Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொப்புள்கொடி உறவுத் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்

Featured Replies

கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரைநிகழ்த்துகையில்,

இந்திய கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள், உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய தமிழர்கள் தாக்கப்படும் போது இலங்கைத் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களும் கர்நாடக தமிழர்களும் பண்பாடு மற்றும் தொப்புள்கொடி உறவுகள். இவ்வாறான உறவுகள் தாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 4 நாட்களாக நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் ஈழத்தமிழரின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசின் கையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை பயன்படுத்தி உடனடியாக வழமைக்கு திருப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாரும் எவரையும் தாக்கக் கூடாது, போதுமான அளவு காவல்துறையினரை வைத்திருக்கும் கர்நாடக அரசு தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு முடியாவின் நடுவன் அரசு டெல்லியில் இருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் துணைப்படையினர் பொலிஸாரை அனுப்பி நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கும் கர்நாடக தமிழர்களுக்கும் இடையில் உள்ள இந்த இரத்த உறவினால் தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் ஓயாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலினை நிறுத்தாவிடின் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

பொங்களூர் தமிழ் சங்கம் இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த கர்நாடக தமிழ் மக்கள் துன்பப்படும் போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

நடுவன் அரசு கர்நாடகவில் மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://www.tamilwin.com/statements/01/117428?ref=morenews

 

  • தொடங்கியவர்

கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை கண்டனம்

இந்தியா- கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்களை பாதுகாப்பதற்கு தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் முதலமைச்சர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் மேற்படி விடயம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோர் மேற்படி கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன், நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் குறிப்பிடுகையில்,

கர்நாடக நதி நீர் பிரச்சினையை தொடர்ந்து கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தின் தலைவர் தாமோதரம்பிள்ளையுடன் பேசியிருந்தோம். அவர்கள் கூறியிருக்கின்றார்கள். நிலைமை தொடர்ந்தும் பதற்றமாக உள்ளதாகவும், படையினர் மற்றும் மேலதிக துணைப்படையினர் அழைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுள்ளார்கள்.

கர்நாடக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிகம் குரல் கொடுத்தவர்கள். அந்தவகையில் அங்கே அவர்கள் தாக்கப்படுகின்றபோது அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமை ஈழ தமிழர்களுக்கு உள்ளது. அந்தவகையில் ஈழ தமிழர் சார்பில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் இந்த விடயத்தில் இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என கோரினர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக நாளை வடக்கில் உள்ள அனைத்துக்கட்சிகளையும் கூட்டி தீர்மானம் ஒன்றை எடுத்து அதனை இந்திய தூதரகம் ஊடாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் ஊடாக இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

http://www.tamilwin.com/community/01/117431?ref=home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையள் ஏதும் கண்டன அறிக்கை ஏதாவது விட்டவையோ? :unsure:

அதுதான்   கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்குடி எண்டு லெக்சன் கேட்டு வெண்டு கொழும்புக்கு போச்சினமே எங்கடை அவையளை சொன்னன் :cool:

நான்  ஒரு  இரண்டு   மணித்தியால  உண்ணாவிரத  இருக்க  போகிறேன் tw_blush:

  • தொடங்கியவர்
21 minutes ago, அஞ்சரன் said:

நான்  ஒரு  இரண்டு   மணித்தியால  உண்ணாவிரத  இருக்க  போகிறேன் tw_blush:

கருணாநிதியின் பிழைப்பு என்னாகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில் சகுனி  வேலை செய்து ஒரு விடுதலைப் போராட்டத்தை   நாசம் செய்தவர்களுக்கு, தன் வீட்டுப்பிரச்சனையை தீர்க்க வழி தெரியலையோ, அல்லது தமிழன்தானே செத்து மடியட்டும் என்கின்ற நினைப்போ?  இந்தியாவை  கூறு போடும் நிலைக்கு ஆரம்பமாகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் தெலுங்கன் தெலுங்கனாக கன்னடன் கன்னடனாக மலையாளி மலையாளியாக வாழ தமிழன் எங்குபோனாலும் அகதியாகவே வாழ்கிறான் .......

CsMfzy-UsAATzJk.jpg

  • தொடங்கியவர்

தமிழகச் சகோதரனுக்கு இலங்கைத் தமிழனின் இணைய மடல்!!

அன்புச் சகோதரனே!

காவிரி நீரைத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்வைத் தந்தது. எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நீர் கிடைக்கும்: விளை நிலங்கள் செழிக்கும்: விவசாயிகளின் ஏழ்மையும் தற்கொலை வீதமும் குறையும் என்ற மகிழ்ச்சிதான்.

