Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாதி கொலை வழக்கு: சிறையில் ராம்குமார் மர்ம மரணம்

Featured Replies

சுவாதி கொலை வழக்கு: சிறையில் ராம்குமார் மர்ம மரணம்

ramkumar.jpg

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். 

புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்  கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி  செய்துள்ளார்.  சிறையில் ப்ளக் பாய்ண்ட்டில் (லைட் எரிய பயன்படுத்தும் இணைப்பில்) வரும் வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை. சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24-ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1-ம் தேதி நெல்லையில் ராம்குமார்  கைது செய்யப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது

http://www.vikatan.com/news/crime/68524-swathi-murder-case-suspect-ramkumar-dead.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ராம்குமார்  தற்கொலை செய்ய வாய்ப்பே... இல்லை. - ராம்குமாரின்  வக்கீல் -

  • தொடங்கியவர்

ராம்குமாரை போலீசே கொன்று விட்டது: பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில் கருத்து

 

 

சென்னை: சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரை போலீசே திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக தனது பேஸ்புக்கில் பிரான்ஸ் தமிழச்சி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வருபவர் பிரான்சில் வசித்து வரும் தமிழச்சி. இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

Tamizachi accuses police on Ramkumar's death

 

இது தொடர்பாக பிரெஞ்ச் தமிழச்ச்சி தனது பேஸ்புக் பக்கத்தில், 'சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது' என்ற தலைப்பில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

Tamizachi accuses police on Ramkumar's death

சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையின ர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

 

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையின ர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamizachi-accuses-police-on-ramkumar-death-263097.html

  • தொடங்கியவர்

சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர் - ராம்குமாரின் தந்தை குற்றச்சாட்டு

 

 

சென்னை: புழல் சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர் என்று சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1ம் தேதி போலீசார் கைதுசெய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.

 

ராம்குமாரை போலீசார் கைது செய்யும் போதே அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். ராம்குமார் கொலையாளி இல்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது கையெழுத்து பரிசோதனை செய்யவும் போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் தான் சுவாதியைக் கொலை செய்யவில்லை என்றும், கையெழுத்து பரிசோதனைக்கு உடன்படமாட்டேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்தார்.

They have killed my son, says Ramkumar's father

ராம்குமார் மீது அடுத்தவாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருந்த நிலையில் இன்று புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றாதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராம்குமார் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். மருத்துவமனைக்கு வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.

 

இது குறித்து ராம்குமாரின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது. டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் தந்தை, தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரை போலீசார்தான் சிறையில் கொன்று விட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருந்து தனக்கு வந்த தகவலில் உடல்நிலை சரியில்லாமல் தனது மகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவே கூறினர் என்றும் பரமசிவம் தெரிவித்தார். ராம்குமாரின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்ற பின்னரே பிரேத பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ராம்குமாருடன் சிறையில் இருந்தவர்கள் யார் யார் என்றும்,

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/they-have-killed-my-son-says-ramkumar-s-father-263095.html

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை முடித்துவிட்டார்கள்..!

  • தொடங்கியவர்

நாளை ஜாமீன் மனு, ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை ... திடீரென ராம்குமார் தற்கொலை செய்தது ஏன்?

 

 

 சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் 1 வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டிருந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ராம்குமாரை புழல் மத்திய சிறையில் வைத்து போலீசார் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதேபோல, ராம்குமாரின் கையெழுத்தை பரிசோதித்து பார்க்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இதனையடுத்து மாஜிஸ்திரேட் கோபிநாதன் முன்பு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மாஜிஸ்திரேட் கோபிநாத், ராம்குமாரிடம் உங்கள் கையெழுத்து மாதிரியை எடுத்து, பரிசோதனை நடக்க உள்ளது, அதற்கு சம்மதிக்கிறீர்களா? என்று கோபிநாத் கேட்டார். உடனே கையெழுத்து பரிசோதனைக்கு நான் சம்மதிக்கவில்லை என்று ராம்குமார் மறுத்தார். மேலும் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் கூறினார்.

Why Ramkumar commit suicide as his bail plea is coming up tomorrow?

அதையடுத்து அரசு உதவி வழக்கறிஞர், சரி நீங்கள் கூறுவதை அப்படியே எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் எனக் கூறியதும் ''நான் கையெழுத்திட விரும்பவில்லை'' எனக் கூறி நீதிமன்ற ஆவணங்களில் கைப்பட எழுதிக் கொடுத்த ராம்குமார் அதில் கையெழுத்தும் போட்டார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் ராம்குமாரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். ஜூலை 1ம் தேதி ராம்குமார் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முதலாக நீதிமன்றத்தில் தன் மீதுள்ள குற்றச்சாட்டை நேரடியாக மறுத்தார். அதே நேரத்தில் இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றத்தை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் உள்ளன என்றும் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர். சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்தபோது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும், தற்போது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும் ஒன்றிப்போகிறதா என்பதை அவர் கையெழுத்து போட்டதையே ஆதாரமாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி குற்றச்சாட்டை உறுதி செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தக் கொலையில் பல உண்மைகளை போலீசார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர். பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது பெங்களூரு சென்ற தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் சுவாதி வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறியதோடு ராம்குமார் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதனிடையே சுவாதி கொலை வழக்கில் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருந்தனர். கொலை தொடர்பாக நண்பர் முகமது பிலால் உள்பட 6 சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ரத்த மாதிரி உள்பட 28 தடயங்களை சமர்ப்பிக்க காவல்துறை முடிவு செய்திருந்தனர்.

 

சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த கொலையில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் கூறிவந்த நிலையில் ராம்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை. சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்.

 

மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள். மின்சாரத்தை தன் உடம்பில் ராம்குமார் பாய்த்துக்கொண்டதாகவும் சிறைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுவாதி கொலை வழக்கும், ராம்குமாரின் தற்கொலை வழக்கும் எந்த திசையில் பயணிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-ramkumar-commit-suicide-as-his-bail-plea-is-coming-up-tomorrow-263098.html

  • தொடங்கியவர்

ராம்குமார் கைது முதல், மரணம் வரை...!

Ramkumar.jpg

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் ஒரு மாலைபொழுதில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்கிறது... இந்த 80 நாளில் ராம்குமார் வழக்கில் என்ன நடந்தது?.

 

ஜூன் 24 ஆம் தேதி,  மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6. 40 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் கொலை செய்யப்பட்டார்.  சென்னையில், அதுவும் மக்கள் அதிகம் கூடும்  ஒரு பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை, தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   

ஜூன் 27 ஆம் தேதி, இந்த கொலை வழக்கு, ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதே நாளில், ஒரு சிசிடிவி வீடியோவை, காவல்துறை வெளியிட்டது.   

