Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் என்ன லொள்ளா? சில்பா விசயத்தாலையே இந்தியா-இங்கிலாந்து உறவு சிக்கலில இருக்கு, இதுக்க நம்மட விசயத்தை இப்படி பப்ளிக்கா வெளியே விட்டால் 3ம் உலக போரே வந்துடுமே அதைப்பற்றி எள்ளளவு கூட யோசிச்சீரா?

எப்படிவருமெண்டு நினைக்கிறீரோ? சுவில இருக்கிற அத்துவுக்கு இந்த விசயம் தெரிஞ்சால் ம**ல போய் சுவிஸ் அரசாங்கத்தை ஒரு பிடி பிடிச்சால் என்ன நடக்கும்? சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிற சின்னப்பரே இப்படி செய்துபோட்டாரே நாமள் செய்யாட்டில் நல்லாவா இருக்குமெண்டு போட்டு பிரான்ஸ் மன்மதன் சாஸ்த் ஜக் சரக்கை சீ சிராக்கை ஒரு பிடி பிடிப்பார், பிறகென்ன கந்தப்பர், அவுஸ்ரேலியா, முகத்தார் வேற, இப்படியே ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திட்ட முறையிட என்ன நடக்கு?? 3ம் உலக போர் தான்... வேனுமா இது?

யாழ்களத்தில அதுவும் நெடுக்கால+குறுக்கால போவாங்கள் வந்து புலம்புற சீ கருத்தாடுற களத்தில,சாஸ்த்+சாந்தி உலக விடயங்களை கரைச்சு குடிச்சவங்க இருக்கிற களத்தில,வடிவேல்+வினித்+வடிவே

  • Replies 71
  • Views 9.2k
  • Created
  • Last Reply

ஹிஹி இந்தச்சண்டையை பாருங்கப்பா உள்ளாடை விவகாரத்தால் கதைவை உடைத்துக்கொண்டு போயிட்டார் ஒருவர்

http://www.youtube.com/watch?v=xxC-rFLbCJg

  • கருத்துக்கள உறவுகள்

). இதுக்குத்தான் ஒரு பழமொழி சிங்களத்தில இருக்கு ?#8220;ணாய் வருது ?#8220;ணாய் வருது எண்டு சொல்லி கடைசியில ?#8220;ணாய் வந்த கதை.

ஆகா இதல்லோ பழமொழி :P

என்ன இது?? இவங்க தங்க பிரபல்யத்துக்காக வேணும்னே கூப்பிட்டு செய்றாங்களா? பொண்ணுங்களுக்குள்ள இருக்கிற ஒரே ஒரு பிரச்சனை இது தான். மற்ற பெண்களை இழிவு படுத்துறது.

ஆனால் எல்லா வெள்ளைக்காரங்களும் அப்படி இல்லை. இவர்களுக்கு சில்பா வில எரிச்சல் போல..அதுதான்.. :angry: :angry: :angry:

Edited by ப்ரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

ஷில்பா ஷெட்டியை இழிவுபடுத்திய ஜேட் கூடி பிக் பிரதர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கம்

லன்டன்: பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியை இழிவுப்படுத்திய ஜேட் கூடி பிக் பிரதர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், தனது போட்டி முடிவினை சேசனல்4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது. பொதுவான கருத்து கணிப்பு மூலம் முடிவினை அத்தொலைக்காட்சி வெளியிட்டது. அம்முடிவின்படி ஜேட் கூடி போட்டியிலிருந்து விலக்கப்பட்டு ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டி முடிவின் போது கண்ணீருடன் இருந்த ஜேட்கூடி, அளித்த பேட்டியில் இப்பிரச்சனையால் இனப்பாகுபாடு கொண்ட ஒரு நாகரீகமற்றவள் என்ற எண்ணம் மக்களிடையே தமக்கு வந்தவிட்டது எனவும், இது போன்று வாழ்க்கையில் வேறு எப்போதும் காயம் பட்டதில்லை என்றும் தனது செயலுக்கு கண்ணீர் தழும்ப வருத்தம் தெரிவித்தார் ஜேட்கூடி.

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமா... டி.ஆர்.பி. ரேட்டிங் நாடகமா?

கண்ணீரில் ஷில்பா!

டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளப் போய், நிறவேற்றுமை கொடுமைக்கு ஆளான தாக பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி ஷில்பா ஷெட்டி பற்றி Ôஉச்சுÕ கொட்டத் துவங்கியிருக்கின்றன மீடியாக்கள். இவ்விவகாரம் பல நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, ‘‘அதெல்லாம் இல்லை, எல்லாமே நாடகம்! தங் களுடைய புரோக்ராமுக்கு பாப்புலாரிட்டியைக் கூட்டுவதற்காக குறிப்பிட்ட தொலைகாட்சி சேனல் வேண்டுமென்றே இப்படி செய்தி கிளப்புகிறது’’ என்று சிலர் வேறுமாதிரியாக விமர்சிக்கிறார்கள்.

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபல சேனல்களில் ஒன்று ‘சேனல்&4’. இதில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பிரதர்ஸ்’ என்ற நிகழ்ச்சி மிகவும் பாப்புலர். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை வெளி உலகத் தொடர்புகள் எதுவும் இன்றி ஒரே வீட்டில் தங்கவைத்து, அவர்களது நடவடிக்கைகளை அப்படியே ஒளிபரப்புவார்கள். இடையிடையே சில பிரேக் கொடுத்து, பார்வை யாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவார்கள். அதன் பின்னர் அந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், உள்ளே இருப்பவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றி விடுவார்கள். கடைசியில் மிஞ்சுபவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் கிடைக்கும். மொத்தம் 25 நாட்கள் இந்தக் காட்சி ஒளிபரப்பாகும். ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் கூறப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே பயங்கர வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது!

இந்நிலையில்தான் இந்த ஷோவில் ஆசியாவின் முதல் நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி கடந்த ஒரு வாரமாக கலந்துகொண்டு வருகிறார். இந்த ஷோவில், ஷில்பாவுடன் பிரிட்டனின் கிளாமர் மாடலான டேனியல் லாயிட், பிரபல வர்ணணையாளர் ஜேடி குடீ, பாடகியான ஜே ஓ மேரா ஆகிய மூன்று பெண் பிரபலங்களும்... மைக்கேல் ஜாக்சனின் சகோதரரும் பாடகருமான ஜர்மைன் ஜாக்சன், பாடகர் லியோ சாயர், கரோலி மலோன், ஹாலிவுட் பட இயக்குநர் கென் ருஷ§ல், ‘சண்டே மிரர்’ பத்திரிகையின் கரோலி மலோன் ஆகிய ஐந்து ஆண்களுமாக மொத்தம் ஒன்பது பேர் உள்ளனர்.

இந்நிலையில்தான் ஆசியரான ஷில்பா ஷெட்டியை அவரது இனத்தையும் நிறத்தையும் வைத்து மற்ற போட்டியாளர்கள் வசைமாறிப் பொழிய, அது அப்படியே ஒளிபரப்பாகிவிட்டது. இவ்விவகாரம் குறித்து லண்டன்வாழ் இந்தியரும் இந்திப் பத்திரிகையாளருமான மக்பூல் அகமது விடம் பேசினோம்.

‘‘அந்த ஷோவில் ஆரம்பத்திலிருந்தே ஷில்பாவை அனைவரும் சேர்ந்து செய்யும் விமர்சனம், எங்களைக் கவலைக்குள்ளாக்கியது. ஷில்பா அந்த வீட்டினுள் நுழைந்த முதல்நாளே மற்றவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல், ஷாம்பெய்ன் அருந்தியபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு மறுநாள் முதல் மற்ற மூன்று பெண்கள் கூட்டுச்சேர்ந்து ஷில்பாவை குறிவைத்து டார்ச்சர் செய்யத் துவங்கினர். துவக்கத்தில் ஏதோ ஷோவுக்காக அப்படி நடந்துகொள்கிறார்கள் என எண்ணினோம். ஆனால், போகப் போகத்தான் காரணம் அது இல்லை எனப் புரிந்தது. ஷில்பாவை ‘நாய்’ என்றும் ‘வெறுப்பேற்றும் பேய்’ என்றும் திட்ட ஆரம்பித்து விட்டனர். உச்சகட்டமாக அவரது பெயரைக்கூட சொல்லி அழைக்காமல் ‘இண்டியன்’ எனக் கூறி நிற வேற்றுமையைக் காண்பிக்க ஆரம்பித்ததுதான் எங்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்ட

