Jump to content

பிரியாணி சைட்டிஷ் மட்டன் கறி


Recommended Posts

பதியப்பட்டது

p80d.jpg

பிரியாணி சைட்டிஷ் மட்டன் கறி

தேவையானவை:

 மட்டன் - 500 கிராம்
 கொத்தமல்லித்தழை - கால்  கப்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

மசாலா அரைக்க:

 பெரிய வெங்காயம் - 3
(தோல் உரித்து, பெரிய
துண்டுகளாக நறுக்கியது)
 தக்காளி - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
 இஞ்சி - 2 இஞ்ச் அளவுக்கு
(தோல் சீவியது)
 பூண்டு - 7 பல் (தோல் உரித்தது)
 கொத்தமல்லித்தழை - கால் கப்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 பட்டை - 3 சிறிய துண்டுகள்
 கிராம்பு - 3
 ஏலக்காய் - 3
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

தாளிக்க:

 கிராம்பு - 2
 பட்டை - 2 சிறு துண்டுகள்
 பச்சை மிளகாய் - 2
(நீளமாகக் கீறியது)

செய்முறை:

மட்டனை நன்றாகக் கழுவி வைக்கவும். எலும்பு உள்ள துண்டுகள் இந்த குழம்புக்கு ருசியாக இருக்கும்.

மசாலாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதைச் சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் வதக்கவும். இதில் மட்டன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

மட்டன் மசாலா கலவையில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் (500 மில்லி) சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி மூடி வெயிட் போட்டு சிறு தீயில் 30 நிமிடங்கள் வேகவிடவும்.
பிரஷர் அடங்கியதும் திறந்து பார்த்து, கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து விரும்பிய அளவுக்கு வற்றியதும் இறக்கி, பிரியாணியுடன் சூடாகப் பரிமாறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரியாணிக்கு இந்த டிஷ் அமர்க்களமாய்த்தான் இருக்கும். நடுவில் மஞ்ச்சையுடன் கூடிய எலும்பு சூப்பர் ....! tw_blush:

Posted
4 hours ago, suvy said:

பிரியாணிக்கு இந்த டிஷ் அமர்க்களமாய்த்தான் இருக்கும். நடுவில் மஞ்ச்சையுடன் கூடிய எலும்பு சூப்பர் ....! tw_blush:

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவராத்திரி நேரத்தில் கொண்டு வந்து இணைக்கும் சமையல் குறிப்புக்களா இவை

Posted
11 hours ago, ரதி said:

நவராத்திரி நேரத்தில் கொண்டு வந்து இணைக்கும் சமையல் குறிப்புக்களா இவை

ஆமா நாங்களெல்லாம் இந்து என்று உங்களுக்கு யார் சொன்னது?:grin:

வியாழக்கிழமையும் பண்ணை பாலத்தில் பிடித்த 5 முரல் மீனை பொரிச்சு முழிங்கிட்டுதான் நானே இருக்கிறேன்.

Posted
On 8.10.2016 at 8:49 AM, ஜீவன் சிவா said:

ஆமா நாங்களெல்லாம் இந்து என்று உங்களுக்கு யார் சொன்னது?:grin:

வியாழக்கிழமையும் பண்ணை பாலத்தில் பிடித்த 5 முரல் மீனை பொரிச்சு முழிங்கிட்டுதான் நானே இருக்கிறேன்.

இப்படி சொன்னால் நம்ப முடியாது..:grin: பிடித்த மீனை உடனே படம் எடுத்து போடவேணும் மாலை மயக்கம் பண்ணை கடல் திரியில்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, நவீனன் said:

இப்படி சொன்னால் நம்ப முடியாது..:grin: பிடித்த மீனை உடனே படம் எடுத்து போடவேணும் மாலை மயக்கம் பண்ணை கடல் திரியில்..tw_blush:

மீன் சந்தை பக்கத்தில தானே இருக்கு  பன்னீரு :22_stuck_out_tongue_winking_eye:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9.10.2016 at 9:43 PM, நவீனன் said:

இப்படி சொன்னால் நம்ப முடியாது..:grin: பிடித்த மீனை உடனே படம் எடுத்து போடவேணும் மாலை மயக்கம் பண்ணை கடல் திரியில்..tw_blush:

மனிசன் இதுக்காகவாவது நாளைக்கு தூண்டிலோடை  போய் பண்ணைப்பாலத்திலை குந்தியிருக்கப்போகிறார்...tw_tounge_xd:

Posted
5 hours ago, நவீனன் said:

இப்படி சொன்னால் நம்ப முடியாது..:grin: பிடித்த மீனை உடனே படம் எடுத்து போடவேணும் மாலை மயக்கம் பண்ணை கடல் திரியில்..tw_blush:

 

5 hours ago, நந்தன் said:

மீன் சந்தை பக்கத்தில தானே இருக்கு  பன்னீரு :22_stuck_out_tongue_winking_eye:

 

5 hours ago, குமாரசாமி said:

மனிசன் இதுக்காகவாவது நாளைக்கு தூண்டிலோடை  போய் பண்ணைப்பாலத்திலை குந்தியிருக்கப்போகிறார்...tw_tounge_xd:

மீன் பிடிக்க போகும்போது கமரா கொண்டு போவதில்லை. 

அப்புறம் இப்ப முரல் சீசன் போலிருக்கு, அங்கு மீன் பிடிக்க வந்தவர்களுக்கு முரல் மட்டும்தான் நிறைய மாட்டிச்சு. நவராத்திரி என்பதால் மேலதிகமான பிடிக்க விரும்பவில்லை. அநேகமாக 2 அல்லது 3 மீன்கள் அரை மணித்தியாலத்திலேயே மாட்டிவிடும். கடலில் மீன் பிடித்து அனுபவம் உள்ளவர்களுக்கு அதைவிட அதிகமாகவும் மாட்டும்.

இன்று சரஸ்வதிபூசை, நாளை மானம்பூ, ஆகவே புதன்தான் இனி போகலாம்.

Posted
6 hours ago, ஜீவன் சிவா said:

 

 

இன்று சரஸ்வதிபூசை, நாளை மானம்பூ, ஆகவே புதன்தான் இனி போகலாம்.

அப்ப நீங்கள் இந்துவா?..:grin:

சும்மா பகிடிக்கு ஜீவன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.