Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சப்பாத்துகளும்,புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Featured Replies

பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சப்பாத்துகளும்,புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

img_8778
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநாச்சி

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசலையில் கடந்த மாதம் பதினைந்தாம் திகதி பாடசாலைக்கு சப்பாத்து அணிந்த வராத மாணவா்களின்  செருப்புக்கள் ,சாண்ரில்ஸ்கள் கழற்றப்பட்டு வீதியில் குவித்த சம்பவம் பல்வேறு தரப்புக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்திய நிலையில்  குறித்த செய்தியினை ஊடகங்களில் பார்வையிட்ட சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினா் முன் வந்து குறித்த பாடசாலையில் சப்பாத்து வாங்க முடியாத மாணவா்களின் பெயா் விபரங்களை வலயக் கல்வித்திணைக்களம் ஊடாக பாடசாலை அதிபரிடம் பெற்று அவா்ளுக்கு இன்று 11-11-2016 வெள்ளிக்கிழமை சப்பாத்துக்கள் மற்றும் புத்தகப் பைகளையும் வழங்கி வைத்துள்ளனர்.

பாடசாலை அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட 117 மாணவா்களுக்கு சப்பாத்து மற்றும் புத்தகப் பை என்பவற்றோடு, குறித்த சம்பவத்தில் வீதியில் குவிக்கப்பட்ட காலணிகளுக்குரிய பதினைந்து மாணவா்களுக்கும் மேலதிகமாக கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபா் கணேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் முறைசார கல்விப்  பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளா் த.பேரின்பராசா,  பிறேம்  நற்பணிமன்றத்தின்  தாபகா் கெங்கேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின்  செயலாளா் பூபாலன், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளா் தங்கராசா மற்றும் ஆசிரியா்கள் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

14691086_933533476751712_7474607931128812737_n14718758_933533470085046_7806719002924605566_nimg_8723img_8727img_8732img_8740img_8752img_8756img_8778img_8785img_8790img_8793img_8798img_8807

http://globaltamilnews.net/archives/6731

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினருக்கு நன்றிகள்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல்

  • கருத்துக்கள உறவுகள்

பாதணிகளை எரித்த ஆசிரியரை பராட்டி வாழ்த்தவேண்டும்போல் தோன்றுகிறது! :rolleyes:

அவரின் செய்கைகள் தவறானது என்றாலும்!! அவர்தான் புதிய பாதணிகளுடன் மற்றும் உபகரணங்களையும் மாணவர்கள் பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளதை நினைவுகூரவேண்டி உள்ளது.  :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

பாரட்டுக்கள் ஐயா. 

இது போன்ற வறுமை நிவாரணங்கள் தான் இப்பொழுது மக்களுக்கு தேவை. இந்த சிறுவர்களின் கண்களில் தெரியும் குதுகலத்தை பாருங்கள், இதற்கு இந்த உலகத்தில் எது ஈடாகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.