"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 69 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
6வது அத்தியாயம் விஜயன் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றான வங்க நாட்டு மன்னன் [Vanga king] கலிங்க மன்னனின் [Kalinga king] மகளை மணந்தான். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவள் சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து சீகபாகு / சிங்கபாகு [Sihabahu / Sinhabahu] என்ற ஆண் மகனையும், சீகவலி [Sinhasivali or Sihasivali] என்ற மகளையும் பெற்றெடுத்தாள். [மகனின் கை, கால்கள் சிங்கத்தைப் போல உருவானதால் அவனுக்கு சீகபாகு என்று பெயரிட்டாள். ஆனால் மகளுக்கு சீகவலி என்று பெயரிட்டாள்.] ஒரு மனிதப் பெண் மற்றும் மிருக சிங்கத்தின் இணைப்பிலிருந்து சந்ததிகளைப் பெறுவது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. பின் சீகபாகு தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து, பதினாறு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அதில், விஜயனும் சுமித்தாவும் [Vijaya and Sumitta] முதல் இரட்டையர் ஆகும்.
விஜயன் வன்முறையாளர், பொல்லாதவர் மற்றும் தீய நடத்தை உடையவர். அவருக்கு அதே குணாதிசயங்களைக் கொண்ட எழுநூறு நண்பர்களும் இருந்தனர். விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் கப்பலில் ஏற்றி, தங்கள் பூர்வீக நிலத்தில் அவர்கள் செய்த குற்றச் செயல்களின் காரணமாக, நாடு கடத்தப்பட்டனர். அவர்களது மனைவிகளும் மற்றும் குழந்தைகளும் வெவ்வேறு கப்பலில் ஏற்றி கடலில் நாடு கடத்தப்பட்டனர். குழந்தைகளையோ தாய்களையோ அவர்களின் தந்தை அல்லது கணவன் செய்த குற்றங்களுக்காக, அதுவும் குழந்தைகளையும் தாய்களையும் தனித்தனியாக வேறு வேறு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவார்களா? மேலும் குழந்தைகளின் வயது சுழியத்திலிருந்து [பூஜ்ஜியத்திலிருந்து] பத்து அல்லது பன்னிரெண்டு வரை வேறு படலாம் ? குறைந்த பட்சம் குழந்தைகளாவது தாயுடன் இருக்க வேண்டும் அல்லவா? இது ஒரு அதீத கற்பனை போல், நம்பும்படியாகவும் இல்லை. 700 + 01 பேரும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மரம் மற்றும் துடுப்புகளின் உதவியுடன் ஒரே கப்பலில் பயணம் செய்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது? இருப்பினும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய ஆயிரம் பேரை அல்லது குறைந்தது எழுநூறு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு கப்பல் இந்தியப் பெருங்கடலில் எங்கும் இருந்ததாக ஒரு வரலாறும் இல்லை.
நீண்ட காலமாக, இந்தியாவில், படகுகள் சிறியதாக இருந்தன, மேலும் பாய்மரக் கம்பம் மிக உயரமாக இருந்ததுடன் அரிதாகவே நிலத்தை விட்டு, வெகுதூரம் வெளியேறியது. இருப்பினும், கடலில் செல்லும் கப்பலுக்கு, துடுப்புகளும் இருந்தன. கடலில் காற்று குறையும் போது அது பயன்படுத்தப்பட்டன. மேலும் துடுப்புகள் துறைமுகங்களுக்குள் கப்பலை அங்கும் இங்கும் வசதியின் படி திருப்ப மற்றும் முன்னோக்கி, பின்னோக்கி செலுத்த பயன்படுத்தப்பட்டன. இல்லையெனில் கப்பல் காற்றின் உதவியுடன் மட்டுமே பொதுவாக பயணித்தது. பிந்தைய வேத காலத்தில் (கி.மு. 600 முதல் 200 வரை), கடல் பயணங்கள், படகுகள் மற்றும் பாதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் கடல்சார் நடவடிக்கைகளின் ஆரம்ப குறிப்பு ரிக் வேதத்தில் உள்ளது; அக்கினியை வேண்டி, ரிக் வேதம் மண்டலம் ஒன்றில், சூக்தம் 97 இல் வசனம் 7 & 8 யிலும் கப்பலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 7 - "எங்கும் முகமுள்ள நீ, எங்களுடைய பகைவர்களை - அக்கரைக்குச் செல்லும் கப்பல் போல் செலுத்தவும், அவனுடைய ஒளி எங்களுடைய பாபத்தை நீக்குக", 8 - நீ எங்களை, எங்களுடைய நலத்துக்காக [ஷேமத்துக்காக], கப்பலிலே கடலுக்கப்பால் செலுத்தவும். அவனுடைய ஒளி, எங்களுடைய பாபத்தை நீக்குக" என்கிறது.
