Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்சியை உருவாக்கினால் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! - மஹிந்தவுக்கு மைத்திரி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithri-matara-meeting-190816-seithy%20(

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

   

நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை எவ்வாறு இருந்தது என்பதை தற்போது எம்மை தேசத்துரோகிகள் என கூறுபவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். அனைத்து சர்வதேச நாடுகளினாலும் இலங்கையை தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதாரம் படுபாதாளத்தில் இருந்தது. நாட்டின் எதிர் காலம் தொடர்பில் உறுதியற்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அனைத்து சவால்களை எதிர் கொண்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் காணப்பட்ட அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மெதுவாக சர்வதேசத்தை வெற்றிக் கொண்டோம். பொருளாதார தடைகளில் இருந்து நாட்டை பாதுகாத்தோம்.அதை விட நாட்டில் ஜனநாயகம் , சுதந்திரம், மற்றும் பொருளாதார வெற்றி என்பவற்றை அடைந்தோம். இதுவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு வெற்றி என்பதை எம்மை கேள்வி கேட்பவர்களுக்கு கூற விரும்புகின்றேன்.

எம்மை கவிழ்ப்பதற்கு புதிய கட்சி அமைக்கின்றனராம் . அதனை எதிர் கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். இதுவரைக்காலமும் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் வெளியிடப்படும். அப்போது புதிய கட்சி அமைப்பாவர்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலையே ஏற்படும். நல்லாட்சியில் அமைதியான மக்கள் வாழ்விற்கே முதலிடம். இனி எந்தவொரு காலத்திலும் ஆயுதம் ஏந்தும் நிலை எந்தவொரு இன மக்களுக்கும் ஏற்படாது. சில சந்தர்ப்பங்களில் எமது அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு உடனே தெரிவதில்லை. கடந்த ஆட்சியில் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களின் சுமையை இன்று நாங்கள் சுமக்கின்றோம். பாரிய ஊழல் மோசடிகளினால் நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டனர். போதாதற்கு சர்வதேசத்தில் பகைமையை வளர்த்து நாட்டின் எதிர்காலம் பேராபத்திற்குள் சென்றது. ஆனால் தற்போது அனைத்து விதமான சவால்களையும் வெற்றிப் கொண்டு முன்னோக்கி செல்கின்றோம்.

வீதி வீதியாக அன்று சர்வதேச நீதிமன்றம் மின்சார கதிரை என கூறி திரிந்தவர்களுக்கு இன்று அவ்வாறு கூற வேண்டிய நிலை இல்லை . சர்வதேச தீர்மானங்களின் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டுள்ளோம். காணாமல் போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய போது இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாகவும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குவதாகவும் கூறினார்கள். அவ்வாறு எதுவம் இல்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மை என்பவற்றின் மீது பொறுப்புடனேயே செயற்படுகின்றோம். பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு எமக்குள்ளது. ஆட்சியை கவிழ்ப்பதாக கூறுபவர்களுக்கு ஒன்றை கூறுகின்றோம். எமது ஆட்சி 2020 ஆம் ஆண்டு வரை வெற்றி நடைப்போடும். அதற்கு பின்னர் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த ஓராண்டு கால வெற்றி பாரியதாகும் . அதன் பலன் மக்களுக்கு இன்னும் சில நாட்களில் வெளிப்படும். எமது ஆட்சியில் மோசடிகளுக்கு இடமில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சிக்கினால் அவர்களுக்கு ஏனையோருக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதிப்பட கூறுகின்றேன். மோசடி ஆட்சி மீண்டும் நாட்டில் இடம்பெற இடமளியோம்.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு சர்வதேசத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இலங்கையை மீண்டும் உயரத்தியுள்ளோம். இதற்கு காரணம் நானும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தமையாகும். ஐக்கிய நாடுகள் சபையையும் வெற்றிக் கொண்டு விட்டோம். இனி எஞ்சியுள்ள சவால்களையும் எதிர் கொள்வோம் என்றார்.

maithri-matara-meeting-190816-seithy%20(

maithri-matara-meeting-190816-seithy%20(

http://www.seithy.com/breifNews.php?newsID=163852&category=TamilNews&language=tamil

5 hours ago, தமிழரசு said:

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம்

ஐக்கிய நாடுகள் சபையில் காணப்பட்ட அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மெதுவாக சர்வதேசத்தை வெற்றிக் கொண்டோம். பொருளாதார தடைகளில் இருந்து நாட்டை பாதுகாத்தோம்.

