Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு : சீனாவுடன் ஒப்பந்தம்

Featured Replies

யாழில் 13 மாடி இருதய  சத்திர சிகிச்சைப் பிரிவு  : சீனாவுடன் ஒப்பந்தம்

 

 

 

 

யாழ்ப்பாணத்தில் 13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.hospital-jaffna--china-sri-lanka.jpg

பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது பதிலில் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்தில் 13 மாடியைக் கொண்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.

இருந்த போதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை.

இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது பரவலாக ஆராய்ந்தேன்.

அத்துடன், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/12193

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஏன் 13 மாடி????

எமதர்மனுக்கு கிட்டவாக இருக்குமோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 6:15 PM, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் 13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

"எள்ளுக்குக்கு , ஏத்த..... எள்ளுருண்டை மாதிரி.......  " 

யாழ்ப்பாண மண், சுண்ணாம்பு பாறைகளின் மேல் உள்ளது.
அதற்கு மேல்....  பெரிய கட்டிடம், கட்டுவது, ஆபத்தான விடயம்.

எமக்கு.....  நாம், முன்பே கட்டிய... வீரசிங்கம் மண்டபபே..... போதும்.

- பில்டிங்  எஞ்சினியர், தமிழ் சிறி -

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு மலை கீரிமலை. ஆனாலும் அந்தமலை கணணுக்குத் தெரியாமல் ஒழித்திருப்பது ஏன் என்று வியந்துள்ளேன்! சுண்ணாம்புப் பாறை தாங்கக்கூடிய அளவிற்கே இயற்கை அந்த மலையை மிகச் சிறிதாகப் படைத்துள்ளது என்ற இரகசியத்தை, தமிழ்சிறி அவர்களின் இந்தப் பின்னூட்டத்தின் மூலம் சந்தேகமின்றி அறிய முடிந்துள்ளது.

நன்றி! பில்டிங் எஞ்சினியர் தமிழ் சிறி...!! :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.