Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

A9 சாலை நெடுக… ஜெரா

Featured Replies

A9 சாலை நெடுக ஜெரா

A9 சாலை நெடுக...  ஜெரா

 

தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும் A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர்.

இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு நிலையில் இருக்கும் இச்சாலையில் பெருமளவிலான மக்கள் பயணிக்கின்றனர். நாட்டின் தென் பாகத்திலிருந்து வடக்கிற்கு புதினம் பார்க்க படையெடுப்பவர்களும், வடக்கிலிருந்து தெற்கிற்கு பயணிப்பவர்களும், வெளிநாட்டவரும் இதனுள் அடக்கம். இவ்வாறு பயணிப்பவர்கள் சாலையோரக் கடைகளில் தரித்து நின்று உணவருந்தினாலே, இங்கு வசிக்கும் தமிழர்கள் அதிக வருமானத்தைப் பெறமுடியும் எனவும் நினைக்கக்கூடும்.

ஆனால் அந்த வருமானத்தை இராணுவம் தட்டிப் பறித்துக்கொள்ளும் செய்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சாலையில் தமிழர்கள் கோயில் உண்டியலுக்கு பணம் சேர்த்துக்கொடுக்கவும், கச்சான் விற்கவும், பிச்சையெடுக்கவுமே வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. தாண்டிக்குளத்தில் தொடங்கி இயக்கச்சி வரையில் நீளும் சாலை முழுவதும் இராணுவத்தின் உணவுக்கடைகள் போவோர் வருவோரை லாவகமாக வரவேற்கின்றன. 

"ON MART" தாண்டிக்குளம்

onmart.jpg 

வவுனியா நகரின் நெரிசலைக் கடந்து அப்பாடா என வாகனச் சாரதிகள் பெருமூச்சு விடும் இடத்தில் அமைந்திருக்கிறது இராணுவத்தின் இந்த உணவகம். கண்டியிலிருந்து நீளும் A9 சாலையின்  314 ஆம் மைல் கல்லில் மிகவும் அழகான , அமைதியான சூழலில் மிகவும் நவீணமயப்பட்ட கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் உணவருந்தவும் தேனீர் பருகவும், சற்று நேரம் ஓய்வெடுத்தபடியே ஏதாவது பாணம் அருந்தவும்  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

சோதனைச் சாவடி ஓமந்தை

omanthai.jpg


இந்த இடத்தை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்து விடமாட்டார்கள் வடக்கையும் தெற்கையும் பலகாலமாகப் பிரித்துவைத்திருந்த இரு நாடுகளின் எல்லைக் கடவைப் பகுதி . இங்கிருந்த சோதனைச் சாவடி ஆட்சி மாற்றத்துடன் அகற்றப்பட்டது. சோதனைச் சாவடி  இயங்கிய காலத்தில் பயணிகளுக்காக இராணுவம் அமைத்திருந்த உணவகத்தின் ஒரு தொகுதி இப்போதும் இயங்குகிறது.

THE FOOD BUG புளியங்குளம்

food%20bug.jpg


கண்டியிலிருந்து தொடங்கும் A9 சாலையின் 334 ஆவது மைல்கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது "THE FOOD BUG" இராணுவ உணவகம் புளியங்குளத்தின் புதூர் சந்திப்பகுதிக்கு அண்மித்ததாக உள்ள இவ்வுணவகத்தில் சாலையில் பயணிப்பவர்களும் , வயல் நிலங்களில் வேலை செய்பவர்களும் , தெற்கிலிருந்து வடக்கிற்கு வரும் பெரும்பாண்மை யினத்தவர்களும் உணவருந்திச் செல்கின்றனர்.

 

GREEN CAFFE கனகராயன்குளம்

green%20cafe.jpg

 

GREEN CAFFE A9 சாலையிலிருந்து புளியங்குளம் கடந்து கிட்டத்தட்ட அடுத்த 10 கிலோமீற்றர் தொலைவிற்குள் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் பிரமாண்டமான அளவில் , இயற்கை சார் அழகான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் எந்நேரமும் தெற்கிலிருந்து வரும் மகிழூந்துகளைக் காணலாம். இதற்கு எதிரில் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் புத்த விகாரையை தரிசிக்க நிற்கும் பெரும்பாண்மையினத்தவர் "GREEN CAFFE" யையும் எட்டிப்பார்க்கின்றனர்.

