Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் நிலைப்பாடும் புலிகளின் நிலைப்பாடும் ஒன்றல்ல

Featured Replies

தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலைப்­பாடும் ஒன்­றல்ல

p15-677745a9e1f864996acf87bf586c0e1694818699.jpg

 

துறை­மு­கங்கள் மற்றும் கப்ப­ற்றுறை அமைச்சில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இட­ம்பெற்ற தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான சந்­திப்பில் அமைச்சர் அர்­ஜுன ரணதுங்க தெரிவித்த கருத்துக்கள்

நான்கு முறை யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்­களை நேரில் சந்­தித்து உரை­யா­டி­யுள்ளேன். எனவே தமிழ் மக்கள் நாட்டில் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை விரும்­பு­கின்­ற­வர்கள் அல்­ல­வெ­னவும் அறிந்து­கொண்­டுள்ளோம். எனவே தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலை­ப்பாடும் ஒன்­றென பார்ப்­பதில் அர்த்­த­மில்லை.

கேள்வி: நாட்டில் தற்­கால அர­சியல் குறித்து உங்­க­ளது நிலைப்­பாடு எவ்­வா­றா­னது?

பதில்: இன்று இந்த அர­சாங்கம் விரைவில் கவிழ்ந்­து­விடும் என்று பலரும் நினைக்­கின்­றனர். ஆனால் 2020 வரை பிரச்­சினை இன்றி செல்லும். இதுஇரு கட்­சிகள் இணைந்து செய்யும் அர­சாங்கம். இதனால் கருத்து வேறு­பா­டுகள் தோன்­றலாம். அதனால் எவரும் விமர்­சிக்­கலாம். இன்று அதற்­கான சுதந்­திரம் அர­சாங்­கத்­தினால் சக­ல­ருக்கும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது இலஞ்ச ஊழல் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் பேச்சு சில ஊட­கங்­களில் திரிபு படுத்­தப்­பட்டு காட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் அமைச்­ச­ர­வை­யிலும் பேசி­யி­ருந்தோம். எனவே ஜனா­தி­ப­தி­யால் விமர்­சிக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் தமது பக்­க­முள்ள தவ­று­களை திருத்­திக்­கொள்ள வேண்டும்.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி நாட்டின் பாது­காப்பு தரப்­புக்கு நிக­ராக சுதந்­திர கட்­சி­யையும் பாது­காக்க வேண்­டி­ய­வ­ராக உள்ளார். ஆனால் இந்தச் செயற்­பாட்­டிற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந­்த ராஜ­ப­க் ஷவும் அவரை சுற்­றி­யுள்ள குழுக்­களும் முட்­டுக்­கட்­டை­யாக உள்­ளனர். அவர்கள் வில­கி­நின்றால் சுதந்­திர கட்­சியை ஒன்­றி­ணைத்­துக்­கொண்டு சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ய முடியும்.

கடந்த காலங்­களில் முன்னாள் ஜனா­தி­பதியும் அவரை சுற்­றி­யுள்ள குழுக்­களும் அர­சியல் செய்­வது குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர். அவர்கள் இன்று ஊட­கங்­களில் கூறு­வதை அன்று செய்­தி­ருந்தால் இன்றும் அவர்கள் ஆட்­சியில் இருக்­கலாம். அவர்கள் அவ்­வாறு செய்­யாததன் கார­ணத்­தி­னா­லேயே இன்று நாங்கள் ஆட்சி அமைத்­துள்ளோம்.

அத்­துடன் சர்­வ­தேச நெருக்­க­டி­களை 90 வீதம் களைந்­துள்ளோம். அதுவே நாட்­டுக்கு இந்த அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ள மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். இன்றும் மஹிந்த இருந்தால் இதனை செய்­தி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை. அதே­நேரம் எம்­மி­டத்தில் நாட்டை கைய­ளிக்கும் போது மிகப்­பெ­ரிய கடன்­சுமைக்கு தள்­ளி­யி­ருந்­தனர். இன்று நாட்டை மீட்­கின்றோம்.

