Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தைக்கு 9 மில்லியன் ஒதுக்கீடு

Featured Replies

முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தைக்கு 9 மில்லியன் ஒதுக்கீடு

 

தீ விபத்தினால் கடந்த  16 ஆம் திகதி எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை  17 ஆம்  திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்   மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு  தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றிருந்தார்.

அதன்பிரகாரமும்  கரைச்சிப் பிரதேச சபையினரால்  வழங்கப்பட்டுள்ள  மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப்  பொதுச்  சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு இன்று 9 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறித்த 9  மில்லியன் ரூபாய்  இன்றையதினம் ஒதுக்கப்பட்டுள்ளது  இதற்கான பூர்வாங்க  வேலைகளை முடித்து   குறித்த வேலைத்திட்டத்தினை  ஆக்கக்  கூடியதாக ஒன்றரை மாத காலத்திற்குள்  பூர்த்தி செய்து   பதிக்கப்பட்ட  கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்கள் வெகுவிரைவில் அவர்களது வர்த்தகத்தினை மீண்டும் ஆரம்பிக்க  வேண்டும் என்ற அறிவுறுத்தல்  வட  மாகாண  முதலமைச்சரினால்  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிற்கு  வழங்கப்பட்டு  இன்றையதினமே  கரச்சி பிரதேச சபைச் செயலாளர்  கம்சநாதனிற்கு வழங்கப்பட்டுள்ளது.  

12_C_V__Wigneswara_1946522f.jpg

http://www.virakesari.lk/article/11699

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... விக்னேஸ்வரன்  ஐயா.
சம்பந்தன் மாத்தையா... எவ்வளவு  ஒதுக்குகிறார்,  என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரை விட எதிர்க்கட்சி தலைவர் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே பொறுமையாக இருக்கிறார்.

யாராவது கொடுத்து திரும்பவும் கட்டடங்களைக் கட்டி எமது மக்களை வாழ வையுங்கள்.

அதற்காக அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் மாதிரி தரமில்லாமல் கட்டாமல் இருந்தால் சரி.

1 hour ago, தமிழ் சிறி said:

நன்றி... விக்னேஸ்வரன்  ஐயா.
சம்பந்தன் மாத்தையா... எவ்வளவு  ஒதுக்குகிறார்,  என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முதல்வரை விட எதிர்க்கட்சி தலைவர் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே பொறுமையாக இருக்கிறார்.

யாராவது கொடுத்து திரும்பவும் கட்டடங்களைக் கட்டி எமது மக்களை வாழ வையுங்கள்.

அதற்காக அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் மாதிரி தரமில்லாமல் கட்டாமல் இருந்தால் சரி.

 

Bildergebnis für tamil memes

"நியூஸ் பேப்பர்"  படிச்சுக் கொண்டிருக்கிற அந்தாள்,   செய்யும் என்று நான் நம்பவில்லை. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்பிடியிருந்தாலும் வாற காசை வெளியிலை போக விடாமல் பிரயோசனப்படுத்துங்கப்பா....

நல்ல முதல் முயற்சி!
தரமான நிரந்தர சந்தைத் தொகுதி விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

கிளிநொச்சி சந்தையை புனரமைக்க நிதியுதவி

தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் சேத விபரங்கள் தொடர்பான தரவு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் விஜயகலா தகவல் வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/118586?ref=youmaylike3

  • தொடங்கியவர்
கிளிநொச்சி சந்தையில் நிரந்தர கட்டடதொகுதி அமைக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கிளிநொச்சி சந்தையில் நிரந்தர  கட்டடதொகுதி அமைக்க  100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கிளிநொச்சி சந்தை தொகுதியிலுள்ள கடைத்தொகுதிகள் கடந்த வாரம் தீயில் எரிந்துள்ள நிலையில்  அங்கு மீளவும் நிரந்தரமான சந்தை தொகுதியை அமைத்து தருவதற்கு 100 மில்லியன் ரூபாவை நிதியமைச்சு ஒதுக்கி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


 
நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியிலிருந்து தொலைபேசி வாயிலாக யாழ்.ஊடகவியலாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.
 
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
கடந்தவாரம் கிளிநொச்சி சந்தை கட்டடத் தொகுதியானது தீப்பற்றி எரிந்திருந்தது.
 
இதனால் சுமார் 125 வியாபாரிகளுடைய வியாபார நிலையங்கள் தீயில் எரிந்து அழிவடைந்திருந்தன. இதனையடுத்து நான் நேரில் சென்று அவர்களது துன்பம் தொடர்பில் பார்வையிட்டிருந்தேன்.
 
அத்துடன் இப் பிரச்சனைக்கு தீர்வொன்றை பெற்றுத் தருவேன் எனவும் அவர்களுக்கு உறுதியளித்திருந்தேன்.

இதன்பிரகாரம் இதற்கு பொறுப்பான அமைச்சருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தேன்.
 
ஆனால் இதுவரை காலமும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.  இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக அநுரபிரியதர்ஷன யாப்பா, நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இவ்விடயம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.


 
இதன்பிரகாரம் நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கி தருவதாக உறுதியளித்திருந்தார்.
 
அடுத்த அமைச்சரவையிவ் இதற்கான நிதியினை ஒதுக்கி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஊடாக இதனை செயற்படுத்துவதா கவும் தெரிவித்திருந்தார்.
 
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களது முழுமையான விபரத்தை திரட்டி அவர்களுக்கு நஷ்டஈட்டினை வழங்க முடியுமா என்பது தொடர்பில் தாம் மறுபரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ ரன் தெரிவித்திருந்தார்.

http://onlineuthayan.com/news/18015

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.