IRANAMADU WELFARE SHOPING COMPLEX  இரணைமடு iranamadu.jpg

A9 சாலையில் 370 ஆவது மைல்கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது இராணுவத்தின் "IRANAMADU WELFARE SHOPING COMPLEX " கிட்டத்தட்ட நவீண சந்தைக்கு நிகரான சகல வசதிகளும் இங்குண்டு. குடிபாணங்கள் , உணவுப் பொருட்கள் என அணைத்தும் இங்கு கிடைக்கின்றன.

 

CAFETERIA – கிளிநொச்சி

cafetertiya%20kilino.jpg

"CAFETERIA", A9 சாலையில் 376 ஆவது மைல்கல்லில் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ உணவகம் . சாலையோரமகவே நீள்வரிசையில் அடுக்கடுக்காகக் கட்டப்பட்டுள்ள கிளிநொச்சி நகர கடைகளுள் ஒன்றாகவே இதுவும் காணப்படுகிறது. வெளியில் இருந்து பார்த்தால் இதனை இராணுவ உணவகம் என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உள்ளே சென்று உணவு பரிமாறுபவர்களைப் பார்த்தால் தான் இதுவும்  இராணுவ உணவகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் . சாலையில் சென்று வருவோர் , பொதுமக்கள், இராணுவத்தினர் போன்றோர் இங்கு பானங்களை அருந்திச் செல்கின்றனர்.

ALIMANKADA JANAWANHALA ஆணையிறவு

alimankada.jpg

"ALIMANKADA JANAWANHALA "ஆணையிறவில் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் உனவகத்தின் பெயர். (ஆணையிறவுக்கு சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டிருப்பதையும் கவனிக்க) இதுவும் சாலையில் 417 ஆவது மைல்கல்லில் உள்ளது . ஆணையிறவில் இலங்கை இராணுவம் உருவாக்கியுள்ள  போர் நினைவுச் சின்னங்களை பார்வையிடவரும் சுற்றுலா பயணிகளால் இந்த உணவகம்  எவ்வேளைகயிலும் நிரம்பியிருக்கும். உணவு, சிற்றுண்டி , குளிர்பாணங்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும்

A9 CAFEERIA இயக்கச்சி 

a9.jpg

A9 சாலையில் 423 ஆவது மைல்கல்லில் அண்மையில் அமைக்கப்ப்ட்ட "A9 CAFEERIA " இயக்கச்சியில் உள்ளது . மிகப் பரந்தளவு நிலப்பரப்பில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள  இவ்வுணவகத்தில் சகல வசதிகளும் உண்டு. தெற்கிலிருந்து வரும் பேரூந்துகள் இவ்விடத்தில் தரித்து நின்று செல்வது வழமை அதே போல் சுற்றுலா வருபவர்களும் தங்கி நின்று ஓய்வெடுத்துச்  செல்லக்கூடிய வகையில் இவ்வணவகம் அமைக்கப்பட்டுள்ளது

http://thuliyam.com/?p=31478

இப்பதிவை கீழே உள்ள திரை ஊடாக பார்க்கலாம்.(இதனை Story map எனும் புதிய வலைதள உதவியுடன் துளியம் இணையதளம் அறிக்கையிடுகின்றது.) http://thuliyam.com/?p=31478

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை முந்தி யோசித்து இருக்கவேணும்.

இனி கடைகளை எண்ணி கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Maruthankerny said:

இதை முந்தி யோசித்து இருக்கவேணும்.

இனி கடைகளை எண்ணி கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இதை முந்தி யோசித்து இருக்கவேணும்.

இனி கடைகளை எண்ணி கொண்டிருக்க வேண்டியதுதான்.

சிங்கள ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால்.. இது தான் நடக்கும் என்று... பனர் பனரா சந்தி சந்தியா வைச்சு இயக்கம் அப்பவே சொன்ன போது.. உவங்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளை இயக்கத்துக்கு இழுக்க உதை வைக்கிறாங்கள். ஆமிக்காரன்.. சிங்களவன் சகோதரம் போல.. என்டவை தான்.. இப்ப படம் எடுத்துப் போடினம். 

அப்ப காட்டிக்கொடுப்பில் பிசி. இப்ப.. காசு உழைப்பதில் பிசி. மக்கள். மண்.. இனம்.. மொழி.. என்ற ஒரு உணர்வும் உண்மையா உதுகளட்ட இல்லை. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதை முந்தி யோசித்து இருக்கவேணும்.

இனி கடைகளை எண்ணி கொண்டிருக்க வேண்டியதுதான்.