ஜூலை 1, திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில்  ராம்குமார் (22) என்ற இளைஞனை,  சுவாதி வழக்கு தொடர்பாக காவலர்கள் கைது செய்தனர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்காக ராம்குமார்  தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக போலீஸார் கூறினர்.  உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 4, அதிகாலை 3 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். அதே நாளில் எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட்  முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க   மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.   மருத்துவ சிகிச்சை  தேவைப்பட்டதால், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 5, மாலை 4 மணி அளவில் ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஜூலை 6,  ஜாமீன் வேண்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் பதிந்த ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜுலை 12,  காலை 10. 30 மணி அளவில் நடந்த அடையாள அணிவகுப்பில், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமாரை அடையாளம்  காட்டினார்.

ஜூலை 13, ராம்குமாரை மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தார். புதன்கிழமை மாலை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு சென்றார்.

ஆகஸ்டு 19, ராம்குமாரின் அம்மா புஷ்பம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

செப்டம்பர் 2,   சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ramkumar%20dead.jpg

 

செப்டம்பர் 18, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்  கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தகவல்.

http://www.vikatan.com/news/tamilnadu/68526-ramkumar-from-arrest-to-death.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை,வசனம்,டைரக்ஷன் இசை எல்லாமே  யாரோ ஒருவர் கச்சிதமாக செய்திருக்கிறார்...........வாவ்.
இந்தியாவா கொக்கா!!!!!!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ பொறுத்த அரசியல் தலை ஒன்று 
சுவாதியை பாலியல் பல்தகாரம் செய்த்திருப்பதாகவே தோன்றுகிறது ...

அவர் இணையமூலம் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் 
லாப்டாப் காணாமல் போயிருக்கிறது 

தம்பிக்கும் சுவாதிக்கு உண்மையான காதல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது 
அடுத்த வாழ் வெட்டு தனக்கு என்று புரிந்த  தம்பி ஓடியிருக்கலாம்.
அது அவர்களுக்கு இன்னமும் சாதகமாகி போயிருக்கிறது.

  • தொடங்கியவர்

மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம் : பீதியில் பொலிஸார்.!

Published by RasmilaD on 2016-09-19 11:19:16

 

ramkumar-wrote-a-letter-to-private-news-

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் நேற்று மரணமடைந்தார். இது தற்கொலை என்று பொலிஸார், சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டாலும், பலரும் இது கொலை என சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கடந்த 10ஆம் திகதி சிறையில் உள்ள ராம்குமாருக்கு அவரது வழக்கறிஞர் மூலம் அனுப்பி ஒரு கடிதத்தை அனுப்பி ராம்குமாரின் பதிலை பெற்றுள்ளது. 

தற்போது ராம்குமார் இறந்துவிட்டதால், சிறையில் இருந்து ராம்குமார் அனுப்பிய அந்த கடிதத்தை அந்த தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்களால் பொலிஸார் பீதியில் உள்ளனர்.

அந்த கடிதத்தில், சுவாதி என்ற பெண் யாரென்றே எனக்கு தெரியாது நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் என்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் யாரையும் எனக்கு முன்னதாக தெரியாது என கூறியுள்ளார். சுவாதியை நான் பின் தொடர்ந்து செல்லவில்லை. இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலாலையும் எனக்கு தெரியாது.

உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் என்னை கைது செய்ய வந்தபோது பொலிஸாரே எனது கழுத்தை அறுத்தனர். இந்த கொலையின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். என பல்வேறு பரபரப்பு தகவல்களை ராம்குமார் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/11491

 

Breaking Now

 

ராம்குமாரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.. நீதிபதி சந்துரு 
பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மத்தியில் ராம்குமார் தற்கொலை என்பது சந்தேகமாக உள்ளது - சந்துரு 
திட்டமிட்ட மரணம் போல இது தெரிகிறது - நீதிபதி சந்துரு சந்தேகம் 
ராம்குமார் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வக்கீல் விஜயேந்திரன் கோரிக்கை 
ராம்குமார் மரணம்- சிபிஐ விசாரிக்க கோரும் மனு மீது ஹைகோர்ட்டில் பிற்பகல் விசாரணை 
ராம்குமாரின்பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை 
ராம்குமாரின் வக்கீல் விஜயேந்திரன் கோரிக்கையை ஏற்று நீதிபதி சிவஞானம் உத்தரவு 

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

ராம்குமார் மரணத்தைத் தழுவிய 'அந்த' நிமிடங்கள்..! புழல் சிறையில் நடந்தது என்ன?

ramkumar%20long%202.jpg

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், நேற்று மாலை 4 மணியளவில் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தெரிவித்தது. அவரது உடல் சென்னை ராயபேட்டை அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் எப்படி இறந்தார் என்று சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

"ராம்குமார், விசாரணை கைதி எண் 2ல் டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் வெங்கடேசன், இளங்கோ ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். ராம்குமார், ஏற்கனவே தற்கொலை முயன்றதால் அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் குடிப்பதாக சென்ற ராம்குமார், அங்குள்ள சுவிட்ச்பாக்ஸை வாயால் கடித்து உடைத்து அதில் உள்ள மின்கம்பியை கடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியவுடன் அலறியுள்ளார். இதைக்கேட்டு சக கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சமயத்தில் சிறைக்காவலர் பேச்சிமுத்து அங்கு வந்துள்ளார். ராம்குமாரை மின்சாரம் தாக்கியதையறிந்த அவர், கையில் இருந்த லத்தியால் அவரை தாக்கினார். இதன்பிறகு அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வாக்கி டாக்கியில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறை மருத்துவமனை டாக்டர் நவீன், ராம்குமாரை பரிசோதித்து அவருக்கு முதலுதவியை அளித்தார். 
இதையடுத்து அங்கிருந்து சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனை டாக்டர், சையது அப்துல்காதர், ராம்குமாரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் கடந்த சில தினங்களாக பழுதடைந்து காணப்பட்டுள்ளது. அதை சரி செய்ய சிறையில் உள்ள எலெக்ட்ரீசனிடம் சொல்லியும் அவர் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 அடி உயரத்தில் உள்ள அந்த சுவிட்ச் பாக்ஸ் பழுதடைந்து இருந்ததால் அதை எளிதில் ராம்குமார் உடைத்துள்ளார். மேலும் அந்த பிளாக்கில் உள்ள சி.சி.டி.வி கேமராவும் பழுதடைந்துள்ளதாம். இதனால் ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை" என்றனர்.

