Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை

Featured Replies

இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை

160807090334_srilanka_640x360_bbc_nocred

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 - 35 என பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துள்ளனர்

160807090433_srilanka_640x360_bbc_nocred  

கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பட்டதாரிகளிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டபோது மத்திய அரசின் அறிவுறுத்தல் என தனக்கு பதில் தரப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கூறுகின்றார்

160807090648_srilanka_640x360_bbc_nocred  

அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் ''மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பெயரளவிலே இருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்" என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இந்த நியமனத்தில் கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளின் வயது எல்லை தொடர்பாக கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம்.

160807090539_srilanka_640x360_bbc_nocred  

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயது எல்லை 45 ஆக இருக்க வேண்டும் என மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆளணிக்குரிய அனுமதியுடன் சேவை பிரமாணக் குறிப்பை தயாரிக்கும் அதிகாரம் மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு உள்ளது என்றும் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ள இரா. துரைரெத்தினம் இது தொடர்பாக மாகாண ஆளுநரிடம் மனுவொன்றையும் முன் வைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்து வயது எல்லை அதிகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/08/160807_srilanka_east_province_teachers_apointment

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபை மொக்கு மாகாண சபையா.

எவன்/ள் 18 வயதில் பட்டதாரி ஆவது. அதுவும் சொறீலங்காவில்....?!

பட்டதாரி நியமனங்களுக்கு வயதெல்லை அதிகரிக்கப்படுவது நல்லது. அது 21 இல் இருந்து 45 ஆக அமைந்தால்.. இளமாணி.. முதுமாணி.. மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்களையும் உள்வாங்கலாம் பள்ளிக்கூடங்களுக்குள். அது கற்றல் தரத்தை உயர்த்தும்.

அரசுகளில் உள்ள மொக்கு அமைச்சர்களையும் மொக்குகளையும் வெளியேற்றினால் தான் சொறீலங்கா முன்னேறும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

இளமாணி.. முதுமாணி.. மற்றும் டாக்டர் பட்டம் 

இப்ப இப்படியான பட்டங்கள் தான் அடிக்கடி பல் மொக்குகளுக்கு கொடுக்கப்படுகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.