இதில்  இன்னொரு விடயமும் குத்துதே

இதை தமிழர்கள் தவிர்க்கலாமே....

30 minutes ago, விசுகு said:

இதில்  இன்னொரு விடயமும் குத்துதே

இதை தமிழர்கள் தவிர்க்கலாமே....

அதை தான் நாங்கள் செய்ய மாட்டமே !!!!! அப்படி செய்தாலே அதை மூட வைக்கலாம்.

யாழ்  மத்தியில் போய் பார்க்கவோம் எத்தனை முஸ்லீம் கடைகள் , இன்னும் சில வருடங்களில் யாழ் மத்தி முழுவதும் இஸ்லாமிய ஆதாக்கம் தான்.

எங்கட அறிவாளிகள் அதை வித்து போட்டு இங்கை பிரான்சிலும் சுவிஸுலும் வந்து கூலி  வேலை பார்க்கும். தலையை எங்கு கொண்டு போய் மோதுவது !!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

அதை தான் நாங்கள் செய்ய மாட்டமே !!!!! அப்படி செய்தாலே அதை மூட வைக்கலாம்.

யாழ்  மத்தியில் போய் பார்க்கவோம் எத்தனை முஸ்லீம் கடைகள் , இன்னும் சில வருடங்களில் யாழ் மத்தி முழுவதும் இஸ்லாமிய ஆதாக்கம் தான்.

எங்கட அறிவாளிகள் அதை வித்து போட்டு இங்கை பிரான்சிலும் சுவிஸுலும் வந்து கூலி  வேலை பார்க்கும். தலையை எங்கு கொண்டு போய் மோதுவது !!

என்ன  இருந்தாலும் வெளிநாடல்லோ

பிராங்

யூரோ  அல்லே...

https://www.youtube.com/watch?v=_IIaV_PB-E8

 

 

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

என்ன  இருந்தாலும் வெளிநாடல்லோ

பிராங்

யூரோ  அல்லே...

A9 வீதியில் காணி உள்ளோர் இவ்வகையான உணவகங்களை திறக்கலாமே , அதற்கான வியாபார முறைகளை வெளிநாட்டில்  motorway rest area இருக்கும்  பாணியில்  வடிவமைக்கலாம் 

 

2008 ம் ஆண்டுக்கு பிறகு இங்கை எல்லாம் வாங்குரோத்து , அதே போல் தாயகத்தில் 2009 பிறகு தாய் மண்ணை பாதுகாக்க அவர்கள் இல்லை. 

வெளிநாட்டு புல பெயர்ச்சி இனியும் தமிழனுக்கு நநன்மை தர போவதில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

A9 வீதியில் காணி உள்ளோர் இவ்வகையான உணவகங்களை திறக்கலாமே , அதற்கான வியாபார முறைகளை வெளிநாட்டில்  motorway rest area இருக்கும்  பாணியில்  வடிவமைக்கலாம் 

2008 ம் ஆண்டுக்கு பிறகு இங்கை எல்லாம் வாங்குரோத்து , அதே போல் தாயகத்தில் 2009 பிறகு தாய் மண்ணை பாதுகாக்க அவர்கள் இல்லை. 

வெளிநாட்டு புல பெயர்ச்சி இனியும் தமிழனுக்கு நநன்மை தர போவதில்லை ?

நீங்க சொல்வதெல்லாம் உண்மையும் தேவையும்

ஆனால் தாயகத்திலுள்ளவர்களின் மனநிலை வேறு

வைத்தியருக்கு

பொறியியலுக்கு படித்து பட்டம் பெற்றவரெல்லாம்

வெளிநாட்டுக்கனவுடன் வீட்டிலிருந்தபடி திரை நாடகங்களை ரசித்தபடி.....

16 minutes ago, விசுகு said:

நீங்க சொல்வதெல்லாம் உண்மையும் தேவையும்

ஆனால் தாயகத்திலுள்ளவர்களின் மனநிலை வேறு

வைத்தியருக்கு

பொறியியலுக்கு படித்து பட்டம் பெற்றவரெல்லாம்

வெளிநாட்டுக்கனவுடன் வீட்டிலிருந்தபடி திரை நாடகங்களை ரசித்தபடி.....

விசகு இதை நான் கொஞ்சம் விபரமாக தனி மடலில் எழுதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Dash said:

விசகு இதை நான் கொஞ்சம் விபரமாக தனி மடலில் எழுதுகிறேன். 

இங்கேயே எழுதுங்கள்

எல்லோருக்கும் போய் சேரட்டுமே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.