முன்­னைய அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மானது அதற்கு செல­வி­ட­ப்பட்­டது போன்று அரைமடங்கு செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்டி­ருக்க வேண்டும். ஆனால் இரு­ம­டங்கு தொகையை செல­வு செய்­து­விட்டு தற்­போது அதற்கு கடனும் வட்டியும் செலுத்த வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டுள்­ளது அதனால் குறித்த துறை­மு­கத்தை நஷ்­ட­மின்றி நடத்திச் செல்­வ­தற்­கான திட்­டத்தை அமைச்சர் மலிக் சம­ர­விக்ரம பிர­த­ம­ருக்கு வழங்­க­வுள்ளார்.

தற்­போது அதி­கா­ரிகள் குழு ஒன்று நிறு­வ­னங்­களின் உள்ளே இருக்­கின்­றது. கடந்த அர­சாங்­கத்தின் போது அரச நிறு­வ­னங்கள் எவ்­வாறு செயற்­பட்­டதோ அதைப்போன்றே தற்­போதும் செயற்பட முயற்­சிக்கும் பலர்

அரச நிறு­வ­னங்­களுள் உள்­ளனர். இந்த நெருக்­க­டி­களை சகல அமைச்­சர்­க­ளும் எதிர்­கொள்­கின்­றனர்.

அத்­துடன் எவன்கார்ட் ஊழல் என்­ப­வற்றின் பிரதான சூத்­தி­ர­தா­ரிகள் பணத்தை பயன்­ப­டுத்தி தப்பிச் சென்­றுள்­ளனர். அதனால் தான் ஜனா­தி­பதி சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை விமர்­சிக்­கவும் நேரிட்­டது. அமைச்சர் பௌசியை விசா­ரணை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்ய வேண்­டு­மாயின் முழு அமைச்­ச­ர­வை­யையும் கைது செய்ய வேண்டும் அதனால் பாரிய குற்றம் இழைத்­த­வர்­களை முதலில் கண்­டு­பி­டிக்க வேண்டும்.

கேள்வி: இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்­தி­லி­ருந்து அம்­பாந்­தோட்டை துறை­முகம், மத்­தள விமான நிலையம் ஆகி­யவை குறித்து விமர்­சித்து வரு­கின்­றது. ஆனால் அவை தொடர்­பி­லான எந்த வித குற்­றச்­சாட்­டுக்­களும் இது வரையில் பதிவு செய்­யப்­ப­டா­தி­ருப்­பது ஏன்?

பதில்: அவை தொடர்பில் நேர­டியான முறை­ப்பா­டுகள் இல்லை. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இடம்­பெற்ற நிகழ்­வு­களுக்கும் அள­வற்ற விதத்தில் செல­வுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­நேரம். இத்­து­றை­மு­கத்தை நிர்­மா­ணிக்க செல­விட்ட பணத்தில் அரை பங்கு பணத்தை என்­னி­டத்தில் தந்­தி­ருந்தால் அந்த துறை­முகத்தை நிர்­மா­ணித்து காட்­டி­யி­ருப்பேன். இவ்­வா­றான பெரிய தவ­றுகள் உள்­ளன. இவை தொடர்பில் தேடு­வ­தற்கு ஆணைக்­கு­ழுக்­களில் அதி­கா­ரி­களின் தொகை போதாமல் உள்­ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான பல சிக்­கல்கள் உள்ள போது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்காக பெற்­றுக்­கொள்ளப்பட்ட கடன்­க­ளி­னா­லேயே இன்று கொழும்பு துறை­மு­கம் நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது.

அத்­துடன் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளுக்கு தெரி­யாத விதத்தில் கடன்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவற்றுக்கு பொறுப்பு கூறு­ப­வர்கள் எவரும் இல்லை. அவை தொடர்­பி­­லேயே தேட வேண்டும்.

கேள்வி: அண்­மையில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை ஜனா­தி­பதி விமர்­சித்ததன் பின்­னணி என்ன?

