Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் - வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா

Featured Replies

ஆக்­கி­ர­மிப்­பு­ப்படை போன்று காட்­சி­ய­ளிக்கும் இரா­ணுவம் -p22-b8c37365212359dd0193bef6384792dd6469cbe4.jpg வடக்கு மக்­களை அவ­தூ­றுப்­ப­டுத்­தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா


பௌத்­தத்­துக்கு முத­லிடம் குறித்து சிறு­பான்­மை­யினர் அச்சம்
காணி­களை மீள கைய­ளி­யுங்கள
மலை­யக தமி­ழர்­களின் நிலைமை கவ­லைக்­கு­ரி­யது
தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­வி­யுங்கள்

முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சா­ரத்­திற்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வான பிர­சன்­ன­மா­னது வடக்கு மாகா­ணத்தில் இரா 

­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்புப் படை­யாக காட்­டு­கின்­றது. அதா­வது இது தமி­ழர்­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக அவ­தூ­றுப்­ப­டுத்­து­வ­தாக காட்­டப்­ப­டு­கின்­றது என்று இலங்­கைக்கு10 நாட்கள் விஜ­யத்தை மேற்­கொண்ட ஐ.நா.வின் சிறு  ­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரி­வித்தார். 

அர­சி­ய­ல­மைப்பில் பௌத்­தத்­திற்­கான முதன்மை இடத்தை தொடர்ந்து பேணு­வ­தா­னது மேலும் சிறு­பான்மை  மக்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கும், அடக்கு முறை­மை­க­ளுக்கும் வழி­வ­குக்கும் என மக்கள் அச்­ச­ம­டை­கின்­றனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்

தனது விஜ­யத்தின் முடிவில் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் நேற்று நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இலங்­கைக்கு கடந்த 10 ஆம் திகதி விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. பிர­தி­நிதி ரீட்டா ஐசாக் நாட்டின் பல பிர­தே­சங்­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். 

அந்­த­வ­கையில் நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்பில் ரீட்டா ஐசாக் மேலும் குறிப்­பி­டு­கையில்:-

வர­லாற்றை ஆராய்­வ­தற்கும் தேசிய ஒற்­று­மை­யையும் தேசிய அடை­யா­ளத்­தையும் மீள் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் மனச்­சாட்­சி­யுடன் கூடிய நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றன. சிறு­பான்மை மக்கள் அதி­கார கட்­ட­மைப்­புக்­கான தீர்­மானம் எடுத்­தலின் போது தாம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக உணர்­கின்­றனர். 

அதா­வது தீர்­மானம் எடுக்கும் நிறு­வ­னங்­களின் சிறு­பான்மை மக்­களின் குறைந்­த­ள­வி­லான பங்­கேற்பு குறித்து கவலை தெரி­விக்­கப்­பட்­டது. அனைத்து நிறு­வ­னங்­களும் சமூ­கத்தின் இன, மற்றும் மத பல்­லி­னத்­தன்­மையை பிர­தி­ப­லிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

வடக்கு, மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யான இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இரா­ணுவம் தற்­போது பொது இடங்­களில் அதி­க­ளவில் தென்­ப­டா­விட்­டாலும் கூட இரா­ணு­வத்தின் பிர­சன்­ன­மா­னது எந்­த­ள­வுக்கு மக்­களின் அன்­றாட வாழ்வில் பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­பதை மக்கள் என்­னிடம் எடுத்துக் கூறினர். 

முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சா­ரத்­திற்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வான பிர­சன்­ன­மா­னது வடக்கு மாகா­ணத்தில் இரா­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்புப் படை­யாக காட்­டு­கின்­றது. அதா­வது இது தமி­ழர்­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக அவ­தூ­று­ப­டுத்­து­வ­தாக காட்­டப்­ப­டு­கின்­றது..

மேலும் தாம­த­மின்றி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் அவர்­க­ளிடம் மீள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எந்­த­வி­த­மான நட்­ட­ஈடும் முறை­யான நட­வ­டிக்­கை­யு­மின்றி பெறப்­பட்ட காணிகள், அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அல்­லது நட்­ட­ஈடு செலுத்­தப்­ப­ட­வேண்டும். நீண்­ட­கால இடப்­பெ­யர்­வுகள், சிறு­பான்மை மக்­க­ளுக்­கி­டை­யி­லேயே முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளது. 

பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது தமிழ் மக்­களை பாரிய அளவில் பாதித்த ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இன்னும் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள முடிவு நல்­லி­ணக்­கத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­னது ஆனால் எவ்­வா­றான புதிய சட்­ட­மாக இருந்­தாலும் அது பொறுத்­த­மான தரங்­களை பின்­பற்­றி­ய­தாக அமை­வது அவ­சியம். அத்­துடன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விடு­விக்­க­படல் அல்­லது வழக்குத் தாக்கல் செய்­யப்­படல் அவ­சி­ய­மாகும். 

அத்­துடன் மலை­ய­கத்தின் சில பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தேன். அவர்­களின் வாழ்க்கை வறுமை நிலையைக் கண்டு கவ­லை­ய­டைந்தேன். சிறு அள­வி­லான சுகா­தார கல்வி, சேவைகள் அவர்­க­ளுக்கு கிடைக்­கின்­றன. தினமும் வேலை தேடி வாழ­வேண்­டி­யுள்­ளது . அன்­றாடம் அவர்கள் தமது உணவைப் பெறு­வதில் கஷ்­ட­மாக உள்­ளது. மது­ப­ழக்கம், சிறுவர் தொழி­லா­ளர்கள், வன்­மு­றைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், வழ­மை­யா­கி­யுள்­ளன. பாட­சா­லை­களில் படிக்­க­வேண்­டிய பிள்­ளைகள் பாட­சா­லையை விட்டு வில­கி­யுள்­ளனர்.

இலங்­கையில் நீண்ட மோதலின் விளை­வாக நாட்­டுக்­குள்ளும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் நம்­பிக்கை பற்­றாக்­குறை பிர­தான ஒரு விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தின் பெரும்­பான்மை மக்கள் அனைத்து மக்­க­ளி­னதும் தேவை­களை அங்­கீ­க­ரிப்­பது, நம்­பிக்­கையை மீள் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முக்கியமானதாகும்

இலங்கையின் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாக முக்கியமான சில வேலைத்திட்டங்களை அரசியல் ரீதியில் வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை காணட்டவேண்டும். 

அரசியலமைப்பில் பௌத்தத்திற்கான முதன்மை இடத்தை தொடர்ந்து பேணுவதானது மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், அடக்கு முறைமைகளுக்கும் வழிவகுக்கும் என மக்கள் அச்சமடைகின்றனர். 

அரசியலமைப்பின் கீழ் தெளிவான ஆணை, மற்றும் அதிகாரம், வளங்களுடன் சிறுபான்மை மக்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கின்றேன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-21#page-1

  • தொடங்கியவர்

சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­களை புரிந்­துள்ள ரீட்டா

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த சிறு­பான்­மை­யின விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கான ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள், பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட பொது­மக்கள் என பல தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி. எம். சுவா­மி­நாதன், நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ, முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் உட்­பட அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பல­ரையும் சிறு­பான்­மை­யின விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கான ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா சந்­தித்­தி­ருந்தார்.

இதற்கு மேல­தி­க­மாக வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் செய்த ரீட்டா பதில் முத­ல­மைச்சர் குரு­குலராஜா உட்­பட மாகா­ண­சபை அமைச்­சர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் செய்த இவர் அந்த மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் நஸீர் அஹமட்டை சந்­தித்­தி­ருந்தார். இத­னை­விட வடக்கு, கிழக்கில் பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளு­டனும் இவர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்தார்.

மலை­யகப் பகு­திக்கும் விஜயம் செய்த ரீட்டா அங்­குள்ள சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இவ்­வாறு வடக்கு, - கிழக்கு, மலை­யகம் உட்­பட பல பகு­தி­க­ளுக்கும் சென்ற அவர் பல தரப்­பி­ன­ரு­டனும் விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யிருக்­கின்றார். இந்த சந்­திப்­பு­களின் போது இலங்­கையில் சிறு­பான்­மை­யி­னரின் நிலை குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனை நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத்­தொ­கு­தியில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய ரீட்டா இந்த சந்­திப்பின் போது தெரி­வித்த கருத்­துக்கள் இலங்­கையில் சிறு­பான்­மை­யின மக்­களின் நிலையை நன்கு புலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

