Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை.

@nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.

அது கள் இல்லை பதனியாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை.

@nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.

மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்....
#ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
#பனை மரத்துக் #பதநீர் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !
பதநீர் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
#கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !
#பதநீர் குடித்துக் #கெட்டாரைக்
கேட்ட துண்டா?
பதநீர் குடித்துச் #செத்தாரைப்
பார்த்த துண்டா?
#எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் #பதநீரால் !
எரிசூட்டு நோய் தீரும்
#பனையின் பதநீரால் !
அதிகாலைக் #பதநீர் குடித்தால்
அச்சம் போகும் !
அந்தி #பதநீர் குடித்தால்
ஆயுள் நீளும் !
#தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
#பதநீர் அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !
கடையேழு #வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
#பதநீர் விருந்து கொடுத்தன்றோ
கௌரவம் செய்தார்கள் !
வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
#பதநீர் அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !
#சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய பதநீர் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !
விருந்தாகி #மருந்தாகி
விடிகாலை உணவாகி
#விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !
அளவான #போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!
#போதை இல்லாத
அளிக்கின்ற #பதநீரை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!
- கவிஞர் மேத்தா❤️🙏
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nilmini said:

அப்ப இந்த விடைமுறையை கொண்டாட போறீங்கள்.

பிழாவை இதுவரை காணவில்லை என்றீர்கள்.

அந்த பிள்ளை எப்படி அடிக்குது பாருங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப இந்த விடைமுறையை கொண்டாட போறீங்கள்.

பிழாவை இதுவரை காணவில்லை என்றீர்கள்.

அந்த பிள்ளை எப்படி அடிக்குது பாருங்கோ.

6 hours ago, nilmini said:
மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்....
#ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
#பனை மரத்துக் #பதநீர் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !
பதநீர் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
#கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !
#பதநீர் குடித்துக் #கெட்டாரைக்
கேட்ட துண்டா?
பதநீர் குடித்துச் #செத்தாரைப்
பார்த்த துண்டா?
#எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் #பதநீரால் !
எரிசூட்டு நோய் தீரும்
#பனையின் பதநீரால் !
அதிகாலைக் #பதநீர் குடித்தால்
அச்சம் போகும் !
அந்தி #பதநீர் குடித்தால்
ஆயுள் நீளும் !
#தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
#பதநீர் அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !
கடையேழு #வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
#பதநீர் விருந்து கொடுத்தன்றோ
கௌரவம் செய்தார்கள் !
வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
#பதநீர் அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !
#சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய பதநீர் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !
விருந்தாகி #மருந்தாகி
விடிகாலை உணவாகி
#விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !
அளவான #போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!
#போதை இல்லாத
அளிக்கின்ற #பதநீரை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!
- கவிஞர் மேத்தா❤️🙏

கடவுளே....! எப்படியிருந்த பிள்ளையை இப்படி புலம்ப வைத்து விட்டார்களே.......கொட்டில்ல நாலு குத்தியை போடு பிள்ளை என்று சொல்லி வரைபடம் வரைந்து குடுத்தவரைத்தான் தேடுகிறேன்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

கடவுளே....! எப்படியிருந்த பிள்ளையை இப்படி புலம்ப வைத்து விட்டார்களே.......கொட்டில்ல நாலு குத்தியை போடு பிள்ளை என்று சொல்லி வரைபடம் வரைந்து குடுத்தவரைத்தான் தேடுகிறேன்.......!  😂

