Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் விக்னேஸ்வரனை தமிழ் அரசுக்கட்சியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கலாம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தரும் என்ற ஏமாற்றும் செயற்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்பவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை காட்டிலும் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வைக்காண முன்வரவேண்டும் என்று வடக்கின் அரசியல் கள சுதந்திர கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்

எழுத்தாளம் சிவராசா கருணாகரன், ஆய்வாளர்கள் ராஜன் ஹூல் மற்றும் அஹிலன் கதிர்காமர் ஆகியோர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

விளைவுகளை நோக்காமல் தமிழ் உணர்வுகளை இவ்வாறு தூண்டுவதன் மூலம் மீண்டும் வன்முறை அரசியல் ஒன்றுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படலாம்.

அத்துடன் முன்பை போன்றே எதனையும் அடையாமல் தமிழர்களின் அழிவுக்கே அது வழிவகுக்கும் என்றும் குறித்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலின் மூலம் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்த தமிழ்மக்கள் பேரவை, தமிழர்களின் பிரதிநிதிகளை கொண்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது.

அத்துடன் குறித்த பேரணியின் பங்கேற்ற கட்சிகளும் தனிப்பட்டவர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களாவர்.

சிலர் தீவிரவாதத்தை விரும்புகின்றவர்களாவர். இதனைதவிர இலங்கை அரசாங்கத்தின் ஆதரவைப்பெற்ற கட்சிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப்பெற்ற கட்சிகள் என்பனவும் இந்த பேரணியில் பங்கேற்றன.

இந்தநிலையில் தமிழர் பிரச்சினையின் தீர்வுக்காக நடவடிக்கையை மேற்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக வடக்கின் முதலமைச்சர் இந்த பேரணியின்போது தெரிவித்திருந்தார்

எனினும் இவ்வாறான இனவாத ஜாலங்களை கொண்டு நடத்தப்படும் பேரணியின் மூலம் ஆத்திரத்தை ஏற்படுத்த முடியுமே தவிர சிங்கள பெரும்பான்மையின அரசாங்கத்துடன பேசி பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாது என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறத்தில் அரசாங்கத்துக்கு சிங்கள தரப்பில் இருந்து நெருக்குதல்கள் மேற்கொள்ளப்படவாய்ப்புள்ளன. இதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர்களை இந்த பேரணியின் பங்கேற்ற செய்தமையை ராஜன் ஹூல் கண்டித்துள்ளார்.

இறுதியாக நேற்றைய பேரணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பேரணி இல்லை என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

எனினும், ஊடகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் அதிக ஆதரவு காரணமாக விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் இருந்து வெளியேறி தமக்கென தனிக்கட்சி ஒன்றை ஸ்தாபிக்க நிர்ப்பந்திக்கப்படலாம் என அரசியல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/118823?ref=left_popular

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

சிங்கள பெரும்பான்மையின அரசாங்கத்துடன பேசி பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாது என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எத்தனை தசாப்தங்களாக பேசுகிறார்கள் என்னத்தை கண்டார்கள்? இனிமேற்தான் காணப்போகிறார்களாம். எப்பிடியெல்லாம் பூச்சுற்றுகிறார்கள்.

  • தொடங்கியவர்
18 minutes ago, போல் said:

வடக்கின் அரசியல் கள சுதந்திர கண்காணிப்பாளர்கள்

இவர்களின் சுதந்திர கண்காணிப்பாளர் என்ற வேஷம் ஊர் அறிந்தது.
சுயநல, குடும்ப, கைக்கூலி, எட்டப்ப அரசியல் செய்யும் இவர்களுடன் அகிலன் கதிர்காமர் எப்போது இணைந்தார்?  

  • கருத்துக்கள உறவுகள்

எட்டப்பன் என்பதன் நவீனப் பெயர் கதிர்காமர் போலிருக்கும் போல.

  • தொடங்கியவர்
6 minutes ago, satan said:

எட்டப்பன் என்பதன் நவீனப் பெயர் கதிர்காமர் போலிருக்கும் போல.

அகிலன் கதிர்காமர், லக்ஷ்மன் கதிர்காமரின் மகன்.
இவர் திருகோணமலையில் தனது நிலத்தை அபகரித்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து சட்டரீதியாக போராடி வந்தவர். 

மனித உரிமை செயற்பாட்டாளராக தன்னை முன்னிறுத்தி வந்தவர். இந்தக் கும்பலுடன் சேர்ந்தது/சேரவைத்தது  ஏதாவது (ஊடக) சதியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

அகிலன் கதிர்காமர், லக்ஷ்மன் கதிர்காமரின் மகன்.
இவர் திருகோணமலையில் தனது நிலத்தை அபகரித்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து சட்டரீதியாக போராடி வந்தவர். 

 ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. முண்டுகுடுக்கும் பரம்பரை போல.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளாரே தவிர அரசியல் செய்ய வரவில்லை என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன்கென ஒரு கட்சியை ஏற்படுத்திக்கொள்வார் என்பதில் நம்பிக்கையில்லை. :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

"எழுத்தாளம் சிவராசா கருணாகரன், ஆய்வாளர்கள் ராஜன் ஹூல் மற்றும் அஹிலன் கதிர்காமர் ஆகியோர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்."

 

தாளம் போடுபவர்கள் போட்டுக்கொண்டே இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்

இதிலயே எல்லாம் விளங்கிவிட்டுது.. :D:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளாரே தவிர அரசியல் செய்ய வரவில்லை என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன்கென ஒரு கட்சியை ஏற்படுத்திக்கொள்வார் என்பதில் நம்பிக்கையில்லை. :innocent:

அவர் தலைமைத்துவத்துக்கு அலைந்தவருமல்ல, அலையப்போவருமல்ல, இதற்குள் வைத்து, அவரை கட்டிப்போட நினைப்பவரும், ஆள நினைப்பவருமே அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.