Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறா? விக்னேஸ்வரன் பகீர் கேள்வி

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்கு தெற்கிக்கான உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் அஞ்சலி செலுத்துவது தவறு என கூற முடியாது.

மக்கள் தங்களது பிள்ளைகள் உயிரிழந்ததினை நினைவுப் படுத்தி அஞ்சலி செலுத்தினால் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்துவிடுவார்கள் என்று இவர்களுக்கு பயம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கின் சீரழிவுகள்...

வடக்கில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், போதைப்பொருள் பாவனை செயற்பாடுகள், மற்றும் போதைப்பொருள் பாவனைகள் அதிகம் காணப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப்பொருள் பாவனையோ, பாலியல் பலாத்காரங்களோ, பயங்கரவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை.

ஆனால் யுத்தம் முடிவடைந்து தற்போது 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வடக்கில் 5000இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவா குழு போன்ற பிரிவுகள் இயங்குகின்றது.

விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறாத இந்த செயற்பாடுகள் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் ஏன் இடம்பெற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

http://www.tamilwin.com/politics/01/125527?ref=home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

அட நீங்கள் வேறை..........எங்கடையள்ளை கொஞ்சம் இப்பவும் விடுதலைப்புலிகள் என்றால் ஏதோ வேறை கிரகத்தவனை பாக்கிற மாதிரியெல்லே பாக்குதுகள்.
பட்டும்....பட்டுக்கொண்டும் இன்னும் தெளியேல்லை...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான... கேள்வி.  
மற்றைய தமிழ் தலைவர்களுக்கு,  விக்னேஸ்வரன் ஐயாவைப் பார்த்து.... கொஞ்சமாவது ரோசம் வரட்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீதி அரசரின்ற தனிகட்சி  இனிவரும் காலத்தில் தனி பெரும்பான்மையோடு அரசமைக்கும் . பின் கதவால் நுழைந்தவர்கள்  தேர்தல் நேரத்தில் மட்டும் சீன் காட்டுபவர்கள் எல்லாம் மண்னை கவ்வட்டும் !!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நியாயமான... கேள்வி.  
மற்றைய தமிழ் தலைவர்களுக்கு,  விக்னேஸ்வரன் ஐயாவைப் பார்த்து.... கொஞ்சமாவது ரோசம் வரட்டும்.

அரசியலில் ரோசமாவது வெட்கமாவது மானமாவது

  • தொடங்கியவர்

இந்த வருட மாவீரர் தின நிகழ்வுகளை இலங்கையெங்கும் பரவலாக வாழும் தாயகத் தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தின் ஆரம்பம் முதல் தீபம் ஏற்றி கடைபிடிப்பதாக பல தகவல்கள் கிடைத்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

புலியையும் புலிக்கொடியையும் மறக்க பண்ண என்ன ஆட்டம் ஆடுறாங்கள் முடியலையே .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

புலியையும் புலிக்கொடியையும் மறக்க பண்ண என்ன ஆட்டம் ஆடுறாங்கள் முடியலையே .

இரண்டுமே இல்லாமல் இலங்கையில் அரசியல் என்ற தேரை நகர்த்தவே முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.