Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Peut être une image de arbre, étendue d’eau et texte
 
 
 
 
 
 
மறைக்கப்பட்ட #உண்மைகள்
நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்
மறை நீர் (Virtual water) பற்றி ...
இது மிகவும் முக்கியம்
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20.முதல் 25 வரை இது நமக்கு தெரியும்.
ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது.
இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம்.
ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம்.
மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம்,
“கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை.
ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை.
ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது.
இதுவே மறை நீர்.
கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும்.
சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன.
சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர்.
அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம்.
ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம்.
ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர்.
சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம்.
இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம்.
நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம்.
நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை.
ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை.
மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?
முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை.
ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஏன்?
அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா?
உண்டு.
இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை.
1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில்
72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 2019-21-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு
1100 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 6,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய்.
ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர்.
250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா?
250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள்.
ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே?
அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை.
ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது?
நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் நமது விவசாயி.
இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.......!
  • Replies 2.6k
  • Views 227.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin de ‎texte qui dit ’‎GENERATIONAL EVOLUTION محل‎’‎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’என் அம்மா ஏந்துவதற்க்கு முன், என்னை முதலில் ஏந்திய தேவதைகளே.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’எமக்கு செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இன்னும் மாதங்களில் செலுத்துங்கள் பங்களாதேஷ் mt 伊 பணமெல்லாம் தர முடியாது வேணும்னா நீயும் 2 லட்சம் குரங்க எடுத்திட்டு போ’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Rusty, I'm home!'

புரிந்தவன் பிஸ்தா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Image

கைநாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de cerf

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடிய சேகுவேரா படம் பொரித்த பனியனை அணிபவனும்... 60 வயதாகியும் பணிக்கு செல்லும் தந்தையை பற்றி கவலை படாமல் 37 வயதில் ஒய்வு பெறும் சச்சினுக்காக வருந்துபவனும்... தன் வீட்டில் பழய கஞ்சி குடித்து விட்டு நடிகனின் கட்டவுட்'க்கு பாலாபிஷேகம் செய்பவனும்... இந்த மண்ணுக்கு கிடைத்த சாபங்கள்.’

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

Peut être une image de texte qui dit ’தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடிய சேகுவேரா படம் பொரித்த பனியனை அணிபவனும்... 60 வயதாகியும் பணிக்கு செல்லும் தந்தையை பற்றி கவலை படாமல் 37 வயதில் ஒய்வு பெறும் சச்சினுக்காக வருந்துபவனும்... தன் வீட்டில் பழய கஞ்சி குடித்து விட்டு நடிகனின் கட்டவுட்'க்கு பாலாபிஷேகம் செய்பவனும்... இந்த மண்ணுக்கு கிடைத்த சாபங்கள்.’

அருமையான வசனங்கள் சுவியர்.
உண்மையிலேயே... சிந்திக்க வைக்கும் கருத்து இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகின் இரட்டை வேடம்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’நாள் கணக்கில் படிக்காமல் அரட்டையடித்துவிட்டு, கடைசியில் பரீட்சைக்கு முதல் நாள் இரவில்...’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அடேய் இந்த வண்டிய தயாரிச்ச கம்பெனிக்கே... இப்படி யூஸ் பண்ணலாம்னு தெரியாதுடா..'

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்க்கை
"""""""""""""""""""
எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.
ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்.
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.
ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.
இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.
22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...
ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்.
எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு.
அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.*
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை.
சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.
பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.
டால்ஸ்டாய் தனது 82 வது வயதில், I Cannot Be Silent என்றார்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...
எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான்.
எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.
உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.
யார் கண்டது..?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!
இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!
எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...
இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்.
அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் .
ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.
இது தான் வாழ்க்கை!
இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
*மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.*
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அதிக மதிப்பெண் பல தொழிலாளர் களை உருவாக்குகிறது... குறைந்த மதிப்பெண் பல முதலாளிகளை உருவாக்குகிறது...!'

