Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பொருளாதார மையத்திற்கு அமைப்பதில் இருந்த இழுபறிக்கு தீர்வு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்டதுடன் அங்கு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளனர்.

வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா என்று உறுதியாகத் தீர்மானம் எடுக்க முடியாதிருந்த நிலையில், வவுனியா நகரில் ஒன்றும் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் ஒன்றுமாக இரண்டு நிலையங்களை அமைப்பதென அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் பி.ஹரிசன், செய்தியாளர்களிடம் கூறினார்.

பொருளதார அபிவிருத்தி மையம் தொடர்பான இந்தக் கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மட்டுமே கலந்து கொண்டார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134977/language/ta-IN/article.aspx

48 minutes ago, பிழம்பு said:

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயப்படாதீங்க நண்பர்களே - சமூகமளிக்காதவர்கள் நாளைக்கே இதையும் குழப்பி குட்டிச்சுவர் ஆக்கிடுவாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாத்து ஓமந்தைகானீக்கு வைச்சிட்டார்  ஆப்பு...அவர் நினைத்தது நடந்திட்டுது...காணீ அவருக்குத் தான்..

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.