இதுவரைக்காலமும் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் வெளியிடப்படும்.

வீதி வீதியாக அன்று சர்வதேச நீதிமன்றம் மின்சார கதிரை என கூறி திரிந்தவர்களுக்கு இன்று அவ்வாறு கூற வேண்டிய நிலை இல்லை .

காணாமல் போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய போது இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாகவும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குவதாகவும் கூறினார்கள். அவ்வாறு எதுவம் இல்லை.

இனி எஞ்சியுள்ள சவால்களையும் எதிர் கொள்வோம் என்றார்.

சர்வதேசத்தை வெற்றிகரமாக ஏமாற்றி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழினப் படுகொலைகளை மூடி மறைத்துவிட்டதாக கொக்கரிக்கிறார் மைத்திரி!
மிக மோசமான இனப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாத அமைப்பை பாதுகாப்பதே "நல்லாட்சி" அரசின் தேசிய பாதுகாப்பு என்று கொக்கரிக்கிறார் மைத்திரி!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழரசு said:

இதுவரைக்காலமும் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் வெளியிடப்படும்.

எப்போ?..........உங்களை கவிழ்க்க முயன்றால்.  இல்லையேல்  பாதுகாப்பீர்கள்.

 

14 hours ago, தமிழரசு said:

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சிக்கினால் அவர்களுக்கு ஏனையோருக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதிப்பட கூறுகின்றேன்.

அப்படி தெரியலீங்களே. சும்மா பயங்காட்டுறீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி என்றால் என்ன என்று பலபேருக்கு இப்போது விளங்கியிருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழரசு said:

புதிய கட்சியை உருவாக்கினால் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! - மஹிந்தவுக்கு மைத்திரி எச்சரிக்கை

அப்ப நீங்கள் மகிந்தவோடை சேர்ந்திருக்கேக்கை கும்மியடிச்சதெல்லாம் என்ன மாதிரி???

இரகசியங்களை வெளியிடப் போவதாக கூறும் ஜனாதிபதியும் குற்றவாளி!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமையானது நகைப்புக்குரியது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த ஜனாதிபதியின் இந்த கதையின் மூலம் அவரும் குற்றவாளி எனக் கருத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும் மாத்தறையில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பிக்கும் நாளில், இதுவரை வெளியிடாது இரகசியமாக வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிட போவதாக கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினரின் குடும்பத்தினர் தொடர்பான இரகசியங்களை பற்றியே ஜனாதிபதி, சூசகமாக இதனை கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் இரகசியங்களை வெளியிட போவதாக ஜனாதிபதி கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/114797

மஹிந்த தொடர்பில் இரகசியத்தை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ஜே.வி.பி கோரிக்கை!

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும், அவர் மற்றும் அவர் தரப்பினரின் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக்கோரிக்கையை இன்று தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக மஹிந்த தரப்பினர் புதியக்கட்சி ஒன்றை ஆரம்பித்தால், அவர்கள் தொடர்பான பல இரகசியங்களை வெளியிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டியுள்ள அநுரகுமார, இலங்கை நாட்டை நிர்வகித்த ஒருவர் இழைத்த பாரிய அநீதிகள் தொடர்பான இரகசியங்களையே ஜனாதிபதி, வெளிப்படுத்தாமல் வைத்துள்ளார். அத்துடன் இந்த நாட்டை நிர்வகித்தவர் இழைத்த பாரிய அநீதிகள் தொடர்பான தகவல்களையே அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மஹிந்த தரப்பினரால், புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் ஜனாதிபதி அவர் தொடர்பான இரகசியத்தை நாட்டு மக்களுக்காக வெளியிடுவார் என அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/114932

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.