Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பில் பதற்றம் ; கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைப்பு (படங்கள் இணைப்பு)

Featured Replies

சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பில் பதற்றம் ; கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைப்பு (படங்கள் இணைப்பு)

 

 

பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன  பகுதியில்  அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

15320255_1561031860579824_1015978003_n.j

ஏற்பட்டுள்ள பதற்றநிலைமையை கட்டுபடுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

15310673_1561033873912956_1233754284_n.j

மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பினர் மங்களராமய ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் கரடியனாறு பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.

15310657_1561031843913159_341519790_n.jp

விடயத்தை அறிந்த பொலிஸார்  பொதுபலசேனா அமைப்பினரை குறித்த பகுதிக்குள் நுளைய விடாமல் தடுப்புக் காவலொன்றை அமைத்துள்ளனர்.

15301323_1561031803913163_531432663_n.jp

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்குள் பொதுபலசேனா அமைப்பினரை  உள்நுளைய விடுமாறு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையால் குறித்த பகுதிக்குள் பதற்றநிலை உருவாகியுள்ளது.

15301296_1561031690579841_2131122212_n.j

15301277_1561033963912947_1102535739_n.j

15301061_1561033787246298_299695531_n.jp

15300486_1561031810579829_2068256233_n.j

15282086_1561033903912953_851195179_n.jp

15240144_1561052263911117_160279218_n.jp

15281097_1561052277244449_644249949_n.jp

http://www.virakesari.lk/article/14124

 

 

 

மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு
 

article_1480757645-DSC_6012-800x600.JPG

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன்

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள பிக்கு, இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவரது பயணம் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையிலேயே மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்துக்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் முழுமூச்சாக குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மங்களராம விஹாரையைச் சூழவிருந்த கடைகள் பூட்டப்பட்டன. போக்குவரத்து சேவையும் சற்று நேரம் பாதிக்கப்பட்டது. பயணிகள் பதற்றமடைந்தனர்.

article_1480757674-DSC_6006-800x600.JPG

- See more at: http://www.tamilmirror.lk/187404/-மட-டக-களப-ப-த-ரர-ஆர-ப-ப-ட-டத-த-க-க-ம-ஸ-த-ப-#sthash.sb91OsHm.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மட்டக்களப்பில் பதற்றம்...
 
03-12-2016 03:13 PM
Comments - 0       Views - 11

article_1480758381-DSC_0225.JPG

பொதுபல சேனாவின் மட்டக்களப்பு வருகைக்கு நீதிமன்றம் தடை விதித்ததுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பொலிஸாருடன் இன்று (03) பிற்பகல், வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மட்டக்களப்பில் பதற்றம் ஏற்பட்டது. (படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

article_1480758392-DSC_6001-800x600.JPGarticle_1480758402-DSC_6004-800x600.JPGarticle_1480758415-DSC_6006-800x600.JPGarticle_1480758424-DSC_6008-800x600.JPGarticle_1480758435-DSC_6012-800x600.JPGarticle_1480758444-DSC_6013-800x600.JPG

- See more at: http://www.tamilmirror.lk/187405/மட-டக-களப-ப-ல-பதற-றம-#sthash.P96uQgBk.dpuf
  • தொடங்கியவர்

 

தமக்கு ஆதரவாக வந்த பேரணி வெலிகந்தையில் தடுக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த துறவிகளுக்கு மட்டக்களப்பில் நடமாட முடியாதா என கேள்வி கேட்டு தமது ஆதரவாளர்களுடன் அங்குள்ள வீதிகளில் சுமனரத்ன தேரர் எதிர்ப்பு நடைபவனியில் ஈடுபட்டுள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்

அடங்காத கழுதைகள்.
 நாட்டில் எல்லாப் பக்கமும் பிரச்சனைகளை உருவாக்கி அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்கவும், தமிழரை வலிய சீண்டி ஒரு இனக்கலவரத்தை தூண்டவும் திட்டமிட்டு காரியங்கள் நடக்கிறது. தாங்களே  தங்களின் கைதுகளை துரிதப்படுத்திக் கொள்கிறார்கள். 