பதில்: அது அவர் உரை­யி­லேயே வெளி­ப்பட்­டுள்ள ஒரு கார­ணி­யாகும். ஜனா­தி­ப­தி­யி­டத்தில் குறித்த நிறு­வ­னங்­களின் செயற்­பாடுகள் தொடர்பில் திருப்­­தி­யற்ற நிலைப்­பாடு தோன்­றி­யுள்­ளது. அவ­ரி­டத்தில் மட்­டு­மல்ல இன்று நாமும் அவ்­வா­றான நிலைப்­பாட்­டி­னையே கொண்­டுள்ளோம். எவ்­வா­றா­யினும் கடந்த அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­களே இந்த நிறு­வ­னங்­க­ளுக்­குள்ளும் உள்­ளனர் என்­ப­தையும் மறந்­து­விடக் கூடாது.

அதனால் இதனை எப்­படி சுயா­தீ­ன­மாக நடத்திச் செல்­வது என்­பதும் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. தற்­போது புதி­ய­வர்­களை இணைத்­துக்­கொள்ளும் தீர்­மா­னங்­களும் உள்­ளது. அதற்­கான விசேட நீதி­மன்றம் ஒன்றை அமைக்க திட்­ட­மிட்­டி­ருந்தோம். அதனை பெற்­றுக்­கொள்­ளவும் அதனை அர­சி­யல் பழி­வாங்கல் என்று விமர்­சிப்பர். ஆனால் மஹிந்தவின் போக்கில் சென்­றி­ருந்தால் இன்று 90 வீதம் ஊழல் செயற்­பா­டு­களை கண்­ட­றிந்­­தி­ருப்போம்.

இன்று அதற்கு மாறாக சட்டம் முறையா க நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லே­யே நாம் உள்ளோம்.

கேள்வி: இவ்­வாறு கடந்த அர­சாங்­கத்தின் ஊழல் தொடர்பில் பேசு­கின்ற போது மத்­திய வங்கி ஆளுநர் விவ­காரம் என்ன ஆனது?

பதில்: இது தொடர்­பி­லான விசா­ரணை அறிக்கை அடங்கிய கோப் குழு அறிக்கை மிக விரைவில் வெளி­வரும். யாராக இருந்­தாலும் குற்­றங்­களுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதில் நட்பு, கட்சி பேதங்கள் பார்க்கக்கூடாது. குற்றம் இழைக்­கப்­ப­ட்டி­ருக்கும் பட்­சத்தில் தண்­டிக்­கப்­பட வேண்டும் அப்­போது தான் இது நல்­லாட்­சி­யாக அமையும்.

மறு­பு­றத்தில் இந்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என விமர்­சிக்கும் கூட்டு எதி­ர­ணி­யினர் அவர்கள் மீது இருக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் எங்கும் பேசா­தி­ருப்­பது வேடிக்­கை­யா­னது.

கேள்வி: தற்­போது அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வேலை வாய்ப்பு வழங்­கி­யமை தொடர்பில் பெரும் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. நீங்­களும் அவ்­வா­றே தான் வேலை­வாய்ப்­புக்கள் வழங்­கு­கின்­றீர்­களா?

பதில்: நாம் அவ்­வாறு செய்­ய­வில்லை. உரிய வெற்­றி­டங்­க­ளுக்­கான தகைமை அடிப்­ப­டை­யி­லேயே இணைத்­துக்­கொண்­டுள்ளோம். மஹிந்­தவின் காலத்தில் முறை­யற்ற படி­முறை­களின் கீழ் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு வெளியே சென்­றி­ருந்த பல­ருக்கும் இன்று நிய­ம­னங்கள் வழங்கி சேவையில் இணைத்­து­கொண்­டுள்ளோம். அதற்­க­மைய நாட்டின் சகல பகு­தி­களி­லிருந்தும் சேவைக்கு பலர் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

கேள்வி: நாட்டில் இன்று காணப்படும் தமிழ் மக்கள் பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளன. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: தமிழ் மக்­க­ளுக்கு இன்று பிரச்­சி­னைகள் இல்லை. அவர்கள் இன்று சுதந்­தி­ர­மாக வாழ முடியும். அதற்­கான சூழலை தற்­போ­தைய அர­சாங்கம் உரு­வாக்கி கொடுத்­துள்­ளது. அதனை யாழ்ப்பா­ணத்­துக்கு நேர­டி­யாக செல்ப­வர்கள் கண்­டு­கொள்ள முடியும். தமி­ழர்கள் மட்­டு­மல்ல. இந்­நாட்டின் சகல இன மக்­க­ளுக்கும் அவர்­க­ளது உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். ஆனால் தற்­போதும் பழைய சிந்­த­னை­க­ளி­லி­ருந்து மாறு­ப­டாத பலர் உள்­ள­னர். அவர்­களே இன­வாத கருத்­தி­யல்­களை சமூ­கத்தில் வலுப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர்.