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து கிராமத்தவர் சிடு மூஞ்சிகளா அனால் நான் ஸ்கொட்லன்டில்[அபடீன்] 4 மாதம் வசித்தேன் அருமையான மக்கள் நல்ல நட்புணர்வோடு இருந்தார்கள் ஆனால் லண்டனில அப்படி இல்லை நான் லண்டனில நிண்ட வீட்டுக்காரர் ஒரு ரயில் நிலையத்தை சொல்லி அங்கு போகவே வேணாம் எனச்சொன்னார்கள் அப்படி மோசமா லண்டனில நான் லண்டனில் ஒரு வாரம் மட்டும் நின்றதால் லண்டனை பற்றி தெரியாது ஆனால் எனக்கு ஸ்கொட்லண்ட் பிடித்துவிட்டது எனது படிப்பு முடிந்த்வுடன் அபடீன் அல்லது கிளஸ்கோவில் குடியேற என்ணியுள்ளேன்

மூச்சுக்கு முன்னூறு தடவை ஈழம்..தமிழீழம் என்று புலம்புறவர்.. கிளாஸ்கோவுக்கு போவாராம் கிளாலிக்குப் போகாராம். ஏன் கிளாலில குடியேற வேணாம் என்று ஏதாச்சும் சட்டம் இருக்கா..அல்லது கிளாஸ்கோ அபடீன் தமிழீழத்துக்க சேர்ந்திட்டே...!

ஆக ஊரில உள்ளவனுக்கு கிளாலி அவுஸ்திரேலியாவில படிச்ச எனக்கு கிளாஸ்கோ..!

நமக்கு ஒரு சிங்கள நண்பன். அவன் கிளாஸ்கோவில ஒரு டிகிரி...அபடீனில இன்னொரு டிகிரி..வேலையோ சிங்கள தேசத்தில பேராதெனியவில..! ஏனடா இவ்வளவு படிச்சிருக்கிறா விசாவை எடுத்துக் கொண்டு தங்கி இருக்கலாமே என்ற அவன் சொன்னான் எனக்கு தாய் நாட்டில வேலை செய்யுறது போல சந்தோசம் அங்க இல்லை என்று.

ஆக சிங்களவனுக்குள்ள தாய் நாட்டுப் பற்றில ஒரு சதவீதமும் நம்மிட்ட இல்ல..! ஆனால் கதையளக்க விடுங்கோ நான் தான் அடுத்த கரும்புலி என்று சொல்லிடுவீனம். இவையெங்க.. மருத்துவம் கிடைச்சும் படிக்காம லண்டனில செற்றில் ஆகாம உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் அண்ணா எங்க...??!

திருப்பிப் கேப்பினம் நீர் மட்டும் என்ன என்று. நான் சொல்லேல்ல மூச்சுக்கு முன்னூறு தரம் அடுத்தவனைப் பார்த்து எமது தாகம் தமிழீழத் தாயகம் என்று...!

சில்பா என்றாலும் அழுது சிணுங்கி தான் இந்தியன் என்றதைக் காட்டினாள். நம்மாக்கள்... சுயநலத்துக்கு.... வாய் தான்..! :rolleyes:<_<

அது சரி. நான் எழுதி இவ்வளவு நேரமாகியும் ஒருத்தரும் வாயே திறக்காத போதே சாத்திரியும், சின்னாவும் நல்லாவே நாட்டு அரசாங்கத்தைப் போட்டு வாங்குவினம் எண்டு தெரியுது. :rolleyes:<_<

உதைவிட முக்கியமான பிரச்சினையாய் வேற ஒண்டு இருக்கு திராவிடர் அமைப்புக்களும் பாப்பண எதிர்ப்பாளர்களும் கண்டு கொள்ள இல்லை ஏன்..??

திராவிட பெண்மணியான சில்ப்பா பிறந்தது தமிழகத்திலாம்... தெலுங்கு குடும்பத்தில் பிறந்த அவர் வளர்ந்தது மராத்திய மாநிலத்தின் மும்பையில்.. தமிழ், தெலுங்கு, மாராத்தி, ஹிந்தி, குஜராத்தி, பிரஞ்சு மொழிகளையும் கூடவே ஆங்கிலத்தையும் பேசுவாராம்.