இன்று காலை சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் அமைதியாக இருந்துள்ளனர். அடுத்து சிறைக்காவலர் பேச்சிமுத்து, மற்றும் விசாரணை கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில தகவல்களை மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி குறிப்பு எடுத்துள்ளார். இது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி கொடுக்கும் அறிக்கையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில் ராம்குமாருடன் தங்கிய விசாரணை கைதிகளிடம் நடத்திய விசாரணையிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள், ராம்குமார், கடந்த இருதினங்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். மனஇறுக்கத்தில் இருந்த அவர், நேற்று காலை மட்டுமே சாப்பிடச் சென்றார். மதியம் சாப்பிடச் செல்லவில்லை. மாலை 4 மணியளவில் வெளியே சென்ற அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்ததால் அருகில் எங்களால் செல்ல முடியவில்லை. மெயின் சுவிட்சை ஆப் செய்ய சில கைதிகள் ஓடினார்கள். அதற்குள் சிறைக்காவலர்கள் வந்து ராம்குமாரை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு சிறைக்காவலர் சொன்ன தகவல் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'சார்... ராம்குமாரை காப்பாற்றுங்கள் என்று நாங்கள் சத்தம் போட்டோம். அப்போது அவர், என்னையும் அவனுடன் சேர்ந்து சாகச்சொல்கிறாயா' என்றார். இதனால் அனைவரும் அமைதியாகி விட்டோம்" என்றனர்.

இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை புழல் சிறையில் 6 ஹை அலர்ட் பிளாக்குகள் உள்ளன.  ஒவ்வொரு பிளாக்கிலும் 8 செல்கள் உள்ளன. அவற்றில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. ராம்குமார், சிறைக்காவலர் அமர்ந்திருந்த பெஞ்ச்யை பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணை நடந்து வருவதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/68544-ramkumar-death-what-exactly-happen-in-puzhal-jail.art

  • தொடங்கியவர்

ராம்குமார் மர்ம மரணம்...சந்தேகங்களை அடுக்கும் வழக்கறிஞர்கள்!

ram1.jpg

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் மரணம் பலவித சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. காவல்துறை எழுதிய கதையில் கனகச்சிதமாக க்ளைமேக்ஸை அமைத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

புழல் சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், நேற்று மாலை 4. 34 மணியளவில் அங்குள்ள சமையலறையின் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை வட்டாரம் ராயப்பேட்டை மருத்துவமனை நோயாளிக் குறிப்பில் கச்சிதமாக தெரிவித்திருக்கிறது. இதனிடையே ராம்குமார் மர்ம மரணம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்களுக்கு எழும் இயல்பான கேள்விகளை காவல்துறையை நோக்கி வீசிவருகின்றனர்.

ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்பதற்கு ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள் வழக்கறிஞர்கள் மனோகரன் மற்றும் கி.நடராஜன் இருவரும். இதில் கி.நடராஜன் பல்வேறு மனித உரிமைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். விசாரணைக்கைதியாக 6 முறை சிறையில் கழித்தவர்.

puzlalprison.jpg" ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஸ் பார்க்கச் சென்ற சில சமயங்களில் நானும் சென்று அவரை சந்தித்திருக்கிறேன். அப்போது அவருடன் உரையாடியும் இருக்கிறேன். வழக்கின் ஆரம்பத்தில் அவரிடம் ஒரு பதற்றமும் பரபரப்பும் தென்பட்டது. தான் நிரபராதி என வலியுறுத்தியிருக்கிறார். கொஞ்சநாளில் அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார். நான் அவரை சந்தித்த சமயங்களில் அவரிடம் தான் சிறையிலிருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவரது பேச்சிலோ நடத்தையிலோ எந்த குழப்பமும் தென்படவில்லை. வெகு இயல்பாக இந்த வழக்கு குறித்து அவர் பேசுவார். அவரிடம் துளியும் பயமோ குழப்பமான மனநிலையோ தென்பட்டதில்லை. தற்கொலை செய்துகொள்வார் என்று சொல்வதற்கான அறிகுறிகள் துளியும் தென்படவில்லை. உண்மையில் வழக்கில் இருந்து விடுதலையானபின் தனது எதிர்காலம் குறித்து திட்டமிட்டு வைத்திருந்தார். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்கமுடியாது.

பொதுவாக சிறையில் உள்ள கட்சிக்காரரை நாங்கள் பார்க்கச் செல்லும்போது அவர்களிடம் உரையாடும்போதே அவர்களின் மனநிலை தெளிவாக புரியும். பேச்சிலோ மனநிலையிலே ஒருவித குழப்பம் தெரிந்தால் அங்குள்ள கண்காணிப்பாளரிடம் அவரை கண்காணிக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். ஆனால் ராம்குமாருக்கு தான் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை ஆரம்பித்திலேயே வந்துவிட்டது.

அவர் தற்கொலை முடிவு எடுக்கும்படியான எந்த அவசியமும் அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்படவில்லை. அவரது பேச்சிலும் சோர்வோ விரக்தியோ துளியும் இல்லை. பொதுவாக கொலைவழக்கின் குற்றவாளிக்கு 90 நாட்களுக்குள் குற்றச்சாட்டு வனையவில்லை என்றால் சட்டப்படி நீதிபதி அவருக்கு பிணை வழங்குவார். ராம்குமார் வழக்கில் இன்னமும் அதை செய்யவில்லை என்பதால் சில நாட்களில் தான் வெளியே வருவோம் என்பதில் நிரம்ப மகிழ்ச்சியிருந்தது. சிறையிலும் தனக்கு தொந்தரவில்லை என்று தெரிவித்திருந்தார். அதே நம்பிக்கையோடே எங்களிடம் அவர் பேசினார்.

advmano.jpgபொதுவாக சிறைச்சாலையில் தண்டனைக்கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியே பராமரிக்கப்படுவார்கள்.  ராம்குமார் விசாரணைக்கைதி என்பதால் சென்சிடிவ் வழக்கு என்பதாலும் உயர் பாதுகாப்பு கொட்டடி எனப்படும் அறை எண் 2ல் டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். ராம்குமார் இருந்த அறையைப்பொறுத்தவரை அவர் எளிதாக எல்லா இடங்களுக்கும் போய்விடமுடியாது. அவர் 24 மணிநேரமும் அதிகாரிகள், வார்டன்கள் கான்ஸ்டபிள்கள் சுற்றிவந்துகொண்டே இருப்பர். யாரும் ஏணிப்போட்டாலும் உங்களைால் சுவற்றினை எட்டிப்பிடிக்க முடியாது. கைதியின் பாதுகாப்பிற்காக சிறையில் அவரை சந்திப்பவர்களை கூட உள்ளாடை முதற்கொண்டு பரிசோதித்து அரைஞான் கயிற்றைக்கூட அறுத்துக்கொண்டுதான் அனுமதிப்பர்.

