Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Featured Replies


புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
 

article_1470740566-northern-province-cou- எம்.றொசாந்த்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய்வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/179048/ப-னர-வ-ழ-வள-க-கப-பட-ட-ப-ர-ள-கள-க-க-மர-த-த-வ-பர-ச-தன-#sthash.H9VyBzvu.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களின் காரணங்களைக்கண்டறியும் சுகாதாரபரிசோதனை உடனடியாக செய்யப்படவேண்டிய ஒன்று. இதில் பக்கசார்பற்ற துறைசார் நிபுணர்களின் பங்களிப்பும் முக்கியம். இது ஒரு திட்டமிட்ட சதியென்று கண்டுபிடிக்கப்படுமிடத்து அதற்காக சர்வதேச மட்டத்தில்  நீதி கேட்பதற்கு ஏதுவாகவும் இந்த விடயத்தில் அனிதாபிமான அமைப்புகளின் உதவி நாடப்படவேண்டும். இல்லையென்றால் மாகாண சபையால் இந்த விடயத்தை நகர்த்திச் செல்ல முடியாமல் இதற்கான தகுந்த நீதியை பெறவும் முடியாது போகலாம்.

  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு : பொதுமக்கள் மத்தியில் சந்தேகம்..!

Published by MD.Lucias on 2016-08-09 16:56:38

4
 

புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. குறித்த மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலையை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை அனைவரும் சர்வதேச வைத்திய நிபுணர் குழுவினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.D00222115001.jpg

 இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் பலர் சரணடைந்தனர். அவர் பல புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர்.

 இவ்வாறு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி சிறிது காலத்திற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்படவில்லை. ஆனால் தற்போது முன்னாள் போராளிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைந்து வருவவது மக்கள் மத்தயிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் சந்தேகத்தை   தோற்றுவித்துள்ளது.

 புனர்வாழ்வு முகாம்களில் விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த உயிரிழப்புக்களின் உண்மை நிலையை  ஆராய அரசாங்கம்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைவடைவதாக கூறுகிறார்கள். 

 புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து முன்னாள் பேராளிகளையம் சர்வதேச வைத்திய நிபுனர் குழுவின் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். எமது இனம் தொடர்ந்தும் அழித்து செல்வதை அனுமதிக்க முடியாது.

http://www.virakesari.lk/article/9997

எங்கள் கூட்டத்தில் யூதாஸ்கள் இருந்தால்...

11242.jpg

யேசு பிரானின் வாழ்க்கையில் இறுதி இராப்போசனம் மிகவும் முக்கியமானது. கூட இருந்தவர்களே அந்த மீட்பரை காட்டிக்கொடுத்த கயமை நடந்தேறுகிறது.

அந்தக் கொடுமை எப்படியாக இருந்திருக்கும் என்பதை யாராவது அறியவேண்டுமாயின் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி என்ற நாடகத்தைப் பார்ப்பதுதான் ஒரேவழி.

யூதாஸ் என்பான் யேசுநாதரைக் காட்டிக் கொடுத்ததால் அந்த மீட்பர் பட்ட அவலத்தை திருப்பாடுகளில் சித்திரித்த போது நெஞ்சு நெருடிக் கொண்டது. என்னே கொடுமை! என்று உள்ளம் ஏங்கிற்று.
அன்று நடந்த அந்தக் கொடுமைகள் இன்று வரை நீடித்து நிற்கவே செய்கிறது.

ஆம்! விடுதலைப் போராட்டம் கூட காட்டிக் கொடுப்புகளால் மோசம் போனது என்பது ஆழ்ந்த உண்மை.
எங்கள் இனத்தின் வீழ்ச்சிக்கும் இழப்புக்கும் இந்தக் கயமைத்தனங்களே காரணமாக இருந்து வருகின்றன.
நம்மினம் இழந்த உரிமையை இன்னமும் பெற முடியாத அளவில் நாமே நமக்கு மாரகனாகிக் கொண்டோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும்போர் எம்மினத்தை அழிப்புச் செய்தது. இதுவொன்றே எம்மினம் உரிமை பெறப்போதுமாக இருந்த போதிலும் அதற்கும் தடை என்றால் நாம் என்னதான் செய்ய முடியும்?
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் பக்கம் ஆதரவு கொடுப்பதாக வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் கூறினார் என்று பார்க்காமல், இலங்கைத் திருநாட்டின் நீதியரசராக இருந்த ஒருவர் கூறியதாகப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா சபை பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதே உண்மை.

எனினும் எங்களின் அரசியல் தலைமைகளின் நெஞ்சுரமற்ற தன்மையும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் போக்கும் எங்களுக்கான கிடைப்பனவை இல்லாமல் செய்து விடுகிறது.

இந்தக் கொடூர நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிப் போராளிகள் திடீர் மரணமடைகின்ற செய்திகள் எங்கள் இதயத்தை எரித்து கருக்கிவிடுகிறது.

புனர்வாழ்வு என்ற பேரில் முன்னாள் போராளிகளுக்கு வி­சஊசி போட்டதான தகவல்கள் உலகம் முழுவதிலும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான ஒருவர் விச­ ஊசி என்ற விடயத்தை மறுதலித்து பேசுகிறார் எனும் போது நாங்கள் மீள்வதற்கான வழியேதும் உண்டா? என்று எங்களிடம் கேட்டால் அதற்குக் கண்ணீர் மட்டுமே பதிலாக இருக்கும்.

என்ன செய்வது? பதவிக்காக இப்படியொரு கொடுமைத்தனம். ஏதோ நாம் செய்த பாவம்! எங்கள் கையால் வாக்கிட்டு எங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டிக் கொண்டோம் அவ்வளவு தான். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11242&ctype=news

 

 

 

 தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லை; அவருக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கும்போதே புற்றுநோய்!

தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லை; அவருக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கும்போதே புற்றுநோய்!

இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக குறித்த நாளிதழுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழினி தனது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டதாக எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை. அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலத்திலேயே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதை உணர்ந்துகொண்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது விச ஊசி ஏற்றப்பட்டதாக ஐநாவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இப்படியான பிரச்சனைகள் வரவில்லை. செப்டம்பர் மாதம் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் விச ஊசி பற்றி பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

http://thuliyam.com/?p=37554

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2016 at 9:22 AM, vanangaamudi said:

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களின் காரணங்களைக்கண்டறியும் சுகாதாரபரிசோதனை உடனடியாக செய்யப்படவேண்டிய ஒன்று. இதில் பக்கசார்பற்ற துறைசார் நிபுணர்களின் பங்களிப்பும் முக்கியம். இது ஒரு திட்டமிட்ட சதியென்று கண்டுபிடிக்கப்படுமிடத்து அதற்காக சர்வதேச மட்டத்தில்  நீதி கேட்பதற்கு ஏதுவாகவும் இந்த விடயத்தில் அனிதாபிமான அமைப்புகளின் உதவி நாடப்படவேண்டும். இல்லையென்றால் மாகாண சபையால் இந்த விடயத்தை நகர்த்திச் செல்ல முடியாமல் இதற்கான தகுந்த நீதியை பெறவும் முடியாது போகலாம்.

நாடு கடந்த அரசாங்கம், மக்கள் அவை மற்றும் உலகத் தமிழர் அமைப்பு ஆகியவற்றில் சர்வதேச அளவில் தரமான மருத்துவர்களும் புற்றுநோய் வல்லுனர்களும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அவர்கள் எவருமே இந்த விடயம் பற்றி எதுவும் சொல்லவில்லையே? ஏன்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.