Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் பதற்றத்தின் எதிரொலி, தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை

Featured Replies

மீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சற்றும் இழைத்தவர் அல்ல நான் என்பதை சுமணரத்ன தேரர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய தினம் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு கூடிய பிக்குகளும், பௌத்த மக்களும், முரண்படும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொண்டிருக்கின்றனர். பௌத்தத்தை முறையாகக் கற்ற பௌத்த மதகுருமார்கள் தங்கள் தர்மவழி மறந்து செயற்பட்ட விதத்தினை பல்வேறு புகைப்படங்களும் சாட்சியாக எழுந்து நிற்கின்றன.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சமூககங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒருபுறத்தில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபு நடந்து கொண்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அரசமைப்பிற்கான மாற்றம் வரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.

இன்னொருபுறத்தில், அரசாங்கத்தை அந்த இலக்கை நோக்கி நகர்ந்து செல்லமுடியாமல் தடுப்பதில் குறியாக இன்னொரு தரப்பு மிகத்துள்ளியமாக செயற்பட்டுவருகின்றது.

இன்று பௌத்த பிக்குகள் மீது கை வைக்கமுடியா நிலையில் காவல்த்துறையின் நின்று கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் நாட்டின் கௌரவத்திற்குரியவர்களாகிய பௌத்த பிக்குகள் மீது இராணுவத்தினரோ அன்றி, காவல்த்துறையினரோ தடியடி நடத்தினால், தென்னிலங்கை முழுவதும் இதன் தாக்கம் ஒரு நிமிடப்பொழுதில் நடந்தேறும் என்பதை வரலாறு கற்கொடுத்திருக்கிறது.

அரசாங்கத்திற்கு தலையிடியை கொடுக்கும் அஷ்திரமாகவே இப்பொழுது இனவாதம் கொண்ட பிக்குகளை அரசாங்கத்திற்கு எதிரான அந்தத் தரப்பு இறக்கிவிட்டிருக்கிறது.

இன்று, மட்டக்களப்பிற்குள் வரவிருந்த பிக்குகளை காவல்த்துறையினர் தடுத்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.

நாட்டில் யுத்தம் முடிந்த பின்னர், ஓரளவிற்கு அமைதி நிலவிவந்திருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்த போதிலும், வடக்கு கிழக்கில் விகாரைகள், சிங்களக் குடியேற்றங்கள் நடந்தபோதிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட்டிருந்ததில்லை.

ஆனால் மைத்திரிபால சிறிசேன ஆட்சி ஏற்றதன்பின்னர், தொல்லைகள், நெருக்கடிகள் கொடுக்க வேண்டும் என்பதன் நோக்கத்தினாலேயே இந்த முயற்சிகள், தூண்டுதல்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்கிறாரகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களும், பத்திரிகையாளர்களும்.

இவ்வாறான நிலையில், இந்தப் பிரச்சினைகளை அரசாங்கம், சாமர்த்தியமாக அடக்கவேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதே நிலமை தொடர்ந்த நீடிக்குமாக இருந்தால் இன்னுமொரு 83ம் ஆண்டுக்கலவரம் வெடிப்பதற்கான சூழல் விரைந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை. வரும்முன் காப்பது நல்லது.

 

 

http://www.tamilwin.com/politics/01/126938?ref=youmaylike1

Edited by போல்
காணொளி இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

தூசணப் பிக்கர், தூசணம் இல்லாமல் நிக்கிறார்.

ஏறி நிண்டு, சன்னதம் ஆட வெளிக்கிட்டவர், போலீஸ், கடுமையா நிக்கினம், கண்ணீர் புகை அடிக்கினம் எண்டோன்ன, பவ்யமா இறங்கி நடையை கட்டுறார்.

