Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது! சுமந்திரன் பா.உ.

Featured Replies

வடகிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியதுஅவசியமே. ஆனால் அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரு மாகாணங்களையும்இணைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களாகும் எனநாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைபின் பேச்சாளருமானஎம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் எனஅண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர்மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் தரப்புக்களுடன் நாம் தற்போது பேசி வருகின்றோம். ஆனால் போர் காலத்தில் உண்டான சில கசப்பு உணர்வுகள் தற்போதும்முஸ்லிம் மக்களின் மனங்களில் இருக்கின்றது. அவை களையப்படவேண்டும்.

இந்நிலையில்முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெறுவது முஸ்லிம் தலைவர்களாலும் உடனடியாகமுடியாது.

தற்போது கிழக்கு மாகாண த்தில் முஸ்லிம் தரப்புடன் இணைந்து மாகாணசபையில் ஆட்சியமைத்துள்ளமையானது நம்பிக்கை தருவதாக இருக்கின்றது.

இந்நிலையில் திடீரென மாகாணங்கள்இணைக்கப்பட வேண்டும் என்பது உடனடியாக நடைமுறை சாத்தியமற்றது.

எனவே 2 அல்லதுஅதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைவதற்கான பொறிமுறையை புதிய அரசியலமைப்பில் இணைத்து கொள்ளலாம்.

அவ்வாறு இணைத்து கொண்டால் காலப்போக்கில் இரு மாகாணங்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. என்றார்.

http://www.tamilwin.com/politics/01/126801?ref=morenews

  • தொடங்கியவர்
On 2/12/2016 at 11:01 PM, போல் said:

வடகிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியதுஅவசியமே. ஆனால் அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களாகும்

யதார்த்தமான கருத்து!

வடக்கு கிழக்கை இணைக்காட்டி அது தீர்வே இல்லையடா!

வடக்கு கிழக்கை இணைக்காட்டி அது தீர்வே இல்லையடா!

நாவல் மரத்தின் பின்னால் உள்ள சிறு கால்வாய் வழியே வெள்ள நீர் வடிந்தோடியபடி இருந்தது. ஞாயிற்றுக் கிழமை பேப்பர்களை காவியபடி வந்தான் உருத்திரன். “நாடாப் புயல் நல்லாய்தான் அடிச்சுது…” என்றார் சண்முகத்தார். “தற்காலிக வீடுகளிலை இருக்கிற சனங்கள் புயல் குளிரிலை சரியான கஷ்டப்பட்டுப் போச்சுதுகள்..” உருக்கமாய்கூறினான் உருத்திரன் .

“அடேய்.. சண்முகம்..நாடாப் புயலையும் சனம் தாங்கிட்டுது… உங்கடை சுமந்திரன் புயலைத்தானே தாங்க ஏலாமல் கிடக்குது..” புயலைக் கிளப்பினார் இரத்தினத்தார். “ஏன் அண்ணை? என்ன நடந்தது?…” லட்சுமனன் வாயைப் பிளந்தான்.

“வடகிழக்கை இணைக்கிறது சாத்தியமில்லை எண்டு சுமந்திரன் சொல்லியிருக்கிறார்.. “உதுதானடா இப்ப கிளம்பியிருக்கிற புதுப் புயல்…” என்று நக்கலாகச் சிரித்தார் இரத்தினத்தார்.

“சுமந்திரன் புயல் அப்பப்ப கிளம்புறதுதானே..” உருத்திரனும் எடுத்துவிட்டான்.

“அடேய் மச்சான் அது கோடை காலத்திலும் அடிக்கும்.. அப்பிடி ஒரு பொல்லாத புயல்” இலட்சுமனனும் தன் பங்குக்கு தாக்கினான்.

சண்முகத்தார் மௌனம் கலைத்தார். “சுமந்திரன் நடைமுறை யாதார்த்தத்தைதானே சொல்லுறார்.. இதிலை என்ன இரத்தினமண்ணை தவறு?..” என்று கெஞ்சலாக, சண்முகத்தார். “என்னடா? நடைமுறை யதார்த்தமோ… உதை முந்தி ஆர் சொல்லித் திரிஞ்சது நினைவிருக்கே?..” இரத்தினத்தாரின் கேள்வியால் சுருங்கியது சண்முகத்தாரின் முகம்.

“டக்ளஸடா…”

உருத்திரனும் இலட்சுமனும் பெரிதாய் சிரித்தனர்.

“அதுவேறை.. இதுவேறை…” சமாளிக்கப் போராடினான் சண்முகத்தார்.

“ஓமடா.. அவரும் இப்பிடித்தான் இணக்க அரசியல் செய்தவர். முந்தி மத்தியலை கூட்டாட்சி.. மாநிலத்திலை சுயாட்சி.. எக்காலத்திலையும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு தாயகம் எண்டவர்.. நக்குண்டார் நாவிழந்தார் எண்டுற மாதிரி மகிந்தவின்டை அரச சபையிலை எல்லாத்தையும் கைவிட்டு முழுக்குப் போட்டவர்…” பேசி முடித்தார் இரத்தினத்தார்.

“அதென்ணை….” இழுத்தார் சண்முகத்தார்.

“ஆனால் வடக்கு கிழக்கு இணைக்காமல் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை எண்டெல்லே சம்பந்தர் சொன்னவர்…” உருத்திரன் பதிலை எதிர்நோக்கிக் கேட்டான். “மற்றது, தேர்தல் காலத்திலை வடக்கு கிழக்கு இணைப்பு எண்டுற ஒரு வாக்குறுதியையும் எல்லே வைச்சவையள்..” இலட்சுமன் சண்முகத்தாரை நோக்கினான். “அது வடக்கு கிழக்கிலை மக்கள் முன்வைச்ச ஆணையடா..” இரத்தினத்தார் சற்று முகம் சிவக்கக் கூறினார்.