அப்படிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட சிறையில் ஒருவன் 10 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சுவற்றில் உள்ள மின் ஒயரை எட்டிப்பிடித்து கடித்து தற்கொலை செய்துகொண்டான் என்பதை குழந்தை கூட நம்பாது. அதற்கான கட்டமைப்பே சிறையில் கிடையாது. கைதிகள் தப்பிச்செல்லும் அபாயம் இருப்பதால் சிறையின் கட்டமைப்பை அப்படி அமைப்பர். 2 கைதிகள், சில காவல் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் கண்காணிப்பில் உள்ள ராம்குமாரை குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் நடமாட அனுமதிக்கமாட்டார்கள்.

சாதாரணமாக கட்சிக்காரர்களை வழக்கறிஞர்கள் அல்லது உறவினர்கள் சந்திக்கச் சென்றாலே மொத்தமாக ரிமாண்ட் கைதிகளை ஒன்றாக அமரச்செய்து பேச வைப்பர். ஆனால் ராம்குமார் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டவர் அதிகாரிகள் க்யு பிராஞ்ச் அதிகாரிகள் விஜிலென்ஸ் அதிகாரிகள் இருவர் என இத்தனை பேரின் மத்தியில்தான் பேசமுடியும்.  அதுவும் சிறை கண்காணிப்பாளர் அறையில் வைத்தே பேச அனுமதிப்பர்.

இப்படி ஒரு நடைமுறை உள்ள சிறையில் உயிரை இழப்பதற்கான கருவிகள் கொண்ட சமையலறையில  ஒரு கைதி குறிப்பாக ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட, உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சர்வசாதாரணமாக நுழைந்து  மேலே ஏறி ஒயரை பிடித்து கடித்தான் என்பது முற்றிலும் நம்பும்படியாக இல்லை.

உண்மையில் ராம்குமார் வழக்கில் பல உண்மைகள் மறைந்துள்ளன. இந்த வழக்கில் வேறு பலர் தொடர்புள்ளதாக கூறி தமிழச்சி,திலீபன் போன்ற சிலர் அதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துவருகின்றனர். ஒரு கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 167 (2) ன் கீழ் பெயில் மாஜிஸ்திரேட் பெயில் தரவேண்டும். வழக்கில் உள்ள பல குழப்பங்களால் காவல்துறையால் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. அதன்படி இன்னும் சில நாட்களில் ராம்குமாருக்கு பெயில் கிடைக்கும். மேலும் ராம்குமாருக்கு தண்டனை பெற்றுத்தரும் அளவு வழக்கில் அவர்களால் முன்னேற முடியவில்லை. வழக்கில் பல குழப்பங்கள் என்பதால் அவனுக்கு தண்டனை பெற்றுத்தர முடியாது என்ற முடிவுடன் இப்படி தற்கொலை நாடகமாடி வழக்கை முடித்துவிட்டார்கள்” என்றார் மனோகரன்.

ramkumardead.jpg

 

தொடர்ந்து பேசிய கி.நடராஜ் " 6 முறை விசாரணைக்கைதியாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். மிகவும் பாதுகாப்புமிக்க உயர் பாதுகாப்பு தொகுதியிலிருந்து ஒருவன் சமயலறைக்கு சென்று மின் ஒயரைப் பிடித்து கடித்தான் என்பது நகைப்புக்குரியது. அத்தனை எளிதாக யாரும் சமயலறைக்கு செல்லமுடியாது. அத்தனை பாதுகாப்பு மிக்கது ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த அறை“ என்றார் கி.நடராஜ்.

இதனிடையே வழக்கறிஞர் சங்கர சுப்பு, 'ராம்குமார் போஸ்ட்மார்ட்டம் நடக்கும்போது தங்கள் தரப்பில் 2 மருத்துவர்கள் உடனிருக்க அனுமதி வேண்டி மனு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுப்பதாக கூறி அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டார். 2.15 மணிக்கு இதன் மீது நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சார்பில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68560-advocates-raise-doubt-over-mysterious-death-of-ramkumar.art

  • தொடங்கியவர்

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை நாளை நடக்குமென அறிவிப்பு

 

புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் ராம்குமாரின் உடலுக்கு நாளை பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

 

 சென்னை உயர்நீதிமன்றம்

ராம் குமாரின் மரணம் குறித்து விசாரிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர் நேற்று மாலையில் மின்சார ஒயரை கடித்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராம்குமாரின் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தந்தை பரமசிவத்தில் சார்பில் இன்று (திங்கள் கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் 11-வது அமர்வு, பிற்பகலில் அவசர வழக்காக விசாரிப்பதாக அறிவித்தது.

அதேபோல பிற்பகலில் இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பரமசிவத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, இதுபோன்ற வழக்குகளில் அரசு மருத்துவர்கள் காவல்துறைக்குச் சாதகமாகவே அறிக்கை கொடுப்பதால் தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று கோரினார்.

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கென, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த செல்வகுமார், மணிகண்ட ராஜா, வினோத் ஆகிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ராம்குமார்

 ராம்குமார்

இவர்களோடு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியரான பாலசுப்பிரமணியனும் உடன் இணைந்து இந்த பிரேதப் பரிசோதனயை நடத்த வேண்டும்; அது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், ராம்குமாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தன் வரம்பிற்குள் வராது என்பதால், இதற்கான தகுந்த அமர்வில் இந்த வழக்கைத் தாக்கல்செய்ய நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மருத்துவமனைக்கு வந்தடைவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டதால் பிரேதப் பரிசோதனை நாளை நடக்குமென கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் நாராயண பாபு தெரிவித்திருக்கிறார்.

