Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதே சம்மேளனத்தின் நோக்கம்- ரெஜிட் கூரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வேலைவாய்ப்புக்களை வழங்குதல், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்றனவே முதலீட்டாளர் சம்மேளனத்தின் நோக்கமென ஆளுநர் ரெஜிட் கூரே தெரிவித்துள்ளார்.

வடக்கின் முக்கிய பிரச்சனையாகக் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணும்  முகமாக தொழில் முயற்சிகளை உருவாக்கி வடமாகாணத்திற்கு பொருத்தமான முதலீட்டுத் துறைகளுடன் முதலீட்டாளர்களை இணைக்கும் நோக்குடன் முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் உட்கட்டுமாண வளர்ச்சிகள் கடந்த கால அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

முதலீட்டாளர் சம்மேளனம் தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள பிரதேச செயலகத்தில், தகவல் நிலையமொன்று அரச தரப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  விதவைகள், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இம் முதலீட்டாளர்கள் சம்மேளனம் உறுதுணையாக நிற்குமெனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். 

குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வினை வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் ஓழுங்குபடுத்தியிருந்தார். 

இந்நிகழ்வில் அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், மகிந்த அமரவீர பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், அங்கஜன் இராமநாதன், சிவமோகன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இந்திய துணைத்தூதர் ஆ. நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

முதலீட்டு சபை கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி  அதிகாரசபை, வங்கிகள், சூற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களும், முதலீட்டாளர்கள், துறைசார் ஆவலர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.onlineuthayan.com/news/16572

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையை சந்திக்கு சந்திவச்சால்..அவர் ஆசி வழங்குவார்....இதுதான் கூரேயின் கொள்கை..

Edited by alvayan

 

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்பணம்

article_1471864867-DSC_0008.JPG

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்;பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22) காலை 9.30 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் முன்னெடுப்பில், இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த தகவல் பிரிவு ஒன்றும், யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்தல், தொழிற்பயிற்சிகளை ஊக்குவித்தல், முதலீட்டாளர்களை வட மாகாணத்துக்கு பொருத்தமான முதலீட்டு துறைகளுடன் இணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதரக யாழ். அலுவலக கொன்சலாட் ஏ. நடராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், அங்கஜன் இராமநாதன், எஸ்.சிவமோகன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், முதலீட்டுச்சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை, வங்கிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, பனை அபிவிருத்திசபை மற்றும் முதலீட்டாளர்கள் துறைசார் ஆர்வலர்களும் இதில் பங்கேற்றனர்.

article_1471864876-DSC_0013.JPG

article_1471864885-DSC_0014.JPG

 

http://www.tamilmirror.lk/180176

'போரால் சிதைந்த நம் பகுதிகளை கட்டியெழுப்ப முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்'

 

article_1471864586-Mavai0300.jpg

'வடக்கில் இடம்பெற்ற கடந்த 30 வருடகால போரினால், நமது வளங்கள் அழிவுற்றுள்ளன. இவ்வாறு வளங்கள் அழிவற்று சிதைந்த நம் பகுதிகளில், சரியான முதலீடுகள் மூலம் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும். இது ஒரு முதல் படி. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

'வடமாகாண ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம், ஒரு சிறந்த ஆரம்பம். இதனால், நமது மக்கள் பயன்பெற வேண்டும். சர்வதேச புரிந்துணர்வுடன் ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றத்தில் எமது பங்கும் உள்ளது. இத்திட்டத்தின் ஊடாக வடக்கில் உள்ள விதவைகளின் வாழ்வாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பன கட்டியெழுப்ப வேண்டும்.

சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், தொழிற்சாலைகளை மீள ஆரம்பித்து, வடக்கின் பொருளாதாரம் மேம்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தாலும், அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

ஆனால் வெளிநாட்டில் இருந்து மூலப்பொருள் எடுத்துவரப்பட்டு இங்கு பொதியிடல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். இவ்வாறு, சூழலுக்கு பாதிப்பற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மூலம், நமது மக்கள் பயன்பெறவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/180174

 ஆளுநரின் அழைப்பை புறக்கணித்த வடக்கு முதல்வர்!

north-investors-forum-2.jpeg

வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதும் அவர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், வடக்கு மாகாண சபையுடன் இணைந்து எந்தவொரு முடிவையும் எடுப்பதில்லையென ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரால் இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் அமைப்பது குறித்து உரிய நிபுணர்களுடன் கலந்துரையாடாது அமைத்துள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாமல் முதலீட்டாளர்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் எஸ்.சிவமோகன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் பரம்சோதி, சயந்தன், சர்வேஸ்வரன், சிவயோகன், ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=38680

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்திற்காகத் தூண்டில் போடுகின்றார்கள்

இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் இந்திய, இலங்கை நிறுவனங்களின் இயக்குநர் தில்லைராஜின் முயற்சியால் இங்கே இந்த அலுமினிய தொழிற்சாலையை நிறுவ முடிந்தது. இத்தொழிற்சாலை தெல்லிப்பளை பிரதேசத்தில் அம்பனை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக 50 பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணம்,  எமது இரத்த உறவுகள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யவேண்டும். கடந்த வருடம் இந்தியாவிலிருந்து நூறு முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் செய்திருந்தனர்.

தாம் பயனடைவது அவர்களது நோக்கமல்ல. இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்பதற்கும், இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டுமென்பதுமே அவர்களது நோக்கமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=38839

 

55 minutes ago, Athavan CH said:

இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

651_thumb_cartoon_17-08-2016.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய பிரதேசத்திற்கு, மக்களுக்கு உகந்த வேலைத்திட்டங்களாயின் வரவேற்கத்தக்கது, அதைவிட்டு, எங்கள் இருக்கிற வளங்களையும் சுரண்டி வேலை பழக்கிறோம், கட்டுமானம், அது, இது  என்று சிங்களவரைக் கொண்டுவந்து இறக்கி தமிழரை வேரறுக்கிற வேலையோ யாரறிவார்? எங்கடை மீன்பிடி, வியாபாரம், சிகையலங்காரம், விவசாயம் இதுகளை விட்டு தென்னகத்தார் வெளியேறினாலே எங்கட வேலையில்லாத் திண்டாட்டம் தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.