Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு அரசியல் தலைமை இல்லை- வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்

Featured Replies

தமிழருக்கு அரசியல் தலைமை இல்லை- வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்
 
 
தமிழருக்கு அரசியல் தலைமை இல்லை- வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்
ஒரு காலத்தில்  நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தோம்.விடுதலைப் போராட்டத்தில் எல்லா நாடு களும் வியக்கும் வண்ணம் அனைத்துப் படைகளையும் கொண்ட தலைமைத்துவமாக இருந்தோம்.ஆனால் இப்பொழுது அரசியல் செய்ய பெயருக்கு தலைவர்கள் இருக்கிறார்கள் எனினும் சரியான தலைமைத்துவம் இல்லை. வருகின்ற ஆண்டிற்கான அரசியல் அமைப்பு திட்டம் சாதகமாக வந்தால் நாம் நினைத்ததை செய்வதற்கு ஓரளவு இலகுவாக இருக்கும் என  சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை  முன்னிட்டு யாழ்ப்பாணம் "கருவி " சமூக வள நிலையத்தால் நேற்றையதினம்  ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது
 
வடக்கு மாகாண சபை என்ற ஒன்று தோற்றம் பெற்றதன் நோக்கம் எல்லோருக்கும் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றுதான்.தனது சக்திக்கு உட்பட்ட வேலைகளை மக்களுக்கு செய்து வருகின்றது.குறிப்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த மாற்றுத் திறனாளிகளுக்கானா கழிப்பறை வசதிகள்,ஏன் பேருந்து களில்  கூட இவர்களின் நன்மை கருதி தாழ்வான படிக்கட்டுகளை அமைப்பது பற்றிக் கூட ஆராய்ந்து வரு கின்றது.
 
கரிசனை என்று ஒன்று  எல்லோரிடமும் காணப்படுகின்றது.ஆனால் நாம் அதனை நடைமுறைப்படுத்த பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.   மாற்றுத்திறனாளிகள் என்று யாரும் இல்லை. எல்லோரும்  ஏதோ ஒரு வகையில் அங்கவீனமானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு வகையில் அங்கவீனமானவர்கள்தான்.அரசியலில் நாம் அங்கவீனர்கள் என்று கூறுவதில் எங்களுக்கு எந்தவிதமான வெட்கமும் இல்லை..உண்மையில் இயற்கையாகவும்,மரபணு ரீதியாகவும்,விபத்துக்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளிகள் குறைந்த அளவிலேயே நமது பிரதேசத்தில் காணப்ப ட்டனர்.
 
ஆனால்  போருக்கு பின்னர் நம் மத்தியில்  மாற்றுத்திறனாளிகள் அதிகரித்துள்ளனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் கணக்கெடுப்பின்படி 10908 மாற்றுத்திறனாளிகள் நமது பிரதேசத்தில் காணப்படுகி ன்றனர்.இந்த எண்ணிக்கையானது போரின் போது எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.உங்களுடன் ஒப்பிடுகையில் நாங்களும் அங்கவீனர்கள் தான்.நாம் சொல்ல நினைப்பவற்றை சொல்ல முடியாமலும்,செய்யமுடியாமலும்,கேட்க வேண்டிய விடயங்களை கேட்காதது போல பாசாங்கு செய்து  சமூகத்தின் மத்தியில் தலை குனிந்து நிற்கின்றோம்.
 
உரத்து பேசவேண்டிய இடத்தில் பேசமுடியாதவர்களாக நிற்கின்றோம்.எமது உரிமைகள் வேண்டும் என்று கேட்டால் சிங்கள மக்களோடு மீண்டும் முரண்படுவோமோ அல்லது அரசாங்கத்திடம் எதிர்ப்புக்களை சம்பாதித்து விடுவோமோ என்று நாம் வாய் பேசாத அரசியல்வாதிகளாக நிற்கின்றோம்.
 
எமது அரசியல் வாதிகளின் குண அம்சம் அடுத்த தேர்தலில் இருக்கைகள்  வேண்டும் என்றால் ,கட்சிகளின் தலைவர்களின் விதிகளை மீறாமல் இருப்பதற்கு பல விடயங்களை கண்டும் காணாதது போல் இருக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாங்கள் இருக்கின்றோம்.
 
