Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு

Featured Replies

யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. 

குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை பொலிசார் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். 

யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பில் தெரிய வருவதாவது , 

குறித்த ஆலயமானது கடந்த 1918ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர். நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று தனி நபர் ஒருவர் ஆலயம் அமைந்துள்ள காணி தனக்கு உரித்துடையது எனவும் அதனால் ஆலயம் தனக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளார். 

அதனால்  குறித்த நபருக்கும் , ஆலயத்தில் வழிப்பாட்டினை மேற்கொண்டு வருவோருக்கும் மிடையில் கருத்து மோதல் இடம்பெற்று உள்ளது. 

அதனை அடுத்து ஆலயத்தை உரிமை கோரிய நபர் ஊர்காவற்துறை பொலிசார் மூலம்  வழிப்பாட்டு மேற்கொள்வோரை மிரட்டி உள்ளார்.

அந்நிலையில் ஆலயத்தில் வழிப்பாடு மேற்கொண்டு வந்தோர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நம்பிக்கை சொத்து சட்டத்தின் கீழ் கடந்த 12ம் திகதி வழக்கு தொடுத்தனர். 

தற்போது வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் , நேற்றைய தினம் ஆவணி ஞாயிறு இந்துக்களின் விரத தினமாகும். அதனை முன்னிட்டு ஆலயத்தில் பூஜை வழிப்பாட்டை மேற்கொண்டு வருவோர் , விஷேட பூஜை வழிப்பாட்டுக்கு ஏற்பாடுகள் செய்ந்திருந்தனர். 

அந்நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிசார் சகிதம் ஆலயத்திற்கு வந்த ஆலயத்தை உரிமை கோரும் நபர் ,பொலிசாரின் உதவியுடன் பூஜை வழிப்பாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் , ஆலயத்தினுள் இருந்த பொருட்களை வெளியில் வீசியும் ஆலய மூல மூர்த்தியாக இருந்த முருகனின் வேலினையும் பிடுங்கி எடுத்துள்ளனர்.

பின்னர் ஆலயத்தினை முழுமையாக இடித்து அழித்துள்ளனர். அதனை அடுத்து பொலிசார் தாம் செல்லும் போது ஆலய மூல மூர்த்தியாக இருந்து பிடுங்கப்பட்ட  முருகனின் வேலினை தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். 

இந்த சம்பவத்தால் ஆலயத்தில் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்தோர் தாம் கடும் மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள போது சட்டவிரோதமான முறையில் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பொலிசார் உடைந்தையாக இருந்ததுடன் , ஆலயம் இடித்தழிக்க பாதுகாப்பும் அளித்துள்ளனர். 

அத்துடன் இந்த ஆலயமானது ஆகம முறைப்படி வேல் பிரதிஸ்டை பண்ணி , பூஜை வழிப்பாடுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடாவடித்தனமாக மூல மூர்த்தியாக இருந்த வேலினை பிடுங்கி எடுத்துள்ளனர். இதனால் எமது ஊருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ எனவும் அச்சமாக உள்ளது என மேலும் தெரிவித்தனர். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135153/language/ta-IN/article.aspx

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காணி அவருக்குச் சொந்தமாக இருந்தாலும் போலீசார் வேலை  கைப்பற்றிச் செல்லும் அளவிற்கு விட்டிருக்கக்கூடாது.
இனி என்ன எல்லாம் நடக்கப்போகின்றதோ.
தெய்வத் குற்றம் பொல்லாதது

  • கருத்துக்கள உறவுகள்

 அதுதான் வேலையும் புடுங்கிக்கொண்டு போட்டாங்களே. தண்டிக்க   வேல் எடுக்க முருகன் எங்கள்டடைத்தானே  வரவேணும். அதுவரை ஒண்டும் செய்யேலாது எண்டு நினைச்சிட்டாங்கள் போல. காட்டிக்கொடுத்தவனுக்குத்தான் முதல் தண்டனை குடுக்கவேணும். நாளைக்கு அதுல விகாரை காட்டுவான். அப்ப பொத்திக்கொண்டு இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 . நாளைக்கு அதுல விகாரை காட்டுவான். அப்ப பொத்திக்கொண்டு இருப்பார்.

சரியான போடு....

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளிகளுக்குள் பிரச்சினை இருந்திருந்தாலும், 
மூன்றாமவனை...  தலையிட்டு இருக்க விட்டிருக்கப் படாது.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் குறித்த முழு விபரம் தெரியாததால் பக்கச் சார்பாக கதைக்க முடியாது. 100 வருடம் பழமையானதாயின் ஆட்சியுரித்தில் காணி உரிமை கோரப்பட முடியாது, நீதிமன்ற உத்தரவு இன்றி சிவில் விவகாரத்தில் பொலீசாரும் வந்திருக்க மாட்டார்கள்.

இருப்பினும், காணியை அடாத்தாக அபகரிக்கும் நோக்கமுள்ளோர், தாம் ஒருபகுதியில் இருந்து கொண்டு, இன்னொரு பகுதியில் கோயிலை அமைத்து, மேலே நம்ம வாத்தியார் சொன்னது போல தெய்வ பயத்தைக் காட்டி, உரிமையாளரின் தயக்கத்தை வைத்தே, வருமானமும் பார்த்து, ஆட்சி உரித்தில் காணியையும் ஆட்டையைப் போடுவது (தொன்று தொட்ட) வழக்கம் ஆகிறது.

அதாவது இலங்கை காணிச்சட்டப் படி, வாடகை செலுத்தாமல் பத்தாண்டுகள் ஒரு காணியில் வசித்தால், அது ஆட்சியுரித்து சொத்தாகும். எனினும் யுத்தம் காரணமாக இதை (சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக வந்தாலும், தமிழருக்கும் சமம்), 30 வருடமாக்கி உள்ளனர். இதையே இந்த உரிமையாளர் பயன் படுத்தியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

இது விடயத்தில் எனது உறவினரின் சொந்த அனுபவம் உள்ளது.

இது வடக்கே தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், குறிப்பாக பிக்கர்களும் செய்கிறார்கள். ( காணியை , கோயில், விகாரை, பள்ளி அமைத்து குறுக்கு வழியில் ஆட்டையைப் போடுவது )

தெய்வக்குற்றம் என்ற பயத்தில் சட்டம் கூட நத்தை வேகமெடுப்பதும், ஊர்மக்கள் ஆதரவு கிடைப்பதும், அதனால் உரிமையாளர் கைகழுவுவதும் அந்த அடாத்தாளர்களுக்கு வாய்ப்பாகிறது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.