களின் உயிர்கள் பற்றி கவலைப்படாமல், மகன் இயக்கத்துக்கு போய்விடுவான் தொழில் கெட்டு வருமானம் போய்விடும். போனால் திரும்பிவர ஆமிக்காறன் விடமாட்டான் எண்று இருந்த யாழ் மக்களும் தங்களின் உயிர்களுக்கு குடுக்காமல் விட்ட முன்னுரிமையை இப்போ புலிகள் ஏதாவது செய்ய வேணும் எண்று கேள்வி கேக்க நினைக்கும் மனிதாபிமானிகளுக்கு விளங்காது போல இருக்கே...!

ஆக இது புலிகளால் மக்களுக்கு வழங்கப்படும் தண்டனை!!!

1) பல சந்தர்ப்பங்கள், அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும்

2) தொழில், வருமானம் போய்விடும் என்றும்

3) சொந்த ஊரில், சொந்த வீட்டில் வாழ விரும்பிய மக்களையும்

4) யாழ் திறந்த வெளிச் சிறையில் உள்ள பொங்கு தமிழ் நிகழ்வில் பங்கு பற்றும் போது புகைப்படம் எடுக்கப்பட்டு தற்போது புலனாய்வுத் துறையால் ஒவ்வோரு இரவும் குறிவைத்து வேட்டையாடப்படும் மக்களையும்,

4) மூதூரிலிருந்து சம்பூருக்கும் பின்னர் அங்கிருந்து வாகரைக்கும் இடம்பெயர்ந்து தற்போது உயிரை காத்துக் கொள்ள (மானத்தை அல்ல) இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு காடுகளுக்கூடாகவும் ஆற்றினூடாகவும் உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களையும்.

5) இடம்பெயர முடியாமலுள்ள மக்களையும்

தயவு செய்து மன்னியுங்கள்!

மனிதாபிமானம் உள்ள மக்களே, மக்களை தண்டிக்க வேண்டாம் என்று புலிகளிடம் வேண்டுகோள் விடுங்கள்!

Edited by saanakiyan

ஆக இது புலிகளால் மக்களுக்கு வழங்கப்படும் தண்டனை!!!

1) பல சந்தர்ப்பங்கள், அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும்

2) தொழில், வருமானம் போய்விடும் என்றும்

3) சொந்த ஊரில், சொந்த வீட்டில் வாழ விரும்பிய மக்களையும்

4) மூதூரிலிருந்து சம்பூர் பின்னர் அங்கிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்து தற்போது உயிரை காத்துக் கொள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு காடுளுக்கூடாகவும் ஆற்றினூடாகவும் உடுத்த உடையுடன் இடம்பெயரும் மக்களையும்.

5) இடம்பெயர முடியாமலுள்ள மக்களையும்

தயவு செய்து மன்னியுங்கள்!

மனிதாபிமானம் உள்ள மக்களே, மக்களை தண்டிக்க வேண்டாம் என்று புலிகளிடம் வேண்டுகோள் விடுங்கள்!

இது தகவல் பெற்றுக்கொள்ளும் சிந்தனை வறர்ச்சி...

இண்றைய நிலையில் மூதூர் மக்களும் வாகரை மக்களும் படும் இன்னல்களுக்கு காரணமே யாழ் மீட்ப்பு நடக்கலாம் என நினைக்கும் அரச செயற்பாடுதான் என்பதை விளங்க முடியாத ஆற்றல்... கிழக்கு காக்கப்பட்டால் வடக்கில் அழிக்கப்படும், வடக்கு தாக்கப்பட்டால் கிழக்கில் அழிக்கப்படும் என அறியாத சிற்றறிவு... தாக்குதலுக்கு இலகுவாய் யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிவாக இல்லாது இருந்தால் ஆனையிறவோடு யாழ்ப்பாணமும் விழுந்து இருக்கும் என்னும் ஜதார்த்தம் புரியாத நிலை இருக்கிறது.....

