Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 27-01-2007 16:10 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிறீலங்கா இராணுவத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு

சிறீலங்கா இராணுவத்திற்கு புதிதாக 2000 பேரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

எதிர்வரும் 29ம் திகதி முதல் அடுத்த மாதம் 4ம் திகதி வரை இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான முழு அளவிலான யுத்தம் ஒன்றிற்கு தயாராகி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது படை பலத்தை அதிகரிப்பதற்கு கடுமையான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது

கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் பெறப்பட்ட தற்காலிக வெற்றிகளை பயன்படுத்தி சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

pathivu.com

யாழ் கள அண்ணாமார்கள் சும்மா தானே இருக்கிறீர்கள். :unsure::lol:

யாழ் கள அண்ணாமார்கள் சும்மா தானே இருக்கிறீர்கள். :unsure::lol:

ஏன் தங்கச்சி நீர்மட்டும் என்ன சுமந்து கொண்டா நிக்கிறீர்? :lol::lol::lol:

யாழ களத்தில் நின்று சிங்களக் குண்டர்களிற்கு வக்காளத்து வாங்கும் வீரமிகு இளைஞர்கள் விண்ணைப்பித்துப் பார்க்கலாமே! தமிழிச்சனங்களை சப்பாத்துக்கால்களினால் மிதித்துப்பார்ப்பதற்கு தங்களிற்கு இதுவொரு அரிய சந்தர்ப்பம்! தவறவிட்டுப்பின் தவிர்க்காதீர்கள்!

சிறீ லங்கா தாயே! நம் சிறீ லங்கா...!!! நமோ நமோ நமோ நமோ தாயே!

தமிழ் சனங்களை நான் கொல்வேன்!

தலை நிமிர்ந்து நடப்பேன்!

நமோ நமோ நமோ நமோ தாயே!

பதிவு எழுதினால் செய்திகளில் உண்மைத்தன்மை 100க்கு 1000% சரியாகத்தான் இருக்கும் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஐ.பி.சி. வானொலியிலும் ஒலிபரப்பானது

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் முகவராகத்தானே கருணா இயங்குகின்றார். வாகரை, வெருகல், சம்பூர் பகுத் சிறார்களைச் சேர்த்துவிடாமல் இருக்கவா போகின்றார்..

யாழ களத்தில் நின்று சிங்களக் குண்டர்களிற்கு வக்காளத்து வாங்கும் வீரமிகு இளைஞர்கள் விண்ணைப்பித்துப் பார்க்கலாமே! தமிழிச்சனங்களை சப்பாத்துக்கால்களினால் மிதித்துப்பார்ப்பதற்கு தங்களிற்கு இதுவொரு அரிய சந்தர்ப்பம்! தவறவிட்டுப்பின் தவிர்க்காதீர்கள்!

சிறீ லங்கா தாயே! நம் சிறீ லங்கா...!!! நமோ நமோ நமோ நமோ தாயே!

தமிழ் சனங்களை நான் கொல்வேன்!

தலை நிமிர்ந்து நடப்பேன்!

நமோ நமோ நமோ நமோ தாயே!

உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது :angry:

நமோ நமோ தாயே அல்ல, நமோ நமோ நாயே....... :P :P :P

விரும்பியவர்கள், நிமோ நிமோ நாயே என்றும் பாடலாம் :lol::D:D

இலங்கை இராணுவத்தில் இறப்பதற்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இராணுவ இயந்திரத்துக்கு அளிவு எண்டாலும் ஆள் சேர்ப்பினம், பாதுகாப்பு அதிகம் தேவை எண்டாலும் ஆள் சேர்ப்பினம்... செலவு செய்ய நிறைய காசு இருக்கு எண்டாலும் ஆள் சேர்ப்பினம்..!