விசாரணைக்கு உத்தரவு

இதற்கிடையில் ராம்குமாரின் மரணம் குறித்த வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த மரணம் குறித்து, மூத்த அதிகாரி ஒருவரை வைத்து விசாரித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் விசாரணை பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரலுக்கு மனித உரிமை ஆணைய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-37406322

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ராம்குமார் அடைக்கப்பட்டது அந்த இடத்திலா..! வெளிவராத அதிர்ச்சி தகவல்

Ramkumar-%20Puzhal%20prison%20long.jpg


சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம் அடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரை தனிமைப்படுத்தியதே இறப்புக்கு காரணம் என்ற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ராம்குமார் அடைக்கப்பட்ட டிஸ்பென்சரி பிளாக்கில் 6 சிறை அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில்தான் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடன் இருந்த இரண்டு கைதிகளிடம் அவர் ஒருசில வார்த்தைகளை மட்டுமே பேசியுள்ளார். மேலும் ராம்குமாரிடம் சக கைதிகள் யாரும் பேசக்கூடாது என்பது சிறைத்துறை நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவு. இதனால் தனிமை அவரை கடுமையாக வாட்டியது. கடந்த வாரம் கூட ராம்குமாரிடம், கைதி ஒருவர் பேச முயன்றுள்ளார். அதைப்பார்த்த சிறைக்காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். ராம்குமாரை நேரில் சந்தித்தவர்களிடமும் இந்த தகவலை அவர் சொல்லி கதறியுள்ளார். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், மீண்டும் தற்கொலை செய்ய அதிக வாய்ப்புள்ளதாக உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அதை அதிகாரிகள் பெரிதாக கருதவில்லை. ராம்குமாரின் அறையை நேற்று மாலை 4 மணிக்கு சிறைக்காவலர் திறந்துள்ளார். அதன்பிறகு சிறைக்காவலர் அங்கிருந்து சென்று விட்டார். யாருமே அந்த பிளாக்கில் இல்லை என்பதை தெரிந்த ராம்குமார், தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்ததும், உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் தெரிவிக்கப்பட்டது."
 
ராம்குமார் விவகாரத்தில் கூடுதல் அதிர்ச்சித் தகவலை சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அதாவது, ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறை திருநங்கைகளை அடைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த திருநங்கைகளும் அடைக்கப்படாத நிலையில் அங்கு ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார்" என்றார்.

மின்சாரம் தாக்கிய ராம்குமார் தற்கொலை செய்ததாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்கிறார்கள் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்கள். "சிறையில் மின்சாரம் மூலம் தற்கொலை செய்தது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு தூக்கு, கழுத்தை அறுத்து, உயரமான இடத்திலிருந்து குதித்து, தலையை சுவரில் பயங்கரமாக மோதி என பல கைதிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் ராம்குமார், மின்சாரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கும் தகவல் நம்பும்படியாக இல்லை. எனவே ராம்குமார் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும். ஒரு சுவிட்ச் பாக்ஸை உடைக்க குறைந்தது இரண்டு நிமிடங்களாகும். அந்த நிமிடங்களுக்குப் பிறகு மின்கம்பியை வாயால் கடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய மன உறுதி என்பது எல்லோருக்கும் எளிதில் வராது. ஏனெனில் மின்சாரம் உடலில் பாய்ந்தவுடன் அதிலிருந்து விடுபடதான் பொதுவாக தற்கொலைக்கு முயல்பவர்களின் மனநிலை இருக்கும். அதுபோல ராம்குமாரின் மனநிலையும் இருந்திருக்கலாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் ராம்குமாரை கண்காணிக்கத் தவறியுள்ளது சிறை நிர்வாகம். டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ்கள் அனைத்தையும் யாரும் எளிதில் தொட முடியாது. லைட்டை ஆன் செய்ய வேண்டும் என்றால் கூட லத்தியைதான் சிறைகாவலர்கள் பயன்படுத்துவார்களாம். அப்படியிருக்கும் போது எப்படி வாயால் ராம்குமார், மின்வயரை கடித்தார் என்று சிறை சொல்வது நம்பும்படியாக இல்லை" என்றனர்.

ராம்குமார் மரணத்தில் பல மர்மமுடிச்சுக்கள் இருப்பதாக சிறைவாசிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ராம்குமாருக்கு நேர்ந்தது தங்களுக்கு நேரலாம் என்று பல சிறைவாசிகள் கருதுகின்றனர். இதனால் புழல் சிறையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் ராம்குமாரின் மரணத்துக்கு சிறை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று சிறைவாசிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரை கண்காணிக்க வேண்டிய காவலரின் மெத்தன போக்கே அவர் உயிர் இழக்க காரணமாகி விட்டது என்ற குரலும் மேலொங்கி நிற்கிறது. அவர் தற்கொலைக்கு முயலும் போதே சம்பந்தப்பட்ட சிறைகாவலர்கள் பார்த்திருந்தால் அதை தடுத்து இருக்கலாம். ஆனால் மின்சாரம் பாய்ந்த நிலையில் ராம்குமாரின் அலறல் மற்றும் சக கைதிகளில் சத்தம் கேட்ட பிறகே சிறைகாவலர்கள் அங்கு வந்துள்ளனர். இதன்பிறகே ராம்குமார் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை தற்போது மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/68562-mystery-behind-ramkumars-death.art

  • தொடங்கியவர்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் என் மகன் உடலை பெற்றுக்கொள்வேன்: ராம்குமாரின் தந்தை திட்டவட்டம்

 

 
ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு ஆறுதல் கூறுகிறார் திருமாவளவன். அருகில் ராம்குமாரின் சகோதரி ரோஸி.
ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு ஆறுதல் கூறுகிறார் திருமாவளவன். அருகில் ராம்குமாரின் சகோதரி ரோஸி.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப் பதற்காக ராம்குமாரின் தந்தை பரமசிவம், சகோதரி ரோஸி இருவரும் நேற்று கடலூர் வந்தனர். அங்கு அவர்கள் திருமா வளவனை சந்தித்துப் பேசினர். பின்னர் ராம்குமாரின் தந்தை நிருபர்களிடம் பேசும்போது, ‘‘ராம் குமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவது தொடர்பாக திருமாவளவனைச் சந்திக்க வந்தேன். எனது மகன் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதிகாரிகள் அவனை கொலை செய்துவிட்டனர். சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டால் தான் எனது மகன் உடலை பெற்றுக்கொள்வேன்’’ என்றார்.

பின்னர் திருமாவளவன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த ராம்குமார் , ‘தற்கொலை செய்து கொண்டார்' என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சாவில் மர்மம் உள்ளது. ராம்குமாரின் சாவு தற்கொலை என்று கூறி சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முயல்கின்றனர். ராம்குமாரின் வழக்கறிஞர் கூறும் கருத்துகளை புறம்தள்ள முடியாது. சுவாதி கொலையையும், ராம்குமார் இறந்ததையும் விசாரிக்க சிபிஐ விசாரணை அவசியம் வேண்டும்.