“இப்ப என்ன? முஸ்லீம் மக்கள் தயங்கினம் எண்டுதானே சுமந்திரன் சொல்லுறார்.. முஸ்லீம் மக்களுக்கு சில கசப்பு இருக்குது.. எண்டுதானே சொல்லுறார்…” சண்முகத்தார் நியாயப்படுத்தினார்.

“ஓமடா! முஸ்லீம்கள் இல்லை. அவை இஸ்லாமியர்கள். தமிழ் தாய் வழி வந்த தமிழ் சமூகம்.. ஓ.. அவையள் எங்கடை சனங்களுக்கு என்னவெல்லாம் செய்தவை. அந்த கசப்புக்களை நாங்கள் மறந்திட்டம்.. ஆனால் அவையள் மறக்க மாட்டினம்… அதோடை சிங்கள அரசு செய்யிறதை எல்லாம் அவையள் மறந்து காலம் முழுக்க இணக்க அரசியல் செய்வினம். தமிழ் சமூகத்தோடை இணைஞ்சு ஒரு தீர்வுக்கு முன்வரமாட்டினம்…” இரத்தினத்தார் சொல்லி முடித்தார்.

“அதுதானே..” என்றான் உருத்திரன்.

“சுமந்திரனின் நல்ல காரணம் சொல்லுறார்… முஸ்லீம் தலைவர்களோடை பேசுறம் எண்டிச்சினம்.. பிறகு அவையள் மறுக்கினம் எண்டுறினம்.. இவளவு காலமும் என்ன செய்தவை? வடக்கு கிழக்கிலை இருக்கிற தமிழ் பேசுற மக்களின்டை இருப்புப் பிரச்சினையேல்லே இது..” இரத்தினத்தாரின் கேள்விக்கு பதிலின்றி முழித்தார் சண்முகத்தார்.

“எங்கை தொடங்கி எங்கை வந்து நிக்கிறம்..” பெரு மூச்செறிந்தார் இரத்தினத்தார். “வடக்கு கிழக்கை இணைக்காட்டி என்ன இப்ப? ஒரு தீர்வைப் பெறுவம்…” சண்முகத்தார் சாதாரணமாகச் சொன்னார். “அடேய் விசரனே.. வடக்கு கிழக்கு இணைக்காட்டி, அது தீர்வே இல்லையடா.. இரத்தினத்தாரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியாகப் பார்த்தார் சண்முகத்தார்.

தொடர்ந்தார் இரத்தினத்தார். “ஏமாத்து வேலை.. வடகிழக்கு இணைச்சு, தமிழர் தேசம் அறிவிக்காட்டி, முழுக்க சிங்களமயமாகும். முழுக்க சிங்கள அதிகாரத்தின்டை மையமாய் மாறும் ..” இரத்தினத்தார் வேதனையுடன் கூறினார். “மெய்தான் அண்ணை…” தலையாட்டினான் உருத்திரன்.

“உந்த அரசாங்கத்தோடை, இணைஞ்சு போய், வடக்கு கிழக்கை கூட இணைக்க ஏலாதவையள் பிறகென்ன தீர்வை வாங்கப் போறினம்? இலட்சுமனன் தொடுத்தான் அடுத்த கேள்வியை. “கடைசியிலை சிங்கள அரசாங்கத்தை காப்பாற்றுற வேலையத்தான் செய்யப் போறினமோ?..” உருத்திரனும் கேட்டான்.

“வடக்கு கிழக்கு இணைக்கிறதிலை, தமிழ் – இஸ்லாமிய மக்களுக்குள்ளை இணக்கம் இல்லாத மாதிரி பிரச்சினை மாதிரிக் காட்டி, சிங்கள அரசின்டை வடக்கு கிழக்குப் பிரிப்புத் திட்டத்துக்கு சுமந்திரன் நாடாப் புயலைவிட வேகமாய் சுழன்றடித்து வேலை செய்யிறார் எண்டுதான் நான் நினைக்கிறன்…” என்றபடி எழுந்து நடந்த இரத்தினத்தாருக்குப் பதில் சொல்லாமல் உருத்திரனையும் இலட்சுமனனையும் பார்த்துக் கொண்டிருந்தார் சண்முகத்தார்.

“இணக்க அரசியல் எண்டால் உதுதான் கதி…” என்றபடி இரண்டு காகங்கள் நாவல் மரத்திலிருந்து பரிதாபமாகப் பார்த்தது சண்முகத்தாரை.

http://thuliyam.com/?p=50346

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்வதற்கு எத்தனை பெட்டிகள்?

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இணைப்பு தேவை எந்தளவு அவசியமோ, அதே அளவு அவசியம் இஸ்லாமிய மக்களுக்கும் உண்டு என்பதை, தூசணப் பிக்கர், ஞானசேர பிக்கர் இருவரும் புரிய வைக்கிறார்கள் என்ற வகையில் அவர்களுக்கு நன்றி.tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டாய் இருந்த வட, கிழக்கை பிரிச்சுப்போட்டு, இணைக்கிறதுக்கு ஏதோ சந்திர மண்டலத்துக்குப் போறமாதிரி கதையளக்கினம். இவையலெல்லாம் ராஜதந்திரியல். அந்தப் புளுகுகளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. பெரிய சட்டத்தரணியள். உவையின்ர திறமையள் எல்லாம்  ஏழையளை ஏமாத்தத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.