Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

யாழில் ஆர்ப்பாட்டங்கள்
 
 
யாழில் ஆர்ப்பாட்டங்கள்
ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு  முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
 
1472803293_d3.jpg
காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.
1472803347_t3.jpg
 
1472803404_t5.jpg
 
t4.jpg
 
1472803490_t2.jpg

http://onlineuthayan.com/news/17080

பாக் கீ மூனின்  விஜயத்தை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு ; ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன

 

( யாழ்ப்பாணத்திலிருந்து ஆர். ராம் )

 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

14215370_1141642125910461_1093654325_o.j

இதேவேளை, அவரது வருகையை முன்னிட்டு பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முதலில் வடமாகண ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் யாழ்.பொது நூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

 

அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் நிபந்­த­னை­யின்றி உடன் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தியும், போர்க்­குற்­றங்கள், இன­வ­ழிப்புக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச பக்கச் சார்­பற்ற விசா­ரணை நடத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தியும் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இடம்­பெ­யர்ந்த மக்கள் அமைப்­புக்கள், காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளது அமைப்­புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

ஆர்ப்பாட்டத்திலீடுபடுவோர் இறுதியில் யாழ் .  பொது நூலகத்திற்கு முன்னால் ஒன்று திரண்டு தமது கவனயீர்ப்பை  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/10895

யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதரவுள்ள நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/116212

யாழ்ப்பாணத்தில் பான் கி மூன்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் வட மாகாண ஆளுநர் அலுவலகப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வட மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வருகை தந்திருந்த பெருமளவிலான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, காணாமல் போயுள்ள தமது உறவுகளை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்குமாகக் காத்திருந்தனர்.

எனினும் பாதுகாப்பு நிமித்தம் ஐ.நா செயலாளர் நாயகத்தை பிரதான வாயிலைத் தவிர்த்து மாற்று வழியின் ஊடாக, ஆளுநரின் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஆயினும் ஐ.நா அலுவலக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜர்கள் மற்றும் கடிதங்களை ஐநா செயலாளர் சார்பில் பெற்றுச் சென்றனர்.

ஐநா செயலாளரின் வருகையையொட்டி, யாழ் அரச செயலகப் பிரதேசம் மற்றும் யாழ் நூலகப் பிரதேசம் ஆகியவற்றில் காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

160902104845_srilanka_ban_ki_moon_jaffna

160902104954_srilanka_ban_ki_moon_jaffna

160902105056_srilanka_ban_ki_moon_jaffna

160902105206_srilanka_ban_ki_moon_jaffna

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160902_srilanka_bankimoon_jaffnavisit

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, போல் said:

யாழ்ப்பாணத்தில் பான் கி மூன்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

 உறவுகளை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்குமாகக் காத்திருந்தனர்.

எனினும் பாதுகாப்பு நிமித்தம் ஐ.நா செயலாளர் நாயகத்தை பிரதான வாயிலைத் தவிர்த்து மாற்று வழியின் ஊடாக, ஆளுநரின் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

 

 

160902104845_srilanka_ban_ki_moon_jaffna

 

 

 

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160902_srilanka_bankimoon_jaffnavisit

உலகிலேயே வேலையில்லாதவர்கள் சேர்ந்திருக்கும் ஒரு சபை, அதன் செயலாளர், அவருக்கு ஒரு மாலை.
செருப்படி வாங்காமல் சென்றதையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டும்

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, போல் said:

வட மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வருகை தந்திருந்த பெருமளவிலான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, காணாமல் போயுள்ள தமது உறவுகளை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்குமாகக் காத்திருந்தனர்.

எனினும் பாதுகாப்பு நிமித்தம் ஐ.நா செயலாளர் நாயகத்தை பிரதான வாயிலைத் தவிர்த்து மாற்று வழியின் ஊடாக, ஆளுநரின் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

உது ஐடியா எங்கடை மூத்த பழம்பெரும்  ஐயாவிட்டை இருந்துதான் வந்திருக்கும்.tw_glasses:
ஏனெண்டால் கதவு மாத்தி மாத்தி உள்ளுடுற விசயத்திலை ஆக்கள் பழம்திண்டு கொட்டை போட்ட ஆக்கள் எல்லோ..:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.