Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

Featured Replies

வாகரையை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா படைகள் அறிவித்துள்ளன.

  • Replies 145
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையை வெற்றிகரமாக சில மணி நேரங்களிற்கு முதல் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

thanks:www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

வாகரையில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றத்துடன் இராணுவம் வாகரைக்குள் புகுந்து கொண்டுள்ளது. வாகரையில் இருந்து புலிகளும் பின்வாங்கிக் கொண்டுள்ளனர். ஓரிரு புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச செய்தி நிறுவனங்களின் தகவல் படி வாகரைதான் கிழக்குக்கான ஒரே கடல்வழித் தொடர்புக்கான பகுதியாகப் புலிகளால் பாவிக்கப்பட்டு வந்ததாம்.

வாகரை முன்னரும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வடக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்காக அது கைவிடப்பட்டு அங்கிருந்த படைகள் வடக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. தற்போது கருணா குழுவின் உதவியை வைத்து இப்பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது போலவே தெரிகிறது.

எதுஎப்படியோ வாகரையில் உணவு இன்றி இருப்பிடம் இன்றி மரண ஓலத்தோடு வாழ்ந்த மக்களுக்கு தற்காலிக மாற்றம் கிடைத்திருக்கிறது. அது நிம்மதியா அல்லது இன்னும் உபத்திரபமா என்பதை காலந்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாகரையில் இருந்து புலிகள் பின்வாங்கியது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. முன்னரெல்லாம் காலையில் புறப்பட்டு மாலையில் வாகரையை அடைகின்ற படையினர் 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் மாதங்கள் செலவு செய்து போய்ச் சேர்ந்துள்ளனர். குறிப்பிடத்தக்க இழப்புக்கள் பொதுமக்கள் இராணுவம் புலிகள் என்று மூன்று தரப்புக்கும் ஏற்பட்டதுவும் அழிவுகளுமே மிச்சம்..! :)

--------------

Sri Lanka captures rebel town as thousands flee

Fri Jan 19, 2007 5:53am ET

Related News

Thousands flee Sri Lanka rebel area

"Some of the people are making their way down the coast, others are coming through jungle in vehicles," said Selvaraj Jeyaraj, project coordinator for the Italian Red Cross, told Reuters by telephone from the eastern district of Batticaloa.

"We are talking about 12,000 internally displaced, more or less," he added.

வாகரைப் பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் அளவிற்கு கருணா குழுவிடம் ஆள்பலம் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவை படையணியாக பரிகரிக்க ஒரு போதும் சிறீலங்கா முனையாது. அது அதற்குத்தான் ஆபத்து. வாகரையின் முக்கியத்துவத்தை படைத்தரப்பு தற்போது நங்கு அறிந்துவிட்டதால் எனி அதை விட்டு தாமாக விலகப் போவதில்லை. குறைந்தளவு படை வலுவை வைத்துக் கொண்டு கருணா குழுவின் உதவியோடு தனது சிவில்நிர்வாகத்துகுரிய பொலிஸ் பிரிவுகளையும் வைத்து அதை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முனையும். கருணா குழு புலிகளின் ஊடுருவல்கள் அயற்கிராமங்களில் இருந்தான அவர்களின் செயற்ப்பாடுகளைக் குழப்பவென்று பாவிக்கப்படும். அதற்கு சில நூறு பேர் போதும்..! அந்த வகையில் வாகரை முழுதுமாக இன்னும் மீட்கப்படவில்லை. வாகரை நகர்தான் மீட்கப்பட்டுள்ளது. மிகுதி இடங்களை மீட்கும் பணி தொடரும் போலத்தான் தெரிகிறது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு தெரியும் இந்த கருணா அணி தான் அரசாங்கத்துக்கு ஆப்பு வைக்கப்போகுதோ தெரியா.

pulikal ani kilakkai vidduviddu varuvathukku kuda kadal pathai kudaillai enna sejappokinam therijathu ajutham kuda kundu pokaijalathu enruthan sollovathu sari??????

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka troops 'take key town'

The army is seeking to disrupt Tamil Tiger supplies

The Sri Lankan military says troops have captured a key Tamil Tiger stronghold in the east of the country.

Thousands of Tamil civilians are fleeing the town of Vakarai, which has been the focus of heavy fighting for several weeks.

Aid agencies say they are worried about the fate of the civilians, many of whom were taking shelter in a hospital in Vakarai affected by the fighting.

The fall of Vakarai would badly disrupt Tamil Tiger supplies to the north.

There has been no comment from the Tigers on the military's claim.

உலகம் பூரா வாகரை நகர் படையினர் வசம். பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்வு என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் "புலம்பயந்தவர்கள்" நடத்தும் தமிழ் ஊடகங்கள் எதுவுமே மூச்சும் விடேல்ல..இதுவரைக்கும். என்ன மக்கள் அக்கறை பாருங்கள்.

