Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். விவகாரம் சூடுபிடிப்பு: செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்

Featured Replies



யாழ். விவகாரம் சூடுபிடிப்பு: செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்
 

article_1477466651-gg.jpgஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாரத்நாயக்விடம், யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார்.

http://www.tamilmirror.lk/184788/ய-ழ-வ-வக-ரம-ச-ட-ப-ட-ப-ப-ச-ய-த-ய-ளர-ம-ந-ட-ட-ல-ர-ந-த-அம-ச-சர-வ-ள-ய-ற-ன-ர-

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமைச்சராக இருக்க தகுதியில்லை.......

1) புலிகள் மீண்டும் வந்திட்டார்கள்
2}பாதாள உலக குழுவினர் 

இந்த இரண்டையும் வைச்சு சமாளிக்க தெரியாதவர் ஏன் அமைச்சராக இருக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக் கணைகளின் அகோரத்தில்.. கோத்தா.. ரம்புக்வெல.. கம்பன்பில... போன்றவர்கள் சடுதியா ஞாபகத்துக்கு வரவில்லைப் போலும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

கேள்விக் கணைகளின் அகோரத்தில்.. கோத்தா.. ரம்புக்வெல.. கம்பன்பில... போன்றவர்கள் சடுதியா ஞாபகத்துக்கு வரவில்லைப் போலும். tw_blush:

இன்னும் பொருந்தும்படியான காரணம் கிடைக்கவில்லை என மைத்திரி சொல்லியினுப்பியிருப்பார்...

  • தொடங்கியவர்

யாழ் சம்பவம் துரதிஷ்டவசமானது

யாழ் சம்பவம் துரதிஷ்டவசமானது

 

நல்லிணக்கத்தை ஏற்படுத்திச் செல்லும் நிலையில் அண்மையில் வடக்கில் இடம்பெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது என்று சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறுகின்றார்.

அந்த சம்பவத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சிவில் அமைப்புக்களின் தலையிட்டதன் காரணமாக பாரிய அசம்பாவிதத்தை தடுக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அண்மைக்காலமாக வடக்கில் சைக்கிள் உலாவல் யுகம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வீதியோர சோதனைச் சாவடிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த துரதிஷ்ட சம்பவம் அதன் பிரதிபலன் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் எவரையும் பாதுகாக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்பதுடன், இரு தரப்பையும் கருத்திற்கொண்டு விளைவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சம்பவங்கள் தொடர்பில் அனுபவமற்ற பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறுகின்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84790

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நவீனன் said:

சில சம்பவங்கள் தொடர்பில் அனுபவமற்ற பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறுகின்றார்.

நல்லா பூசி மொழுகின முன்னனுபவம் உள்ளவர்கள்.. முன்னுக்கு வாங்க என்றார் அமைச்சர். யாரும் நீதி பற்றியும்.. மூச்சும் இல்லை. இப்படி எனி நடக்காது என்ற உத்தரவாதமும் இல்லை. :rolleyes:

  • தொடங்கியவர்
இராணுவ புலனாய்வாளர்களால் வழிநடாத்தப்படும் ஆவாகுழு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர்
 
 
இராணுவ புலனாய்வாளர்களால் வழிநடாத்தப்படும் ஆவாகுழு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர்
ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடை யில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து  சட்டம் ஒழுங்கு அமை ச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காது அமைச்சர் ஓடி மறை ந்த சம்பவமொன்று இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது..
 
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. 
 
ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான கயந்த கருணா திலக்க தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார். 
 
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும்  ஆவா கும்பல் தொடர்பிலும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 
இதன்போது நீதியான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமை ச்சர் சாகல ரத்நாயக்கவிடம், ஆவா வாள்வெட்டுக் கும்பலை இராணுவப் புலனாய்வா ளர்களே வழிநடத்துவதாக யாழ் குடாநாட்டு மக்கள் குற்றம்சாட்டுகின்றார்களே அது தெரி யுமா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். 
 
இதற்கு எந்த பதிலையும் கூறாது அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து எழும்பி அவ சர அவசரமாக வெளியேறிவிட்டார். 

http://onlineuthayan.com/news/19407

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.