Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்!

Featured Replies

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்!

 

O. Pannerselvam to take charge as CM in some time now at raj bhavan

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்.  

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

 இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவியேற்றனர். முன்னதாக ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை வாசிக்க 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/o-pannerselvam-take-charge-as-cm-some-time-now-at-raj-bhavan-269044.html

  • தொடங்கியவர்

WR_20161206015437.jpeg

பன்னீர் செல்வம் தலைமையில் புதிதாக பதவியேற்ற தமிழக அமைச்சரவை.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்: அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் வகித்த துறைகளே அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை ஒதுக்கீடு விவரம்:

  1. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,
  2. திண்டுக்கல் சீனிவாசன் -வனத்துறை
  3. எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,
  4. செல்லூர் ராஜூ- கூட்டுறவு துறை,
  5. பி தங்கமணி- மின்சரத்துறை மற்றும் மதுவிலக்கு
  6. எஸ்.பி வேலுமணி: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை,
  7. டி. ஜெயக்குமார்- மீன் வளத்துறை அமைச்சர்
  8. சிவி சண்முகம்- சட்டம் நீதி சிறைத்துறை
  9. கேபி அன்பழகன்- உயர் கல்வித்துறை
  10. சரோஜா- சமூக நலத்துறை, சத்துணவு திட்டடம்
  11. எம்.சி சம்பத்- தொழில்துறை
  12. கேசி கருப்பன் சுற்றுச்சூழல் துறை
  13. பி.காமராஜ் - உணவுத்துறை, சிவில் சப்பிளைஸ்,
  14. ஓ.எஸ் மணியன் -கைத்தறித்துறை,
  15. உடுமைலை ராதாகிருஷ்ணன் -வீட்டு வசதி, ஊரக வளர்சித்துறை
  16. வேளாண் துறை -துரைக்கண்ணன்
  17. விஜய பாஸ்கர் - சுகாதாரத்துறை, குடும்ப நலம்
  18. ஆர்.துரைக்கண்ணு- விவசாயம்,
  19. கடம்பூர் ராஜு- தகவல் தொடர்பு துறை
  20. ஆர்.பி உதயகுமார்- வருவாய்துறை அமைச்சர்
  21. வெல்லமணி நடராஜன் -சுற்றுலாத்துறை
  22. கேசி வீரமணி- வணிக வரித்துறை
  23. கே பாண்டியராஜன் - பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன்
  24. கேடி ராஜேந்திர பாலாஜி -பால் வளத்துறை
  25. நிலோபர் கபில்-தொழிலாளர் நலதுறை
  26. போக்குவரத்து துறை -எம்.ஆர் விஜயபாஸ்கர்
  27. பாஸ்கரன் -கதர் துறை 28. எம்.மணிகண்டன் -தகவல் தொழில்நுட்ப துறை
  28. ராஜலட்சுமி- ஆதிதிராவிட நலத்துறை
  29. வளர்மதி -பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை
  30. செவ்வூர் ராமச்சந்திரன்- இந்து சமய அற நிலையத்துறை

http://news.lankasri.com/india/03/114871?ref=youmaylike1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WR_20161206015437.jpeg

அம்மா சிறை சென்ற போது துக்கம் தொண்டையை அடைக்க பதவியேற்பு பத்திரத்தையே வாசிக்கமுடியாமல் அவதிப்பட்டார்கள்.
ஆனால் இங்கே ஒருசிலரின் முகத்தில் புன்னகை தவழ்ந்து விளையாடுகின்றது போலிருக்கின்றதே.

  • தொடங்கியவர்

'ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' - சசிகலா லாபியில் முதல்வர் பதவி

 

ops_new_13380.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி 7 நாள் துக்கம் அனுசரிக்கிறது தமிழக அரசு. 'புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வந்தாலும், எப்போதும் போலவே தனது பணிகளைக் கவனிக்க விரும்புகிறார். முதல்வருக்குரிய வசதிகளை அனுபவிக்கவும் அவர் விரும்பவில்லை' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதுவரையில் அப்படியொரு பெயர் கட்சிக்காரர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை. மன்னார்குடி உறவுகளின் முழு ஆசிர்வாதம் இருந்ததால், வருவாய்த்துறை அமைச்சராக பதவியேற்றார். அதே ஆண்டு டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால், சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனாலும், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டது சர்ச்சைக்குள்ளானது. உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கும் ஆளானார். இதன்பிறகு, தமிழக முதல்வர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் வசம் வந்தது. ஜெயலலிதாவின் அறிவிப்பால், கட்சியின் சீனியர் ஜாம்பவான்கள் அதிர்ந்து போனார்கள். ஜெயலலிதாவின் கட்டளைக்கு முன்னால் எதுவும் செல்லுபடியாகவில்லை. 2014 செப்டம்பர் மாதம் 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறைக்குள் அடைபட்டார். அதே செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஓ.பி.எஸ். 