இந்த சந்­திப்­பின்­போது கருத்து தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதன் மூல­மாக வெவ்­வேறு மக்கள் கூட்­டங்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் இறை­மையை உப­யோ­கிக்­கக்­கூ­டிய வண்ணம் பேரி­ன­வாத ஆட்­சி­யற்­ற­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்டும். அதற்­கான பரிந்­து­ரை­களை தாங்கள் மேற்­கொள்­ள­வேண்டும். அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வ­கை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்­பதே எம­து­ நி­லைப்­பா­டாகும் என்று எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்த ஐ.நா. அறிக்­கை­யாளர் ரீட்டா இலங்­கை­யி­லுள்ள சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு தேசிய வாழ்க்­கையில் சரி­யான இடம் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. இந்த நாட்டில் பல சிறு­பான்மை சமூ­கங்கள், மக்கள் கூட்­டங்கள் இருக்­கின்­றன. அவ்­வாறு அவர்கள் இருக்­கின்­றார்கள் என்­பது கூட இந்த நாட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு தெரி­யா­தி­ருக்­கின்­றது. இந்த நாட்டில் உள்ள இரா­ணு­வத்தைப் பார்த்தால் ஒரு இனத்தை சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். அத­ன­டிப்­ப­டையில் சமா­தானம், சக­வாழ்வு, சம உரித்து அனைத்து மக்­க­ளுக்கும் இருப்­ப­தாக சொல்ல முடி­யாது. இந்த நிலை­மையில் மாற்றம் ஏற்­பட்டு ஆகக்­கு­றைந்­தது ஒவ்­வொரு இனத்தின் விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் நாட்டின் படைத்­த­ரப்பு இருக்­கு­மாயின் அது ஒரு சரி­யான படை­யாக இருக்கும் என்று கருத்து கூறி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட தமிழ், முஸ்லிம், மலை­யக மக்கள் எதிர்­கொள்­கின்ற அனைத்துப் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும், விசே­ட­மாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்­கின்ற அனைத்துப் பிரச்­சி­னைகள் தொடர் ­பா­கவும், எதிர்­வரும் மார்ச் மாதத்தில் நடை­பெற­வுள்ள ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொட­ருக்கு முன்­ப­தாக சமர்ப்­பிக்­க­வுள்ள அறிக்­கையில் உள்­ள­டக்­குவேன் என்றும் எதிர்க் ­கட்சித் தலை­வ­ரு­டனான சந்­திப்பின் போது ஐ.நா. அறிக்­கை­யாளர் ரீட்டா சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இது­வரை இலங்­கைக்கு வந்து சென்ற ஐ.நா. பிர­தி­நி­திகள் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கு சென்று யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளு­டனும், அரச பிர­தி­நி­தி­க­ளுடனும் மட்­டுமே கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால், சிறு­பான்­மை­யின விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா இம்­முறை மலை­யகப் பகு­திக்கும் விஜயம் செய்து அங்­குள்ள சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேசி­யுள்ளார். இதேபோல் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் இவர் சந்­தித்­தி­ருக்­கின்றார்.

மலை­ய­கத்தில் அங்­குள்ள சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மலை­யக மக்கள் அனு­ப­விக்கும் துன்ப துய­ரங்­களை எடுத்­துக்­கூறி­ய­துடன் அவர்­க­ளுக்கும் சம அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர். இதனைத் தொடர்ந்து தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன், தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வி­ன­ரையும் நேற்று முன்­தினம் ரீட்டா சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மேற்­கொள்­ளப்­படும் தேர்தல் முறைமை மாற்­றத்தில் வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் பரந்து வாழும் இந்­திய வம்­சா­வளி மலையக மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் பாதிக்­கப்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்­ய­ வேண்டும். அத்­துடன் மலை­யக மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வும் வழங்­கப்­ப­ட­வேண்டும். இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு சம அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்றும் இதற்­கான வலி­யு­றுத்­தல்­களை ஐ.நா. அறிக்­கை­யாளர் விடுக்­க­வேண்டும் என்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