அது சரி இந்த திராவிடச்சிக்கு எதிராய் உயர்சாதி வெள்ளையர்களை பார்ப்பணர் யாரவது தூண்டி விட்டுதான் நடந்ததா எண்று யாராவது விடயம் அறிந்தவர்களிடம் கேட்டு சொல்லுங்கோ... முக்கியமாக சபேசனிடம்.. ! ( ஜோட் கூடி இங்கிலாந்தில் தரம் குறைத்து சொல்லப்படும் Essex, eastern பெண்ணாம், அவரின் ஆங்கில உச்சரிப்பையும் western வெள்ளைகள் கிண்டல் செய்கிறார்கள். )

இங்கிலாந்து கிராமத்தவர் சிடு மூஞ்சிகளா அனால் நான் ஸ்கொட்லன்டில்[அபடீன்] 4 மாதம் வசித்தேன் அருமையான மக்கள் நல்ல நட்புணர்வோடு இருந்தார்கள் ஆனால் லண்டனில அப்படி இல்லை நான் லண்டனில நிண்ட வீட்டுக்காரர் ஒரு ரயில் நிலையத்தை சொல்லி அங்கு போகவே வேணாம் எனச்சொன்னார்கள் அப்படி மோசமா லண்டனில நான் லண்டனில் ஒரு வாரம் மட்டும் நின்றதால் லண்டனை பற்றி தெரியாது ஆனால் எனக்கு ஸ்கொட்லண்ட் பிடித்துவிட்டது எனது படிப்பு முடிந்த்வுடன் அபடீன் அல்லது கிளஸ்கோவில் குடியேற என்ணியுள்ளேன்

என்ன ஈழவன், இப்படி கவுத்துபுட்டீங்க? :rolleyes: உங்களுடைய ஆர்வத்தை பார்த்து நீங்கள் படிப்பு முடிந்தவுடன் ஈழத்துக்கல்லோ சேவை செய்வீங்க என்டு நினைத்தேன்? <_<

அதுதானே சொன்னேன் மூக்கி அக்கா நான் கோழை என என் கையொப்பத்தை பாருங்கள்

என்னால் முடிந்த சேவையை என் நாட்டுக்கு செய்வேன் தொழில் தேர்சி ரீதியாகவோ அல்லது என்னால் முடிந்த எவ்வகையிலும்

  • கருத்துக்கள உறவுகள்

ஷில்பா விவகாரத்தை விசாரிக்கும் குழுவில் இடம் பிடித்தார் வெளிநாட்டு வாழ் இந்தியர்

லண்டன்: பிரிட்டன் டிவி நிகழ்ச்சியான பிக் பிரதர் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இழிவுபடுத்தப்பட்டது குறித்து விசாரிக்கும் குழுவில் வெளிநாட்டில் வாழும் இந்தியர் வக்கீல் ராபிந்தர் சிங்கும் இடம் பெற்றுள்ளார்.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் இழிவுபடுத்திய டிவி நடிகை ஜேட் கூடி கடந்த வாரம் பிக் பிரதர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், இந்த சர்ச்சை குறித்து விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வெளிநாட்டில் வாழும் இந்தியரான ராபிந்தர் சிங் இடம் பெற்றுள்ளார். இவர் மனித உரிமை பிரிவு வக்கீலாக பணியாற்றி வருகிறார். விசாரணை குழுவில் அவரை நியமித்து சேனல் 4 டிவி நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன் பிக் பிரதர் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என்ற பரிசீலனையிலும் சேனல் 4 நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பிக் பிரதர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேட் கூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை தனது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதாக ஜேட் கூடி புகார் கூறியுள்ளார். ஆனால், அந்த புகாரை போலீசார் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

ஓம்.......இந்த சில்பர் சட்டி தான் இப்ப எங்கள் தாயகத்து அவசர மனிதாபிமான பிரச்சினை கண்டியளோ!

பிரபலங்களுக்கான பிக்பிரதர் தொடரில் இன்று சில்பா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார்.

வென்றார் ஷில்பாபல கோடி பரிசு!