ஒட்டு மொத்தமாய் பாத்தால் ஆள்ச்சேர்ப்பு புலிகள் இன்னமும் பலமாய் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் ஞாபகத்தில வைச்சு இருக்கிற அளவில சந்தோசம்...!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் செய்யும் கூத்துகளுக்காக அழகான அனைத்து இயற்கை வனப்புக்களையும் கொண்ட அற்புதத் தீவை பழிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அது நாங்கள் வாழ்ந்த வீடு. கொடுமைகளுக்கு ஆளான தாயைத் திட்டிப் புறந்தள்ளுவது போல் உள்ளது சிலரின் செய்கைகள்..! நாளை தமிழீழம் மலர்ந்தாளும் அவள் இவளின் தங்கையாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் இலங்கை என்பது எங்கள் சொத்து..! அந்நியர் தங்கள் சொந்த தேசங்களின் மீது வைத்திருக்கும் 1% பற்றுக் கூட இல்லாதவர்கள் தமிழீழத்தை நேசிப்பவர்களாக எம்மால் கணக்கிடவே முடியவில்லை.அந்நிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வந்து ஒரு 10 வருடம் வாழ்ந்தவுடன் அந்த நாடுகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த தேசம் என்ன பாவம் செய்ததென்று நினைத்துத் திட்டுகின்றனரே யாம் அறியோம். சிங்களச் சகோதரர்கள் பலர் தமிழர்கள் மீது விரோதம் பாராட்டாதவர்களாகவே உள்ளனர். நாளை தமிழீழத்தில் எம்மோடு கூடி வாழக் கூட அவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்படலாம். நாம் சிங்கள கொடும் ஆட்சியாளர்கள் போன்றவர்கள் அல்ல. எமது நித்திலமான தேசத்தை பழிக்க அழிக்க முனைவதை நாம் எப்போதுமே விரும்பியதில்லை.! சமாதானமாகப் பேசித் தீர்க்க கூடிவற்றை சிங்கள ஆட்சிப்பீடமே தனது சுயநலத்துக்காக போருக்குள் தள்ளி தேசத்தைச் சீரழிக்கிறது. அதைத்தான் திட்ட வேண்டும் அகற்ற வேண்டும்..! தேசத்தை அல்ல. :lol:

கொஞ்ச நாளுக்கு முந்தி உந்த "வெதமாத்தயா" மகிந்த தனது இரண்டாவது மகனை (என்னை மாதி ஒண்டும் தள்ளாதது ஒண்டை) கடற்படையில் சேர்த்ததே வரும் காலத்தில் சிங்கள நாட்டில் நடைபெறவுள்ள கட்டாய இராணுவ சேவைக்குத்தான்!!!

வெத மாத்தயாவின் முதல் இரண்டும் இப்ப இலண்டனில்!!! மூண்றாவது சின்னன், இப்ப படிக்குது!!!! மூண்டாவதற்கு சேர வேண்டிய சிறார்களூம்!!!!

வெத மாத்தயா அப்ப எஸ்கேப்!!!!! பாவம் அப்பாவி சிங்களங்களும் ..... "எடுப்பார் கைப்பிள்ளை கறுணாவின்" பெயரில் பிடிபடும் கிழக்கு உறவுகளும்!!!!!!!!!!!!!!!!!!!!

ஐயா நெடிக்காலபோவார்,

உமது கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. நீர் உமது பெயரிற்கேற்றவாறு நெடுக்காக எட்டி, எட்டி கால் வைத்து நடந்து போகின்றீர்.

முதலில் நிகழ்காலத்தில் விழிப்பாய் இரும்! அதன் பிறகு மெல்ல, மெல்ல எதிர்காலத்திட்டங்களில் காலடி வைக்கலாம். எடுத்த எடுப்பில் எதிர்காலத்தைப்பற்றி நீர் கனவு காண்பது நிகழ்காலத்தில் நீர் செய்யவேண்டியுள்ள கடமைகளிற்கு முட்டுக்கட்டை போடும் என்பதை மறந்து விடாதையும்!

மேலும் சிறீ லங்காவைப் போற்றுவதும், தூற்றுவதும் எனது சுதந்திரம். உமக்காக அதை விட்டுத்தர முடியாது. அப்பாவியாகப் பிடிபட்டு சிங்களக் குண்டர்களுடன் சேர்த்து வைத்து நீரும் சிறீ லங்கா சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து அதன் வலிகளை அனுபவித்திருந்தால் இவ்வாறு கதைக்கமாட்டீர்.

தனது நாட்டு மக்களையே தினம், தினம் விமானக்குண்டுவீச்சுக்கள் மூலம், ஆட்லறி எறிகணை மூலம், காடையர்கள் மூலம் குரூரமாகக் கொன்றொழித்துக் கொண்டு இருக்கும், உலக மனித உரிமை அமைப்புக்களே வசைபாடும் ஒரு கொடிய நாட்டுக்கு விழுந்து, விழுந்து வக்காளத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றீர். நன்றாகத்தான் இருக்கின்றது உமது தமிழீழத் தேசியப்பற்று!