ஐநா அறிக்கை விட்டிட்டுது..இப்படி...

The United Nations Refugee agency, UNHCR, says more may remain in Vakarai and it is extremely concerned for their safety.

The UNHCR is calling on all sides to respect human rights

பிபிசி செய்தியாளரோ புலிகள் காட்டுக்குள்ளாலும் கடலாலும் ஓடுகின்றனர் எங்கிறார்..!

The BBC's Roland Buerk in Colombo says Tamil Tiger fighters fled into the jungle and by boat as government forces moved in.

சர்வதேசத்தை பார்த்துப் பார்த்து காத்துக் காத்து கடைசியில சர்வதேசம் இப்படிச் செய்து போட்டுதே என்று புலம்புவதைத் தவிர தமிழ் மக்களுக்கு ஏதும் இல்லை. அழிவும் உயிரிழப்பும் தாம் பரிசு..! தமிழ் ஊடகங்கள் கூட மக்களைப் பற்றீக் கவலைப்படுற அளவுக்கு இல்லை..! :)

:):( யாழ் களத்தை நோக்கி இறுதித்தாக்குதலுக்கு தயாராகும் நக்கிகள்

பிபிசி செய்தியாளரோ புலிகள் காட்டுக்குள்ளாலும் கடலாலும் ஓடுகின்றனர் எங்கிறார்..!

இதே பிபிஸிதான் சதாம் மிடம் அனுவாயுதம் இருக்கு என்று முந்தி சொன்னார்கள்

உண்மையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசி செய்தியாளரோ புலிகள் காட்டுக்குள்ளாலும் கடலாலும் ஓடுகின்றனர் எங்கிறார்..!

இதே பிபிஸிதான் சதாம் மிடம் அனுவாயுதம் இருக்கு என்று முந்தி சொன்னார்கள்

உண்மையோ?

எங்கடயளுக்கு கறுத்த தோல் (தமிழங்கள்) சொன்னா நம்ப மாட்டுதுவள். அதையே ஒரு வெள்ளை தோல் வந்து சொன்னா வாய பிளந்து கொண்டு கேட்குங்கள். இது காலாகாலமா நடக்கிறது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 19-01-2007 16:36 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் இன்று காலை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என பொதுமக்களின் இலக்குகள் மீது மூர்க்கமான எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு படைநகர்வை மேற்கொண்டுள்ளன.

படையினரின் எறிகணை வீச்சுக்களால் வாகரைப் பிரசேத்திலிருந்து 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெருமளவு மக்கள் வாளைச்சேனை நோக்கி செல்வதாக அறியமுடிகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத வாகரைப் பகுதியை தற்பொழுது சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாகரைப் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளனர். பனிச்சங்கேணி பாலத்தினூடாக நகர்ந்த படையினர் தற்பொழுது வாகரை மருத்துமனை உட்பட ஏனைய பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அப்பகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியாவில்லை. இன்றைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்
:):(:D:D
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.சி. இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையெ செய்தி சுருக்கத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.பி.சி. இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையெ செய்தி சுருக்கத்தில்

அவர்களிற்கு இன்னும் "அங்க" இருந்து செய்து வரேலை.

என்ன நடக்குது?????????????????????????????????????????????????

இது ஒரு தந்திரமான பின் நகர்வுதான். எது எப்படியோ இப்படி கடலென முன்னேறிவரும் படைகளுக்கு முன்னால் குறுக்கிட்டு சண்டையிட்டு போராளிகளை இழக்க தலைவர் முன் வரமாட்டார். ஆனால் பின் நகர்ந்து புலி பதுங்குகிறது என்றால் அது பாய்வதற்கே தவிர வேறொன்றுக்கும் இல்லை.

அந்த புலிப்பாச்சலின் நாளைத்தான் நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம்.

Edited by mathuka

என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தது நடந்திருக்கு இனியும் நடக்கும்.

சிறிலங்காப் படை வாகரையை ஆக்கிரமித்துள்ளது

[வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007, 20:31 ஈழம்] [காவலூர் கவிதன்]

மட்டக்களப்பு வாகரை பொது மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிலங்காப் படையினர் நுழைந்துள்ளதாகவும், அங்கு அகதிகளாகத் தஞ்சம் கோரியிருந்த அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறிய நிலையில், நிராதரவாக கைவிடப்பட்ட மருத்துவமனைப் பகுதிக்குள் படையினர் முன்னேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வாகரை மருத்துவமனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நிலைகள் எதுவும் இருக்கவில்லை எனத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், தங்களது முக்கிய தாக்குதல் நிலைகள், பனிச்சங்கேணிக்கு மாற்றப்பட்டுள்ளனவே தவிர, விடுதலைப் புலிகளின் எந்த நிலைகளும் படையினரிடம் பறிபோய்விடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

வாகரையிலிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படையினர் எல்லைத் தடைகளைத் தாண்டியதும், அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் அங்கே சில இடங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பகுதியினர், மாங்கேணி கத்தோலிக்க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களாலும் கிபீர் விமான பீரங்கித் தாக்குதல்களாலும், அப்பகுதிகளில் மட்டும் குறைந்தது 70,000 பொதுமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், சிறிலங்கா அரச படைகளின் கண்மூடித்தனமான வான் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களுடன் கூடிய மோசமான முன்னெடுப்புக்களால், வாகரை மருத்துவமனை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. இதனால் வாகரைப் பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

மருத்துவமனையை நம்பி தங்களது உறவுகளைத் தங்க வைத்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல், அனைத்துலக மனித உரிமை விதிகளுக்கும் முரணாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறத

2ND LEAD (ADDED LTTE COMMENT)

SLA troops enter vacated Vaharai hospital

[TamilNet, Friday, 19 January 2007, 12:23 GMT]

Sri Lanka Army sources in Colombo claimed Friday afternoon that their troops have entered the Vaharai hospital without facing any resistance from the Tigers. Liberation Tigers Military Spokesman, verifying that the Tigers had relocated their positions in Panichchankerni where the SLA had obstructed the land route to Vaharai village, said LTTE had no combatants in Vaharai village where the hospital is located. Meanwhile, thousands of civilians who crossed through Kadjuwatte exit and entry point were escorted to Mankerni Catholic school and provided midday meal.

The civilians, most of them internally displaced several times in the SLA besieged Vaharai region, said they fled Vaharai hospital, fearing onslaught, before the offensive units of the Sri Lankan troopers managed to enter the hospital area. Almost all the civilians had sought refuge at Vakarai village and the surrounding areas.

Civilians at Mankerni school further said more IDPs were waiting to cross over the entry exit point.

ICRC and UNICEF officials were present at the entry/exit point.

The Government Agent of Batticaloa has already made arrangements at 4 places in Valaichenai area for displaced people from Vaharai.

All divisional secretaries were summoned at the District Secretariat to coordinate the arragements for the temporary settlement of the displaced people.

Batticaloa district is struggling with more than 70,000 internally displaced people following the Sri Lankan military operation against the LTTE territories in Trincomalee and Batticaloa.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20970

அரசியல் பொறுப்பாளர் சொஞ்ச நாளுக்கு முன் சவுண்ட் விட்டவர் "வாகரையை கைப்பற்ற முயன்றால் யுத்தத்தை ஆரம்பிப்போம்" என்று!!!!

உந்த யுத்த நிறுத்தம் எம்மவர்களை சராசரி அரசியல்வாதிகளாக மாற்றி விட்டதா????

முன்பெல்லாம் செயலுக்கு பின் தான் சொல் வரும்!!!! இப்போ சொல் தான் வந்து கொண்டிருக்கிறதே தவிர, செயல்களல்ல!!!!!!

என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தது நடந்திருக்கு இனியும் நடக்கும்.

கொஞ்சம் பொறுத்திருங்கோ மிக விரைவில் நீங்க எதிர்பார்க்காத சில விசயங்களும் நடக்கப்போகுது சரியோ.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பனிச்சங்கேணிக்கு நிலைகள் மாற்றப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

பனிச்சங்கேணியைக் கைப்பற்றாது சிறிலங்கா படைகள் எப்படி வாகரையை கைப்பற்றின?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கேயிருந்து சவுண்ட் விடுபவர்கள் வன்னிக்குப் போய் தோள் கொடுக்கலாமே

இங்கேயிருந்து சவுண்ட் விடுபவர்கள் வன்னிக்குப் போய் தோள் கொடுக்கலாமே

இப்படியான கேள்விகளுக்கு பலர் பல தடவை பதிலளித்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், எல்லோரும் வன்னிக்குப் போய்த்தான் போராட வேண்டுமென்பதில்லை.

எங்கிருந்தாலும் போராட்டத்திற்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனிச்சங்கேணிக்கு நிலைகள் மாற்றப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

பனிச்சங்கேணியைக் கைப்பற்றாது சிறிலங்கா படைகள் எப்படி வாகரையை கைப்பற்றின?

ஓம், தப்பாத்தான் எழுதப்பட்டிருக்கிறது.

வெருகல் பிரதேச ஊர்களை தெற்கில் இருந்து வடக்காக சொன்னால் மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, கண்டலடி, வம்மிவெட்டுவான், பாற்சேனை, கதிரவெளி, வெருகல், ஈச்சிலம்பற்று என்று வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.