இந்த நாட்டில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­களைப் போன்று இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்­களும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த நாட்­டி­லுள்ள 32 இலட்சம் தமிழ் மக்­களில் 16 இலட்சம் இந்­திய வம்­சா­வளி மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். ஆகவே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்­களைப் போன்று வடக்கு, கிழக்­கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சினை தொடர்­பா­கவும் ஐ.நா கூடிய அக்­கறை செலுத்த வேண்டும் என்றும் மனோ கணேசன் இந்த சந்­திப்பின் போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­மு­ட­னான சந்­திப்பின் போது சிறு­பான்மை தேசிய இனங்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்வு வழங்­கு­வ­தற்­கான சிபாரிசு­களை செய்யும் சுயா­தீன தேசிய ஆணைக்­கு­ழுவை ஸ்தாபிப்­ப­தற்கு பரிந்­து­ரைப்பேன் என்றும் ரீட்டா தெரி­வித்­தி­ருக்­கின்றார். அகில இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் தூதுக்­கு­ழு­வு­ட­னான சந்­திப்பின் போதும் இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தற்­போது முழு­மை­யாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கின்றேன். எனது அறிக்­கையில் இந்த விட­யங்கள் நிச்­ச­ய­மாக இடம்­பெறும் என்றும் ஐ.நா. அறிக்­கை­யாளர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஐ.நா. அறிக்கையாளரான ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்த கருத்துக்களானவை அவர் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து முழுமையாக புரிந்துகொண்டுள்ளமை நன்கு புலனாகின்றது. ஏனெனில் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்க்கையில் சரியான இடம் கொடுக்கப்படவில்லை என்று அவரே வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார்.

இதிலிருந்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமானால் சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவே தெரிகின்றது. எனவே, அவர் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முதல் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையானது இலங்கைவாழ் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை புலப்படுத்துவதாக அமையும் என்று நம்பலாம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-21#page-4

  • தொடங்கியவர்

UN Rights Expert Wants Government To Walk The Talk On Minority Rights

The United Nations Special Rapporteur on minority issues, Rita Izsák-Ndiaye, today urged the Government of Sri Lanka not to lose the momentum gained by the new administration in 2015, and show its commitment to minority rights through concrete action.

Rita Izsák-Ndiaye

Rita Izsák-Ndiaye

“In order to achieve peaceful co-existence after the long devastating civil war, a comprehensive, well-planned and well-coordinated truth, reconciliation, healing and accountability process must take place, and it cannot be done overnight,” Izsák-Ndiaye said at the end of her first information-gathering visit to Sri Lanka.

“At the same time, the Government must put in place some urgent, important and concrete measures to clearly demonstrate its political will and commitment to better protect the dignity, identity, equality and right to participation in all walks of life, of Sri Lanka’s minorities,” she emphasised.

During her ten-day mission to Sri Lanka, she consulted a large number of minority representatives across the country, including Sri Lankan and Up-Country Tamils, Muslims, Hindus, Burghers, Christians, Telugus, Veddas, Malays, and Sri Lankan Africans.

The expert commended the National Unity Government for the important progress it has made towards adopting critical laws and policies and in strengthening institutions to better protect human and minority rights.

“However, challenges remain,” she said, noting that, among the most pressing and emotive issues, especially for the Tamil and Muslim communities, were disappeared persons, return of occupied land, release of security-related detainees, as well as demilitarization, which must be addressed urgently.

The lack of adequately inclusive and representative institutions and language barriers in accessing public services and the justice system featured recurrently in all consultations across the country. “Poverty, violence and discrimination against women including in personal laws, and caste-based discrimination are further challenges,” she stated.

“Trust must be built in State institutions and between the various population groups,” Izsák-Ndiaye said. “Efforts by the Government to implement good and inclusive governance must include guarantees that minorities become part of decision-making processes and have a place in state- and provincial administration. Consultations with minority groups on issues affecting them should be regular, institutionalized and systematized.”

“Educational curriculum must ensure teaching about Sri Lanka’s diversity, as a source of strength, and about the different cultural, ethnic and religious identity of its population groups to foster deeper understanding,” the expert added.

Izsák-Ndiaye pointed out that minorities have a great deal of expectations from the Constitutional reform process and see it as the critical moment to codifying and guaranteeing their rights. “Minority NGOs and communities have given their voices to the constitutional consultation process with their numerous submissions,” she said. “Their views and aspirations must be taken into proper consideration.”

The UN Special Rapporteur called for the creation of an independent minority rights body to provide expertise and information to legislative- and policy-making processes, encourage and coordinate programming on minority issues, and form a bridge between minority communities and the state.

Izsák-Ndiaye will present a detailed report to the UN Human Rights Council in March 2017.

https://www.colombotelegraph.com/index.php/un-rights-expert-wants-government-to-walk-the-talk-on-minority-rights/

  • தொடங்கியவர்

இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!- அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்

இலங்கையில் கடந்த பத்து நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ஐ.நா சிறப்பு தூதுவர் ரீட்டா ஐசக் நாடியா.

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை உருவாக்க வேண்டும் என அதிர வைக்கிறார்.