இவையளுக்கு, போலீசாரை பிக்குகள் மாதிரி அனுப்பி, அடி பட வைத்து, பிக்குகளுக்குள் சண்டை எண்டு கதையை மாத்தி, ஒரிஜினல் போலீசை இறக்கி, குழப்படி செய்த பிக்குகளுக்கு சாத்து கொடுத்து, துரத்தி அடித்த, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தான் சரி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

கூச்சலிடும் பிக்குகள்! குழப்படையும் மக்கள், கலவரமாகும் மட்டக்களப்பு - வேடிக்கை பார்க்கும் பொலிஸார்

மட்டக்களப்பில் நாளை என்ன நடக்கப்போகின்றது என்ற பதட்டம் நள்ளிரவு முதல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கான திறவு கோளாக மாற்றும் நோக்குடன் இனக்கலவர பூமியாக்க மாற்றும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்த கடந்த ஏழு ஆண்டுகளில் எந்த இனமாக இருந்தாலும் மட்டக்களப்பில் இலகுவில் எதையும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை வேரூன்றி போனதன் விளைவு இலங்கையின் அரசியல் மாற்றத்திற்கான திறவுகோளாக மட்டக்களப்பை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன் உச்சக்கட்ட முயற்சியே இன்று பொதுபல சேனா அமைப்பு உட்பட சிங்கள இனவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றுகையிட்டு கலவரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டமையாகும்.

ஏற்கனவே ஊடகங்கள் மூலம் எதிர்வு கூறப்பட்டதற்கு அமைய இன்று சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்கள் சுமார் ஐந்து பஸ்வண்டிகள் மற்றும் சிறியரக வாகனங்களில் மட்டக்களப்பு கொழும்பு வீதியின் ஊடாக மட்டக்களப்புக்குள் நுழைய முற்பட்டபோது அதனை மன்னம்பிட்டியில் வைத்து பொலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பொலீசாருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முறுகல்நிலை உருவாகியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த இனவாதிகள் மட்டக்களப்பு நோக்கி பயணித்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தியதோடு மட்டக்களப்பில் இருந்து சென்ற புகையிரதத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் வாகனங்களை விட்டு இறங்கிய பல பௌத்த பிக்குக்கள் கால்நடையாக மட்டக்களப்பு எல்லைக்குள் நுழைந்ததால் அதனை கட்டுப்படுத்த பொலீசாரால் முடியாமல் போயுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனால் சுமார் காலை 9 மணிமுதல் மாலை 5மணிவரை மட்டக்களப்புக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் தற்போது வரை மட்டக்களப்புக்குள் வரும் வாகனங்கள் பொலீசாரின் சோதனைக்குப் பின்னரே மட்டக்களப்பக்குள் அனுப்பப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேநேரம் மட்டக்களப்பு எல்லைப்பகுதியான ரிதிதென்ன வரைக்கும் கால்நடையாக வந்த சுமார் 50 பிக்குக்களும் அவர்களுடன் வந்த சில குண்டர்களும் ரிதிதென்னையில் அமைந்திருந்த முஸ்லிம் குடியிருப்பக்கள் மீது கல் வீச்சுக்களை மேற்கொண்டவாறு சென்றதாகவும் தற்பொது அவர்கள் புனானை இரானுவ முகாமிற்கு அருகில் உள்ள பௌத்தவிகாரையில் தங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதே நேரம் மன்னம்பிட்டியில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்ட பஸ்வண்டிகளில் வந்த பௌத்த இனவாதிகள் மற்றும் பொதுமக்கள் பொலனறுவை நோக்கி திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் கலவரத்தில் இறங்கிய சுமரத்தின தேரர்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனிடையே பொதுபல சேனா அமைப்பினரை உடனடியாக மட்டக்களப்பிற்குள் அனுமதிக்குமாறு கோரிய அம்பிட்டிய சுமனரத்திண தேரர் அம்பாறை பொலனறுவை மாவட்டங்களில் இருந்து பௌத்த இனவாதிகளை வரவழைத்து போராட்த்தில் ஈடுபட முயற்சித்தமையினால் மட்டக்களப்பு நகர்கலவர பூமியாக காட்சியளித்தது.

பொலீசாரின் நீதிமன்ற தடையையும் மீறி இனக்கலவரத்தை தூண்டும் வகையில் மங்களராமய விகாராதிபதி செயற்பட்டதால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதட்டம் உருவாகியிருந்தது.