நாம் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு உதவுவதற்கு முன்வந்து,காளான் உற்பத்தியை சுயதொழில் ஆக்குவதற்கு மத்திய அரசினால் ஒரு குடும்பத்திற்கு 40000 பணம் ஒதுக்கப்பட்டது.ஆனால் உண்மையில் அவ்வாறான ஒரு உற்பத்தியை மேற்கொள்ள 150000 வரை செலவாகின்றது.இப்படி இருக்கையில் நாம் என்ன செய்வது.அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிராமண அடிப்படையிலான நிதியில் இருந்து ஒரு மாணவனுக்கு சைக்கிள் ஒன்றை வழங்கினோம்.ஆனால் அந்த மாணவன் கல்வியில் சிறந்து விளங்குகின்றான என்ற  கடிதம் ஒன்றை அதிபர் மூலமாக பெற்றுத் தரும்படி  மத்திய அரசில் இருந்து கடிதம் எனக்கு போடப் பட்டிருக்கிறது.இப்படியான நிலைகளின் மத்தியில் நாம் இருக்கின்றோம்.
 
நாம் ஆயுத மூலமான போராட்டத்தில் தோற்று விட்டோம்.நாங்கள் நின்று குரல் எழுப்புவதற்கு தான் மாகாண சபையை ஆதரித்தோம்.ஆனால் இதில் இன்று எதையுமே சாதிக்க முடியாதவர்களாக இருக்கின்றோம்.இன்று எமக்கு கிடைத்த ஒரே ஒரு சொத்து எமது முதலமைச்சர் மட்டுமே.அவரை நாம் உரிய முறையில் அணுகி பலனைப் பெறவேண்டும். ஆளுநர் அவர்கள் மாகாண சபை தோற்றம் பெறுவதற்கு முன்னர் கணிசமான நிதியை அமைச்சுக் களில் இருந்து எடுத்து  தனது வைப்பில் வைத்திருந்தார்.ஆனால் இப்பொழுது அந்த நிதி எமது அமைச்சுக்கு மீளவும் கிடைத்திருக்கின்றது.அதனை நாம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,போரினால் பாதிக்கப்பட்டோர்,மாற்று வலுவுள்ளோர் ஆகியவர்களுக்கு வழங்குவதாக தீர்மானித்துள்ளோம். இவ்வாறான நிதியை சுய தொழில்களுக்கு பயன்படுத்தி இவர்களை வெற்றி அடையச் செய்வோம்.என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

 

  http://www.onlineuthayan.com/news/20968

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
தமிழருக்கு அரசியல் தலைமை இல்லை- வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்
 
ஆனால்  போருக்கு பின்னர் நம் மத்தியில்  மாற்றுத்திறனாளிகள் அதிகரித்துள்ளனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் கணக்கெடுப்பின்படி 10908 மாற்றுத்திறனாளிகள் நமது பிரதேசத்தில் காணப்படுகி ன்றனர்.இந்த எண்ணிக்கையானது போரின் போது எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.உங்களுடன் ஒப்பிடுகையில் நாங்களும் அங்கவீனர்கள் தான்.நாம் சொல்ல நினைப்பவற்றை சொல்ல முடியாமலும்,செய்யமுடியாமலும்,கேட்க வேண்டிய விடயங்களை கேட்காதது போல பாசாங்கு செய்து  சமூகத்தின் மத்தியில் தலை குனிந்து நிற்கின்றோம்.

இது புலம்பெயர்ந்து வந்துள்ள தமிழர்கள், எங்களுக்கும் பொருந்தும்.

5 hours ago, நவீனன் said:

இன்று எமக்கு கிடைத்த ஒரே ஒரு சொத்து எமது முதலமைச்சர் மட்டுமே.

இப்பாவது இதை சொல்லும் தைரியம் வந்ததே.

 

5 hours ago, நவீனன் said:

நாங்களும் அங்கவீனர்கள் தான்.நாம் சொல்ல நினைப்பவற்றை சொல்ல முடியாமலும்,செய்யமுடியாமலும்,கேட்க வேண்டிய விடயங்களை கேட்காதது போல பாசாங்கு செய்து  சமூகத்தின் மத்தியில் தலை குனிந்து நிற்கின்றோம்.

உரிமைகள் நசுக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு போராடத் தெரியாதவர்கள் அனைவரும் அங்கவீனரே.

எமது உரிமைகளை யாரோ சிலர் பெற்றுத் தருவார்கள் என்று தாம் எந்தவொரு ஆக்கபூர்வமான பங்களிப்புகளையும் வழங்காத அனைவரும் அங்கவீனர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.