லண்டன்: பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றார்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனம் நடத்தி வரும் நிகழ்ச்சி செலப்ரட்டி பிக் பிரதர். இதில் பல்வேறு பிரபலங்களை ஒரே இல்லத்தில் தங்க வைத்து அவர்களின் செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இந்த முறை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அவர் உள்பட மொத்தம் 13 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியது. ஜேட் கூடி என்ற இங்கிலாந்து நாடக நடிகையும், அவரது தாயார் உள்பட இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக பெரும் பரபரப்பு எழுந்தது.

இதையடுத்து சமீபத்தில் ஜேட் கூடியும் அவரது தாயாரும் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர்களைத் தொடர்ந்து மேலும் இருவரும் நீக்கப்பட்டனர். இதையடுத்து இப்போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்தது.

நேற்று நடந்த இறுதி வாக்கெடுப்பில் ஷில்பாவுக்கு 63 சதவீத ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால் அவர் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெர்மைன் ஜாக்சனுக்கு 2வது இடம் கிடைத்தது.

வெற்றி பெற்றதாக ஷில்பாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, பிக் பிரதர் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களும் உரத்த குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஷில்பாவுக்கு தான் வெற்றி பெற்றதை நம்ப முடியவில்லை.

கண்களில் நீர் மல்க அவர் வாய் விட்டு உற்சாக குரல் எழுப்பினார். பின்னர் அவரை ஜெர்மைன் ஜாக்சன் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஷில்பாவுக்கு பல கோடி பரிசுகள் கிடைக்கவுள்ளன. இதுதவிர ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. மேலும் விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவியும்.

கடந்த 26 நாட்களாக பிக் பிரதர் இல்லத்தில் தங்கியிருந்த ஷில்பா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஷில்பாவை உற்சாகமாக வரவேற்றனர்

http://thatstamil.oneindia.in/news/2007/01/29/shilpa.html

  • கருத்துக்கள உறவுகள்

fpnmixff2.jpg

நன்றி தினமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பேசுபொருளுடன் இணைந்து கொள்ளக்கூடியதான படம்மொன்றைக் காண நேர்ந்தது. துணுக்குற்றது நான் மட்டுமல்ல.

-சுட்டும் விழியால் எதிரியைக் காட்டி குற்றம் சாடுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா... - என்ற கவிதை வரியையும் நாம் போட்டுப்பார்க்க வேண்டும்.

பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

படத்தைப்பாருங்கள்.

post-243-1170064003_thumb.jpg

என்ன அகத்யன் படம் இது கொஞ்சம் விளங்க தான் கூறுங்களன் :rolleyes:

germaineshilpaPA_350x250.jpg

shettyPA_225x350.jpgshetty2PA_225x350.jpg

எதையும் தாங்கும் இதயமாக நின்று ஜெயித்த சில்பாவுக்கு வாழ்த்துகள்!

அந்த இனிய காட்சியை காண்பதற்கு:

http://www.channel4.com/player/v2/player.j...tialClipId=5799

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுதாப ஒட்டுக்கள் நினச்சபடி விழுந்திட்டுது!!! எப்படியும் "இனவெறி" அனுதாபத்துக்கு காரணமா இருந்த நடிகைக்கும் சில்பா பாதி என்டாலும் குடுத்தால் நல்லா இருக்கும்.

ஊடகப்பிரச்சாரமே ஷில்பாவின் வெற்றியை தீர்மானித்துவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் திட்டமிட்டபடி இனிதே நடந்தேறியுள்ளது.பிக் பிரதர் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களே உங்கள் கருத்துக்களுடன் தொடருங்கள் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பேசுபொருளுடன் இணைந்து கொள்ளக்கூடியதான படம்மொன்றைக் காண நேர்ந்தது. துணுக்குற்றது நான் மட்டுமல்ல.

-சுட்டும் விழியால் எதிரியைக் காட்டி குற்றம் சாடுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா... - என்ற கவிதை வரியையும் நாம் போட்டுப்பார்க்க வேண்டும்.

பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

படத்தைப்பாருங்கள்.

சோனியாவை நோக்கி இருகைகளையும் நீட்டும் இந்த கருமையானவர் யாரிவரோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.