Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை அமெரிக்க இராணுவ வைத்தியர்களைக் கொண்டு பரிசோதனை நடாத்த விருப்பம்!

Featured Replies

 

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்தலாம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 58ஆவது அமர்வு இன்று கைதடியிலமைந்துள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பரிசோதனை நடாத்த சர்வதேசத்தின் உதவியைக் கோரியிருக்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், மருத்துவக் குழுக்களுடன் யாழ்ப்பாணம் வந்தபோது முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்துவது குறித்து ஆலோசனை நடாத்தியிருந்தேன். அதற்கு அவர் சில போராளிகளை ஒழுங்குபடுத்தினால் அவர்களுக்கு பரிசோதனை நடாத்தலாம் எனத் தெரிவித்திருந்தார் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=37970

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் சாணக்கிய முடவர்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும் ஒரு ஏற்பாடு.
தெரிந்திருந்தும் கண்ணை மூடிகொண்டு பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது.

வடக்கில் நிகழ்த்தப்படும் அமெரிக்கர்களின் மருத்துவ முகாம்   ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு நடவடிக்கை.
அமெரிக்கர்களின் பரிசோதனை பக்கசார்பற்றதாக இருக்கப்போவதில்லை.
இது சிவாஜிலிங்கத்தின் சொந்த யோசனையா என்பதும் கேள்விக்குறியே !!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

இது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் சாணக்கிய முடவர்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும் ஒரு ஏற்பாடு.
தெரிந்திருந்தும் கண்ணை மூடிகொண்டு பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது.

வடக்கில் நிகழ்த்தப்படும் அமெரிக்கர்களின் மருத்துவ முகாம்   ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு நடவடிக்கை.
அமெரிக்கர்களின் பரிசோதனை பக்கசார்பற்றதாக இருக்கப்போவதில்லை.
இது சிவாஜிலிங்கத்தின் சொந்த யோசனையா என்பதும் கேள்விக்குறியே !!!

எந்த நாட்டு மருத்துவர்கள் பரிசோதித்தால் பக்கசார்பற்றதாக இருக்கும் என்கிறீர்கள்?

  1. சீனா
  2. இந்தியா
  3. ரஷ்சியா
  4. ஸ்ரீ லங்கா
  5. வேறு எந்த நாடு? நீங்களாகவே சொல்லலாமே? 

நீங்கள் தமிழ் ஈழம் என்று சொல்லலாம். அந்த நாட்டு மருத்துவர்களின் பரிசோதனை சொர்க்கத்தில் தான் சாத்தியம். இந்த முன்னாள் போராளிகளை அங்கே அனுப்பும் உங்கள்  திட்டமா இது?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

எந்த நாட்டு மருத்துவர்கள் பரிசோதித்தால் பக்கசார்பற்றதாக இருக்கும் என்கிறீர்கள்?

  1. சீனா
  2. இந்தியா
  3. ரஷ்சியா
  4. ஸ்ரீ லங்கா
  5. வேறு எந்த நாடு? நீங்களாகவே சொல்லலாமே? 

நீங்கள் தமிழ் ஈழம் என்று சொல்லலாம். அந்த நாட்டு மருத்துவர்களின் பரிசோதனை சொர்க்கத்தில் தான் சாத்தியம். இந்த முன்னாள் போராளிகளை அங்கே அனுப்பும் உங்கள்  திட்டமா இது?

இந்தப் போரில் சம்பந்தப் படாத நாடுகளான..... கனடா, ஜேர்மனி, சுவிஸ்  போன்ற.... 
மருத்துவ நிபுணர்கள், முன்னாள் போராளிகளை பரிசோதிப்பதில் தவறு இல்லை.

அதனை விட்டு விட்டு.... நீங்கள் குறிப்பிட்ட நாடுகளிடம் இருந்து, உண்மை வராது என்று தெரிந்தும்...
விசமத்துக்கும், நக்கலுக்கும்..... எழுதிய கருத்தாகவே, உங்கள் பதிவை பார்க்க வேண்டியுள்ளது.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, Athavan CH said:

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்தலாம்

 கள்ளன் ஒளிக்க இடமில்லாமல் பொலிஸ்காரன் வீட்டிலை போய் ஒளிச்ச கதையாய்த்தான் முடியும்....:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சொறீலங்காவிற்கு இன அழிப்பு யுத்தம் நடத்த நேரடியாக மறைமுகமாக உதவிய எந்த நாடும் பங்கெடுப்பது நீதிக்கு வழிகோலாது.

இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் நேரடிக் கண்காணிப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஸ்தாபனங்கள்.. நடுநிலையான மருத்துவக் குழுக்களைக் கொண்டு செய்வது தான் நீதியான பெறுபேறுகளுக்கு ஓரளவேணும் உதவும். 

இந்த விடயத்தை தமிழ் மக்கள் சார்பிலும் முன்னாள் போராளிகள் சார்பிலும் அழுத்தம் திருத்தமாக விளக்குவதோடு.. சர்வதே மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட கோரிக்கை வைப்பதும் நல்லது... உடனடியாக. tw_warning:

  • தொடங்கியவர்

விஷ ஊசி விவகாரம்: முன்னாள் போராளிகளை மருத்துவ சோதனை செய்ய அமெரிக்க குழு சம்மதம்!!

முன்னாள் போராளிகள் சிலரை அமெரிக்க மருத்துவர் குழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளது என தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் 58 ஆவது அமர்வின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வின் போது உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கருத்துக்குப் பதில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்ட விடயத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் மருத்துவர் குழு முன்னாள் போராளிகளை மருத்துவ சோதனை செய்ய வேண்டும் எனக் கோரினார். இதன்போது பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இது குறித்து தான் அமெரிக்கத் தூதுவரிடம் கேட்டார் என்றும், முன்னாள் போராளிகள் சிலரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அமெரிக்கக் குழுவினர் சம்மதித்தனர் என்றும் கூறினார்.

http://malarum.com/article/tam/2016/08/16/15259/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.