இப்போதைக்கு ராணுவமும், காவியளுந்தான் அவர்களுக்குள்ள துருப்புச் சீட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  போன்றவர்களை கட்டுப்படுத்துதல் தான் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முதலடியாக இருக்கும்

நல்லாட்சி பெயர் மட்டும் தானா?

என்பதற்கு இவர்களது கூத்துக்களை பார்த்துக்கொண்டிருப்பது பதில் தரும்

  • தொடங்கியவர்

 

சுமனரத்ன தேரர்

பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி கூச்சலிடும் சுமனரத்ன தேரர்: வேடிக்கை பார்க்கும் பொலிஸார்

பொலிசாரின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தமது ஆதரவாளர்களுடன் வீதியில் இறங்கி கோசங்களை எழுப்பி வந்த நிலையில் பிரதேச இளைஞர்களும் மறுபுறத்தில் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு பொளத்த மதத்தை தாண்டி வெளியில் வராது போல்  இருக்குறது அவரை ஆர்ப்பாட்டம் நடத்த விடவில்லை பொலிசாரும் ராணுவத்தினரும் ஆனால் அது நடந்து இருந்திருந்தால் கலகம் ஏற்பட்டுஇருக்கலாம் 

  • தொடங்கியவர்

மட்டு. நகரில் தேரர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பெரும் பதற்றம்

Hedinggggggg-52da0b41ed35ef8265ac4ac148b9ae7b0a8e3d53.jpg

 

பட்­டி­ருப்பு, ஏறாவூர் நிரு­பர்கள்

பொலிஸார் பெருமளவில் குவிப்பு

மட்­டக்­க­ளப்பு நகரில் மங்­க­ள­ராம விகா­ரா­தி­பதி மற்றும் பொது­ப­ல­சேனா ஆத­ர­வா­ளர்கள் மேற்­கொள்­ள­வி­ருந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு நீதி­மன் றம் தடை­வி­தித்­துள்­ளதை புறக்­க­ணித்து மட்

­டக்­க­ளப்பு நகரில் ஆர்ப்­பாட்டம் நடத்த மங்­க­ள­ராம விகா­ரா­தி­பதி முயன்­றதன் கார­ண­மாக அப்­ப­கு­தியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்­பட் ­ட­துடன் மட்­டக்­க­ளப்பு நகரம் யுத்­த­க­ள­மாக காட்­சி­ய­ளித்­தது.

நேற்று சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பில் மங்­க­ ள­ராம விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சுமங்­கல ரத்ன தேர­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் மட்­டக்­க­ளப்பு நகரில் பொது­ப­ல­சே­னா­வினால் ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இந்த ஆர்ப்­பாட்டம் நடை­பெ­று­மானால் நக

ரில் பொது­மக்­க­ளுக்கு பல்­வேறு இடைஞ்­சல் கள் ஏற்­படும் எனவும் அமை­திக்குப் பங்கம் ஏற்­படும் எனவும் அதன் கார­ண­மாக குறித்த ஆர்ப்பாட்­டத்­தினை தடை­செய்­யு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றில்

விடுத்த கோரிக்­கைக்கு அமை­வாக மட்­டக்­க­ளப்பு நகரில் பொது­ப­ல­சேனா பொதுக்­கூட்டம் நடத்­தவோ,ஆர்ப்­பாட்டம் நடத்­தவோ தடை­செய்­யப்­ப­டு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.

இந்த நிலையில் நீதி­மன்­றத்தின் தடை­யினை எதிர்த்து மங்­க­ள­ராம விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சுமங்­கல தேரர் மற்றும் அவரின் ஆத­ர­வா­ளர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்த மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்கு செல்­ல­முற்­பட்­ட­போது பொலிஸார் தடுப்­பு­களை ஏற்­ப­டுத்தி அவர்­களை தடுத்­ததன் கார­ண­மாக சந்தை வீதி வழி­யாக பய­னியர் வீதி மற்றும் கொலட் வீதி­களில் சென்று ஆர்ப்­பாட்­டங்­களை தேர­ரும்­அ­வரின் ஆத­ர­வா­ளர்­களும் மேற்­கொண்­ட­துடன் தகாத வார்த்­தை­க­ளையும் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள் வெளி­யிட்­டனர்.