  • கருத்துக்கள உறவுகள்

 

Variety of images  · 
Rejoindre
 
Raji Raji  ·   · 
 
 
மனைவி இல்லை நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்,
வீட்டில் நுழைந்தவுடன் மனைவி இல்லை என்றால்,
காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்.
Peut être une image de 1 personne, temple et texte
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
ஏறக்குறைய நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பெறுமதியுடன் கையாளப் பட்ட சில்லறைக் காசுகள் இவை. இன்றைய சந்ததி இவை குறித்து எதுவும் அறியாது.
படிக்கும் காலங்களில் பத்துச் சதத்துக்கு ஒரு பண் வாங்கலாம். ஒரு பிளேன்டியின் விலை ஐந்து சதம்.
காலம் செல்லச் செல்ல எந்தப் பெறுமதியும் இல்லாது இவை மறைந்து போயின.
பிற்காலத்தில் இவை கள்ளச் சாராயம் (கசிப்பு) தயாரிப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு!
By Ashraf shihabdeen

Peut être une image de texte

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:
  · 
 
 
ஏறக்குறைய நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பெறுமதியுடன் கையாளப் பட்ட சில்லறைக் காசுகள் இவை. இன்றைய சந்ததி இவை குறித்து எதுவும் அறியாது.
படிக்கும் காலங்களில் பத்துச் சதத்துக்கு ஒரு பண் வாங்கலாம். ஒரு பிளேன்டியின் விலை ஐந்து சதம்.
காலம் செல்லச் செல்ல எந்தப் பெறுமதியும் இல்லாது இவை மறைந்து போயின.
பிற்காலத்தில் இவை கள்ளச் சாராயம் (கசிப்பு) தயாரிப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு!
By Ashraf shihabdeen

Peut être une image de texte

இப்போது ஐம்பது சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கும் மதிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:
  · 
 
 
ஏறக்குறைய நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பெறுமதியுடன் கையாளப் பட்ட சில்லறைக் காசுகள் இவை. இன்றைய சந்ததி இவை குறித்து எதுவும் அறியாது.
படிக்கும் காலங்களில் பத்துச் சதத்துக்கு ஒரு பண் வாங்கலாம். ஒரு பிளேன்டியின் விலை ஐந்து சதம்.
காலம் செல்லச் செல்ல எந்தப் பெறுமதியும் இல்லாது இவை மறைந்து போயின.
பிற்காலத்தில் இவை கள்ளச் சாராயம் (கசிப்பு) தயாரிப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு!
By Ashraf shihabdeen

Peut être une image de texte

 

10 minutes ago, ஏராளன் said:

இப்போது ஐம்பது சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கும் மதிப்பு இல்லை.

ஒரு சதத்தில்…. பித்தளை காசும் இருந்தது.
தோடம்பழ இனிப்பு, இஞ்சி பிஸ்கற் போன்றவை 1 சதம் மட்டுமே.
பிளேன் ரீ, புல்டோ ரொபி, ஒரு இறாத்தல் உப்பு….. 5 சதம்.
நெருப்புப் பெட்டி… 5 சதம்.
பால் ரீ, உளுந்து வடை, கடலை வடை… 10 சதம்.
மட்டன் ரோல்… 25 சதம்.
ஆனைமார்க் ஓரேஞ் பார்லி, நெக்டோ…. 75 சதம்.
ஒரு இறாத்தல்  கோதுமை மா…. 30 சதம்.
ஓரு போத்தல் தேங்காய் எண்ணை… 3 ரூபா.
ஓரு போத்தல் நல்லெண்ணை…. 6 ரூபா.
ஓரு கிலோ ஆட்டு இறைச்சி… 12 ரூபா. 