ராம்குமார் இறந்தது தொடர் பாக உயர் நீதிமன்ற நீதிபதி இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். பேரறிவாளன் சமீபத்தில் சிறை யில் தாக்கப்பட்டார். இதில் எதிர்பாராமல் பேரறிவாளன் இறந் திருந்தால் அதனையும் தற் கொலை என்று கூறி போலீஸார் மறைத்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சிறையில் அதிகளவில் நடந்து வருகின்றன என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சிபிஐ-விசாரணைக்கு-உத்தரவிட்டால்தான்-என்-மகன்-உடலை-பெற்றுக்கொள்வேன்-ராம்குமாரின்-தந்தை-திட்டவட்டம்/article9126931.ece?homepage=true

  • தொடங்கியவர்

ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்கு மீண்டும் தடை

 

இளம்பெண் ஸ்வாதி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தபோது, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராம்குமார்

 

 தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமார்

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில், ராம்குமார் சிறையிலேயே மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில், திங்கட்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரிப்பதற்காக நேற்று பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, அரசு நியமித்த மருத்துவர் குழுவுடன் கூடுதலாக ஒரு மருத்துவரை நியமித்து பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், செவ்வாய்க் கிழமையன்று பிரேதப் பரிசோதனை நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராம்குமாரின் தந்தையின் சார்பில் இன்று மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது சார்பில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் பிரேதப் பரிசோதனைக் குழுவில் இடம்பெற வேண்டுமென கோரப்பட்டது.

இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை அனுமதித்தால், எல்லோரும் இதே போல கோரிக்கை விடுக்கக்கூடும் என அரசுத் தரப்பு கூறியது.

சிறையில் மரணம் நிகழ்ந்திருப்பதால், இந்த மரணத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதிகள் கூறினார். ஆனால், மனு மீது முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.

அதுவரை ராம்குமார் உடலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதில் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india-37415839

  • தொடங்கியவர்

ராம்குமார் கடைசியாக பேசியது இதுதான்..! சிக்கலில் சிறை அதிகாரிகள்

Ramkumar-%20Puzhal%20prison%20long.jpg

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள் தொடங்கி அவரது உறவினர்களும் சொல்கின்றனர். ராம்குமாரின் மரணம் இன்று விவாத பொருளாக மாறியிருந்தாலும் சிறைக்குள் ராம்குமார் உயிர் இழப்பதற்கு முன்பு கடைசியாக யாருடன் என்ன பேசினார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அன்றைய தினம் காலை உணவை மட்டுமே ராம்குமார் சாப்பிட்டார். அவர் அடைத்து வைத்திருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் ராம்குமாருக்கு 10க்கு 10 அளவு கொண்ட அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதே வரிசையில் கைதிகள் இளங்கோவும், வெங்கடேசனும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ராம்குமார், அறைக்குள்ளேயே பாத்ரூம் வசதி இருந்தது. எப்போதும் அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பார் அவர். யாருடனும் சரிவர பேச மாட்டார். அமைதியாக இருக்கும் அவருடன் சக கைதிகளும் பேச தயங்கினர். ஆரம்பத்தில் ராம்குமாரின் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்தனர். அதன்பிறகு அவரை கண்காணிப்பதில்லை. சிறையில் அடைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேலாகி விட்டதால் சிறை காவலர்கள் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபடத் தொடங்கினர். சில நேரங்களில் சிறை காவலர்கள், வார்டன்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வரியில் பதில் அளிப்பார்.

'சிறையிலிருந்து எப்போது வெளியே விடுவார்கள்' என்பது தொடர்பாகவே அவரது பதில் இருக்கும். இந்த சமயத்தில் கடந்த வாரம் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கின் வாராண்டாவில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசாரணை கைதி ராம்குமாரிடம் பேசி உள்ளார். அப்போது அந்த கைதி, 'ராம்குமாரிடம் கவலைப்படாதே தம்பி, எனக்கும் உங்க ஏரியா தான். முதல் தடவை வரும் போது இதுமாதிரியாகத் தான் இருக்கும். நீ கொலை செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும், இந்த வழக்கின் தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வரும்' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். அப்போது, 'எனக்கும், இந்த கேஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுவாதி யார் என்ற தெரியாது. வெளியில் சென்ற பிறகு இந்த வழக்கில் என்னை எப்படி சிக்க வைத்தார்கள் என்பதை மீடியாக்களிடம் சொல்வேன்' என்று நம்பிக்கையுடன் ராம்குமார், அந்த கைதியிடம் சொல்லி இருக்கிறார். இதற்குள் அங்கு வந்த சிறைக்காவலர் ஒருவர், இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். உடனடியாக ராம்குமார், தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

அந்த விசாரணை கைதி, நேற்று நடந்த மாஜிஸ்திரேட் விசாரணையின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்பிறகு மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, ராம்குமாரின் அறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் ஏன் அவரை தொடர்ந்து கண்காணிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர், ராம்குமார் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னார்,அறைக்கதவைத் திறந்துவிட்டேன். அந்த நேரத்தில் உயரதிகாரிகளிடம், வாக்கி டாக்கியில் அவசரமாக எனக்கு அழைப்பு வந்தது. இதனால் அங்கு சென்று விட்டதாக சொல்லியுள்ளார். இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்த சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் நேற்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விஜயகுமார், புழல் சிறைக்கு வந்தார். அவர், ராம்குமார் மரணம் குறித்து விசாரித்தார். இதன்பிறகு ராம்குமார் தங்கி இருந்த அறை, அவரது சிறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் மற்றும் பணியில் இருந்த சிறை வார்டன், அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா பழுது, பழுதடைந்த சுவிட்ச் பாக்ஸ் குறித்தும் விசாரணை நடத்தினார்" என்றனர். 

சுவாதி கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதை காரணம் காட்டி ராம்குமார் ஜாமீனில் வெளிவந்திருக்க வாய்ப்பு இருந்தது. அவ்வாறு ராம்குமார் வெளியில் வந்திருந்தால் சுவாதி கொலையில் உள்ள மர்மங்களும் வெளியில் வந்திருக்கும். ஆனால் அதற்குள் ராம்குமார் உயிர் இழந்து விட்டதால் அவருடன் சேர்ந்து இந்த கொலை வழக்கில் உள்ள மர்மங்களும் புதைந்து விட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரியிடம் பேசிய போது, "ராம்குமார் கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்த தகவலும் சொல்ல முடியாது. ஏ.டி.ஜி.பி, சிறைக்காவலரிடம் விசாரித்துள்ளார். விரைவில் பணி நேரத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/68612-ramkumars-final-words-prison-officials-in-trouble.art

  • தொடங்கியவர்

இந்த ஒயரைக் கடித்து தான் இறந்தாரா ராம்குமார்?

pic_vvvvvc12.jpg

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிவில் ராம்குமாரின் new_sep_vcvcvc7.jpgமரணத்தில் உள்ள சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

சிறையில் சுவரினுள் பதிக்கப்பட்ட மின் ஒயரை கடித்து ராம்குமார் எப்படி இறந்திருப்பார் என்ற சந்தேகம் முன்வைக்கப்படும் நிலையில், சிறையில் ராம்குமார் மின் ஒயரை கடித்த இடத்தை குறிப்பிடும் வகையில், ஸ்விட்ச் பாக்ஸ் படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸ் ஒயரை கடித்து தான் ராம்குமார் இறந்ததாக சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில் "இந்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின் வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை. அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தாலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான காயங்களும் ராம்குமாரின் உடலில் இல்லை. எனவே இந்த ஒயரை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை," எனவும் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை என்பதற்கு பிரேத பரிசோதனையில் தான் விடை கிடைக்கும். இந்த புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினோம். "இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ராம்குமார் தற்கொலை செய்தது உண்மை. இதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை," என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68623-did-ramkumar-bite-this-wire-in-prison.art

  • கருத்துக்கள உறவுகள்
On 18/09/2016 at 4:18 PM, இசைக்கலைஞன் said:

வழக்கை முடித்துவிட்டார்கள்..!