கிமு 200 வாக்கில், கப்பல்கள் பெரிய பெரிய அளவுகளில் கட்டப்பட்டன. ஒரு கப்பலை பெட்டிகளாகப் பிரிக்கும் ஒரு பகிர்வுகளின் [bulkhead] எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது; ஒரு கப்பலில் உள்ள ஒரு bulkhead [பல்க்ஹெட்] என்பது மேலோட்டத்திற்குள் [கப்பல் கூடுக்குள் / hull ] உள்ள ஒரு செங்குத்துச் சுவராகும், இது கப்பலை தனித்தனி பெட்டிகளாகப் பிரிக்கிறது, முதன்மையாக மேலோட்டத்தில் உடைப்பு ஏற்பட்டால் நீர் பரவுவதைத் தடுக்க உதவுகிறது, இதனால் நீர் புகாத பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் சேதம் ஏற்பட்டால் வெள்ளத்தைக் குறைப்பதன் மூலமும் கப்பலின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதனால், அந்தக்காலத்தில், கப்பல்களின் பக்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த, சிலர் இவற்றில் [bulkheads] 13 வரை வைத்திருந்தனர். அத்துடன், அந்தக் காலத்தில் 100 பேரை ஏற்றிச் செல்லும் 200 டன் எடையுள்ள கப்பல்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மரம் முக்கியமாக மலபார் தேக்கு [Malabar teak] ஆகும். இது வெளிநாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்படும் கருவேலமரத்தை [oak] விட நீடித்து நிலைத்ததாக இருந்தது.
விஜயனும் அவரது தோழர்களும் முதலில் சுப்பரா [சுப்பராகா / Suppara / Supparakka] என்ற இடத்தில் இறங்கினர். அவர்கள் அங்கும் முன்போலவே தவறாக நடந்து கொண்டனர். இதனால், கப்பல் மூலம் தப்பி ஓட வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் புத்தர் பரிநிர்வாணத்தை அடைந்த நாளில் இலங்கையில் தரையிறங்கினார்கள். இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்பது வெள்ளிடைமலை. விரிவான விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனைவிகள் மகிழடிபாகத்திலும் [Mahiladipaka], குழந்தைகள் நாகதீபத்திலும் [ Naggadipa] இறங்கினர். மனைவிகள் மற்றும் குழந்தைகளின் தலைவிதியைப், அதாவது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புறக்கணித்து வரலாற்றை [கதையை] மகாவம்சத்தில், மகாநாம தேரர் எழுதியுள்ளார். விஜயன் தனது சொந்த நாட்டில், தனது நடத்தையில் ஒரு குற்றவாளியாக இருந்தார். தங்கள் தங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய விஜயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர் முதலில் தரையிறங்கிய சுப்பராவிலும், அப்படியே குற்றமாக நடந்து கொண்டார். எனினும், இப்படியான மற்றும் சிங்கத்தின் வாரிசான, 'விஜயன் வருகை' யைத்தான் இலங்கை தங்களுடையது என்ற சிங்கள பௌத்தர்களின் கூற்றுக்கு அடிப்படையாக்குகிறார்கள். இருப்பினும், வில்ஹெல்ம் கெய்கர் தனது தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய தனது ஒப்பீட்டு ஆய்வில் விஜயனின் வருகை ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார், குறிப்பு "The Dipavamsa And Mahavamsa And Their Historical Development In Ceylon, In German by Wilhelm Geiger in 1905, and the English translation by Ethel M Kumaraswamy, ஆனால் அந்த அறிக்கை மரபியல் அல்லது உயிரியல் அடிப்படையை தவிர்த்து, வேறு காரணங்களைக் கூறுகிறது. எனினும் மரபியல் அல்லது உயிரியல் அடிப்படை ஒரு வெள்ளிடை மலையாகும்.
எது எப்படியாகினும், இந்த அத்தியாயம் இலங்கையின் கடற்கரையில் தரையிறங்கியதாகக் கூறப்படுவதைத் தவிர, இலங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.
Part: 69 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 6 is about coming of Vijaya: A Vanga king married the daughter of a Kalinga king. She gave birth to a beautiful daughter. She cohabited with a lion and gave birth to one boy, Sihabahu, and a daughter, Sihasivali. Sihabahu killed the father lion when he was about sixteen years of age, and created a new kingdom, Sihapura. It is biologically impossibile to have offspring out of the union of a human lady and a lion. Sihabahu incestuously married his own sister, and gave birth to sixteen twins. Vijaya and Sumitta is the first twin. Vijaya was violent, wicked and of evil conduct and he had seven hundred friends of same characters. Vijaya and his seven hundred companions were put on a ship and exiled because of their criminal conducts in their native land. Their wives were also put on another ship and allowed to drift in sea. Their children were also put in yet another ship and allowed to drift in sea. Would any sensible person or king punish kids for the crimes committed by their fathers? Anything is fine when it helps Buddhism! Vijaya and his companions first landed at a place called Supparakka. They misbehaved there, and had to flee by ship. Then they landed in Lanka on the day Buddha attained Parinirvana, a deliberate concocted happy coincidence. Wives landed in Mahiladipaka and the children landed in Naggadipa. The Mahavamsa, rather Mahanama, just ignored the fates of the wives and the children. Vijaya was a criminal in his behaviour in his native country and also criminally behaved where he landed first, Supparaka. This is the basis of the claim of the Singhalese Buddhists that Lanka is theirs. It is a criminal concept and a frivolous claim. Even Wilhelm Geiger has stated that Vijaya’s arrival is a myth in his comparative study of Dipavamsa and Mahavamsa, Reference 11, but that statement was not based on genetics or biology. This Chapter is also not about historical events which happened in Lanka, except the alleged landing on the shores of Lanka..
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 70 தொடரும் / Will follow
துளி/DROP: 1948 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69
https://www.facebook.com/groups/978753388866632/posts/32947323861582836/?
By
kandiah Thillaivinayagalingam ·