இந்த விலைகளை பார்த்து @ஏராளன் மயக்கம் போட்டு விழுந்தால்,
தண்ணி தெளித்து விடுங்கள் @suvy 😁😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

ஒரு சதத்தில்…. பித்தளை காசும் இருந்தது.
தோடம்பழ இனிப்பு, இஞ்சி பிஸ்கற் போன்றவை 1 சதம் மட்டுமே.
பிளேன் ரீ, புல்டோ ரொபி, ஒரு இறாத்தல் உப்பு….. 5 சதம்.
நெருப்புப் பெட்டி… 5 சதம்.
பால் ரீ, உளுந்து வடை, கடலை வடை… 10 சதம்.
மட்டன் ரோல்… 25 சதம்.
ஆனைமார்க் ஓரேஞ் பார்லி, நெக்டோ…. 75 சதம்.
ஒரு இறாத்தல்  கோதுமை மா…. 30 சதம்.
ஓரு போத்தல் தேங்காய் எண்ணை… 3 ரூபா.
ஓரு போத்தல் நல்லெண்ணை…. 6 ரூபா.
ஓரு கிலோ ஆட்டு இறைச்சி… 12 ரூபா. 

இந்த விலைகளை பார்த்து @ஏராளன் மயக்கம் போட்டு விழுந்தால்,
தண்ணி தெளித்து விடுங்கள் @suvy 😁😂🤣

நான் அரைமயக்கத்தில நினைவு வாறத எழுதிறன். 2002/2003 காலத்தில கொஞ்சநாள் தொழிநுட்ப கல்லூரிக்கு போனனான். அப்ப காலைல 20ரூபா கொண்டு போனால் 10இடியப்பம் 10ரூபா, உழுந்துவடை 5ரூபா, பால் தேநீர் 5ரூபா. இப்ப 10 இடியப்பம் 120ரூபா, உழுந்துவடை 50ரூபா, பால் தேநீர் 80ரூபா. மொத்தச் செலவு 250ரூபா.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

முன்பு பழைய ஒருசதம் (செம்பு) கலந்துதான் நகைகள் செய்வார்கள்.....பின்பு வயர் கம்பிகளும் பாவித்தார்கள் ....!  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 

ஒரு சதத்தில்…. பித்தளை காசும் இருந்தது.
தோடம்பழ இனிப்பு, இஞ்சி பிஸ்கற் போன்றவை 1 சதம் மட்டுமே.
பிளேன் ரீ, புல்டோ ரொபி, ஒரு இறாத்தல் உப்பு….. 5 சதம்.
நெருப்புப் பெட்டி… 5 சதம்.
பால் ரீ, உளுந்து வடை, கடலை வடை… 10 சதம்.
மட்டன் ரோல்… 25 சதம்.
ஆனைமார்க் ஓரேஞ் பார்லி, நெக்டோ…. 75 சதம்.
ஒரு இறாத்தல்  கோதுமை மா…. 30 சதம்.
ஓரு போத்தல் தேங்காய் எண்ணை… 3 ரூபா.
ஓரு போத்தல் நல்லெண்ணை…. 6 ரூபா.
ஓரு கிலோ ஆட்டு இறைச்சி… 12 ரூபா. 

இந்த விலைகளை பார்த்து @ஏராளன் மயக்கம் போட்டு விழுந்தால்,
தண்ணி தெளித்து விடுங்கள் @suvy 😁😂🤣

சிறீ ...இது அண்ணளவாக எத்தனையாம் ஆண்டாக இருக்கும்.?
சுவி அண்ணாவின் காசுக்குற்றிகள் பாவித்த  ஞாபகம்  சாதுவாக இருக்கு . 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

சிறீ ...இது அண்ணளவாக எத்தனையாம் ஆண்டாக இருக்கும்.?
சுவி அண்ணாவின் காசுக்குற்றிகள் பாவித்த  ஞாபகம்  சாதுவாக இருக்கு . 

நிலாமதி அக்கா… இந்த விலைகள் குத்துமதிப்பாக 1968’ம் ஆண்டுகளில் இருக்கும்.
அப்பாவின் காலத்தில்… அரைச் சதம், கால் சதம் இருந்ததாம்.
அந்த நாணய குற்றிகளின் நடுவில், வளையம் போல் ஓட்டை போட்டிருக்கும்.
அந்தக் குற்றிகளை.. அப்பா சேமித்து வைத்திருந்ததை நேரில் பார்த்தேன்.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.