இன்று நாம் வேலைவாய்ப்பு வழங்கும் போதும் அவ்­வாறு இன வேறு­பா­டு­களை பார்ப்­ப­தில்லை. ஆனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையும் விடு­தலை புலி­களின் கோரிக்­கை­யும் ஒன்று என்ற அடிப்­ப­டையில் பார்க்­கப்­ப­டு­வதை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­காது. தமிழ் மக்­களின் கோரிக்­கையும் புலி­களின் கோரிக்­கையும் ஒன்­றல்ல என்­பதே மெய்­யான நிலைப்­பாடு. நான் நான்கு முறை யாழ். தமி­ழர்­களை நேர­டி­யாக சந்­தித்து உணர்ந்­து­கொண்ட விடயம் இது.

அங்கு வாழும் அப்­பாவி தமிழ் மக்கள் என்றும் நாட்டை பிள­வு­ப­டுத்த கோர­வில்லை. புலிகள் தான் அவ்­வாறு கோரினர். அந்த நிலைப்­பாட்டில் இன்று தமிழ் மக்கள் இல்லை. அவர்கள் இன்று மகிழ்ச்­சி­யா­கவும் வாழ்­கின்­றனர்.

கேள்வி: ஆனால் ஐக்­கிய நாடுகளின் பரிந்­து­ரைக்­க­மை­வான செயற்­பா­டுகள் உரிய விதத்தில் முன்­னெ­டுக்­க­ப­்படு­கின்­றதா?

பதில்: அண்­மையில் ஜனா­தி­பதி ஐக்­கிய நாடுகள் சபையின் கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்­றி­ருந்த வேளை அவ்­வ­மைப்பின் பிர­தி­நி­த­ிக­ளி­டத்தில் அவர்­களின் பரிந்­து­ரைக்­க­மை­வான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க இன்னும் கால அவ­காசம் வேண்டும் என பகி­ரங்­க­மாக கோரி­யி­ருந்தார்.

அதனால் இவற்றை நாம் ஓரிரு மாதங்­களில் செய்து முடித்­து­விட முடி­யாது. அதற்கு மக்கள் கருத்­துக்­களை அறிந்து சகல இனக்­கு­ழுக்­க­­ளுக்கும் நீதி­யான ஒரு படி­மு­றையை உரு­வாக்க வேண்டும் அதற்­கான அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களும் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த காலங்­களைப்போன்று தனிப்பட்­ட­வர்களின் தேவைக்­காக அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் செய்­வதில் அர்த்­த­மில்லை. அர­சி­யல­மைப்பில் திருத்தம் செய்­கின்ற போது தற்­கா­லத்­தி­லி­ருந்து 50 வரு­ட­கா­ல தூர­நோக்கை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும்.

தற்­போது அவ்­வாறு தான் தேர்தல் முறை­யும் மாற்­றப்­ப­டு­கின்­றது. அதனால் நாம் தற்­போது சக­லரும் இலங்­கையர் என்றே சிந்­திக்க வேண்டும். கடந்த காலங்­களில் அரச அனு­சர­ணையுடன் அர­ங­்கேற்­றப்­பட்ட இன­வாத ரீதி­யி­லான அட்­டூ­ழி­யங்கள் இனி­வரும் நாட்­களில் முன்­னெ­டுக்­கப்­பட கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தே அர­சாங்கம் செயற்­படும். அந்த நிலைப்­பாட்டை சர்­வ­தே­சத்­திற்கும் ஜனா­தி­பதி தெளி­வுப­டுத்­தி­யுள்ளார்.

கேள்வி: ஒலுவில் துறை­முக நிர்­மாண பணி­க­ளுக்­காக துறை­முக அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னால் மக்கள் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்கு அதற்கான நஷ்­ட­ஈடு வழங்­கப்­படுமா?