எனினும் அவர்­களின் எதிர்ப்பு போராட்­டத்­தினை கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்­ததை காண­மு­டிந்­தது.

இந்த நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­க­ளையும் இதன் போது சிலர் தெரி­வித்­ததால் அங்கு கூடி­யி­ருந்த தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்­பினை தெரி­வித்­தனர்.

அத்­துடன் தேரரின் நட­வ­டிக்­கைக்கு கண்­டனம் தெரி­வித்து மட்­டக்­க­ளப்பு நகரில் பெரு­ம­ள­வான தமிழ்-­முஸ்லிம் இளை­ஞர்கள் ஒன்­று­கூடி தமது எதிர்ப்­பினை வௌியிட்­டனர்

தேரர் நீதி­மன்ற ஆணையை மீறி ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­டு­வரும் நிலையில் அதனை பொலிஸார் வேடிக்கை பார்ப்­ப­தா­கவும் தம்மை மட்டும் பொலிஸார் கட்­டுப்­ப­டுத்­த­மு­னை­வ­தா­கவும் எதிர்ப்பில் கலந்­து­கொண்­ட­வர்­கள்­தெ­ரி­வித்­தனர்.

இதன்­போது இளை­ஞர்­க­ளுக்கும் பௌத்த துறவி மற்றும் சிங்­கள ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் இடையே பெரும் வாக்­கு­வா­தங்கள் ஏற்­பட்டு முறுகல் நிலைமை ஏற்­ப­டு­வ­தற்­கான நிலை உரு­வா­னது.

அந்­த­வே­ளையில் அங்­கு­வந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பொன்.செல்­வ­ராசா,பா.அரி­ய­நேத்­திரன் ஆகியோர் பொலி­ஸா­ருடன் கடு­மை­யான வாக்­கு­வா­தங்­களில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது அங்கு வந்த கிழக்குப் பிராந்­திய பிர­திப்­பொ­லிஸ்மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­க­விடம் பொன்.செல்­வ­ராசா நீதி­மன்ற ஆணையை மதித்து குறித்த பிக்­குவை கைது­செய்­ய­வேண்டும்.வெளியில் அவர் மேற்­கொண்­டுள்ள செயற்­பா­டு­களை தடுத்து நிறுத்­த­வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்­போது தடுப்பு கம்பி மேல் ஏறி­நின்று ஆர்ப்­பாட்டம் செய்த மங்­க­ள­ராம விகா­ரா­தி­ப­தியை அதில் இருந்து இறக்கி அதன் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் விகா­ரைக்குள் அழைத்துச் செல்­லப்­பட்டார் .

தொடர்ச்­சி­யாக குறித்த தேரர் மேற்­கொண்­டு­வரும் அடா­வ­டித்­த­னங்­களை நிறுத்­து­வ­தற்கு பொலிஸார் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வில்­லை­யென தெரி­வித்த பொது­மக்கள் நீதி­மன்­றத்தின் ஆணை­யைக்­கூட பொலிஸார் தொடர்ச்­சி­யாக அவ­ம­தித்­து­வ­ரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இதன்­போது வரு­கை­தந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீ.யோகேஸ்­வரன் மற்றும் எஸ்.வியா­ழேந்­திரன் ஆகி­யோரும் பொலி­ஸா­ரிடம் தமது அதி­ருப்­தியைத் தெரி­வித்­தனர்.

இதே­வேளை பொது பல சேனா உட்­பட பல பேரி­ன­வாத அமைப்­புகள் இணைந்து மட்­டக்­க­ளப்பு நோக்கிப் பய­ணித்த பேரணி, மட்­டக்­க­ளப்பு - பொல­ந­றுவை எல்லைப் பிர­தே­ச­மான ரிதி­தென்ன பகு­தியில் பொலி­ஸாரால் இடை நிறுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு பதற்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது.

