Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்களின் குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அறிக்கை கோரும் வடக்கு முதல்வர்!

Featured Replies

சிங்கள குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மக்கள் தங்களுடைய பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமக்கு சமர்பித்தால் அதனை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதன் ஊடாக நடவடிக்கை எடுக்ககோருவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் நாம் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக நான் நன்றாக அறிந்திருக்கின்றேன்.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள், படையினர், கடற்படையினர் அகியோருடனும் பேசியிருக்கின்றேன். ஆனால் சாதகமான பதில் அல்லது சாதகமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டதாக இல்லை.

அண்மையில் கூட கொக்கிளாய் கிழக்கு பகுதியில் தமிழ் மீனவர்கள் இறங்குதுறை அமைப்பதற்கு முயற்சித்தவேளை சிங்கள மீனவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் எமது மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், தலையிட்டு தமிழ் மீனவர்களுக்கு இறங்குதுறை அமைப்பதற்கான ஒழுங்குகள் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே அங்கே நடக்கின்ற சம்பவங்கள் தொடர்பான சகல விடயங்களையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவ்வாறான சம்பங்கள் நடக்காமல் தடுப்பதற்கான மற்றும் நடந்த சம்பவங்களை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சாதகமான பதில்கள், அல்லது நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய நிலைப்பாடுகள் தொடர்பாக ஒரு அறிக்கையினை எமக்கு கொடுத்தால் அதனை நாங்கள் பொறுப்புவாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் மிக உதவியாக இருக்கும் என அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக பெருமளவான தமிழ் மக்களுடைய நிலங்கள் படையினருடைய தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கடற்கரை பகுதிகள் சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதுடன் தமிழ் மீனவர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலையினை அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் இணைந்து முழுமையான அறிக்கை ஒன்றை தயாரித்து முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றனர்.

எனினும் அவ்வாறான அறிக்கை ஒன்று தயாரிக்கப்படுவது தொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக நான் நன்றாக அறிந்திருக்கின்றேன் என்றார்.

http://www.tamilwin.com/politics/01/112417

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இசுலாமிய குடிப்ரம்பல் சம்பந்தமாக கவனிக்கவும்.....ரிசாத்தின் நோக்கமே வேறூ.....

  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை காகித ஆலையைக் கபளீகரம்செய்து அதிலுள்ள இயந்திரங்களை விற்று பெரும் பொருள் ஈட்டுவதோடு, நிலத்தைப் பிரித்து முசுவீம்களைக் குடியேற்றுவதோடு, அதனை ஒரு முசுலீம் கிராமமாக்க 1994ம் ஆண்டிலிருந்தே முசுலீம் பாரளுமன்ற அங்கத்தவர்களால் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய முசுலீம் அமைச்சர்கள் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தற்போதுதான் தெரியவந்துள்ளதாகவும் என்னுடன் வேலைபார்த்த வாழைச்சேனை நண்பர் கூற அறிந்தேன். ஆலையில் தற்போதுள்ள எஞ்சிய தொழிலாளர்களை வெளியேற்றி ஆலை மூடப்படுமா? அல்லது தொடர்ந்து செயற்படுமா? என்பது விரைவில் வெளிவரும் என்றும் கூறினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

வாழைச்சேனை காகித ஆலையைக் கபளீகரம்செய்து அதிலுள்ள இயந்திரங்களை விற்று பெரும் பொருள் ஈட்டுவதோடு, நிலத்தைப் பிரித்து முசுவீம்களைக் குடியேற்றுவதோடு, அதனை ஒரு முசுலீம் கிராமமாக்க 1994ம் ஆண்டிலிருந்தே முசுலீம் பாரளுமன்ற அங்கத்தவர்களால் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய முசுலீம் அமைச்சர்கள் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தற்போதுதான் தெரியவந்துள்ளதாகவும் என்னுடன் வேலைபார்த்த வாழைச்சேனை நண்பர் கூற அறிந்தேன். ஆலையில் தற்போதுள்ள எஞ்சிய தொழிலாளர்களை வெளியேற்றி ஆலை மூடப்படுமா? அல்லது தொடர்ந்து செயற்படுமா? என்பது விரைவில் வெளிவரும் என்றும் கூறினார்.

இவர்களின் குணத்தை அன்றே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தான் விடுதலைப்புலிகள்.
உண்மையிலேயே அவர்கள் ஒரு தீர்க்கதரிசிகள்.

ஏன் இப்போது பிரான்ஸ் ஜேர்மனியில் நடக்கும் சம்பவங்களை பாருங்கள். பாவத்திற்கு இரங்கியதன்  பலனாக கொலை குண்டுவெடிப்புகள் என அனைத்து மக்களையும் அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றார்கள்.
நன்றி கெட்டவர்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.