பதில்: முன்னர் மக்­க­ளுக்கு கூறிய தொகையை பார்க்­கிலும் அதி­க­மாக கோரு­கின்­றனர். துறை முகத்தை அமைத்த பின்பே இவ்­வாறு அதிக தொகை­யினை கோரு­கின்­றனர். அவர்கள் கோரு­கின்ற தொகை­யினை அதி­கா­ர­ச­பை­யினால் வழங்க முடி­யாது. அத­னா­லேயே கால­தா­ம­த­மா­கின்­றது. ஆனாலும் சிலர் இந்த தொகை­யினை பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். தற்­போதும் அது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதி­கா­ர ­ச­பை­யினர் குறிப்­பிடும் தொகை­யினை மக்கள் பெற்­றுக்­கொண்டால் விரைவில் நஷ்­டஈடு வழங்க முடியும்.

கேள்வி: குறித்த பிர­தே­சத்தில் வாழும் மக்கள் கட­ல­ரிப்­பி­னாலும் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளனர் அதற்கு மாற்று அல்­லது பாது­காப்பு திட்­டங்­களை செய்­துள்­ளீர்­களா?

பதில்: தற்­போது கட­ல­ரிப்பை தடுப்­ப­தற்கு கல் வேலி அமைக்கப்­பட்­டுள்­ளன. அது தற்­கா­லி­கமா­கவே உள்­ளது. ஆனால் இதற்­கான நீண்­ட­கால திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இதற்கு வெளி­நா­டு­க­ளி­டத்தில் உதவி கோரப்­பட்­டுள்­ளது. உத­வித்­தொகை கிடைத்ததன் பின்னர் விரைவில் அதற்­கான செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கேள்வி: ஒலுவில் துறை­முக அபி­வி­ருத்­தியே தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மென மக்கள் கூறு­கின்­றனர். இது தொடர்பில் அர­சாங்கம் என்ன நிலைப்­பாட்டில் உள்­ளது?

பதில்: குறித்த துறை­மு­கத்தின் பணிகள் கடந்த காலங்­களில் ஒழுங்­கான படி­மு­றை­களின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதனால் தான் இவ்­வா­றான சிக்கல் நிலைமை தோன்­றி­யுள்­ளது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் முறை­யான திட்­டங்கள் வகுத்து அபி­விருத்தி பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் அப்­ப­கு­தி­யி­னரும் பய­ன­டைவர் வேலை­வாய்ப்­புக்­களும் உரு­வாக்­கப்­படும்.

கேள்வி: கட­ல­ரிப்பினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வீர்­களா?

பதில்: குறித்த பகு­தியில் கட­ல­ரிப்பு ஏற்­ப­டு­வது முதல் முறை­யல்ல. பல முறை இவ்­வாறு ஏற்­பட்­டுள்­ளது. சில காலங்­களில் இவ்­வாறு கட­ல­ரிப்பு இருக்கும். பின்னர் அந்­நிலை இருக்­காது. எனவே அது தொடர்பில் பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு குறிப்­பிட்­டுள்ளோம் அவர்களின் அறிக்­கையின் பிர­காரம் தற்­போது மக்களுக்கு பாதிப்பற்ற விதத்தில் துறைமுக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வோம்.

கேள்வி: குடா­நாட்டில் உள்ள தீவு­க­ளுக்­கி­டையில் படகுச் சேவையை சீர்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை இதற்கு முன்னர் கடற்­ப­டை­யினர் ஏன் வழங்­கி­யி­ருக்­க­வில்லை?

பதில்: அதற்கான முயற்­சி­களை எவரும் மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதே பிர­தான காரணம். இருப்­பினும் இது­வ­ரை­காலம் இந்தச் சேவை­யினை கடற்­ப­டை­யினர் மாத்­தி­ரமே முன்­னெ­டுத்து வந்த நிலை­யி­லேயே தற்­போது இந்தப் பணிகள் துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த தீவு­களுக்கிடையில் படகுச் சேவை­களை முன்­னெ­டுக்­கின்ற போது இரவு வேளையில் மீன்­பி­டிக்கச் செல்லும் மீன­வர்கள் மீண்டும் காலை வேளையில் போக்­கு­வ­ரத்துச் சேவை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அவர்கள் குடி­போ­தையில் பட­கு­களை செலுத்திச் செல்­வ­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது. அதனால் அப்­ப­குதி மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே குறித்த செயற்­பா­டுகளை பொறுப்­பேற்­றுள்ளோம். அதனால் விரை­வில் அதற்­கான சட்ட திட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­படும்.