வழக்கை முடித்துவிட்டார்கள் தான்  இந்தய பாணியீல்...

ஆனால் இதன் தாக்கங்களும் விபரணங்களும் பல காலம் தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நவீனன் said:

இதில் எது உண்மை என்பதற்கு பிரேத பரிசோதனையில் தான் விடை கிடைக்கும். இந்த புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினோம். "இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ராம்குமார் தற்கொலை செய்தது உண்மை. இதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை," என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பிரேத பரிசோதனை நடைபெற்று அறிக்கை வருமுன்னர் இப்படி அதிகாரிகள் பேசுவது மேலை நாடுகளில் கிடையாது. ஏனென்றால் அவை பரிசோதனை முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

  • தொடங்கியவர்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை மேலும் தாமதம்

 

 
 
ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து. | கோப்பு படம்
ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து. | கோப்பு படம்

3-வது நீதிபதியின் உத்தரவுக்காக தீர்ப்பு தள்ளிவைப்பு

ராம்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவில் தனியார் மருத்துவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பாக உயர் நீதி மன்ற நீதிபதிகளுக்குள் மாறு பட்ட கருத்து ஏற்பட்டதால் வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தள்ளிவைக்கப் பட்டது. தீர்ப்பு வரும்வரை பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது.

‘எனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி ராம்குமாரின் தந்தை ஆர்.பரமசிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த தனி நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ராம்குமாரின் உடலை 4 அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். ராம்குமாரின் ரத்த சம்பந்த உறவினர்கள் யாரும் வராததால் நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, விஜேந்திரன் ஆகியோர் நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்திய நாதன் ஆகியோரைக் கொண்ட இரண்டாவது அமர்வில் ஆஜராகி, ‘‘ராம்குமார் உடல் பிரேதப் பரி சோதனையில் தங்களது சார்பில் ஒரு மருத்துவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று முறையிட்டனர். விசாரணையை மதியத்துக்கு தள்ளிவைத்த நீதி பதிகள், அதுவரை பிரேதப் பரி சோதனை செய்யக்கூடாது என உத்தரவிட்டனர்.

அதே அமர்வில் நேற்று மதியம் விசாரணை நடந்தது. வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆஜராகி, ‘‘சுவாதி கொலையின் உண்மைகளை மறைப்பதற்காக ராம்குமாரை போலீஸார் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடுகின்றனர். அரசு மருத்துவர்கள் ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்தால் உண்மையான காரணம் வெளியே வராது. அரசு மருத்துவர்கள் போலீஸாருக்குத்தான் சாதகமாக இருப்பர். எனவே, இந்த மருத்துவக் குழுவில் போரூர் ராமச்சந்திரா மருத் துவமனையின் தடய அறிவியல் துறை நிபுணரான மருத்துவர் பி.சம்பத்குமாரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிஷங்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ‘‘இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களிலும் அரசு ஒரே ஒரு மருத்துவரை நியமித்துதான் பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் அரசே முன்வந்து 4 அரசு மருத்துவர்களை பிரேதப் பரிசோதனை செய்ய நியமித்துள்ளது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லாததுபோல ஆகி விடும். இதுவரை என்கவுன்ட்டர், மறுபிரேத பரிசோதனை போன்ற அசாதாரண வழக்குகளில் மட்டுமே தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சிறைக்குள் நடந்த தற்கொலை. இதற்கு தனியார் மருத்துவர்களை அனுமதிக்க முடியாது’’ என அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஜ், ‘‘அப்படி யானால் இது அசாதாரணமான மரணம் இல்லையா? பிரேதப் பரி சோதனைக் குழுவில் மனுதாரர் தரப்பு கோரும் தனியார் மருத்து வரை அனுமதித்தால்தான் வெளிப் படைத்தன்மை, நம்பிக்கை ஏற்படும்’’ என்றார். அதற்கு சக நீதிபதியான எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரர் தரப்பு தாங்கள் பரிந்துரைக்கும் தனியார் மருத்துவர் பி.சம்பத்குமாருக்கு பதிலாக, அரசு மருத்துவர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

ஆனால், வழக்கறிஞர் ஆர்.சங்கர சுப்பு, ‘‘இந்த வழக்கில் எங்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை என்ப தால்தானே தனியார் மருத்துவரை சேர்க்க கோருகிறோம்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை அரசுத் தரப்பு கடுமையாக எதிர்த்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தரப்பில் நம்பிக்கை இல்லாதபோது மனுதாரர் கோரும் தனியார் மருத்து வர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வழிவகை உள்ளது. இது சிறைக்குள் நடந்த மரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

ஆனால், இதில் அரசுத் தரப்பு வாதப்படி தனியார் மருத்துவருக்கு பதிலாக அரசு மருத்துவரை 5-வது நபராக சேர்க்கலாம் என சக நீதி பதியான எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் எங்களுக்குள் ஒரு மித்த கருத்து இல்லாததால், நீதிமன்ற பதிவுத்துறை இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிட வேண்டும். அதுவரை பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது.

இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்புடையவை

http://tamil.thehindu.com/tamilnadu/உயர்-நீதிமன்ற-நீதிபதிகளின்-மாறுபட்ட-கருத்தால்-ராம்குமார்-உடல்-பிரேத-பரிசோதனை-மேலும்-தாமதம்/article9130751.ece?homepage=true

  • தொடங்கியவர்

ராம்குமார் இறந்தது இப்படித்தானா...?! சிறை வட்டார தகவல்

ramkumar%20new.jpg

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் சுவிட்ச் பாக்ஸை உடைத்து அதில் உள்ள மின்வயரை கடித்து தற்கொலை செய்ததாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பு சொல்கிறது. ஆனால், அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக உறவினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். இதற்கிடையில் ராம்குமார், தற்கொலைக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் சுவிட்ச்பாக்ஸ் படம் ஒன்று நேற்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்படம் எப்படி வெளியானது என்று சிறைத்துறை விசாரித்ததில் தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்தனர். அவர்கள் மூலம்தான் இந்தப்புகைப்படம் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் சிறைத்துறையினருக்கு உள்ளது.