தாம் பூஜை­யொன்­றுக்­கா­கவே அங்கு செல்­வ­தாகப் பொலி­ஸா­ருடன் ஞான­சார தேரர் வாதத்தில் ஈடு­பட்ட போதிலும் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய தம்மால் அனு­ம­திக்க முடி­யாது எனப் பொலிஸார் பதி­ல­ளித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், வீதியை மறித்து வாக­னத்தை நிறுத்தி வீதியில் அமர்ந்து போராட்டம் செய்­ததால் அங்கு சென்ற வாக­னங்கள் இரு பக்­கமும் வீதி­களில் நிறுத்­தப்­பட்­டுள்ள நிலையில் வாகன நெரிசல் மற்றும் போக்­கு­வ­ரத்துத் தடை ஏற்­பட்­டது.

அதே­போன்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ரயில் மற்றும் போக்­கு­வ­ரத்து பஸ்­களில் ஏறி மட்­டக்­க­ளப்­புக்குள் நுழைய முற்­பட்ட நிலையில் ரயில் மற்றும் போக்­கு­வ­ரத்து சேவை­களும் நிறுத்­தப்­பட்­ட­தனால் பொது­மக்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கினர்.

சம்­பவ இடத்­துக்குச் செய்தி சேக­ரிக்கச் சென்ற செய்­தி­யா­ளர்­களை செய்தி எடுக்க வேண்டாம் என்றும் மீறிப் படம் எடுத்தால் கமெரா உடைக்­கப்­படும் என்று பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த இளை­ஞர்கள் தெரி­வித்­தனர்.

ஏற்­கெ­னவே, இவர்­களின் மட்­டக்­க­ளப்பு விஜ­யத்­துக்கு நீதி­மன்ற தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் சட்ட ரீதி­யற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்­த­ர­வொன்றை ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்றம், வெள்­ளிக்­கி­ழமை (02) மாலை பிறப்­பித்­துள்­ளது.

இந்த உத்­த­ர­வையும் மீறி வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் சட்ட ரீதி­யற்ற ஒன்று கூடல் நிக­ழு­மாயின் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டக்­க­ளப்­பி­லுள்ள மங்­க­ள­ராம விஹா­ரைக்கு விஜயம் செய்யும் பொது­பல சேனா அமைப்பின் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் ஏறாவூர் நகரம், புன்­னைக்­குடா மற்றும் ஏறா­வூர்ப்­பற்றுப் பிர­தே­சத்தை அண்­டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணி­யொன்­றுக்குள் செல்­வ­தா­கவும் நிகழ்ச்சி நிரல் இடப்­பட்­டுள்­ளது.

இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு, நீதி மன்றத்தை கேட்டிருந்தனர். மனுவை ஆராய்ந்த மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.

எனினும் தொடர்ச்சியாக மட்டக்களப்பு நகர் மற்றும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதன் காரணமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் இருபகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-04#page-1

  • தொடங்கியவர்

பொதுபல சேனா இயக்கம் திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியுள்ளனர்

srilanka-flag-witout-minorities-colour
பொதுபல சேனா இயக்கம் திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்றைய தினம் பொதுபல சேனா இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது இவ்வாறான தேசிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு நகரிற்குள் பிரவேசிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பொதுபல சேனா பயன்படுத்திய தேசிய கொடியில் சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்தவம் செய்யும் நிறங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/9250

  • தொடங்கியவர்

தடுப்பு கம்பி மேல் ஏறி ஆர்ப்பாட்டம்!

 

 

தடுப்பு கம்பி மேல் ஏறி ஆர்ப்பாட்டம்!

