Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷ ஊசி விவகாரம்குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பது தொடர்பாக பரி சோதனை நடத்துவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதி சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய விஷ ஊசி விவகாரம் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், முத லமை ச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கவுமே இக் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வடக்கு ஆளு நர்ரெஜினோல்ட் குரேயின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் குறித்த குழு தனது செயற்பாடுகளை ஆரம்பி க்கும்.

குறித்த குழுவின் கண்காணிப்பின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள முன்னாள் போராளிகளை தவறாது பதிவுசெய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் மரணித்து வருவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென வட மாகாண சபையில் அண்மையில் பிரேரணை நிறைவேற்றிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரகாரமே குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

 

http://www.onlineuthayan.com/news/16551

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் நீளுதா ரெஜினோல்ட் குரேயின் அதிகாரம்?

 விஷ ஊசி விவகாரம்! போராளிகளைச் சோதிக்கும் திட்டத்தில் மாற்றம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மாற்றம் மேற்கொண்டுள்ளது.

வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தற்போது அதனை விடுத்து அனைத்துப் போராளிகளையும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், இதனை 5 வருடங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கவும் வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டது எனவும், இதனால் போராளிகள் பலர் உயிரிழக்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு முடிவெடுத்தது.

இதற்காக சிறப்பு மருத்துவர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கடந்த வாரம் ஓர் ஆலோசனையை முன்வைத்தனர்.

அதில், வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் எழுந்தமானமாக 50 முன்னாள் போராளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகளுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தற்போது இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள பொது வைத்தியசாலைகளில், முன்னாள் போராளிகளுக்கு தனியான 'கிளினிக்' சேவை ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, 5 வருடங்களுக்கு தொடர்ச்சியாக இந்தக் 'கிளினிக்' சேவையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/114939

  • கருத்துக்கள உறவுகள்

நஞ்சு ஊசி ஏற்றப்பட்டது உண்மைதான் என்று அறிந்தால்... அதனை வெளியிடாது, அரசுக்குமட்டும் அறியத்தரும் வைத்தியருக்கு, அவர் விரும்பும் வெளிநாடு செல்வதற்குரிய விசாவுடன், பயணச்சீட்டும் இலவசம். :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.