கேள்வி: திரு­கோ­ண­மலை துறை­முக அபி­விருத்­திக்கு இந்­திய அர­சாங்­கத்தின் உதவி பெறப்­படுமா?

பதில்: இல்லை. அது தொடர்பில் இந்­தியா எம்­முடன் பேச­வில்லை. இருப்­பினும் சிங்­கப்பூர் நிறு­வனம் ஒன்றின் பிர­தி­நி­திகள் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­திற்கு வருகை தந்­துள்­ளனர். அவர்கள் முன்வைக்கும் மதிப்­பீட்டு அறிக்கையின் பிரகாரம் திருமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் விரைந்து முன்னெடுக்கப்­­­படும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-26#page-4

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலைப்­பாடும் ஒன்­றல்ல


நான்கு முறை யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்­களை நேரில் சந்­தித்து உரை­யா­டி­யுள்ளேன். எனவே தமிழ் மக்கள் நாட்டில் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை விரும்­பு­கின்­ற­வர்கள் அல்­ல­வெ­னவும் அறிந்து­கொண்­டுள்ளோம். எனவே தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலை­ப்பாடும் ஒன்­றென பார்ப்­பதில் அர்த்­த­மில்லை.

அட

நாலு முறை வந்திருக்கிறார்

சந்தித்திருக்கிறார்

அப்ப காணும் தானே...

இதுவே அதிகம் தமிழர்களை புரிந்து கொள்ள....

ஆனால் புலிகளை எப்படி????

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

தமிழ் மக்­க­ளுக்கு இன்று பிரச்­சி­னைகள் இல்லை. அவர்கள் இன்று சுதந்­தி­ர­மாக வாழ முடியும். அதற்­கான சூழலை தற்­போ­தைய அர­சாங்கம் உரு­வாக்கி கொடுத்­துள்­ளது.

இவர் பேசுவது சுத்த உண்மை. இதே அரசாங்கத்தோடு அப்ப எதிர்கட்சி தலைவர்.. தீர்வு வருகுது வருது.. இந்தா 2016 குள்ள வருகுது என்று சொன்னது எல்லாம்.. ஓ.. வாள் வெட்டு.. கஞ்சாப் பிரச்சனைகள்.. இருக்கில்ல. அதற்குத் தீர்வு போல.

சிங்கள அரசியல்வாதிகள்.. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்... எவனும்  அடிப்படையில் மாறமாட்டாங்கள். எம்மவர்கள்.. எமக்குள்ளேயே நீ சுத்தம்.. நான் சுத்தம் என்று கொண்டு.. போலி அடையாளம் தேட முனைந்து இறுதியில்  ஏமாளிகளாய் அலைவது.tw_blush::rolleyes:

"தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலைப்­பாடும் ஒன்­றல்ல" என்பதில் உண்மை இல்லாது இல்லை. புலிகள் வந்தேறு குடிகளான சிங்களவனும் வாழட்டும் என்று ஈழத்தின் பெரும் பகுதிகளை விட்டுக்கொடுத்து தமிழர் கடந்த 400-500 வருடங்களில் பெரும்பான்மையாக இருந்த இடங்களை மட்டுமே தமிழீழத் தனிநாடு என்று போராடி வந்தனர்.

ஆனால் 2008 இல் இருந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் முடிவற்ற கோரத்தாண்டவங்களை முழுமையாக  கண்ட தமிழர்கள் ஈழத்தின் முழுப் பகுதியிலும் வந்தேறு குடிகளான சிங்களவர்களை முழுமையாக அகற்றுவதன் மூலமே பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.

எனவே தற்கால தமிழரின் நிலைப்­பாடும் புலி­களின் நிலைப்­பாடும் ஒன்­றல்ல தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.