சிங்கள இனவாதிகளின் வருகையை கேள்வியுற்ற தமிழ் முஸ்லீம் இளைஞர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்தபிக்கு மற்றும் பௌத்த இனவாதிகளுக்கு எதிராக செயற்பட்டதால் பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவியதுடன் அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நீதிமன்ற தடையுத்தரவு நோட்டிஸ் புணாணையில் வைத்து போலிசார் முன்னிலையில் ஞானசேரதேரோ கிழித்தெறியும் போது!

நீதி மன்றக் கட்டளையை அவமதித்த குற்றத்திற்காக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் இனவாதக் கோசமிட்டு மக்களைக் குழப்பும் அந்த ஞான தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றதுக்கு ஆஜர்படுத்த பொலிசார் தவறியதேன்...?

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னால் வைத்து கிளித்து எறிந்தமை நீதிமன்றத்தை அவமதித்த செயல்....!!!

நீதியைக் கொச்சப்படுத்தும் செயல்......!!!

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சுமார் மாலை 8 மணிவரைக்கும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையை அன்மித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடிநிற்பதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகின்றது.

குறித்த இளைஞர்களை கலைப்பதற்கு பொலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

அத்தோடு மறுமுனையில் இன்று இரவு 9 மணியளவில் புனானை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள பௌத்தவிகாரையில் தங்கியுள்ள பௌத்த பிக்குக்களுக்கும் பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் குறித்த பேச்சுவார்த்தையானது நாளைய தினம் மட்டக்களப்புக்குள் நுழைய இருக்கும் பௌத்த பிக்குக்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை பொலீசார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இருந்தும் நாளைய தினம் மட்டக்களப்பு எல்லைக்கு இன்று கடமையில் ஈடுபட்ட அனைத்து பொலீசாரையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதால் நாளைதினம் மட்டக்களப்பில் எதுவும் நடக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மாவட்டத்தில் ஒன்று குவிக்கப்பட்ட பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர்.

மட்டக்களப்பில் களவரம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது என ஏற்கனவே தீர்மானித்த பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மூடி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு பௌத்த பிக்குகளினால் புத்தர் சிலை வைக்கப்படும் என முன்னரே எதிர்வு கூறப்பட்ட இடங்களில் தற்காலிக காவல் நிலையங்களை நிறுவி பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் தேசிய நிகழ்சி நிரலின் படி நடைபெறுவதை உணரக்கூடியதாக உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது.

நான்கு முனைகளிலும் இருந்து வரும் சிங்கள இன வாதிகள் உட்புகுவதற்கு இலகுவான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதால் மாவட்டத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மாவட்ட புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறிப்பாக நாளைய தினம் இனக்களவரம் ஒன்றை தூண்டும் முயற்சியில் சிங்கள இனவாதிகள் பெருந்தொகையாக மாவட்டத்தற்குள் நுளைந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதா என்ற கேள்விகள் எழவே செய்கின்றது.

இன்றுவரை மட்டக்களப்பில் பௌத்த இனவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை பொலீசாரினால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை அவர்களை கைது செய்யவும் முடியவில்லை என்றால் தமிழ் பேசும் மக்களை பொலீசாரினால் பாதுகாக்க முடியாது.

இயல்பாக நடைபெறும் சம்பவங்களாக இருந்தால் அவற்றை பொலீசாரினால் கட்டுப்படுத்த முடியம் ஆனால் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு விளைவை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு நடாத்தப்படும் இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துமா? அல்லது 83 யூலை களவரத்தை போன்று தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கப்போகின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

http://www.tamilwin.com/politics/01/126933?ref=home

 
  • தொடங்கியவர்

மட்டு பிக்கு விவகாரத்தில் அரச அதிபர் ஏன் தலையிடவில்லை?

அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு என இளைஞர் அணியின் உபதலைவர் எஸ்.பூபால் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(03) இடம்பெற்ற மட்டக்களப்பு விகாராதிபதியின் செயற்பாடுகளை கண்டித்து விகாராதிபதிக்கு அவருக்கு எதிராக இடம்பெற்ற கண்டன கவனயீர்ப்பில் ஈடுபட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

 

பொதுபல சேனா உட்பட அவரது குழுக்கள் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.

அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு. ஆனால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச பொலிஸ் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை சரியாக செய்யவில்லை. அதாவது 162வது சட்டத்தின்படி அரச உத்தியோகத்தர்கள் சரியாக செய்ய தவறும் பட்சத்தில் குறித்த அரச அதிகாரியை இடை நிறுத்துவதற்கு சட்டத்தில் இடமுள்ளதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு விகாராதிபதி அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்.

குறித்த விகாராதிபதியின் செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு இங்குள்ள பொலிசாருக்கு உள்ளது என்றார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/126939?ref=morenews

 

எல்லாம் மகிந்த & கோவின் முயற்சி!!! ஆனால் எதுவும் நடக்காது கத்தி விட்டு அடங்க வேண்டியது தான், ஏன் என்றால் சிங்ககளவானின் அரசியல் பொருளாதார நிலை  அப்படி!!!!

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் பொங்கி எழுந்த ஞானசார தேரர்! பிரபாகரன் மீதும் பாய்ச்சல்! திகைத்துப்போன பொலிஸார்

மட்டக்களப்பில் இன்று பொலிஸாருக்கும், பௌத்த பிக்குகளுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாட்டிலும் பிக்குகள் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல மட்டக்களப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு ஆவேசமாக கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர்,

வடக்கிலும், கிழக்கிலும் பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் எங்களை தடுக்கின்றீர்கள்.

இப்பொழுது நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் போதி பூஜை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். அதற்காகவே நாங்கள் செல்கின்றோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

நாட்டினைச் சீரழிப்பதற்காக ஆயுதம் ஏந்திய புலிகளை வீழ்த்தி அவர்களை நிராயுதபாணியாக மாற்றிய முப்படைகளுக்கு இதை செய்ய முடியாதா?

இது என்ன விளையாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநியாயத்தினை எமக்கு செய்யவேண்டாம். மூளையுள்ள அதிகாரிகளின் பிரச்சினை அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழுதைகளுக்கு இது தெரியாது.

6 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது. இதன் போது இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.

இவ்விடத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். பொலிஸ் தடுத்தால் நாங்களும் வாகனங்களை விட்டு வீதியினை வழிமறித்து கொண்டு இவ்விடத்திலேயே இருப்போம்.

நீதிமன்ற தடை உத்தரவினை கொழும்பில் வைத்து தந்து இருக்கலாம் தானே என்று நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை கிழித்தெறிந்தார்.

நீதிமன்ற தடை உத்தரவினை கடவத்தையில் கொடுத்து இருக்கலாம் தானே, வரக்காபொல,குருணாகல்,தம்புள்ளை இடங்களில் சரி வைத்து கொடுத்து இருக்கலாம் தானே.

அங்கு பிரபாகரனின் படத்தினை கொண்டு செல்கின்றார்கள். ஆனால் படையினர் ஒன்றும் செய்யவில்லை.

சிங்களவர்களுக்கு மட்டுமே இப்படி செய்கின்றீர்கள். எங்களுடன் பிரச்சினை உண்டுபண்ண வேண்டாம். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை தேரர் கிழித்தெறிந்தமையானது இப்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/126927?ref=home

  • தொடங்கியவர்

பொதுபலசேனா மட்டக்களப்பை விட்டு திரும்பிச்சென்றதற்கு சம்பந்தனே காரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை இடை மறித்து இன்று காலை (04) திரும்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மங்களராமய தேரின் அடாவடித்தனத்தால் நேற்று (03) மட்டக்களப்பு நகரம் பதற்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை (03) சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பொலிஸ்மா அதிபர் பொதுபலசேனா அமைப்பினரை நேற்று மாலை பூணாணையுடன் வழிமறித்து புணாணை ஸ்ரீ பஞ்சமா விகாரையில் சந்திப்பை மேற்கொண்டு மட்டக்களப்பிற்கான பயணத்தை பொலிஸார் இடை நிறுத்தினர்.