சமீபத்தில் 2016 செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 'ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தப் போவது யார்?' என்ற கேள்வியை அரசியல் தலைவர்கள் முன்வைத்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் வசம் வந்து சேர்ந்தன. தற்போது ஜெயலலிதாவின் மறைவையொட்டி, மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இரண்டு முறை முதல்வராகப் பதவியேற்றதன் பின்னணியில் ஜெயலலிதா இருந்தாலும், இந்தமுறை ஓ.பி.எஸ் அதிகாரத்திற்கு வருவதை சசிகலா விரும்பவில்லை. ஆனாலும், ' தற்போதுள்ள சூழலுக்கு ஓ.பி.எஸ் தொடர்வதே நல்லது' என நினைக்கிறார். ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டமில்லாத விழாவில் பன்னீர்செல்வத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 

secretariate_600_13264.jpg

"ஒவ்வொரு முறை ஆட்சியின் தலைமைப் பீடத்திற்கு வரும்போதெல்லாம், முதல்வர் அமர்ந்திருந்த அறையை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டே பணிகளைத் தொடங்குவார் ஓ.பி.எஸ். சில வாரங்களுக்கு முன்பு முதல்வரின் அதிகாரங்கள் வந்தபோதும், ஜெயலலிதா படத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டே பணிகளைத் தொடங்கி வந்தார். எந்த சூழ்நிலையிலும் முதல்வர் அமர்ந்த நாற்காலியில் அவர் அமர்ந்ததில்லை. டான்சி நில வழக்கில் தண்டனை பெற்றபோதும், ஜெயலலிதாவின் நிழலில் அமர்ந்து கொண்டே சொல்லப்பட்ட இடங்களில் கையெழுத்திட்டு வந்தார். இப்போது ஆட்சியின் லகான் சசிகலா கைககளில் இருக்கிறது. அநேகமாக முன்பிருந்த அதே நிலையைத்தான் ஓ.பி.எஸ் தொடர்வார் என்று தோன்றுகிறது. தலைமைச் செயலகத்தின் முதல் மாடியில் அமர்ந்து அமைச்சுப் பணிகளைக் கவனித்து வந்தார் ஜெயலலிதா. இனி அந்த அறை பூட்டியே கிடக்கும். ஓ.பி.எஸ் அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. முதல்வரின் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தபோது, உள்துறை செயலரோ காவல்துறை தலைவரோ ஓ.பி.எஸ்ஸிடம் எதைப் பற்றியும் விவாதித்ததில்லை. எந்த சந்தேகம் என்றாலும், அப்போலோவில் தங்கியிருந்த சசிகலாவிடமே கேட்டு நடந்து கொண்டனர். இனியும் அதிகாரிகள் அப்படியேதான் செயல்படுவார்கள். 'தங்கள் கைப்பிடிக்குள் ஓ.பி.எஸ் இருப்பார்' என சசிகலா நம்பினாலும், மன்னார்குடி உறவுகளுக்கு அவர் மீதான கோபம் குறையவில்லை. முதல்வருக்குரிய கான்வாய்களில் இரண்டு வாகனங்களை மட்டுமே ஓ.பி.எஸ் பயன்படுத்த இருக்கிறார். 7 நாள் துக்க அனுசரிப்பு முடிந்த பிறகு, கோட்டைக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். 

தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "ஆட்சிப் பொறுப்பை பன்னீர்செல்வத்திடம் வழங்கிவிட்டு, சோனியா போலவே கட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சசிகலா. 'நீங்கள் பொறுப்புக்கு வர வேண்டும்' என கட்சியின் சீனியர்கள் அவரிடம் வலியுறுத்தியபோது, 'பொறுங்கள். பார்த்துக் கொள்ளலாம்' என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார். அப்போலோவுக்கு வந்த கட்சியின் 135 எம்.எல்.ஏக்களிடமும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதையே ஆதரவுக் கடிதம் வாங்கியதாக தகவல் பரவியது. கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான முடிவு, டிசம்பர் இறுதியில் வெளியாகலாம். அப்போது கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பது உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. ' கட்சியில் கூடுதல் முக்கியத்துவத்தை பெற வேண்டும்' என கொங்கு மண்டல நிர்வாகிகள் விரும்புகின்றனர். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் முடிவில் இருக்கிறார் சசிகலா. அதற்கேற்ப நிர்வாகிகள் செயல்படுவார்களா... மன்னார்குடி உறவுகளின் ஆதிக்கம் ஆட்சி அதிகாரத்தில் எப்படிப் பரவப் போகிறது என்கின்ற கேள்விகளும் எழுகின்றன. அனைத்து திசைகளில் இருந்து குவியும் அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ளும் ஒற்றை சக்தியாக உருவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். ஆட்சி அதிகாரத்தின் சாதக, பாதகங்களுக்கும் இனி அவரே பொறுப்பாளராக்கப்படுவார்" என்றார் விரிவாக. 