அடுத்து கன்னடத்தில் கலவரம்: தமிழ் பதாகைகள் கொண்ட வியாபார நிலையங்கள் பேரூந்துகள் அத்தனையும் சேதம்: தமிழர்களைத் தேடித்தேடி அடி: போன்ற செய்திகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்றன. இருக்காதா என்ன? முள்ளிவாய்க்கால் சோகம் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது.

எண்ணற்ற உயிர்ச்சேதம், தியாகம் அத்தனைக்கும் முடிபு கிடைக்கவில்லை. உரிமை கேட்டுக் களமாடி உயிரை மாய்த்த உன்னதர்களின் கனவுகள் சாம்பலானது. இப்படியிருக்கையில் தண்ணீர் கேட்டுத் தொடர்ந்த வழக்கு வெற்றிபெற்றால் மட்டும் தண்ணீர் கிடைத்திடுமா என்ன? சகோதரா! தமிழனாய்ப்பிறந்ததால் இன்னமும் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ? இதற்கு காரணமான நமது ஒற்றுமைக் குறைவு எம்மை எந்த அளவுக்கு வேதனைப் படுத்துகிறது என்று உணர்ந்து கொள்வாயா? தொப்புள்கொடி உறவு நாங்கள் என்று நீதான் எமையழைத்தாய். அந்த உறவுகள் இறுதியுத்தத்தின் போது உன்னை நோக்கி ஓலமிட்டதனை நீ ஞாபகப்படுத்திப் பார்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சூடுபிடித்திருந்ததனால் அதனோடு நீ மெய்மறந்து போனாய் போலும், எம் சகோதரிகள் தமிழகத்து சின்னத்திரையின் கற்பனைக் காவியங்களுக்காகக் கண்ணீர் சிந்தியதால் எம் கதறல்கள் கேட்டிருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கவில்லை போலும். அன்றில் புரட்சியும் போராட்டமும் தமிழ் திரையிலக்கியங்களுக்கு மட்டும் தான் பொருந்துமென்று நினைத்தாயோ என்னவோ? இந்தச் சூழலில்தான் அண்ணன் முத்துக்குமாரன் தீக்குளித்தான். அப்போதும் அத்தீ உன்னைச் சுட்டிருக்கவில்லை.

அவ்வப்போது நடைபெற்ற உண்ணாவிரதம், சாலைமறியல், மாணவர்கள் பகிஸ்கரிப்பு, மனிதச்சங்கிலிப் போராட்டம் யாவும் சமூக வலைத்தளங்களை அலங்கரித்தன. தமிழ்ச் சமூகத்திற்கு ஏன் பயனற்றுப் போனதென அறிவாயா?

அரசியல் பலம் உன்னை சிந்திக்க விடவில்லை. அம் மாயை உன்னை நீயே ஒளிந்து கொள்ளச் செய்தது. அன்றொருநாள் நிகழ்ந்த உண்ணாவிரதமும் உன் மத்திய அரசின் அறிவிப்பும் கூட உன்னைச் செயற்படத் தூண்டவில்லை. எம் கண்ணீர் கதறலுக்கும் பாக்கு நீரிணைக்கும் உன்னால் வேறுபாடு காண முடிந்திருக்கவில்லையோ யாமறியோம்.

இப்பினும் நாம் மறந்துவிட்டோம். என்றைக்கும் நீ கூறிய தொப்புள் கொடி உறவுகள் தான் நாங்கள். நாதியற்ற நாம் உனக்காக ஏதும் செய்ய இயலாது. உன் நாடு ஜனநாயக நாடு என்று புகழ்கொண்டது. எனவே உன்னை உசுப்பிவிட முடியும். விழித்தெழு! உன் முப்பாட்டனும் காவிரித் தாயின் முலை பருகி வளர்ந்தவன் என்பதனை அனைத்து மாநிலங்களும் உணரச் செய், உனக்கும் உரிமை உண்டென்று உரத்துச் சொல், புறப்படு! புறநானூற்றின் வீரத்தைப் புரட்டிப்பார்ப்பதை நிறுத்தி விட்டு உலகுக்கு உணர்த்த வேண்டாமா? தலையிடு! அரசியல் தலைவர்களின் அசமந்தப்போக்கினைத் திசை திருப்ப வேண்டாமா?

ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும். உன் போராட்டம் அண்டை மாநிலத்தில் வாழும் உன் சகோதரர்களைப் பாதித்து விடக்கூடாது. எனவே வன்முறை வேண்டாம்! அதற்காக உன் போராட்டத்தின் வலிமையைக் குறைத்துவிடாதே. வெறுமனவே வந்தாரை வாழவைத்து தம் வாழ்வைத் தொலைத்த எம் பாட்டன்கள் போல் இருந்து விடக்கூடாது. வாழ்வை உன் மாநிலத்தில் பிழைக்க வந்த கன்னடர்களைப் பாதுகாத்து உன் பண்பாட்டையும் வாழ வை.