இந்நிலையில், ராம்குமார் இறந்தது எப்படி என்று நேரிடையாக களத்தில் இறங்கினோம். அப்போது கிடைத்த தகவல் இது. ராம்குமார் மரணத்தை விவரித்தார் சிறைத்துறை உயரதிகாரி ஒருவர்.

"ராம்குமார் சிறைக்குள் அடைக்கப்பட்ட நாளிலிருந்து அவர் தற்கொலைக்கு முயன்ற நாள் வரைக்கும் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். சிறையில் ஒரு ஷிப்ட்க்கு 40 சிறைக்காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதில் சிலர் உயரதிகாரிகளுக்கு ஆர்டர்லி பணிக்காக சென்று விடுவர். மீதமுள்ளவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடந்த ஞாயிற்றுக் கிழமை 15 சிறைக்காவலர்கள் பணியில் இருந்தனர். பேச்சிமுத்து என்ற சிறைக்காவலரிடம், ராம்குமார், தாகமாக இருக்கிறது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக பேச்சிமுத்தும், கதவை திறந்துள்ளார். சிறை அறையிலிருந்து வெளியேறிய ராம்குமார், அந்த பிளாக்கில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் குடம் அருகே சென்று தண்ணீர் குடித்துள்ளார். இந்த சமயத்தில் பேச்சிமுத்து, அங்கிருந்து சென்று விட்டார். அப்போது, தண்ணீர் குடம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே உள்ள சுவிட்ச் பாக்ஸ் ஸ்குரு இல்லாமல் தொங்கி கொண்டு இருந்ததை ராம்குமார் பார்த்துள்ளார். உடனடியாக அதைப் பிடித்து உடைத்த ராம்குமார், அதிலிருந்து மின்வயரை இழுத்துள்ளார். பிறகு தன்னுடைய பற்களால் அந்த வயரை கடித்ததும் மின்சாரம் ராம்குமாரின் உடலில் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து, கையில் வைத்திருந்த லத்தியால் ராம்குமாரை தாக்கினார். இதன்பிறகு மின்சாரம் தாக்குதலிருந்து விடுவிக்கப்பட்ட ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிறைத்துறைக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிட்டது.

பணியில் கவனக்குறைவாக இருந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். ராம்குமாருக்கு மின்சாரத்தை குறித்த அனைத்து விவரங்களும் தெரியும். ஏனெனில் அவர் இன்ஜினீயரிங்கில் படித்ததே அந்தப் பிரிவுதான். இதனால்தான் அவர், தற்கொலைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் ராம்குமார், பிளேடால் தற்கொலைக்கு முயன்றார். அதிலிருந்து காப்பாற்றி சிறைக்குள் அடைத்தப்பிறகும் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்தோம். ஒருசில சிறைக்காவலர்களின் கவனக்குறைவால் இன்று ஒட்டுமொத்த சிறைத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் சிறைக்குள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

17 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல் ரகீம் கூறுகையில், "நான் சிறையில் உயர்பாதுகாப்பு வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது சிறை நிர்வாகம், நீதித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று சிறைத்துறை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதனால், எப்போது வேண்டும் என்றாலும் போலீஸார், விசாரணை கைதிகளிடம் விசாரிக்கும் சூழ்நிலை உள்ளது. இது விசாரணை கைதிகளுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும். போலீஸாரின் கட்டுபாட்டுக்குள் விசாரணை கைதிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளதால் வழக்கை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம். ராம்குமாரைப் பொறுத்தவரைக்கும் இந்த வழக்கில்தான் அவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள்ளேயே அவரிடம் போலீஸார் விசாரித்ததின் விளைவே அவரை கடுமையான மனஉளைச்சலுக்குள்ளாகி இருக்க வேண்டும். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற அவரை மீண்டும் தற்கொலைக்கு தூண்டியதே போலீஸ் விசாரணைத்தான்.

சிறையை பொறுத்தவரைக்கும் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இது சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தெரியும். சிறைக்குள் இருக்கும் மின்மோட்டார்களின் வயர்கள் தாழ்வான பகுதியில்தான் இருக்கும். அதன்மூலமாகக்கூட தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளது. சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்தும் மையமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிறைச்சாலைகள் குற்றங்களின் பிறப்பிடமாகவே மாறி வருகிறது. சிறைக்காவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். இதுவே ராம்குமாரை கண்காணிக்க முடியாததற்கு காரணம். மேலும், சிறை நிர்வாகத்தை மீறி நினைத்த சிறைவாசியை காவல்துறை நினைத்த பிளாக்கிற்கு மாற்றுகிறது. ராம்குமார், தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதற்கான விடை பிரேத பரிசோதனையில் தெரியவந்துவிடும். மற்ற வழக்கைப் போல இந்த வழக்கில் பிரேத பரிசோதனை முடிவுகளை மாற்ற முடியாது. ஏனெனில் நீதிமன்றம் தலையீடு உள்ளதால் மரணத்துக்கான உண்மையான காரணத்தையே டாக்டர்களால் சொல்ல முடியும். இல்லையெனில் டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்படும். சிறைத்துறையை மீண்டும் நீதித்துறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும். சிறைக்குள்ளேயும் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவார்கள். சுவாதி, ராம்குமார் போன்ற முக்கியமான வழக்குகளில் சுற்றும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் சிறைத்துறை அதற்கான ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார். 
      

http://www.vikatan.com/news/tamilnadu/68642-is-this-the-way-ramkumar-committed-suicide--reveals-prison-official.art

  • தொடங்கியவர்
ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 5-வது மருத்துவர் நியமனம்
 
 
 
 
Tamil_News_large_1612298_318_219.jpg
 

சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 5-வது மருத்துவரை நியமிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டில்லி எய்ம்ஸ் மருத்துவரை நியமித்து சென்னை நீதிமன்ற நீதிமன்ற கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். செப்.,27-ம் தேதிக்குள் மருத்துவரை முடிவு செய்து பிரேத பரிசோதனையையும் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

முன்னதாக ராம்குமார் தந்தை பரமசிவன், பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையில் தான் சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

எய்ம்ஸ் மருத்துவரை நியமிப்பதில் ஏற்படும் செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். ராம்குமார் தரப்பினர் கூறுவதைப் போல் தனியார் மருத்துவரை நியமிக்கமுடியாது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். இந்நிலையில் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ராம்குமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1612298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.