இதனால் தடைப்பட்டிருந்த பொது மக்களின் போக்குவரத்தும் இன்று (04) வழமைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/politics/01/126999?ref=right_featured

  • தொடங்கியவர்

சுமணரத்தின தேரர் கைது செய்யப்பட வேண்டிய எதிரி!

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் கைது செய்யப்பட வேண்டிய நபராக இருக்கும் வேளை, மத போதகராக மட்டக்களப்பிலே வைத்துக்கொண்டு இருப்பது சாபக்கேடான விடயமாகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தின விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் நேற்றைய தினம் மாவட்டம் ஒரு இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த மங்களராமய விகாராதிபதி கடந்த காலங்களில் பல காணி அபகரிப்பு மற்றும் தமிழர் பிரதேசங்களில் புத்த பெருமானின் சிலையை நிறுவது, பான்சாலைகளை நிறுவது, அதற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது மிகவும் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை பாவிப்பது போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் விகாராதிபதியின் செயற்பாடுகளை அரசுக்கு எடுத்துக்கூறியும் இதுவரைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த மட்டக்களப்பு விகாராதிபதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பில் இருந்து அகற்றும் வரை தமிழ் மக்களின் போராட்டங்கள் தொடரும்.

விகாராதிபதியின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் குறித்த விகாராதிபதிக்கான எவ்விதமான நடவடிக்கையும் இந்த அரசு செயற்படுத்தவில்லை என கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/community/01/126984?ref=youmaylike1

  • தொடங்கியவர்

அவர்கள் புத்த பிக்குகளே அல்ல!

12575.jpg
 
கிழக்கில் சுமணரத்ன தேரர்; தெற்கில் ஞானசார தேரர். இவர்களின் நடவடிக்கைகளால் கவலையுற்ற மனக்களைப்பில் உறக்கம் அணைத்துக் கொண்டது.
 
அந்நேரத்தில் கெளதம புத்தபிரான் என் முன் தோன்றி மகனே! ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டார்.
சுவாமி! இந்த மண்ணில் வாழ எனக்கு பிடிக்கவில்லை என்றேன். என் பதிலோடு சம்பாசணை தொடர்ந்தது.
 
புத்தர்: மகனே! இந்த மண்ணில் உனக்கென்ன வெறுப்பு. மண்ணில் நல்ல  வண்ணம்  வாழலாம் என்று சம்பந்தர் பாடியுள்ளார் அன்றோ!
 
நான்:   சுவாமி, அவர் பாடிய மண் தமிழகம். நானோ  இருப்பது இலங்கை. அதிலும் தமிழன்                      ஆதலால்தான் எனக்கு இந்த மண்ணில் வாழப்பிடிக்கவில்லை.
 
புத்தர்: இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பது உண்மைதான். எனினும் இப்போது நிலைமை சற்றுத்தணிவுற்றுள்ளது. ஆகையால் இந்த மண்ணில் வாழ்வதற்கு ஏன் விருப்புக் கொள்ளவில்லை.
 
நான்:    சுவாமி, இது உங்களின் நாடு என்கிறார்கள்.
 
புத்தர்: சிரித்தபடி மகனே! என்னைப் பற்றி அறியாதவர்கள்தான் இதை என் நாடு என்பார்கள். எதுவும் வேண்டாம் என்று துறவு பூண்டவன் நான். எல்லாவற்றையும்  துறந்த எனக்கு  நாடா...?     
 
நான்: சுவாமி! உங்களின் போதனைகளை முன்னெடுப்பதாகக்கூறி காவி தரித்து புத்த பிக்குகள் என்ற பேரில் சிலர் இனவாதம் பேசி வருகின்றனர்.
 
புத்தர்: மகனே! இது அறியாமை. என் போதனைகளை பின்பற்றும் எவரும் இனவாதம் பேசமாட்டார்.   
 
நான்: இல்லை சுவாமி. தேரர்கள் இனவாதம் பேசுகின்றனர்.
 
புத்தர்: உதாரணத்துக்கு யாரையும் சொல்ல முடியுமா? 
 