சந்தர்ப்பவாதிகளுக்கும், பொதுநலவாதிகளாகத் தம்மை வெளிக்காட்ட நினைப்பவர்களுக்கும், அசட்டு அரசியலுக்கும் அடிபணிந்து விடாதே! உன் போராட்டம் நியாயமானது. மத்திய மாநில அரசுகள் கதிகலங்கட்டும். உன்னை இழந்து விடாது போராடு. இவ்வாண்டு இறுதிக்குள் நிரந்தர தீர்வைத்தரட்டும். காவிரி நீரை உன் சந்ததி பருகட்டும்!.

அன்புடன் உன் ஈழத்துச் சகோதரன்.

http://www.tamilwin.com/community/01/117492?ref=home

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இவையள் ஏதும் கண்டன அறிக்கை ஏதாவது விட்டவையோ? :unsure:

அதுதான்   கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்குடி எண்டு லெக்சன் கேட்டு வெண்டு கொழும்புக்கு போச்சினமே எங்கடை அவையளை சொன்னன் :cool:

காவிரி நீரைத் தமிழக மக்களுக்குத்  திறந்து விட வேண்டுமென்று தீர்ப்பளித்த நீதிமன்றத்தின் செயலினால் தான் இத்தனை கலவரங்களும் நடந்தன.ஆகவே நீதிமன்றத்தின் இந்தச் செயலைக் கண்டிக்கின்றோம்.
,,,,,இப்படிக்கு நல்லிணக்கத் தாலியறுப்பார் கூட்டமைப்பு ,,,,:100_pray:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த ஈழ தோழர்கள் அனைவரும் அறிய வேண்டியது..!!

..கர்னாடக பொன்னி அரிசி  ( KBT). . இந்த  அரிசி அரசியல் ....இதை இங்கு திட்டமிட்டு செய்கிறார்கள்... 60 நாளில் விளையுமாம்!! ஆனா.. அவுங்க பயிர் செய்ய மாட்டங்களாம்.. !!  நாங்கள் செய்யணுமாம்.. !!அதை விடுவம் .. அந்த 60 நாட்களும் தண்ணீரும் குடுக்க மாட்டார்களாம் ..!! பெங்களூரு தக்காளி.. வந்தபின் ..தமிழ்நாட்டு நாட்டு தக்காளி போன வழியே தெரியல..!!  இந்த மரபணு மாற்றம் அல்லது ஒட்டுண்னி வேலைகள் செய்வதே இவுங்கதான்... வெள்ளை கத்திரிக்காய் புடலங்காய் சைலு இங்க இருக்கு.. !! கருப்பு கத்திரிக்காய் பூசணிக்காய் மாதிரி இருக்கு.. !! பெயருக்குதான் வேர்கடலை.. இப்போ எல்லாம்  வேர்கடலை வேர் விட்டு பாயுதா.. ? எல்லாம் கொத்து கடலை..!   இதை சொல்வதற்கும் காரணம் இருக்கு .. அங்கும் ( ஈழம் ) ரோடு வேலை.. ரயில்... etc..   நன்மை செய்கிறம்  பேர்வழி என்று  கிந்தியன் உள்ள நுழைந்துவிட்டான் .. ஆமை பூந்த கிணறும்  அமினா புகுந்த வீடும் உருபடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்..!  இவனுங்கள நம்பினா.. நடுத்தெருவில் பிச்சைதான் எடுக்கணும் ...!!  உங்களின்ட பாரம்பரிய பயிர்களை / விதைகளை பராமரியுங்கள்..

டிஸ்கி

(KBT)  கர்னாடக பொன்னி அரிசி  ... நந்தினி பால் வகையறாக்கள்...  மற்றும் குறிப்பாக இந்த மைசூர் சேண்டல் சோப்பு ..அப்புறம் மைசூர் பருப்பு .. பெல்லாரி வெங்காயம் ..  பெங்களூரு தக்காளி..  இதை தவிர்க்குமாறு ஈழ தோழர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்... நீங்கள் வேறு எந்த நாட்டு தயாரிப்புகளையும் வாங்கி .. உபயோகியுங்கள்...!!

 

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் விளைச்சலை சந்தைப்படுத்தவும், தமிழனை கையேந்த வைக்கவும், இயற்கை இனாமா  தந்த கொடையை வைத்து சதிராட்டம் போட்டு, அந்த இயற்கையே ஒரு நாள் இவர்களை தண்டிக்க வழிகோலுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.