மருந்தாக தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பார்ட்டி என்று சொல்லி நிறைய தமிழ் பெண்கள் குடிப்பது வழக்கமாக இருக்கு. என்ன இருந்தாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் அப்படி செய்வது வழக்கம் இல்லைதானே? அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ குடிப்பது அவர்களது விருப்பம்.நாங்கள் கொழும்பில் வளர்ந்துமே நண்பிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆட்ட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது. அப்படி ஓரிருவர் பார்ட்டி வைத்தால் உடனே இது என்ன சிங்கள அல்லது பரங்கிகள் மாதிரி ஆட்டம் என்று சொல்லுவார்கள். சிங்கள பிள்ளைகள் வீட்டு பார்ட்டி ஒரே அமர்க்களமாக இருக்கும். எனது அக்கா சிங்கள மீடியத்தில் படித்ததால் பெரும் பிரச்னை. அப்பா அவாவை போக விடமாட்டார். ஆனால் இப்ப காலம் மாறிவிட்டது. நாங்களும் ஊரை விட்டே வெளியில் வந்து வெள்ளக்கார கலாச்சாரத்துக்கு மத்தியில் இருக்கிறோம். அவர்களது கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததல்ல. வேறுபட்டது. எனக்கு தெரிந்த நிறைய வெள்ளைக்காரர் குடிப்பதே இல்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி.

Edited by nilmini
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nilmini said:

பெண்கள் ஒரு/இரண்டு கிளாஸ் social drink எடுப்பதில் என்ன தவறு? அதுக்காக குற்ற உணர்வு தேவையில்லை என்பது எனது கருத்து.

பிற்போக்குத்தனமான சிந்தனைகளால் தான் பெண் அடிமைத்தனம் எமது நாடுகளில் அதிகம்.

பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். வீடு முதல், அலுவலகம் வரை அவர்கள் உழைப்பு அதிகம். பொருளாதார ரீதியில் முன்னேறுகிறார்கள். தமது வெற்றியினை கொண்டாட அவர்கள் சோசியல் ட்ரிங்க் எடுப்பதில் தவறில்லை.

இலங்கையில் யாழ்ப்பாணத்து தமிழர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்று சொல்வார்கள், கொழும்பில். 

பிரிட்டனிலும், கனடாவிலும், தமிழ் பெண்கள் வியாபார துறையில் இன்னும் முன்னுக்கு வரவில்லையே. காரணம் என்ன? தம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் அல்லது ஊட்டப்படாமல் வாழ்வது தான்.

இலங்கையில் பட்டப்படிப்பு முடித்து வந்து, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முயலாமல், சாதாரண வேலைக்கு போகும் யாழ் தமிழ் பெண்களும் உள்ளார்கள். அதேவேளை, தம்மை முன்னேற்றி கணவருடன் சேர்ந்து £10பில்லியன் பெரும் நிறுவனங்களை நடத்தும் முற்போக்கு பெண்களுள் இருக்கிறார்கள். 

***

 மேலை நாடுகளில் மதுவிலக்கு என்று அலம்பறை பண்ணுவதில்லை. காரணம் ஒவொருவருக்கும் தனி மனித பொறுப்பு இருக்க வேண்டும் என்று கருதுவதால். பார்ட்டியில் வெள்ளைகள் குடிப்பதில்லை என்றால், காரணம் அவர் வீட்டுக்கு கார் ஓட்டி செல்ல வேண்டும். மறுநாள் வேலைக்கு போக வேண்டும். எனக்கு தெரிந்து, சேர்ந்து மது அருந்திவிட்டு, காரில் ஏத்தி விட்டு, போலீசுக்கு போன் பண்ணி, அவர் குறித்து சொல்லி, வேலையில் இருந்து துரத்தி அடித்த ஒரே கொம்பனி வேலை செய்த வெள்ளைகளையும் பார்த்திருக்கிறேன்.

பிறகு, காரை ஓட்டிக்கொண்டு போகாதே என்று சொன்னேன்.கேட்கவில்லை. அவரது உயிரையும், ரோட்டில் பயணிக்கும் அடுத்தவர் உயிரையும் காக்கவே போலீசாரை அழைத்தேன் என்று பீலா விடுவர்.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் இதனை ஒரு பிற்போக்கான சிந்தனை என்று நினைக்கவில்லை. ஒரு கலாச்சார நடைமுறை என்றே நினைக்கிறேன். சில விடயங்களை இங்கு எழுதமுடியாது. ஏனென்றால் அது பலவிதமாக பார்க்கப்பட்டு விவாதம் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி வேறு கோணத்தில் செல்லும்.