சிறீ லங்கா நாட்டில் நாங்கள் பிறந்தநாட் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதற்கு கெளரவத்துடன் அனுமதி அளிக்கபட்டிருந்தால் இப்படி அதன் தேசியகீதத்தை வசைபாடவேண்டிய தேவை வந்திருக்காது.

அதுசரி, இந்த தேசியகீதத்தை இயற்றியது யாராம்? கெளதமபுத்தரோ? இராமரோ? இராவணனோ? நீர் கொழும்பில் பிறந்து அல்லது வளர்ந்து இருக்கின்றீர் போல இருக்கிது. அதுதான் உமக்கு இரத்தம் கொதிக்கிது.

வேறு என்ன? இத்துடன் இதை முடிக்கிறன். என்னை வந்து வரிவரியாக நாலு தமிழில் அல்லது சிங்களத்தில்(உமக்குத்தான் நல்லாத் தெரிந்திருக்குமே!) நல்லா வசைபாடும்!

நாளை தமிழீழம் மலர்ந்தாளும் அவள் இவளின் தங்கையாகத்தான் இருக்க முடியும்.

எவளின் தங்கையாக?

நீங்கள் தமிழராய் இருப்பது எமக்கு கேவலம்.

  • கருத்துக்கள உறவுகள்

எவளின் தங்கையாக?

நீங்கள் தமிழராய் இருப்பது எமக்கு கேவலம்.

தமிழராய் இருப்பதற்கு முதல் மனிதனாய் இருக்க வேண்டும். மனிதர்கள் செய்யும் தவறுக்காக தேசத்தைப் பழித்துப் பயனில்லை. தேசம் எல்லோருக்கும் சொந்தமானது. இந்தப் பூமி எல்லா உயிர்க்கும் சொந்தமானது. எல்லையற்றை உலகை படைக்க வேண்டும். நாடுகள் எல்லைகள் எதுவுமே வேண்டாம். மக்கள் எங்கு வாழ விரும்பினும் அங்கு போக வாழ உரிமைகள் பெற்று வாழ வழி விட வேண்டும். இது எங்கள் தனிப்பட்ட விருப்பம். அது நிறைவேறாத கனவு என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால் தமிழீழம் என்ற தேசமாவது இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும் என்று எண்ணலாம். நிச்சயம் தமிழீழம் சிறீலங்கா அரசு போல் நாட்டை நிர்வகிக்காது. அது சிங்கள மக்களின் ஆசைகளுக்கும் உரிமைகளுக்கும் இடமளிக்கும்.

ஐயா மாப்பிள்ளை நீங்கள் ஜெயில் இருந்து வந்திருக்கலாம். நாம் சிங்களத்தின் துப்பாக்கிக் குண்டில் இருந்து மீண்டு வந்தவர்கள். இருந்தாலும் மனிதர்களின் தவறுக்காக தேசத்தைப் பழிக்க நாம் முனையோம். அப்பாவி மக்களை விரோதியாக நோக்கோம். எய்தவன் இருக்க அம்பை நோகோம்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் செய்யும் கூத்துகளுக்காக அழகான அனைத்து இயற்கை வனப்புக்களையும் கொண்ட அற்புதத் தீவை பழிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அது நாங்கள் வாழ்ந்த வீடு. கொடுமைகளுக்கு ஆளான தாயைத் திட்டிப் புறந்தள்ளுவது போல் உள்ளது சிலரின் செய்கைகள்..! நாளை தமிழீழம் மலர்ந்தாளும் அவள் இவளின் தங்கையாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் இலங்கை என்பது எங்கள் சொத்து..! அந்நியர் தங்கள் சொந்த தேசங்களின் மீது வைத்திருக்கும் 1% பற்றுக் கூட இல்லாதவர்கள் தமிழீழத்தை நேசிப்பவர்களாக எம்மால் கணக்கிடவே முடியவில்லை.அந்நிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வந்து ஒரு 10 வருடம் வாழ்ந்தவுடன் அந்த நாடுகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த தேசம் என்ன பாவம் செய்ததென்று நினைத்துத் திட்டுகின்றனரே யாம் அறியோம். சிங்களச் சகோதரர்கள் பலர் தமிழர்கள் மீது விரோதம் பாராட்டாதவர்களாகவே உள்ளனர். நாளை தமிழீழத்தில் எம்மோடு கூடி வாழக் கூட அவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்படலாம். நாம் சிங்கள கொடும் ஆட்சியாளர்கள் போன்றவர்கள் அல்ல. எமது நித்திலமான தேசத்தை பழிக்க அழிக்க முனைவதை நாம் எப்போதுமே விரும்பியதில்லை.! சமாதானமாகப் பேசித் தீர்க்க கூடிவற்றை சிங்கள ஆட்சிப்பீடமே தனது சுயநலத்துக்காக போருக்குள் தள்ளி தேசத்தைச் சீரழிக்கிறது. அதைத்தான் திட்ட வேண்டும் அகற்ற வேண்டும்..! தேசத்தை அல்ல. :D