7 நாள் துக்க அனுசரிப்புக்குப் பிறகு ஆட்சியிலும் கட்சியிலும் என்ன நடக்கப் போகிறது என்பதை கவலையோடு கவனித்து வருகிறார்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/74371-will-ops-sit-on-jayalalithaas-chair-.art

  • தொடங்கியவர்

ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்

 

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமான பிறகு, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு என்பது மிக விரைவாகவும், அமைதியாகவும் நடந்தேறியதும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவரது சடலத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததும் தமிழக அரசியல் அரங்கில் பலத்த கேள்விகளையும் சலசலப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே சசிகலாவின் உறவினர்கள்
 ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே சசிகலாவின் உறவினர்கள் மட்டுமே நின்றது சர்ச்சையை உண்டாக்கியது

டிசம்பர் 4ஆம் தேதியன்றே முதல்வரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அன்று இரவே அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார் சசிகலாவின் அண்ணன் வி. திவாகரன். இதற்கு அடுத்த நாளான டிசம்பர் 5ஆம் தேதி அப்பலோ மருத்துவமனையிலேயே அமைந்திருக்கும் கூட்ட அரங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அக்கட்சியின் சார்பில் எந்தவித அறிக்கையோ, விளக்கமோ அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் என்னவிதமான வாக்குறுதிகள் வாங்கப்பட்டன, என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பவை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், அன்று மாலை 6 மணியளவில் மீண்டும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்குமென தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் அன்று இரவு 11. 30 மணிக்கு ஜெயலலிதா காலமானதாக நள்ளிரவு 12.20 மணியளவில் அப்பலோ மருத்துவமனை ஒரு அறிக்கை மூலம் அறிவித்தது.

அதுவரை மருத்துவமனையில் இருந்த மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர். பிறகு சசிகலாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அண்ணா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்

அதிகாலை 1. 30 மணியளவில் ஆளுனர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் முழு அமைச்சரவையுடன் பதவியேற்றார்.

இதற்கு முன்பாக, சி.என். அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரும் தமிழக முதல்வர்களாகப் பதவியிலிருக்கும்போதே உயிரிழந்திருக்கின்றனர். அந்த இரண்டு தருணங்களிலுமே இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டார். அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969ல் உயிரிழந்த நிலையில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதில் மு.கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

1987 டிசம்பரில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான போதும், இடைக்கால முதலமைச்சராக நெடுஞ்செழியனுக்கு ஆளுனர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விவரங்கள் வெளிவராத சட்டமன்ற உறுப்பினர் கூட்டம்

ஓ.பன்னீர் செல்வம்  மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம்

ஆனால், ஜெயலலிதா உயிரிழந்த பிறகு டிசம்பர் ஆறாம் தேதி அதிகாலை 1.50 மணியளவில் ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஓ. பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக கடிதம் அளித்ததையேற்று அவருக்கு முதல்வராகப் பதவியேற்பு செய்யவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது, முதல்வர் பதவிக்கு வேறு யாருடைய பெயரும் பரிசீலிக்கப்பட்டதா என்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட நடராஜனுடன் பேசிய மோடி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடராஜனிடம் பேசிய மோதி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடராஜனிடம் பேசிய மோதி (படத்தில் மோதிக்குப் பின் நிற்கும் இல கணேசனுக்கு வலது பக்கம் நிற்கிறார் நடராஜன்)

மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டதும் அவரது உடல் அருகே முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் பலரும் நின்றிருந்தனர்.

சசிகலாவின் கணவரான எம். நடராஜன் அருகிலேயே இருந்தார். பிரதமர் நரேந்திர மோதி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடராஜனிடமும் சில வினாடிகள் பேசியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

அதேபோல, ஜெயலலிதாவின் உடலுக்குப் பின்பாக சசிகலாவின் அண்ணன் மகனான டிவி மகாதேவன் நின்றுகொண்டிருந்தார்.