 எங்கிருந்தாலும் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே குணம்தான். கலாச்சார வேறு பாடு, கல்வி, பணம், பழகும் உறவினர், நண்பர், சேர்ந்து வேலை செய்பவர்களை பொறுத்து அவரவர் பழக்கவழக்கங்கள், பழகும் விதங்கள் மாறுபடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=925219501843847  👈

யாழில்... 75 வயது பாட்டி,  இளசுகளுடன் போட்டி போட்டு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட காட்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, voiture et texte qui dit ’Pour Cédric, la sécurité est la priorité! Quand-même Cédric... Quand-même... Débétiseur’

வாழ்ந்து பாப்போம் வா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=876358830136478 👈

இறந்த யானைக்கு... இறுதி அஞ்சலி செலுத்தும் மற்ற யானை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et personnes debout

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்.
பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான். யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி அமையும்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.
திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.
நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.
அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.
பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.
1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.
நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது...........!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தையின் நியாயமான கதறல்........! (இதில் இருந்த படம் தவிர்க்கப் பட்டுள்ளது)......!

Variety of images  · 
Rejoindre
 
Sriram Govind  ·   · 
பிரசவ அறுவை நடந்த மறுநாள்.
நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை.
குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது.
முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும்.
கண்ணீரைப் பாலெனக் குடிக்கும்.
இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நான் பார்த்திருக்கிறேன்.
அதுவும் அந்த உயிரின் தந்தையாக.
இப்போது நினைத்தாலும் கண்ணீர் முட்டும்.
நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் "ஆபரேசன் பண்ணாவிட்டால் இருவருக்கும் ஆபத்து" என்று பதறவைப்பார்கள்.
நீங்கள் "செத்தாலும் கேள்வி கேட்கமாடேன்" என்று கையெழுத்து போடுவதைத் தவிர வேறுவழியில்லை அதிலும் இயற்கைக்குப் புறம்பான ஒரு தலைமுறையை வைத்துக்கொண்டு.
பணத்தைக் கொட்டி அழுது தாயையையும் குற்றுயிராக்கி குழந்தையையும் குறைப் பிறப்பாக்கி மெல்ல மெல்ல சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆம்.
தாய்க்கு முதலில் முதுகெலும்பில் மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவர்.
இதற்குப் பிறகு அந்தப் பெண் 'குறுக்கு விளங்காதவள்' ஆகிவிடுவாள்.
வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த அந்த குறைபிறப்புக்கு கொடுத்துவைக்காது.
பின்னே! அது ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டு போனால்,
அலோபதி மருத்துவன் எப்படி 8×8 சதுர அடி க்ளினிக்கில் தொழில் தொடங்கி பத்தே ஆண்டுகளில் கோடி பெறுமானமுள்ள மருத்துவமனை கட்டமுடியும்?!
தாய்ப்பால் வராமைக்கு உடல் காரணமல்ல.
மயக்க ஊசி போட்டு அல்லது மரத்துபோக வைத்து வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அறுந்த அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்றுசேராது.
காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.
இதிலே எங்கிருந்து காமம் பிறப்பது அடுத்த குழந்தை பெறுவது...?!
சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?!
குழந்தை வெளிவரும்போது பிறப்புறுப்பை வெட்டிவிடுவார்கள்.
அதன் பிறகு இறுக்கமற்ற கலவிதான்.
நெருக்கமற்ற வாழ்க்கைதான்.
படிதாண்ட தேவைதான்.
எங்கே விட்டேன்....?
ஆம். அறுத்த பிறகு...
அறுந்துகிடக்கும் உடல் விழிக்கும்போது அதற்கு ஒன்றும் புரியாது.
தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது...?!
எப்படி இவ்வளவு பெரிய காயம்?!
தூசியைவிட சிறிய விந்தணுவையும் அண்ட அணுவையும் சேர்த்து இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என என்னென்னவோ பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த அறிவுள்ள பெண்ணுடலுக்கு,
நமது நவீன, மிகமுன்னேறிய, அதிமுற்போக்கு, வெகுதொலைநோக்கு, அலோபதி அறுவைக் கத்தி மருத்துவத்தைப் புரிந்த கொள்ள அறிவு போதவில்லையப்பா..!
2,3 நாட்களுக்குப் பிறகுதான் உடலுக்குப் புரியும் அதன் கரு உயிருடன் பாலுக்கு ஏங்குவது.
மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.
கரைத்த மாவை முகம் சுளித்து குடித்துவந்த குழந்தை இப்போது தாய்ப்பாலைச் சுவைக்கும்.
உண்ட மயக்கத்தில் இதழ்கூட்டி சிரிக்கும்.
'இப்போதுதான் நிம்மதி' என்று அயரும் முன் வற்றத் தொடங்கும் அந்த முலைகள்.
6 மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது.
பால் சுரக்க மருந்து குடிக்க சொல்வார்கள்.
நீர்த்த பால் வரத் தொடங்கி பின் அதுவும் நின்று வற்றிய விளைநிலமாக இருந்த மார்பு இப்போது பாலைவனமாகிவிடும்.
சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடி செய்துவிடுவார்கள்.
இனி வரும் காலத்தில் குழந்தை பெற்றவளுக்கு பால் வந்தால்தான் அதிசயம்!
பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியதுதான்.
குழந்தை உண்டாகும்போது ஆற்றலுக்கென சர்க்கரை ஏறும்,
குழந்தை உடல் உருவாக இரத்த அளவு குறையும்.
உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என மருந்து மாத்திரை கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் உண்டு.
"ப்ரெக்ணன்ட் ஆனதுல இருந்து சுகர் வந்துருச்சு" என்போர் இன்று கணிசம்.
யாரோ ஹீலர் பாஸ்கராம்.
"உன் குழந்தையை நீயே பெறு" என்றாராம்.
"என்ன அநியாயம்!" என்று பிடித்து உள்ளேவைத்துவிட்டார்கள் உடலுறுப்பு வியாபாரிகள்.
சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால் கைதட்டுவோம்.
வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!
அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!
நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில்தானா?
டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!
தன்னந்தனியாகத் தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!
8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?
தாய்மை என்ன சுமையா?!
சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.
அவள் கிழித்துதான் பிரசவம் பார்த்தாளா?!
அவர்கள் காலத்தில் 37% பிரசவ இறப்பு நடந்ததா?!
இன்று அவர்கள் எங்கே?!
அலோபதி டாக்டர் சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை
இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் "ஸ்டெம் செல்" மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக்கொள்கிறார்களே?!
குறவர் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்து நடந்தோமா?!
முதலில் கருத்தரிப்பது என்ன நோயா?
நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!
ஏன் "பேஷண்ட்" ஆகவேண்டும்?!
பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்கானிப்பில் வீட்டிலேயே பிரசவம் நடக்கவேண்டும்.
கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.
இல்லை. கார்ப்பரேட் டாக்டர்தான் கடவுள்.
அதுவே வேதவாக்கு என்ற போக்கு தொடர்ந்தால்.....
"சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்" கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை......!
 
😢  😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

உலகிலேயே... தாய்மொழி சரியாக பேசத் தெரியாதவர்கள் தமிழர்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100001138068116/videos/513337161014057  👈

🍌 வாழைப்பழம் சாப்பிடும் போது, இதனை தவிர்த்து விடுங்கள். 🍌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருசனம் தூங்கிருச்சு ......!  👍

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.