யாழ்ப்பானத்தில் இப்போ புலிகள் மக்களை இளப்புக்கள் இல்லாது மீட்டு எடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியாத அறிவு வறர்ச்சி இருக்கு.. சரியா திட்டமிடலும் வழங்களும் இல்லாமல் மீட்க்க முடியாததையும், புலிகள் தங்களின் எப்போதைய பின்வாங்கல்களையும் மக்கள் பாதிக்க பட கூடாது எண்று நினைத்ததையும் புரிந்து கொள்ள முடியாத சிற்றறிவு..

புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது மேற்கொண்டால் மக்கள் பணயகைதிகளாக்கப்பட்டு சாகடிக்க படுவார் எண்டு பட்ட வர்த்தனமாக எதிரி விடுக்கும் சவாலும் அச்சுறுத்தலும் என்பதை விளங்கிக்கொள்ளாமல் இருந்து கொண்டு எதிரியின் கொள்கைக்கு வால்பிடிக்கும் சிறுமை எண்று எல்லாம் தெளிவாக தெரிகின்றதே...! வாழ்க..

Edited by Thala

நாங்கள் உங்களை போல சிந்திக்க முடியாத பாமர மக்கள்!

வாழ்விற்காக தினமும் சாவினோடு போராடும் ஏழை எழியவர்கள்.

நீங்கள் மேற்கத்தேய ஜனநாயக நாட்டில் ஊரிப்பட்ட உரிமைகளுடன் குளிர்காய்பவர்கள்.

நாயைக் காணது விட்டாலும் காவல்துறை உடனேயே வந்து தேடித்தரும்.

இங்கே நாங்கள் மனிதர்களைக் காணது விட்டாலும் தேடுவதில்லை, ஏனெனில் தேடிப் பயனில்லை. அவர்களாக உடலை வீசிவிட்டுப் போகும் வரை செத்தவீடு செய்ய காத்திருக்கின்றோம்.

தயவுசெய்து உங்கள் பேரறிவுடன் இதயத்தில் இந்த சிற்றறிவு கொண்டவர்களுக்காக கொஞ்சம் இரக்கத்தையும் காட்டி மக்களை காக்க உதவுங்கள்.

இரக்கத்தை எப்படி காட்ட வேண்டும் என்கிறீர்கள்..??

1996 ஆண்டில் இலவசமாக கிளாலிப்படகு சேவை எண்று இண்ருவரை காலில் விளாத குறையாக கேட்டும் இராணுவ பிடிக்குள் தங்களை சிக்க வைத்துக்கொண்டு மற்றவர்களையும் இன்னல்படுத்தும் உறவுகளுக்காய் எத்தினை பேரை சாகச்சொல்கிறீரகள்...???

எதிரி உங்களை வேண்டாம் எண்றுதான் கொல்கிறான்... அவனின் செயல்கள் எப்படி இருக்க போகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்து தான் இருந்தது.. இல்லை என்கிறீர்களா..???

போராட்டத்துக்குள் வாழும் மக்களை நல்ல தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.. அடுத்தது என்ன அதுக்காய் என்ன செய்யவேணும் என்பதில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தெளிவான பார்வையும், அறிவும் இருக்கிறது.. அதை அவர்களுடன் பேசி பார்த்த்ருப்பவர்களுக்கு தெரியும்... (எனக்கும் பல உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள்)... வெளியூரில் இருந்து கொண்டு நீங்கள்தான் ஊரில் உள்ள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க மறுக்கிறீர்கள்... கிடைத்த மானத்தில் குளிர்காயலாம் எண்று பார்க்கிறீர்கள்... இது புலம்பெயர்ந்தவர்களுக்கு உள்ள பலவீனம்..

சாணக்கியன், நெடுக்காலபோவான், இந்தச் சாவுகளைப் பாத்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு, எனக்கு, எமக்கு இருக்கிற வலியை விட அங்க களத்தில இருக்கிற போராளிகளுக்கு எவ்வளவு வலி இருக்கும். கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்க. பொறுமை காக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கு. நாங்க வெல்லணும். வெல்லணும் என்றால் பொறுமை காக்கணும். இதுக்குள்ள நாங்க அவசரப்பட முடியாது. அப்படி அவசரப்படுறது சிங்களத்திற்கு சார்பாகத்தான் போகும்.