ஐ.நா மனித உரிமை அமைப்பின் உத்தரவின் பேரில், கடந்த 10-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ரீட்டா.

விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய கடைசிக்கட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்த ஆய்வு அறிக்கையை ஐ.நா சபையின் பார்வைக்கு வைக்க இருக்கிறார்.

அவர் தன்னுடைய பேட்டியில்,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமஸ்டி அமைப்பில் உரிய அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை, சிறுபான்மை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. பிற மொழி பேசுபவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

இராணுவம் ஆக்கிரமித்த தமிழர்களின் நிலங்களில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து ஐ.நா மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என உறுதியளித்திருக்கிறார் ரீட்டா ஐசக் நாடியா.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த வழக்கறிஞரும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,

ஐ.நா சிறப்பு தூதுவரின் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன.

இலங்கையில் நடந்த இன அழிப்புப் போருக்கு, நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது அயலக பொறிமுறை விசாரணையாக இருக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

போரின் போது கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் அனைத்தும், அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

அங்கு மீன்பிடி தொழில் என்பது மிக முக்கியமானது. ஆனால், மீன்பிடி அதிகாரங்கள் எதுவும் மாகாண சபையிடம் இல்லை. அந்த அதிகாரங்களை மாகாண அரசிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரமில்லாத சபைகள் இருக்கின்றன. அங்கு இடைக்கால அதிகாரங்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும்.

உள்துறை, காவல்துறை, நில நிர்வாகம் மற்றும் நில வருவாய் ஆகியவற்றுக்கான அதிகாரங்களை மாகாண கவுன்சிலிடம் வழங்க வேண்டும்.

இதற்கான பணிகளில் குறைந்த பட்சமாவது இலங்கை அரசு ஈடுபட வேண்டும் என விரும்புகிறோம்.

தற்போது ரணில் தலைமையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சமஸ்டி அமைப்பு இல்லை, இனி ஒற்றை ஆட்சிமுறைதான். எந்த அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்க முடியாது' என இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

அப்படியொரு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டால், அது ஈழத் தமிழர்களின் எதிர்காலத்திற்கே கேடாய் முடியும்.

ஐ.நா சிறப்பு தூதுவரின் அறிக்கையில் இதுகுறித்த அபாயம் எழுப்பப்படும் என்றே நம்புகிறோம் என்றார் ஆதங்கத்தோடு.

http://www.tamilwin.com/politics/01/121817?ref=home

  • தொடங்கியவர்

ரீட்டா ஐசக் நாடியா தனது 10 நாள் நேரடி விஜயத்தில் சிங்கள-பௌத்த "நல்லாட்சி" அரசின் அடக்குமுறைகளை கண்டறிந்து சொன்ன தகவல்களால் பத்திரிகைகளை வாசித்து அரசியல் நடத்தும்  சம்பந்தனும் சுமந்திரனும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசக் நாடியா அவர்கள் சொன்ன தகவல்கள் / அறிக்கைகள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் தொடர்சியாக சொல்லப்பட்டு வந்த சிங்கள-பௌத்த "நல்லாட்சி" அரசின் அடக்குமுறைகளை உறுதிப்படுத்துகின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்

 நாட்டில் ஐக்கியமும், நல்லாட்சியும் கூடி வரும் நேரத்தில் அதை குழப்பும் வகையில்  கருத்துக்களை கூறி, தெற்கு மக்களுக்கு அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற வகையில் இந்தக் கருத்துக்களுக்கு எனது எதிப்பைத் தெரிவித்து, எமது எஜமானர்களுக்கு எனது விசுவாசத்தை நிரூபிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Rita Izsák-Ndiaye   nasimke ru - Animiert Tiere/Natur

 ஐ.நா சிறப்பு தூதுவர்,  ரீட்டா ஐசக் நாடியாவை  "வெள்ளைப் புலி" என்று சிங்களவர்... இன்னும் முத்திரை குத்தவில்லையா.   

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

Rita Izsák-Ndiaye   nasimke ru - Animiert Tiere/Natur

 ஐ.நா சிறப்பு தூதுவர்,  ரீட்டா ஐசக் நாடியாவை  "வெள்ளைப் புலி" என்று சிங்களவர்... இன்னும் முத்திரை குத்தவில்லையா.   

குத்துவினம் .....அத்துடன் புலம்பெயர் புலிகளிடம் கொத்துரொட்டி விற்ற பணத்தை பெற்றுக்கொண்டார் என்றும் சொல்லுவினம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.