இது தவிர, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, அவரது பிள்ளைகளான விவேக், பிரியா, சசிகலாவின் அண்ணன் மகன் சுந்தரவதனத்தின் மகள் பிரபா, அவரது கணவர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டவர்களையும் பிரதானமாக அங்கே காணமுடிந்தது.

இவர்களில் பலரும் பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 டிசம்பரில் தனக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் கருதிய ஜெயலலிதா அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலாவை கட்சியிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.

சசிகலா நீக்கம் குறித்து படிக்க: அதிமுகவிலி்ருந்து சசிகலா நீக்கம்

அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைதுசெய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

அதிமுகவில் சசிகலா உறவினர்களின் ஆதிக்கம் தொடருமா?  அதிமுகவில் சசிகலா உறவினர்களின் ஆதிக்கம் தொடருமா?

ஆனால் பின்னர் சசிகலா தனது தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

சசிகலா நீக்கம் குறித்து படிக்க: சசிகலாவுடன் ஜெயலலிதா சமரசம்

இதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே சசிகலாவின் கணவர் நடராஜன் அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். வழக்குகள் தொடரப்பட்டு, அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீதெல்லாம்கூட வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் சசிகலாவின் உறவினர்கள் தென்பட்டது கட்சிக்கு உள்ளும் வெளியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிடம் பேசிய சசிகலாவின் நடராஜன், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு யார் என்பதை முடிவுசெய்யும் இடத்தில் தாங்கள் இருந்ததாகவும் அந்தத் தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரின் கடைசி தொண்டன் இருக்கும் வரை கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் சட்டமன்றத் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் தலைமைப் பதவி குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், சசிகலாவின் கணவரான நடராஜன் தெரிவித்த இந்தக் கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயலலிதாவின் உடலின் அருகே சசிகலா  ஜெயலலிதாவின் உடலின் அருகே சசிகலா

அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக விரும்புமா ?

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை, சசிகலா தனியாக எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்றதில்லை. ஆனால், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த சசிகலா நேரில் வந்தார். ஆனால், இதனை வைத்து மட்டும் சசிகலா கட்சியின் முகமாக மாறுவார் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

"தற்போதைய சூழலில் கட்சிக்குள் சசிகலாவின் ஆதிக்கத்திற்கு எந்த சவாலும் கிடையாது. தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தன்னை கட்சிக்குள் உறுதிப்படுத்திக்கொள்ள முயல்வாரா என்பது பதில் இல்லாத கேள்வி" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

மாநிலங்களவையில் அதிமுகவுக்கு உள்ள 13 இடங்களின் ஆதரவு ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எப்போதும் தேவைப்படும். அதனால், அதிமுகவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மத்தியில் ஆளும் பா.ஜகவும் தொடர்ந்து முயற்சி செய்யும்.

ஜெ., இல்லாத சூழலில் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக விரும்புமா ?  ஜெ., இல்லாத சூழலில் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக விரும்புமா ?

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 50 இடங்களை வைத்திருப்பதோடு சட்டமன்றத்தில் 134 இடங்களுடன் ஆட்சியிலும் இருக்கும் அதிமுகவை இப்போதைக்குக் கட்டுப்படுத்துவது யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு போன்றவை எப்போது கூடும் என்ற அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு யார் வாரிசு, அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-38237877

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் அமைச்சர்கள் எல்லாம் வெறும் வெறும் றபர் சீல்கள் என்று மட்டும் புரிகிறது.

எத்தனை நாட்களுக்கு இவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறார்கள்?
திமுக இப்போ எத்தனை பேருக்கு வலை விரித்திருக்கும்.?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

எத்தனை நாட்களுக்கு இவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறார்கள்?
திமுக இப்போ எத்தனை பேருக்கு வலை விரித்திருக்கும்.?

ஒரு எம்.எல்.ஏ க்கு '30 கோடி' என விலைபேசினாலும் 900 கோடியில் அ.தி.மு.க ஆட்சியை, தி.மு.க.வால் கவிழ்க்க இயலும்! :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு எம்.எல்.ஏ க்கு '30 கோடி' என விலைபேசினாலும் 300 கோடியில் அ.தி.மு.க ஆட்சியை, தி.மு.க.வால் கவிழ்க்க இயலும்! :)

இப்போதைக்கு மாற பயப்பிடுவார்கள்.அம்மாவை இழந்திருக்கும் மக்கள் அடித்தே கொன்றுவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.