வார்த்தைகளை அள்ளி அள்ளி வீசாமா எங்களுக்கும் கடமைகள் இருக்கு. நாங்க என்ன செய்ய வேண்டும் என்று பலர் சொல்லியிருக்கின்றார்கள். நாங்க அதை சரி வரச் செய்திட்டமா என்று ஒருக்கால் பாருங்க. ஒரு வீதம் செய்திருப்பமா? சும்மா வெறுமனே புலிகள் மீது பழிகளை அள்ளி வீசாம எங்களின் கடமையை நாங்க செய்வம். அவர்கள் தங்களின் கடமையை உரிய காலத்தில் செய்வார்கள்.

உங்களிற்கு தமிழினத்தின் விடுதலை மீது அக்கறையிருந்தால் வார்த்தைகளை அள்ளி வீசி சிங்களத்திற்கு துணை நிற்காதீர்கள். உங்களுக்குத் தரப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள்.

தற்போதைய உங்கள் கருத்துக்கள் சிங்களத்தின் நோக்கங்களை வெற்றி பெறச் செய்வதாகவே உள்ளது என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

Edited by Aalavanthan

ஆளவந்தான் இங்கை வந்து விசமத்தனம் பண்ணும் ஒருவரும் விளக்கமில்லாமல் செய்யவில்லை... தலைவர் புலம்பெயர் மக்களுக்கு நண்றி கூறினார் ஆகவே கேள்வி கேழுங்கள் என்பவரும், அவரின் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வர எண்று எகத்தாளம் பேசுபவர்கள் நோக்கம் என்ன எண்று தெரியவில்லையா..??

இங்கு மக்களோ, புலிகளோ எதிரியிடம் இருந்து காத்து கொள்ள கூழை கும்பிடு போட்டு வாழ வேணும் என்பதை ( இப்பிடித்தான் எங்களின் முன்னோர்கள் வாழ்ந்து செத்தார்கள்) எண்ணமாக அகத்தில் வைத்து வியாக்கியானம் செய்வோரிடம் ஒரு தெளிவான பார்வையை ஊட்டவோ இல்லை புரிய வைக்கவோ முடியாது...!

யாழ்களத்தில் புதிய புதிய சனி பிடிச்ச ஜன(நாய்)கவாதிகள் உருவாகி விட்டார்கள்

அந்த நாயாக வாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாம் போராடுவது 15 மில்லியோன் மக்கள் தொகையில் 1.20.000 மேற்ப்பட்ட இரானுவம் துணைஇராணுவக்குழுக்கள் மற்றும் உங்களை போன்ற புலி எதிப்பு ஜனநாயகவாதிகள்.

எமக்குத்தான் தேவை விடுதலை நாம் தான் சரியான பாதையில் தெளிவோடு போக வேண்டும் 4 மில்லியோன் மக்கள் அதில் போராளிகளின் தொகை தெரியாது எந்த ஒரு நாட்டின் பங்களிப்பு இல்லை( தெரிந்தவரை) ஏதிரியானவன் எமது நிலத்தில் காட்டியும் கூட்டியும் நக்கி கொடுக்கும் தமிழரோடு நிக்கிறான் நோக்கம் எம்மை அழிப்பது அது எப்படியாவது என்றாலும்.

ஆனா எமக்கு அப்படி இல்லை எதிரியிடம் இருந்து விடுதலை பெற வேண்டும்

அழிவுகள் வரும் இன்று 10 என்றால் நாளை 50 பேரை இழக்கவேண்டி வரும்

இல்லையேல் சிங்களவனின் குண்டியை கழுவிக்கொண்டு கொழும்பில் இருந்து யாழ்களத்தில் சனிபிடிச்ச ஜனநாயகம் பேசிலாம்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.