Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை

Featured Replies

பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை

 


தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.


56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.


பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.


சுந்தரலிங்கத்தின் வலது கை செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண் பிள்ளைகளையும் திம்புலாகல விஹாரை ஒன்றில் துறவிகளாக மாற்றியுள்ளதுடன், பெண் பிள்ளை பொலனறுவை விஹாரை ஒன்றில் பிக்குனியாக துறவறம் பூண்டுள்ளார்.


44 வயதான கந்தக்குட்டி கமலபூரணி என்ற குறித்த நபரின் மனைவி, வீட்டுப் பணிப் பெண்ணாக சவூதி அரேபியா சென்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவ்வித தொடர்பாடல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.


மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும், தம்மால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினாலும் அனைத்து பிள்ளைகளையும் பௌத்த துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியதாக சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134592/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடிது கொடிது வறூமை கொடிது....!

வறுமை கொடிதுதான். ஆனாலும் மடத்தனமான முடிவு. பிள்ளைகளின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்த இவர் ஒரு தந்தை என்று கூற என் மனம் மறுக்கின்றது. பிள்ளைகள் விரும்பிச் சென்றிருந்தால் அது வேறு விடயம். இங்கு எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களை தொடர்பு கொண்டு ஏதாவது செய்திருக்கலாம். பௌத்த மத குருகுலங்களில் பிள்ளைகளை படிக்க அனுமதிப்பார்கள், எனினும் விருப்பமற்று மதம் திணிக்கப்படுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்  கடந்து போகும்......

  • தொடங்கியவர்
4 பிள்ளைகளையும் பௌத்த பிக்குகளாக்கிய தமிழரான தந்தை
2016-08-04 10:52:20

(ரெ.கிறிஷ்­ணகாந்)

 

பொல­ன­றுவை - திம்­பு­லா­க­லவை சேர்ந்த தமி­ழரான தந்­தை­யொ­ருவர் தனது நான்கு பிள்­ளை­க­ளையும் பிக்கு சாச­னத்தில் இணைத்­துள்ளார். 

 

இந்­நான்கு பிள்­ளை­களுள் ஆண் பிள்­ளைகள் மூவரும் திம்­பு­லா­கல துற­விகள் மடத்­திலும், பெண் பிள்ளை பொல­ன­று­வை அச­ரன சரண சுகத விகா­ரை­யிலும் துற­வறம் பூண்­டுள்­ளனர். 

 

18378Untitled-1.jpg

 

ஆண்­பிள்­ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வய­து­டை­ய­வர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வய­தா­னவர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் நால்­வரும் தற்­போது பிரி­வெனா கல்­வி­யினை கற்று வரு­கின்­றனர்.

 

56 வய­தான சித்­தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம், வலது கை பூரண இய­லா­மை­யாலும், கண்­பார்வை குறை­பாட்­டி­னாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் தற்­போது துற­வறம் பூண்­டுள்ள தமது பிள்­ளை­க­ளுடன் திம்­பு­லா­கல மடா­ல­யத்தில் வசித்து வரு­கின்றார்.

 

சுமார் 2 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக பணிப்­பெண்­ணாக சவூதி சென்ற தனது மனைவி தொடர்பில் கடந்த ஆறு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­க­ வில்லை என்றும், பிள்­ளை­களை கவ­னித்துக் கொள்­வ­தற்கு யாரு­மில்­லாத கார­ணத்­தி­னாலும் அவர்­களை துற­வ­றத்தில் இணைத்­து­விட்­ட­தாக அவர்­களின் தந்­தை­யான சித்­தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

 

இவர் வெலி­கந்த, செவ­ண­பி­டிய, கர­பொல கிரா­மத்தில் வசித்து வந்த வேளையில் குடும்ப பொரு­ளா­தார சிக்கல் கார­ண­மாக காணித் தரகர் ஒரு­வரின் வார்த்­தைக்கு அமைய தாம் வசித்து வந்த நிலத்­தினை 1 இலட்­சத்து 10 ஆயிரம் ரூபா­வுக்கு அடகு வைத்து விட்டு தனது மனை­வியை அனுப்பி வைத்­த­தாக தெரி­வித்­து­ள்ளார்.

 

கிழக்கு பல்­க­லைக்­க­ழகத்தில் விஞ்­ஞானம் தொடர்­பான ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்­துள்ள சுந்­த­ர­லிங்கம், 11 வரு­டங்­க­ளாக செங்­க­லடி மாவட்ட செய­ல­கத்தில் காரி­யா­லய உத­வி­யா­ள­ராக கட­மை­யாற்றி வந்­தி­ருந்த நிலையில் வரு­மானம் போதா­மை­யினால் பொல­ன­று­வை­யி­லுள்ள அரிசி ஆலை­யொன்றில் கட­மை­யாற்றி வந்தவர்.

 

தற்போது தனது இயலாமையின் காரணமாக மடத்தில் வசித்து வரும் இவரை தனது (ஆண்) பிள்ளைகள் மூவரும் துறவறம் பேணிவந்தாலும் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18378#sthash.WCOqSBqN.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.