நான்: ஆம் சுவாமி! கிழக்கு மாகாணத்தில் சுமணரத்ன தேரர். தெற்கில் ஞானசார தேரர். இவர்கள் காவி தரித்தபடி தமிழ் மக்களை கண்டபாட்டில் திட்டித் தீர்க்கின்றனர்.
(புத்தர் தன்தோளில் கிடந்த உத்தரியத்தை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்)
 
புத்தர்:மகனே! அவர்கள் புத்த பிக்குகளே அல்ல. என் போதனையைப் பின்பற்றும் ஒரு பெளத்த துறவி மண்ணுயிர் எதற்கும் தீங்கு செய்யார்.
ஆனால் இவர்கள் அப்பேற்பட்டவர்கள் அல்ல. சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை திட்டித் தீர்ப்பது கண்டு நான் கவலையுற்றேன்.
 
ஞானசார தேரர் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராகக் கடுமையாக செயற்படுகிறார். இவையயல்லாம் என் போதனைக்கு எதிரானவை.
என்ன செய்வது! என் போதனையைப் பின்பற்றுவதாகக் கூறி இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். 
 
புத்த பிக்கு ஒருவர் பொது பல சேனா என்ற அமைப்புக்கு பொதுச் செயலாளராக இருப்பதே என் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகையவர்களை புத்த பிக்குகள் என்று யாரும் பார்த்துவிடக்கூடாது. பெளத்த துறவு என்பது தனித்து காவியும் கையில் விசிறியும் அல்ல. 
 
அது புனிதமானது. அன்பு மயமானது. அகத்தும் புறத்தும் பற்றுக்களைத் துறந்து உலக ஜீவராசிகள் மீது தெய்வீக அன்பு கொண்டு சேவை செய்வது. ஆகையால் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு  இவர்பெளத்த துறவி என முடிவு செய்து விடாதீர்கள்.
 
நான்: சுவாமி நீங்கள் கூறுவது சரியாயினும் இந்த நாட்டில் காவிக்குக் கடும் மதிப்பு இருக்கிறதே!
 
புத்தர்: என்ன செய்வது! தெரியாத்தனமாய் இலங்கையில் கால் பதித்ததால் வந்த வினை.               இலங்கைக்கு  வந்து போன எனக்கே துன்பம் என்றால் அங்கு வாழும் உனக்கு கடும் துன்பம்தான். சரி எதற்கும் அந்த இரண்டு தேரர்களையும் கடுமையாக எதிர்க்கப்பாருங்கள்.  நீங்கள் எதிர்த்தால் அவர்கள் அடங்குவர். 
 
இவ்வாறு கூறிய புத்த பிரான் திடீரென வானெ ழுந்தபோது,  சுவாமி என்று கத்தி விழித்தேன். கண்டது கனவு என்றுணர்ந்தேன்.
 
  • தொடங்கியவர்

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது! முதலமைச்சர்

கடும்போக்குவாதிகளின் சீற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் மத்தியிலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில்,மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய மத குருமார்கள் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்ட போதும் ஒழுக்கமாகவும் சிறுபான்மை மக்கள் எப்போதும் இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்பவர்கள் என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்கள் நாட்டிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் அமைதியையும் சட்டத்தை மதிக்கும் மனப்பாங்கையும் அவர்களின் கோழைத்தனமாக கடும் போக்குவாதிகள் கருதக் கூடாது .

அத்துடன் பொதுபலசேனா அமைப்பினர் மற்றும் கடும்போக்குவாதிகள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்க்கும் விதமான கருத்துக்களை கூறுவதும் நடந்து கொள்வதும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் இவர்கள் மீது ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த பதற்றமான சூழ்நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இறுதி வரை களத்தில் நின்று தமது கடமைய சரிவர நிறைவேற்றிய பாதுகாப்புத் தரப்பினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும் பொறுப்புணர்வுடன் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இறுதி வரை சிறப்பாக செயற்பட்டமை கிழக்கு மக்களின் பாராட்டுக்களுக்கும் உரித்தாகியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை சீர் குலையாமல் பேண வேண்டிய கடமையும் உணர்ந்து செயற்பட்டு வருகின்றேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்து வருவதுடன் அதனை சீர்குலைக்க எவருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது.

அது மாத்திரமன்றி கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/127072?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.