 

மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த மங்களராம விகாராதிபதி முயன்றதன் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல ரத்ன தேரருக்கு ஆதரவளிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமானால் நகரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படும் எனவும் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும், அதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா பொதுக்கூட்டம் நடாத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதோ தடைசெய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையினை எதிர்த்து மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட போது, பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்ததன் காரணமாக சந்தை வீதி வழியாக பயனியர் வீதி மற்றும் கொலட் வீதிகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை தேரரும் அவரின் ஆதரவாளர்களும் மேற்கொண்டதுடன் தகாத வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்டுவந்தனர்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துகளையும் இதன்போது சிலர் தெரிவித்தபோது அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன் தேரரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பெருமளவான தமிழ் - முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்தவேளையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவிடம் பொன்.செல்வராசா நீதிமன்ற ஆணையை மதித்து குறித்த பிக்குவினை கைதுசெய்யவேண்டும். வெளியில் அவர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்போது தடுப்பு கம்பி மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்த மங்களராம விகாராதிபதியை அதில் இருந்து இறக்கியதோடு, அவரது ஆதரவாளர்களுடன் விகாரைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை, அங்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் பொலிஸாரிடம் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதேவேளை, மங்களராமய விகாராதிபதி விவகாரம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி மட்டக்களப்பு நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்களராமய விகாரைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நின்று மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்த தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2309&mode=head

  • தொடங்கியவர்

மட்டு.– கொழும்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

 

(பெரி­ய­போ­ர­தீவு நிருபர்)

மட்­டக்­க­ளப்­புக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தொடக்கம் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள புகை­யி­ரத நிலை­யங்­களின் அதி­பர்கள் தெரி­வித்­தனர்.

நேற்றுமுன்தினம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்குள் நுழைய முடி­யா­த­வாறு பொலன்­ன­றுவை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களின் எல்­லையில் வழி­ம­றிக்­கப்­பட்ட  பொது­பல சேனா அமைப்பின் ஞான­சாரர் தலை­மை­யி­லான குழு­வினர் மட்­டக்­க­ளப்பு கொழும்­புக்கு இடை­யி­லான புகை­யி­ரத சேவையை அசே­ல­பு­ர­விற்கும் ரெதி­தென்­ன­வுக்கும் இடைப்­பட்ட பகு­தியில் தடைப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 

இதனால் கொழும்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு நோக்கிச் சென்ற புகை­யி­ர­தமும் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து கொழும்பை நோக்கிச் சென்ற புகை­யி­ர­தமும் தடைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் சேவையை நிறுத்திக் கொண்­டன.

வாழைச்­சே­னை­யி­லி­ருந்து கொழும்பை நோக்கி சனிக்­கி­ழமை காலை 11.35 இற்குப் புறப்­பட்ட புகை­யி­ரதம் பாது­காப்புக் கருதி புணானை புகை­யி­ரத நிலை­யத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

கல­க­ம­டக்கும் பொலி­ஸாரும், படை­யி­னரும் வழித்­துணை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டதன் கார­ண­மாக பொது­பல சேனா அமைப்­பி­னரால் தடுத்து நிறுத்­தப்­பட்ட புகை­யி­ரதம் சனிக்­கி­ழமை மாலை 6.15 மணி­ய­ளவில் புணா­னை­யி­லி­ருந்து விடு­வித்துக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள புகை­யி­ரத நிலைய அதி­பர்கள் தெரி­வித்­தனர்.

கொழும்­பி­லி­ருந்து வந்த அந்தப் புகை­யி­ரதம் வழ­மை­யான நேர அட்­ட­வ­ணைப்­படி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பை அடைந்திருக்க வேண்டும். ஆயினும், சனிக்கிழமை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 5 மணித்தியாலங்கள் தாமதித்து இரவு 8 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்தது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-05#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 மதம் பிடிச்சு ஆடுதுகள். அந்தளவுக்கு ஏத்தி விட்டுக்கிடக்கு. பிக்குகள் இனவாதம் பேச, கூடி நிக்கிறதுக்குள் வேதவாக்காக தலையில கைவைச்சு கும்பிடுதுகள். அப்பிடியானதுகளிட்டை   எப்பிடி நல்லதை எதிர்பார்க்க முடியும். கடவுளின்ர கோபத்தை சம்பாதிச்சு அழியப்போகுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.