சிலவேளை உங்களின் பாதம்படாத இடங்களே இலங்கைத்தீவில் இல்லாமலிருக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை, பல இடங்களை வரைபடங்களிலும், செய்திகளிலும்தான் பார்த்திருக்கின்றோம்.. வாழ்ந்த கிராமத்தின் இருந்து 5 மைல் சுற்றுவட்டத்திற்கு அப்பால் போகமுடியாத அளவிற்கு நிலைமைகள் இருந்த காலத்தில் வாழ்ந்திருக்கின்றோம். எனவே இலங்கைத்தீவில் பற்று நமக்கில்லை. நம்முடைய விருப்பமெல்லாம், தமிழீழத்தின் வடபாகத்தில் இருந்து தென்பாகம் வரை சுதந்திரமாக சென்றுவரக் கூடிய நிலைமையை உருவாக்க உதவிசெய்வதே.

புலத்துநாடுகளை வெறுக்கவேண்டிய தேவை இல்லை. இந்நாடுகள் சிறிலங்காவைவிட சுதந்திரத்தை அளித்துள்ளன. எனினும் சொந்த நாடாக நாம் உரிமைகொள்ளவது தமிழீழமே.

  • 2 weeks later...

யாழ் கள அண்ணாமார்கள் சும்மா தானே இருக்கிறீர்கள். :lol::lol:

அட்ரா அட்ராராராரா

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளுக்கு முந்தி உந்த "வெதமாத்தயா" மகிந்த தனது இரண்டாவது மகனை (என்னை மாதி ஒண்டும் தள்ளாதது ஒண்டை) கடற்படையில் சேர்த்ததே வரும் காலத்தில் சிங்கள நாட்டில் நடைபெறவுள்ள கட்டாய இராணுவ சேவைக்குத்தான்!!!

"வெதமாத்தயா" என்றால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது :angry:

நமோ நமோ தாயே அல்ல, நமோ நமோ நாயே....... :P :P :P

விரும்பியவர்கள், நிமோ நிமோ நாயே என்றும் பாடலாம் :lol::lol::lol:

நல்லவனாக நடக்க முடியா விட்டாலும் பரவாயில்லை நல்லவனாக நடி என்பார்கள். ஏனென்றால் ஒரு நல்லவன் எப்படி இருப்பான் என்று நாம் சிந்திக்க வேண்டி வருகிறது மேலும் மேலும் நல்லவனாக நடிக்க நடிக்க அதுவே பழக்கமாகி நாம் நல்லவராகவே மாறிவிடுகிறோம்.

ஒரு தேசத்தின் கொடியையோ தேசிய கீதத்தையோ அவமதிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படிச்செய்வதை எந்த ஒரு civilized society யும் பொறுத்துக்கொள்ளாது.

எனவே இந்தச் சிங்களக் கொடி, குடை, கும்மாளம் விவகாரத்தில் கொஞ்சம் நல்லவர்களாக நடித்துப் பழகுவது நல்லது. இல்லாவிட்டல், எங்காவது பொது இடத்தில் சிங்களக் கொடியைக் கண்டால் zip ஐத்திறந்து கொண்டு அதை நோக்கி ஒடுவதில் முடியும், அது தர்ம அடியிலும் மற்றும் "களி தின்னுவதிலும்" முடியலாம்.

"வெதமாத்தயா" என்றால் என்ன?

"வெத மாத்தயா" என்றால் "பரியாரியார்" என தமிழில் அர்த்தப்படுமாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.